லஞ்சம் கொடுக்க வந்தா, லஞ்சம் கொடுத்ததை காவல்துறைக்கு தானே சொல்ல வேண்டும்?
அதை விட்டுட்டு “5 கோடி கொடுக்க வந்தாங்க” என்று சொன்னால், லஞ்சத்தை Normalise செய்வது ஆகாதா?
@tnpoliceoffl அமைச்சர் ராஜ்மோகனின் கூற்றையும், அவர் மூலமாக வந்தார்கள் என்று அமைச்சர் கூறும் லயோலா மணியையும் விசாரிக்குமா?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்கள்.
இந்நிகழ்வின் போது மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @SellurKRajuOffl அவர்கள், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @rbudhayakumar_ அவர்கள், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @rajanchellppavv அவர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு கடைசியாகக் கண்ட மிகப்பெரிய சிறைத் துறை சட்டம் ஒழுங்கு என்பது 1999-ல் நடைபெற்ற சென்னை மத்திய சிறைக் கலவரம் தான்.
சிறையில் இருந்த பாக்சர் வடிவேலு என்ற ரவுடி உயிரிழந்த செய்தி கேட்டு கைதிகள் அரங்கேறிய மிகப்பெரிய கலவரத்தில் துணை ஜெயிலர் உயிரோடு எரிக்கப்பட்டதோடு, 9 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிறைத் துறை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்த சம்பவம் அது.
அதன் பிறகு 2001-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற @AIADMKOfficial, சிறைத் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததன் விளைவாக, சிறைச்சாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
தற்போது 27 ஆண்டுகள் கழித்து, தவெக ஆட்சியில் கைதிகள் சிறையில் இருந்து தப்பிக்கும் அவலமானது, தமிழ்நாட்டை 27 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளியிருக்கிறது த.வெ.க என்ற உண்மையையே உணர்த்துகிறது.
#பொய்க்கால்_குதிரை_அரசு
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை கைது செய்ய முயன்ற போது தள்ளுமுள்ளு.. மயங்கி விழுந்த செவிலியர்களால் பரபரப்பு..
#Chennai | #NurseProtest | #Arrest | #TNGovt | #PolimerNews
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
போட்டி ரெண்டே பேருக்குத்தான்...
அப்போ புரியல... இப்போ நல்லாவே புரியுது...
அநாகரீக அரசியல் செய்யும் #திமுக - #தவெக நடுவில்,
நாகரீக அரசியல் செய்யும் #அஇஅதிமுக-வுக்கு எந்த வேலையும் இல்லை... தேவையும் இல்லை!
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய
திரு. @Udhaystalin அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது
திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
மாம்பாக்கம் த.வெ.க ஊராட்சி மன்ற தலைவரும், த.வெ.க செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைரல்..
#TVK | #Chengalpattu | #Bribe | #PolimerNews