பல்லாவரம் கன்டோன்மென்ட் நகரக்கழகச் செயலாளர் அண்ணன் டி.பாபு அவர்களின் அன்பு மகன் மருத்துவர் பா. ஆகாஷ் - மருத்துவர் பா.தீபிகா இணையரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எழும்பூரில் இன்று கலந்து கொண்டோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் இருவரும் கழகத் தலைவரும் - உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம். @thamoanbarasan@RSBharathiDMK
சட்டமன்ற உறுப்பினர் @jawahirullah_MH அவர்களின் பாபநாசம் தொகுதியில் அமைந்துள்ள கிளை நூலகத்தில் 234/77 ஆய்வுப் பயணத் திட்டத்தின் 95-வது ஆய்வை மேற்கொண்டோம்.
சுமார் 46,000 நூல்களையும், 5,000 உறுப்பினர்களையும் கொண்ட இந்நூலகத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவோம் என உறுதியளித்தோம்.
#நம்பள்ளி_நம்பெருமை234_77
@tnschoolsedu
@dmk_youthwing 2வது மாநில மாநாடு!
மாநில உரிமைகளை மீட்க நம் சின்னவர் @Udhaystalin அவர்களின் #DMKRiders எழுச்சிப்படை தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநாட்டிற்கு
அழைக்கின்றது!
திராவிட போர்வாள்களே!
ஒன்றிணைவோம் வாரீர்!
#Udhay4Youth#Karur
மாநில உரிமை மீட்பை வலியுறுத்தி சேலத்தில் நடைபெறவிருக்கும் கழக இளைஞரணி 2-வது மாநில மாநாட்டிற்கான இருசக்கர வாகனப் பேரணி தஞ்சாவூர் மாவட்டத்தை வந்தடைந்தது!
கழகத்தின் பிரச்சார பீரங்கிகளாக சுற்றிவந்துகொண்டிருக்கும் இளைஞர்களைச் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினோம்.
@dmk_youthwing
ஈராயிரம் ஆண்டுகளாக அசைக்க முடியாதிருந்த அதிகாரக் கோட்டையின் மதிற்சுவரில் முதல் கீறல் விழுந்த நாள்! நவம்பர் 20 - நீதிக் கட்சி பிறந்த நாள்.
நாணயமான எதிரிகள், நாணயமற்ற நரிகள், துரோகங்கள், ஒடுக்குமுறைகள், மிரட்டல்கள், தியாகங்கள், வெற்றிகள் என 100 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லாவற்றையும் கடந்து, இன்றும் அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக துடிப்புடன் களத்தில் நிற்கும் திராவிட இயக்கத்தின் உறுதியான அடித்தளம் நீதிக்கட்சி!
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - பெண்ணுரிமை - கல்வி உரிமை என நீதிக்கட்சி காட்டிய லட்சிய பாதையில், கொள்கை உறுதியோடு நடைபோடுகிறது நம் தி.மு.கழகம்.
நீதிக்கட்சி தொடங்கி வைத்த இந்தப் பயணம் அநீதி வீழும் வரை தொய்வின்றித் தொடரும். #JusticeParty
தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத்தந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் மண்டலம், தஞ்சை - ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் மாண்புமிகு அமைச்சர் சின்னவர் @Udhaystalin அவர்களின் எழுச்சிமிகு #DMKRiders பிரச்சார குழுவினர் நீட் விலக்கு குறித்து விளக்கி குடியரசு தலைவருக்கு அனுப்ப இருக்கும் தபால் அட்டையில் கையழுத்து பெற்றனர்.
#Udhay4Youth
#BanNeet
தொன்மைமிக்க தமிழ் இலக்கிய பரப்பில் தன்னுடைய தனித்துவமிக்க படைப்புகளால் அளப்பரிய பங்களிப்பு செய்துவரும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் "ஆளண்டாப்பட்சி" நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Fire Bird-க்கு #JCBPrizeForLiterature விருது அறிவிக்கப்பட்டு இருப்பது பெருமைக்குரியது. அவருக்கும் - மொழிபெயர்ப்பாளர் ஜனனி கண்ணனுக்கும் என் வாழ்த்துகள்.
எளியவர்களின் வலிகளை - அதற்கான தீர்வுகளை, அம்மக்களின் மொழியிலேயே உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் பணி என்றென்றும் சிறக்கட்டும்.