எனக்கு விஜயவிட தற்குறிகள் மேல தான இன்னும் அவ்ளோ கோவம் & அருவருப்பு.
ஏன்னா அந்த கொடூர சாவுகள் நடந்தப்ப, ஒரு சாதாரண மனிதனா அதுக்கு துக்கப்பட கூட நமக்கு நேரம் கொடுக்காம, இறப்புகள் பத்தி செய்தி வர ஆரம்பித்த அடுத்த நிமிடம், "அட பாவி திமுக, எங்க அண்ணனை பழி வாங்க (எதுக்கு பழிவாங்க?) இப்படி அநியாயமா இத்தனை பேர கொன்னுட்டீங்களேடா"னு மொத்த SM முழுக்க ஈவு இரக்கம் இல்லாம திமுகவுக்கு எதிரா பொய் செய்திகள் பரப்பிவிட ஆரம்பிச்சது தான்.
We had exhausted ourselves fact checking and pointing out the obvious.
முதலில் 1000 பேர திமுக கத்தியோட அனுப்பி கொன்னுட்டாங்கனு பரப்பிட்டுதுங்க. அப்புறம் சுத்தி சுத்தி drone, cellphone , camera-ல பதிவாகி இருக்குனு தெரிஞ்சப்புறம், விஷ ஊசி போட்டு கொன்னுட்டாங்கனு பரப்பிவிட்டுதுங்க.
தேர்தல் முடிவுகள் வந்தப்புறம் ஒரு ரிப்போர்ட்டர் VoC , route பத்தி அவங்க கிட்டயே பேசி வெளியிட்ட கட்டுரைல சொன்னது தான் நாம தற்குறிகள்னு சொல்ற கொடூர கும்பல் மேல இன்னும் அருவருப்பு வர காரணம்.
அதுல: VoC , Route கும்பல் கூட விஜய்யோட அரசியல் வாழக்கை முடிஞ்சிடிச்சுனு நினைச்சப்ப, ரசிக கும்பல் முதல் நொடில இருந்தே சாவுகள் பத்தி கவலைபடாம, அவங்களாவே narrative-அ எப்படி திமுகவுக்கு எதிரா மாத்தினாங்கனு பார்த்து அசந்து போய், அதுக்கப்புறம் தான் official PR கும்பலே அதை பயன்படுத்த ஆரம்பிச்சாங்கனு விளக்கி இருந்தது.
So, while Vijay might be a psychopathic dummy utterly disinterested in everyday governance, his fanatical scumbags are the worst of the worst.
Their toxicity used to be contained to movie industry.
Now it has spilled in to the mainstream and the public, poisoning everything it touches.
கரூர் பெருந்துயரம் ஓராண்டு நினைவு!
இன்னும் இந்த கோர நிகழ்வில் காயமடைந்தவர்களுக்கு தவெக 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் அரசு சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் இருக்கிறார்.. ஆனால் மின்சாரம் தான் இல்லை..
மின்சாரம் இல்லாததை விட,
அதற்குப் பிறகு வந்த விளக்கங்களில் தான் மின் துறையின் பல்பே பியூஸ் ஆகிறது..
விழா ஜெனரேட்டரில்தான் நடந்தது; ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என அமைச்சர் சொல்கிறார்..
மின்வாரியத்தின் தரப்பிலோ மின் தடை என கூறப்பட்டுள்ளது..
வராத மின்சாரத்துக்கு விளக்கம் மட்டும் இரண்டு Phase-ல வருது..
ஜெனரேட்டர்தான் காரணம் என்றால் மின்வாரியம் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்?
மின்வாரியத்தின் விளக்கம் சரி என்றால் அமைச்சர் சொன்ன ஜெனரேட்டர் கதை என்ன?
இதற்கிடையில் மின்வாரியத்தின் பதிவு நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது..
மின்சாரம் போனதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை…
மின்வாரியத்தின் பதிவு எப்படிப் போனது என்பதையாவது கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்..
த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.
இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல.
#மின்வெட்டு#PowerCut
This is what I wanted TVK to come to. 😄
Now they themselves are explaining police is different from political leadership.
If Yasmin’s actions in February is the responsibility of CM M.K. Stalin, then her actions in June 2026 is the responsibility of CM Vijay.
Can’t have two different standards!
Every choice made by women in public life shouldn't be met with constant scrutiny and mockery. Breaking into politics in a patriarchal society is tough enough; doing so from an oppressed community is even harder. Targeting women who push through these barriers is completely unacceptable. I strongly condemn these relentless, orchestrated controversies against Mayor Ms. Priya Rajan.
CM Vijay says he “won’t let anyone speak wrongly about any woman.” But why, then, has he allowed these attacks on Mayor Priya by his fans and cadres?
யார் யாரிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது...!
ஒரு குழந்தை தாயின் கருப்பையில் வளரும் போது ஏற்படும் உயிரியல் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் மூளையின் பாலின உணர்வையும் உடலின் அமைப்பையும் வெவ்வேறாக மாற்றிவிடலாம். இதனால், பிறப்பால் ஆண் உடல் கொண்ட ஒருவருக்கு பெண் என்ற மன உணர்வும் (திருநங்கை), பெண் உடல் கொண்ட ஒருவருக்கு ஆண் என்ற மன உணர்வும் (திருநம்பி) ஏற்படுகிறது.
நாளைக்கு கல்யாணம் பண்ணி இவனுகளுக்கு இப்படி ஒரு குழந்தை பிறந்து அது வளர்ந்த அப்பறம் இதுமாறினு தெரிய வந்தா, அவங்கள ஒம்போது, அலி அஜக்குனு சொல்லி விரட்டி விடவோ இல்ல கொலை செய்யவோ தயங்க மாட்டாணுங்க..
இவனுக கிட்ட தள்ளி நிக்கிறதே கூட கேவலம் தான்.
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.