முந்தைய இழையின் தொடர்ச்சி....
நியமிக்கப்பட்ட உறுப்பினர், பதவியேற்ற 6 மாதங்களுக்குப் பிறகு ஒரு கட்சியில் சேர்ந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
───
1. இணைப்பு (Merger)
ஒரு கட்சி மற்றொரு கட்சியுடன் இணைந்தால், உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படமாட்டார்கள்,
• அவர்கள் புதிய கட்சியில் சேர்ந்திருந்தாலும்,
• அல்லது இணைப்பை ஏற்காமல் தனி குழுவாக செயல்பட்டாலும்.
இணைப்பு செல்லுபடியாகும், குறைந்தது இரண்டு-மூன்றாம் பங்கு உறுப்பினர்கள் இணைப்பை ஏற்றால் மட்டுமே.
───
1. விலக்கு (Exemption)
சபாநாயகர், துணை சபாநாயகர், மாநில சட்டமன்றத் தலைவர் போன்றோர்,
• அந்தப் பதவியை ஏற்கும்போது தங்கள் கட்சியை விட்டு விலகினாலும்,
• அவர்கள் அந்தப் பதவியில் இருக்கும் வரை தகுதி நீக்கம் செய்யப்படமாட்டார்கள்.
───
1. தீர்மான அதிகாரம்
• ஒரு உறுப்பினர் ��குதி நீக்கம் செய்யப்பட வேண்டுமா என்பதை சபாநாயகர் அல்லது தலைவர் தீர்மானிப்பார்.
• அவர்களின் தீர்மானம் இறுதியானது.
───
1. நீதிமன்றத் தடை
இந்த அட்டவணையின் கீழ் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை.
───
1. விதிகள்
சபாநாயகர் அல்லது தலைவர்,
• உறுப்பினர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பதிவு செய்வது,
• கட்சிகள் அளிக்கும் அறிக்கைகள்,
• விசாரணை நடைமுறைகள் போன்றவற்றுக்கான விதிகளை உருவாக்கலாம்.
───
இது தொடர்பான மேலதிக விவரங்கள் அல்லது ஆதாரங்கள் எதிர்பார்ப்போருக்காக அரசமைப்புச் சட்டம் 10 வது அட்டவணையின் விதி 102(2) மற்றும் 191(2) இப்பதிவுடன் இணைக்கப்படுகிறது!..
கூடவே முன்னாள் சபாநாயகர் திரு தனபால் அவர்கள் TTV தினகரன் ஆதரவு MLA களை தகுதி நீக்கம் செய்ததற்கான அன்றைய தமிழ்நாடு அரசின் gazette யையும் இணைக்கிறோம்!..
https://t.co/ZZEbyVfQrA
https://t.co/buISVmS3sV
நன்றி!
சி.என். இராமமூர்த்தி அவர்கள் அறிக்கை வெளியீடு!..
-----------------------------------------
அணி மாறிய 25 அதிமுக MLA_க்கள்! அரசமைப்பு சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து மாநில கட்சிகளும் அதன் கொள்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்!
ஏனென்றால் முரண்பாடுகள் இருப்பினும் அனைத்து கட்சிகளுமே எம் தமிழ் மக்களின் நலன் காக்க கருத்தரித்த ஜனநாயக கட்டமைப்புகளாகும்!, ஆகவே இங்கு இயங்கும் எந்தவொரு ஜனாயக அமைப்பும் நம் கண்முன்னே அழிவதையோ!, சிதைவதையோ! நாம் ஒருபோதும் வேடிக்கை பார்க்க இயலாது!..,
அந்த வகையில் தமிழ்நாட்டு அரசியலில் தற்போது நிலவிவரும் ஒருவித அசாதாரண சூழ��ில், அதிமுக எதிர்கொள்ளும் ஒருவித நெருக்கடிக்கிடையில்,
அரசமைப்பு சட்டம், கடந்தகால நீதிமன்ற தீர்ப்புகள், மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் போன்றவற்றை தமிழ்நாட்டின் நலன் கருதி ஆய்வு செய்வது நமது தலையாய கடமையாகும்!..
1. இந்தியாவில் கட்சி தாவல் தடைச் சட்டம், அரசியலில் நிலைத்தன்மையைப் பாதுகாக்கவும், சட்டமன்ற உறுப்பினர்கள் கொள்கையின்றி கட்சி மாறுவதைத் தடுக்கவும் உருவாக்கப்பட்டது.
1967-ல் ஹரியானா MLA கயா லால் ஒரே நாளில் இரண்டு முறை கட்சி மாறியதால் "ஆயா ராம், கயா ராம்" என்ற பிரபல சொற்றொடர் உருவானது. இதைத் தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
முக்கிய திருத்தங்கள்:
• ஜம்மு & காஷ்மீர்: 1979-ல் முதன்முதலில் கட்சி தாவல் தடை விதியை செயல்படுத்தியது.
• 52-வது அரசியலமைப்பு திருத்தம் (1985): ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டது. இது இந்திய அரசிய��மைப்பின் பத்தாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
2. சட்டம் எப்போது செயல்படும்?
ஒரு சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர் கீழ்க்கண்டவற்றைச் செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்:
✓ தானாகவே தனது கட்சி உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுத்தல்.
√ கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தல் அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருத்தல். கட்சி கொறடாவுக்கு எதிராக வாக்களித்தால் நேரடியாக உறுப்பினர் பதவி பறிபோகும்.
3. பிளவு vs இணைப்பு - தற்போதைய விதிகள்
• 1985 விதி: கட்சியின் 1/3 உறுப்பினர்கள் பிரிந்தால் தகுதி நீக்கம் இல்லை.
• 91-வது அரசியலமைப்பு திருத்தம் (2003): 1/3 பிளவு விதி முற்��ிலும் நீக்கப்பட்டது. தற்போது, தகுதி நீக்கத்தைத் தவிர்க்க, கட்சியின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 2/3 பேர் இணைப்புக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.
• அமைச்சரவை வரம்பு: அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 15%-க்கு மேல் இருக்கக்கூடாது.
• இந்த மாற்றம் அப்போது பிரதமராக இருந்த Atal Bihari Vajpayee தலைமையிலான NDA அரசால் 11/01/2004 அன்று கொண்டு வரப்பட்டது. அப்போது இந்த���ய குடியரசுத் தலைவராக A. P. J. Abdul Kalam இருந்தார்.
4. முக்கிய நீதிமன்ற தீர்ப்புகள்
• கிஹோட்டோ ஹோலோஹான் vs ஜசில்லு (1992): சபாநாயகரின் தகுதி நீக்க முடிவு நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்பட்டது.
• ரவி எஸ். நாயக் vs இந்திய ஒன்றியம் (1994): "தானாக உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுத்தல்" என்பது முறையான ராஜினாமாவை விட பரந்தது.
• கெய்ஷாம் மேகச்சந்திர சிங் vs மணிப்பூர் சபாநாயகர் (2020): தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் 90 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்.
Tamil Nadu Legislative Assembly
(“தரப்பு மாறுதல் காரணமான தகுதி நீக்கம்” விதிகள், 1986)
1988ஆம் ஆண்டு:
சபாநாயகர் P.H. Pandian பல எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார்.
அ��ு M. G. Ramachandran மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட கட்சி பிளவைத் தொடர்ந்து நடந்தது.
33 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது Janaki Ramachandran அமைச்சரவை தொடர்பானது.
2018ஆம் ஆண்டு, R. Dhanapal சபாநாயகர்,
T. T. V. Dhinakaran ஆதரவு கொண்ட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார்.
அவர்கள் அரசின் மீது நம்பிக்கை இழந்ததாக ஆளுநரிடம் தெரிவித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது Edappadi K. Palaniswami அரசைச் சார்ந்த சம்பவமாகும்.
சபாநாயகர் விதி 7(3)(b) பட���,
தகுதி நீக்கம் கோரும் மனுவை சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு அனுப்பி, அவர்களிடமிருந்து விளக்கம் பெற வேண்டும்.
கட்சித் தலைவர், உறுப்பினரின் செயல்களை 15 நாட்களுக்குள் மன்னிக்கலாம் / ஏற்கலாம்.
5. தமிழ்நாடு சூழல் - தற்போதைய வழக்கு ஆய்வு
• மொத்த சபை இடங்கள்: 234
• குறிப்பிட்ட கட்சி(அதிமுக) வென்ற இடங்கள்: 47
• தகுதி நீக்கத்தைத் தவிர்க்க தேவையான பலம் (47-ல் 2/3): 32 MLA-க்கள்
• வேலுமணி & C.V. சண்முகம் அணியி���் தற்போதைய பலம்: 25 MLA-க்கள்
• சட்ட நிலை: தகுதி நீக்கத்திற்கு உட்படக்கூடியவர்கள் (7 உறுப்பினர்கள் குறைவு என்ற என்பதால்!.)..தொடர்ச்சி..1/n
முந்தைய பதிவின் தொடர்ச்சி 2/3..
முடிவு: 25 MLA-க்கள் மட்டுமே இருப்பதால், 32 என்ற கட்டாய அரசியலமைப்பு வரம்பை எட்டவில்லை. எனவே, கட்சி கொறடா உத்தரவை மீறினால் பத்த��வது அட்டவணையின்படி சட்டப்பூர்வமாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
மாண்புமிகு சபாநாயகர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கடந்த அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில் TTV.தினகரன் ஆதரவு MLA களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைப் பற்றி பார்ப்போம்!..
தமிழ்நாடு அரசு கெசட்!.
சென்னை, திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017
----------------------------------------
அறிவிப்பு – சட்டமன்றச் ச���யலாளர் அலுவலகம்
சில உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம்
வழக்கு:
திரு. எஸ். ராஜேந்திரன், எம்.எல்.ஏ.,
முதன்மை அரசு விப்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.)
— மனுதாரர்
எதிர்மனுதாரர்கள் (19 எம்.எல்.ஏ.க்கள்):
திரு. தங்கதமிழ்செல்வன் (ஆண்டிப்பட்டி),
திரு. ஆர். முருகன் (அரூர்),
1. திரு. எஸ். மரியப்பன் கென்னடி (மானா_மதுரை),
2. டாக்டர் கே. கதிர்காமு (பெரியகுளம்),
3. திருமதி சி. ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்),
4. திரு. பி. பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி),
5. திரு. வி. செந்தில்பாலாஜி (ஆரவக்குறிச்சி),
6. டாக்டர் எஸ். முத்தையா (பரமக்குடி),
7. திரு. பி. வெற்றிவேல் (பெரம்பூர்),
8. திரு. என்.ஜி. பார்த்திபன் (சோளிங்கர்),
9. திரு. எம். கோதண்டபாணி (திருப்போரூர்),
10. திரு. டி.ஏ. ஏலுமலை (பூண்டி),
11. திரு. எம். ரெங்கசாமி (தஞ்சாவூர்),
12. திரு. ஆர். தங்கத்துரை (நிலக்கோட்டை),
13. திரு. ஆர். பாலசுப்ரமணி (ஆம்பூர்),
14. திரு. எ. எஸ்.ஜி. சுப்பிரமணியன் (சாத்தூர்),
15. திரு. எஸ்.டி.கே. ஜக்கையன் (கம்பம்),
16. திரு. ஆர். சுந்தராஜ் (ஒட்டப்பிடாரம்),
17. திருமதி கே. உமாமகேஸ்வரி(விளாத்திகுளம்).
18. திரு.தங்கத் தமிழ்செல்வன்(ஆண்டிப்பட்டி).
19.���ிரு.ஆர்.முருகன்(அரூர்).
───
மனுவின் சாரம்:
• இவர்கள் அனைவர��ம் அ.தி.மு.க. வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
• 22 ஆகஸ்ட் 2017 அன்று, இவர்கள் தமிழ்நாடு ஆளுநரிடம் தனித்தனியாக மனு அளித்து, முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தனர்.
• இதன் மூலம், அவர்கள் தங்கள் கட்சியின் உறுப்புரிமையை தன்னார்வமாக கைவிட்டதாக கருதப்பட வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தினார்.
───
எதிர்மனுதாரர்களின் பதில்:
• ஆளுநரிடம் மனு அளித்தது சட்டப்படி செல்லுபடியாகும்; அது கட்சியை விட்டு வெளியேறுதல் அல்ல.
• மனுவை ஏற்கும் அதிகாரம் ஸ்பீக்கருக்கு இல்லை; அவர் பாகுபாடு காட்டுகிறார்.
• முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், இவர்களையே குறிவைத்து தகுதி நீக்கம் செய்ய முயற்சிக்கிறார்.
───
ஸ்பீக்கரின் கருத்து:
• பத்தாவது அட்டவணை (Tenth Schedule) படி, கட்சியின் உறுப்புரிமை���ை தன்னார்வமாக கைவிட்டால் தகுதி நீக்கம் செய்யலாம்.
• ஆளுநரிடம் மனு அளித்தது, கட்சியிலிருந்து விலகியதற்கான சான்றாக கருதப்படுகிறது.
• எனவே, 19 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
───
👉 இந்த ஆவணம் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முக்கியமானது. இது அ.தி.மு.க. உள்கட்சிப் பிரிவினை மற்றும் தகுதி நீக்கம் வழக்கு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
தகுதி நீக்கம் பற்றி அரசமைப்புச் சட்டம்10 வது அட்டவணை கூறுவது என்ன?
-----------------------------------------
பத்தாவது அட்டவணை (அரசியலமைப்பு பிரிவு 102(2) மற்றும் 191(2))
1. வரையறை
• "சபை" – பாராளுமன்றத்தின் இரு சபைகளில் ஏதேனும் ஒன்று அல்லது மாநில சட்டமன்றம்.
• "சட்டமன்றக் குழு" – ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு.
• "அசல் அரசியல் கட்சி" – உறுப்பினர் முதலில் சேர்ந்திருந்த கட்சி.
───
1. தகுதி நீக்க���் – கட்சித் துரோகம்
ஒரு சபை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்,
• (a) அவர் தன்னார்வமாக தனது அரசியல் கட்சியின் உறுப்புரிமையை கைவிட்டால்.
• (b) அவர் தனது கட்சியின் விபின் (Whip) உத்தரவை மீறி வாக்களித்தால் அல்லது வாக்களிக்காமல் விலகினால், மேலும் 15 நாட்களுக்குள் கட்சி அதனை மன்னிக்காவிட்டால்.
விளக்கம்:
• தேர்தலில் ஒரு கட்சி வேட்பாளராக போட்டியிட்டவர் அந்தக் கட்சியைச் சேர்ந்தவராகக��� கருதப்படுவார்.
• நியமிக்கப்பட்ட உறுப்பினர், நியமனத்தின் போது அவர் சேர்ந்திருந்த கட்சியைச் சேர்ந்தவராகக் கருதப்படுவார்.
1. சுயேட்சை மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்
• சுயேட்சை உறுப்பினர் தேர்தலுக்குப் பிறகு ஒரு கட்சியில் சேர்ந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார். 2/3..NXT
இன்று (15/05/2026) விசிக தலைவர் முனைவர்.தொல் திருமாவளவன் அவர்களுடன் சந்திப்பு!..
----------------------------------------- மரியாதை நிமித்தமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களை விசிக_வின் தலைம��� அலுவலகமான அம்பேத்கர் திடலில் அனைதிந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவனர் - தலைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு சி.என். இராமமூர்த்தி அவர்கள் நேரில் சென்று சந்தித்து,
விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்த நிலைப்பாட்டையும் வரவேற்று வாழ்த்தினார்!..
இருப்பினும் ��திகாரத்தில் பங்கெடுத்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் பகிர்ந்துகொண்டார் ஐயா சி.என்.ஆர்!..
��ின்னர் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்திற்கான குரலை பல பத்தாண்டுகளுக்கு பின்னர் உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்தியமைக்காக சகோதரர் வன்னியரசு!, அவர்களையும் சந்தித்து மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டார் ஐயா சி.என்.ஆர்..
பின்னர் நேர- நெருக்கடிக்கிடையில் ஒரு நீண்ட உரையாடலாக சமகால அரசியல் சூழல் குறித்து விரிவாக உரையா���ினார் சகோதரர் திருமாவளவன் அவர்கள்!..
இந்நிகழ்வின் போது கட்சியின் துணைத் தலைவர் k. வெங்கடேசன் மற்றும் மாநில IT Wing பொறுப்பாளர் சு.தண்டபாணி உடன் இருந்தனர்!...
@thirumaofficial @VanniTamizhVCK @VckBalaji @ChelladuraiN1 @itwingvck @vckdigital
புதுச்சேரி முதலமைச்சர் திரு இரங்கசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!....
---------------------------------------
அஇபாமுக_வின் நிறுவனர் - தலைவர், ஐயா திரு சி.என்.இராமமூர்த்தி அவர்களின் நீண்டகால நண்பரும், புதுச்சேரியின் AINRC கட்சியின் நிறுவனர் - தலைவரும் மற்றும் ஐந்தாவது முறையாக புதுச்சேரியின் மாண்புமிகு முதல்வராக பதவியேற்றுள்ள மதிப்பிற்குரிய இரங்கசாமி அவர்களுக்கு அனைதிந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் சார்பாகவும், நிறுவனர் - தலைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு சி.என். இராமமூர்த்தி அவர்களை சார்பாகவும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்!..
தமிழ்நாட்டில் மாற்றத்தை வி��ும்பிய மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த போதும்,
அதே தமிழ் மக்களிடம் புதுச்சேரியில் அந்த தாக்கம் ஏற்படா வண்ணம், தனது மிகச் சிறந்த ஆளுமையினாலும், மிகச் சிறந்த ஆட்சியினாலும், அன்பாலும், எளிமையாக பழகவும், அணுகவும் கூடிய பண்பாலும், மக்களின் மனங்களை வென்று 5 _வது முறையாக மீண்டும் மாண்புமிக்க முதலமைச்சர் பதவியில் பொறுப்பேற்றுள்ள மதிப்பிற்குரிய திரு.இரங்கசாமி அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்!..
மக்களின் நம்பிக்கை பொய்க்கா வண்ணம் ���ிறந்த ஆட்சியை நல்க வாழ்த்துகிறோம்!..
#முதல்வர்_ரங்கசாமி @CM_Puducherry @CMO_Puducherry
சபாநாயகர் J.C.D பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துகள்!..
-----------------------------------------
தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபைத் தலைவர���க ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட,
ஐயா சி.என்.ஆர் அவர்களின் நீண்ட கால நண்பரும்,
ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு J.C.D.பிரபாகர் அவர்களுக்கு அனைதிந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் சார்பாகவும் மற்றும் நிறுவனர் - தலைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு சி.என்.இராமமூர்த்தி அவர்களின் சார்பாகவும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!..
மாண்பு பொருந்திய பொறு���்பில் பாகுபாடின்றி ஜனநாயகத்தை நிலைநாட்ட மீண்டும் ஒருமுறை மாண்புமிகு சபாநாயகர் திரு.J.C.D.பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துகள்!...
@TVKVijayHQ @actorvijay @TVKPartyHQ @TVKHQITWingOffl @CTR_Nirmalkumar @BussyAnand @AadhavArjuna @JCDPrabhakar #செங்கோட்டையன்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு ச.ஜோசப் விஜய்! அவர்களுக்கு அனைதிந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் சார்பாகவும் மற்றும் நிறுவனர் - தலைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு சி.என்.இராமமூர்த்தி அவர்களின் சார்பாகவும் மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்!..
வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்களின் அதீத நம்பிக்கையை காக்கும் அரசாகவும்,
மாநில சுயாட்சியை விட்டுக்கொடுக்காத அரசாகவும்,
இந்தி திணிப்பை ஏற்காத அரசாகவும்,
மத பயங்கரவாதத்தை அனுமதி��்காத அரசாகவும்
செயல்பட மீண்டும் ஒருமுறை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வாழ்த்துகிறோம்!..
@TVKVijayHQ @actorvijay @TVKPartyHQ @TVKHQITWingOffl @CTR_Nirmalkumar @BussyAnand @AadhavArjuna
ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற திரு வசந்தம் கார்த்திகேயன் அவர்களுக்கு அனைதிந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் சார்பாகவும், நிறுவனர் - தலைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு ச.என்.இராமமூர்த்தி அவர்களின் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்!..
@arivalayam@DMKITwing@k_vasantham
சகோதரர் அம்பேத்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்!..
-----------------------------------------
தன் தொகுதி மக்களிடம் குறை���ாத அன்பும், செல்வாக்கும் கொண்டிருப்பதால் தான் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மக்கள் சகோதரர் அம்பேத்குமார் அவர்களை மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளனர்!..
கடந்த காலங்களைப் போலவே மீண்டும் தனது தொகுதியின் மக்கள் தேவைகளை சீரிய முயற்சியுடன் சிரம் மேற்கொண்டு செய்து தனது நற்ப���யரையும் செல்வாக்கையும் தக்கவைத்துக்கொள்ள,
அனைதிந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் சார்பாகவும், மற்றும் நிறுவனர் - தலைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு சி.என்.இராமமூர்த்தி அவர்களின் சார்பாகவும் மனதார வாழ்த்துகிறோம்!...
@arivalayam @DMKITwing @VandavasiA
திரு.K.N. நேரு அவர்களுக்கு வாழ்த்துகள்!..
-------------------------------------
தொகுதி மக்களிடம் கனிவோடு அணுகி அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடிய பண்பான நபர் மதிப்பிற்குரிய முன்னாள் அமைச்சர் திரு.K.N. நேரு அவர்கள்,
இத்தகைய சிக்கலான சூழலில் இவரின் வெற்றி மி��ப்பெரும் சாதனைக்குரியது, அத்தகைய வெற்றியை பெற்ற சகோதரர் திரு.K.N. நேரு அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை அனைதிந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் சார்பாகவும் மற்றும் நிறுவனர் - தலைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு சி.என். இராமமூர்த்தி அவர்கள் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்!..
@KN_NEHRU @mkstalin @arivalayam @DMKITwing
திரு S.S.சிவசங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்!...
-----------------------------------------
கோடையின் கடுமையான வெப்பத்திலும் சிறிதும் சுணக்கம் இல்லாமல், முதல் முறை வாய்ப்புக் கிடைத்த வேட்பாளர் போல தனத�� முழுமையான மற்றும் கடுமையான உழைப்பை செலுத்தி இத்தகைய வெற்றியைப் பெற்றுள்ளார் அன்புச் சகோதரர் மதிப்பிற்குரிய முன்னாள் அமைச்சர் திரு.S.S.சிவசங்கர்!, அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை அனைதிந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் சார்பாகவும் மற்றும் நிறுவனர் - தலைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு சி.என்.இராமமூர்த்தி அவர்களின் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்!...
@sivasankar1ss @arivalayam @DMKITwing
அருமைச் சகோதரர் வன்னியரசுக்கு வாழ்த்துகள்!
-------------------------------------
கடுமையான உடல்நிலை சார்ந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் எதையும் பொருட்படுத்தாமல் தனக்கு தலைமைக் கொடுத்த பொறுப்பையும் கடமையையும் செவ்வனமே செ��்து செய்து முடிப்பதையே ஒரே இலக்காகக் கொண்டு கோடையின் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் கடுமையான களப்பணி ஆற்றிய அருமை சகோதரர் வன்னியரசு_வின் வெற்றி போற்றுதலுக்குரியது!..
அதேபோல் சகோதரி திருமதி ஆதிரை வன்னியரசு அவர்களின் களப்பணியும் உழைப்பும் அளப்பரியது போற்றுதலுக்குரியது!
அதுவும் தமிழ்நாடு முழுக்க தேர்தல் முடிவுகள் எதிர்பாராத திருப்பத்தை தர, திண்டிவனம் வன்னியரசு_வின் உழைப்பை அங்கீகரிதிருப்பதாகத் தான் கருதமுடிகிறது!
அத்தனை இடர்பாடுகளையும் தாண்டி சாதனை வெற்றி அடைந்த சகோதரர் வன்னியரசு_வுக்கு மீண்டும் ஒருமுறை அனைதிந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி மற்றும் நிறுவனர் - தலைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு சி.என்.இராமமூர்த்தி அவர்களின் சார்பாகவும் மனதார வாழ்த்துகிறோம்!..
@thirumaofficial @VanniTamizhVCK @VckBalaji @velichamtvtamil @VCKofficial_ @itwingvck @vckdigital @arivalayam @DMKITwing @VKootamaippu #vck @sinthanaivck @WriterRavikumar @EzhilCaroline #விடுதல��_சிறுத்தைகள்_கட்சி
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்த���ன் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபா���ு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. ந��ம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞர���ன் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்ட��் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்���ின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
மாற்றம் ஒன்று தான் மாறாதது!
---------------------------------------
தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது, அரசியலை உற்று நோக்கும் யாரும் கணிக்க இயலாத வண்ணம் ஒரு பெரும் மாற்றம்!..
விஜயின் இரசிகர்கள் மட்டுமின்றி பெருவாரியான பொதுவான மக்களும் விஜய்க்கு வாக்களித்துள்ளனர்! மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் விஜய் தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்புகிறோம்!
அன்புத் தம்பி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!..
@TVKVijayHQ@BussyAnand@AadhavArjuna #செங்கோட்டையன்
நேற்று(30/04/2026),
ஐயா சி.என்.இராமமூர்த்தி அவர்களின் இல்லத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து(குடும்பத்தில் ஒருவராகவே மாறிப்போன) வரும் சகோதரி திருமதி சங்கரி அவர்களின் இல்லத் திருமண நிகழ்வில், பங்குபெற்று அவரின் மூத்த மகனும் மணமகனுமான
மோகித் https://t.co/gI8dlU8Bkr(cs) - திவ்யா B.E ஆகிய மணமக்கள் இருவரையும் வாழ்த்தி மகிழ்ந்தார்!..
அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்!
----------------------------------
உரிமைக்காக போராடுவதின் அவசியத்தை உணர்ந்து, உழைப்பாளர் வர்க்கம் ஒன்றிணைய வேண்டும்!
இவ்வுலகம் உழைப்பாளிகளுக்கே! உளுத்தர்களுக்கல்ல!
உண்டு கொழுப்பவர்களுக்கு அல்ல!
வட நாட்டு ம���தலாளிகளுக்கு அல்ல!
உலகம் உழைப்பாளிகளுக்கே!
- அறிஞர் அண்ணா!..
மீண்டும் ஒருமுறை அனைதிந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி மற்றும் நிறுவனர் - தலைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு சி.என் இராமமூர்த்தி அவர்கள் சார்பாக உழைக்கும் வர்க்க மக்களுக்கு மே தின வாழ்த்துகள்!..
2020_ஆம் ஆண்டு Moon தொலைக்காட்சியில் முக்தார் அவர்களிடம் நேர்காணலில்,
ஐயா திரு சி.என்.இராமமூர்த்தி அவர்கள், வன்னியர் பொதுச் சொத்து வாரியம் மற்றும் இட ஒதுக்கீடு குறித்து விரிவான வரலாற்றை பதிவு செய்தார்!..
https://t.co/1rUVuwKX06
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்புத் தம்பி S.S.ப��லாஜி அவர்களுக்கு வாழ்த்துகள்!..
-----------------------------------------
இன்று(28/04/2026) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு S.S பாலாஜி அவர்கள், அனைதிந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து நிறுவனர் - தலைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு சி.என்.இராமமூர்த்தி அவர்களை சந்தித்து தான் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள செய்தியை தெரிவித்து, ஐயா சி.என்.ஆர் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்!..
கொள்கைப் பிடிப்பு, கடுமையான களப்பணி மற்றும் தலைமைக்கு நேர்மையுடன் நடந்துகொள்ளும் நற்குணம் இவையாவும்
தம்பி பாலாஜியை இந்த அங்கீகாரம் பெற வைத்திருப்பதாக அய்யா சி.என்.இராமமூர்த்தி நெகிழ்ச்சியோடு வாழ்த்தினார்!..
வன்னியர் சமூகத்தை சேர்ந்த அன்புத்தம்பி, துடிப்பான இளைஞர் S.S.பாலாஜி அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாய் ஒலிப்பது பெருமைக்குரிய விடயம்,
கட்சியை பொது நீரோட்டத்தில் சிறப்பாக வழிநடத்தும் அன்புச் சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கும் எமது கட்சி மற்றும�� வன்னியர் கூட்டமைப்பின் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுகளும்!.
திரு.S.S. பாலாஜி அவர்களுக்கு உரிய அங்கீகாரம் உரிய சமயத்தில் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறோம்.
உடன் கட்சியின் துணைத் தலைவர் திரு.k. Venkatesan, மாநில தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் திரு.சு. தண்டபாணி மற்றும் அமைப்புச் ச��யலாளர் v. சற்குரு போன்றோர் உடன் இருந்தனர்!..
@VckBalaji @thirumaofficial @vckdigital