புதிய தமிழகம் - பூத்திட வித்திட்ட பொன்னாள் இன்று!
மார்ச் 6, 1995 - மதுரை தெப்பக்குளம் மாநாடு
தமிழக அரசியல் மற்றும் சமூக தளத்தில் ‘சமூக நீதி’ என்ற பெயரில் கட்டி அமைக்கப்பட்டிருந்த ’திராவிடம்’ என்பதே ’ஒரு மாயை’ என அம்பலப்படுத்திய நாள்இன்று
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சி அயராமல் தொடர்ந்து களமாடுவது ஏதோ சம்பிரதாயத்திற்காக அல்ல!
இந்த முறை புதிய தமிழகம் கட்சிக்கு வெற்றிவாய்ப்பை வழங்கிப் பாருங்கள் மக்களே!!
நிச்சயம் நம் தொகுதி உலகளவில் உற்றுநோக்கப்படும்!
#Tenkasi4Dr
தென்மாவட்டங்களில் அபரிமிதமான மழை – வெள்ளம்!
கடும் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உதவிட
புதிய தமிழகம் கட்சியினர் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும்!!
புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.!
கடந்த 2 நாட்களாக, தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அபரிமிதமான மழை - அதனால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக, குளங்கள், குட்டைகள், சாலைகள், பாலங்களில் உடைப்புகள் ஏற்பட்டும், ஆறு, ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளின் ஓரங்களில் வாழ்ந்த மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தும் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். நாளை (19.12.2023) வரை மழை தொடரும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. எனவே இன்னும் கூடுதலாக மழையும் வெள்ளமும் ஏற்பட வாய்ப்புண்டு. மழை நிற்கட்டும், வெள்ளம் வடியட்டும் என்று காத்திராமல், புதிய தமிழகம் கட்சியின் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு உடனடியாகச் சென்று உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மிக முக்கியமாக கீழ்கண்ட வழிமுறைகளின்படி நிவாரணப்பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
• திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடிய மக்களை அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்து, வீட்டைவிட்டு வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்பாக, அவர்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றிட வேண்டும்; முதியோர்கள், குழந்தைகள், உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டோரை வாகனங்கள் இல்லாவிடினும், சுமந்து வந்தாவது பாதுகாப்பான இடங்களில் சேர்த்திட வேண்டும்.
• ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்ற கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றிட வேண்டும்.
• பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்குத் தேவைகளின் அடிப்படையில் உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
• மருத்துவ உதவிகள் தேவைப்படுவோருக்கு முதலுதவிகளைச் செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
• நிவாரண உதவிகள் தேவைப்படுவோருக்கு கஷ்டப்பட்டாவது ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்.
• வெள்ளப்பாதிப்புக்கு ஆளாகாத மாவட்டங்களின் நிர்வாகிகள் அனைவரும் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு உடனடியாக நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவும் உதவிகள் செய்திடவும் தயாராகச் செல்ல வேண்டும்.
• மேற்சொன்ன நிவாரணப் பணிகளை நிறைவேற்றுவதற்கு நமது கட்சியின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கீழ்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.
மலையிலும் மண்ணிலும் மனதிலும் 'தீ'
தவுலெடுத்து தாளம் அடித்தால் அணையாது.!
எழுத்தால் எகத்தாளம் பேசி ’படம்’ எடுத்தாலும் பட்டக்காயமும், வெட்டுக்காயமும் ஆறாது!
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சார்ந்த வள்ளியூர் கண்காடியா பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் சின்னதுரையும், அவரது சகோதரி சந்திர செல்வியும் சக பள்ளி, சக வகுப்பு மாணவர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளாகிப் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி ஆகியோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அந்நிகழ்வை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சின்னதுரை பட்டியல் பிரிவில் உள்ள சாம்பாவர் சமுதாயத்தைச் சார்ந்தவர். வெட்டியவர்கள் நாங்குநேரி மறவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். இது முழுக்க சாதி ரீதியான வன்மத்தோடு நடந்த தாக்குதல் ஆகும்.
”பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சாதி, மத, இன ரீதியான எவ்வித அடையாளங்களையும் மாணவர்கள் சுமந்து வரக் கூடாது; அதற்குண்டான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்” என்று 2014 ஆம் ஆண்டு முதல் நாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்திலேயே பலமுறை சட்டமன்றத்தில் வலியுறுத்தி இருக்கிறோம். எனினும் மாநில அரசு எவ்வித ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்க வில்லை.
நாங்குநேரியில் அரசுப் பள்ளி இருந்தும் 15 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கக்கூடிய வள்ளியூருக்குத் தான் பெரும்பாலான மாணவர்கள் செல்கிறார்கள். நாங்குநேரியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. அங்கே மாணவர்கள் படிக்க முடியாத அளவிற்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றனவா? சாதிய அட்டூழியங்கள் தலை விரித்தாடுகின்றனவா??
பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள மணிப்பூருக்காக தமிழகத்திலிருந்து சென்று நாடாளுமன்றத்தில் கண்ணீர் சிந்திய ஆட்சியாளர்களுக்கு எந்தவித தவறும் செய்யாத பள்ளி மாணவர்கள் சமூகக் கொடுமைக்கு ஆளானது குறித்து அக்கறை இல்லாமல் போனது ஏன்? வெறுமனே நான்கு பேரைக் கைது செய்வதால் மட்டும் பிரச்சனைக்கு தீர்வாகுமா?
பள்ளி மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களிலேயே சாதிய நஞ்சுகள் எவ்வாறு விதைக்கப்படுகின்றன? என்பதற்கான காரிய காரணங்களை உடனடியாக கண்டறிந்து நிரந்தர தீர்வு காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டாமா? தமிழகத்தில் இது ஏதோ பகுதியில் நிலவுவதாக எண்ணிவிடலாகாது. இளம் பிராயத்திலேயே தன் சாதிய அடையாளங்களை தூக்கிப்பிடிக்கக் கூடிய வகையில் கயிறு கட்டுவது, நெற்றிப் பொட்டு வைப்பது போன்ற அனைத்து விதமான அடையாளங்களுக்கும் பள்ளிகளில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அல்லவா?
’தி - ஸ்டாக்கிஸ்ட்’ ஆட்சியாளர்கள் வாய் கிழியச் சமூகநீதி பேச முற்படுவார்கள்; சிவப்பு பூதங்கள் கருப்பு பேய்களையும், அடிமைகளையும் துணைக்கு வைத்துக் கொள்வார்கள்; கரு கிடைத்துவிட்டது; அதைக் கதையாக்கிக் காசாக்க வேண்டியது தான் பாக்கி. இனாமாக வந்த காரை வெயிலிலே நிறுத்த முடியாது; அதைப் பாதுகாக்க வீடு வேண்டும்; பாடலில், கதையில், நடிப்பில் ஒப்பாரி பாடலாம். மனதுக்குள்ளேயும் மண்ணுக்குள்ளேயும் வெடியாய் வெடிக்கும் தீயை அணைப்பதற்குப் பதில் மலையெல்லாம் தீ வைப்பார்கள்; அணைக்க அவர்களும், வேறு எவர்களும் முன்வர மாட்டார்கள்; இதையும் – வேறு எதையும் அணைக்க நாம் தான் செல்ல வேண்டும்; ஆம், புதிய தமிழகம் கட்சியினர் தான் செல்ல வேண்டும்.
இன்று பாதிக்கப்பட்ட சிறுவன் சின்னதுரையைத் திருநெல்வேலி மருத்துவமனையில் நேரில் சந்தித்து, புதிய தமிழகம் கட்சியினர் ஆறுதல் கூறினர்; பாதிக்கப்பட்ட சின்னதுரை – சந்திரா செல்வி ஆகியோருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்கும் வரை புதிய தமிழகம் கட்சி துணை நிற்கும்.!
மலையிலும் மண்ணிலும் மனதிலும் தீ.!
தவுலெடுத்து தாளம் அடித்தால் அணையாது.!
எழுத்தால் எகத்தாளம் பேசி ’படம்’ எடுத்தாலும் பட்டக்காயமும், வெட்டுக்காயமும் ஆறாது!
நல்ல பாடம் ’படி’ ராசா.! நல்லவரிடம் நல்ல பாடம் ’படி’ ராசா.!!
- டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
11.08.2023
தென்காசி நாடாளுமன்றத் தொகுதி!
வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமில் திரளாகக் கலந்து கொள்க.!புதிய தமிழகம் கட்சியின் வாக்குச்சாவடி மற்றும் நிர்வாகிகளுக்கு தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் வேண்டுகோள்.!
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதி வாரியாக புதிய தமிழகம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் வரும் 30, 31, 01 ஆகிய மூன்று தேதிகளில் காலை, மாலை என,
1. வாசுதேவ நல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு 30.07.2023 – ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு மூர்த்தி பாப்பா மஹால், புளியங்குடியிலும்;
2. சங்கரன் கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு 30.07.2023 – ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மூர்த்தி பாப்பா மஹால், புளியங்குடியிலும்;
3. ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 31.07.2023 – திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு லட்சுமி நாராயண மஹால், ஸ்ரீவில்லிப்புத்தூரிலும்;
4. இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு 31.07.2023 – திங்கட்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மூர்த்தி அம்பேத்கர் திருமண மண்டபம், இராஜபாளையத்திலும்;
5. கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு 01.08.2023 – செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு எஸ்.எஸ். திருமண மண்டபம், அச்சம்பட்டியிலும்;
6. தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு 01.08.2023 – செவ்வாய்கிழமை அன்று மாலை 4 மணிக்கு எஸ்.எஸ். திருமண மண்டபம், அச்சம்பட்டியிலும்;
6.என ஆறு தொகுதிகளிலும் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
நடைபெறக்கூடிய இந்த பயிற்சி முகாம் மிக மிக முக்கியமானதாகும். கடந்த காலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு முதல் நாள் மட்டுமே வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்படுவார்கள்; அவர்கள் வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை சரிபார்க்கக்கூடிய பணியில் ஈடுபடுவார்கள். ஆனால், அண்மைகாலமாக தேர்தல் பணிகளில் பெரிய மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அந்த மாற்றங்களுக்கு புதிய தமிழகம் கட்சியினரும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். 2024 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு முன்பாகவே 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்த பணியை நாம் செய்து முடிக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, புதிய தமிழகம் கட்சியின் தளமாகவும் களமாகவும் விளங்குகின்ற தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இப்பணியை முதலில் துவங்குகிறோம். கடந்த ஐந்தாறு மாதங்களுக்கு மேலாக ஒவ்வொரு வாக்குச்சாவடியாகச் சென்று மாநில நிர்வாகிகளோடு முகவர்கள் நியமிக்கும் பணியை நாம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம். முகவர்களின் வயது குறித்து இருந்த சில சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டு விட்டது.
எனவே, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலிருந்தும் ஏற்கனவே ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நிர்ணயிக்கப்பட்ட படி முகவர்கள் தங்களது ஸ்டாம்ப் அளவு புகைப்படங்கள், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களோடு பயிற்சி முகாம் நடக்கக்கூடிய தினத்தில் கண்டிப்பாக பங்கு பெற வேண்டும். இது மிக மிக முக்கியமான பணி என்பதால் முகவர்களாக நியமிக்கப்பட்ட எவரும் எக்காரணம் கொண்டும் கூட்டத்தில் பங்கு பெறாமல் இருக்கக் கூடாது.
எனவே, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளும்; ஆண், பெண் இருபாலர் என அந்தந்த சட்டமன்றத் தொகுதி அனைத்து வாக்குச்சாவடி முகவர்களும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அந்தந்த பகுதியில் பங்கு பெற்று இப்பயிற்சி முகாம் வெற்றி பெற அடுத்த இரண்டு, மூன்று தினங்களுக்கு நிர்வாகிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று பணிகளைத் துரிதப் படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இச்செய்திகளை வாட்ஸ்-அப் மூலமாக அனைவருக்கும் பகிர வேண்டும். தேவைப்பட்டால் தொலைபேசி மூலமாக பேசியும், நேரில் சென்றும் அவர்களை அழைக்க வேண்டும். மொத்தத்தில் இந்த பயிற்சி முகாம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறக் கூடிய அளவில் நம்முடைய நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு தென்காசி நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகள் அனைவருக்கும் வேண்டுகோள் வைக்கிறேன்.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றியின் துவக்கமே நடைபெறவுள்ள வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி முகாமின் வெற்றியில் தான் அடங்கி இருக்கிறது. எனவே, அனைத்து நிர்வாகிகளும், வாக்குச்சாவடி முகவர்களும் கிளைச் செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
_ தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி.
27.07.2023
ஒற்றுமையாக @DrKrishnasamy அவர்களின் தலைமையின் கீழ் போராடிய மாஞ்சோலை மக்களை
கருணாநிதியின் சூழ்ச்சி பேச்சை கேட்டு அப்போரட்டத்தில் இருந்த ஆதிதிராவிடர்களை தனியாக ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துச்சென்ற குற்றவாளிதான் திருமாவளவன்
இன்று #தாமிரபரணி_படுகொலை அஞ்சலிக்கு வந்து நாடகமாடுகிறார்
With demand for wages and labour laws, 50 thousand plantation labourers marched the streets of Nellai Town 23yrs back
- what Karunanidhi gave was death to 17 of them. Self proclaimed social justice man has got blood on his hands.
#தாமிரபரணி_படுகொலை
உலக வரலாற்றில் பல கொடுங்கோலர்களைப் பற்றி படித்திருக்கலாம்.
தமிழகத்தில் இருந்து அந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய நபர் கருணாநிதி.
ஏன் என்று கேள்வி கேட்போர்
#தாமிரபரணி_படுகொலை பற்றி படியுங்கள்.
கோவை - பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் ஆனி உற்சவ விழாவை தேவேந்திரர் விழாவாக நடத்தக் கோரியும்,
பட்டீஸ்வரர் - பச்சைநாயகி சிலைகளை கோவிலுக்குள் வைக்கக் கோரியும் @DrKrishnasamy அவர்கள் தலைமையில் 1995 ஆண்டு பட்டீஸ்வரர் ஆலயம் முன்பு நடந்த உண்ணாவிரதப் போராட்டம்.
#சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
ஆங்கிலேயருக்கு எதிராக முதல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய #மாவீரர்_கட்டகருப்ப_சுந்தரலிங்கம்_தேவேந்திரர் அவர்களுக்கு 252 வது பிறந்த தினம் அவர்களின் பிறந்த நாளில் அவர்களின் வீரத்தை போற்றி வணங்குவோம்.
மாவீரர் அவர்களின் புகழை உலகறிய செய்த டாக்டர் அய்யா அவர்களை வணங்குகிறேன்..
வரலாற்றில் இன்று!
1995- ஆகஸ்ட் 31, அன்றைய அதிமுக ஆட்சியாளர்களாலும், காவல் துறையினராலும் தூத்துக்குடி மாவட்டம், கொடியன்குளம் கிராமம் தாக்குதலுக்கு ஆளான நாள்!
தென் தமிழகத்தின் அரசியலை நிரந்தரமாக மாற்றிய நாள்!!
#கொடியன்குளம்_புரட்சி