Top Tweets for #OneLine
השיטה ששולטת בעולם
היא 700 מיליון ציונים
והם רוצים שתחשבו שיש רק 15.5
מיליון יהודים על האדמה🤣🤣
קוראים לפרק הזה
בשפת המרמה
שימוש במיעוט למען הרוב שמועל🤣
Palestine forever❤️✌️
#Oneline
#Palestineforever
#Palestine
#TheEternalPeople
#TheChosenPeople
השיטה ששולטת בעולם
היא 700 מיליון ציונים
והם רוצים שתחשבו שיש רק 15.5
מיליון יהודים על האדמה🤣🤣
קוראים לפרק הזה
בשפת המרמה
שימוש במיעוט למען הרוב שמועל🤣
Palestine forever❤️✌️
#Oneline
#Palestineforever
#Palestine
#TheEternalPeople
#TheChosenPeople
קיימים בעולם כ-700 מיליון 😡
Palestine forever❤️✌️
אגב אני בת 65 לא ממליצה להתעסק עם חוכמה של 65 שנים😊
#Oneline
#Palestineforever
#Palestine
#TheEternalPeople
#TheChosenPeople
The Offshore Technology Conference 2026 is taking place this week at NRG Park in Houston, TX.
Our teams are on site, sharing insights into our One Line® service model and TenarisShawcor coating solutions.
#OTC2026 #TenarisinUSA #Offshore #OneLine #TenarisShawcor

🔗 Grammar check
I met the person __ won the prize.
A) which
B) where
C) who
Your answer? 👇
Lessons on @italki & @YouCanBookMe via 💖 https://t.co/awk3Tfs1gg
#english #relativeclauses #gramamr #oneline #lessons
#filmdiaryclassicals 13 •
🎬 #Rashomon 1950 ⏳1h28m ⭐8.1 Dir- #AkiraKurosawa #PsychologicalDrama #Philosophical #Crime #NonlinearNarrative
#Heian-era setting 🎭🧠⚖️🧩🌫️🌳
#oneline of the film
ஒரு போர் வீரன் நான் தற்கொலை தான் செய்து கொண்டேன் என்று கூறும் போது, அவன் எதனால் உயிரிழந்தான் என்பதை நான்கு கோணங்களில் விளக்கி, முடிவு என்னவாயிற்று என்று கூறுவதே இக்கதை.
#Synopsis
9 ஆம் நூற்றாண்டு ஜப்பானில், பாழடைந்த 'ரஷோமொன்' கோட்டை வாசலில், கொட்டும் மழையில் ஒதுங்கும் ஒரு விறகுவெட்டியும், ஒரு துறவியும் தாங்கள் கண்ட ஒரு விசித்திரமான வழக்கைப் பற்றி, அங்கு வரும் ஒரு வழிப்போக்கனிடம் அந்த மர்மத்தைச் சொல்கிறார்கள்.
🔹காட்டில் போர்வீரன் ஒருவன் பிணமாகக் கிடக்கிறான்.
🔹அவன் மனைவியைக் காணவில்லை.
🔹கொள்ளையன் தாஜோமாரு கைது செய்யப்படுகிறான்.
நீதிமன்றத்தில் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரும் சொல்லும் கதை, முந்தைய கதையை அடித்து நொறுக்குகிறது.
யார் சொல்வது உண்மை?
🔹 கொள்ளையன் கூறும்போது, போர் வீரனின் மனைவியை அடைய விரும்பினேன். உங்களில் யார் வீரன் என்று சண்டையிட்டுத் தீர்மானியுங்கள் என்றாள் அவள். எனவே அந்த வீரனுடன் போரிட்டு அவனை வென்று அவனுடைய மனைவியை அடைந்ததாக கொள்ளையன் விவரிக்கிறான். கொள்ளையன் தன்னை ஒரு மாவீரனாக காட்டிக்கொள்கிறான்.
🔹அடுத்து வந்த மனைவி, "கொள்ளையன் என்னைச் சிதைத்துவிட்டு ஓடிவிட்டான். என் கணவனோ என்னை ஆறுதல்படுத்துவதற்குப் பதில், ஒரு தீண்டத்தகாதவளைப் பார்ப்பது போல அருவருப்பாகப் பார்த்தார். அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் நான் மயக்கமடைந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, என் கையில் இருந்த குறுவாள் அவர் நெஞ்சில் பாய்ந்திருந்தது என்கிறாள். அவள் தன்னை ஒரு பரிதாபத்திற்குரியவளாக காட்டிக்கொள்கிறாள்.
🔹இறந்துபோன போர்வீரனின் ஆவி ஒரு பூசாரியின் வழியாகப் பேசுகிறது. "என் மனைவி கொள்ளையனுடன் சேரச் சம்மதித்ததோடு, என்னையும் கொல்லச் சொன்னாள். அவள் துரோகத்தைத் தாங்க முடியாமல், நானே குறுவாளை எடுத்து என் இதயத்தில் பாய்ச்சித் தற்கொலை செய்துகொண்டேன்" என்கிறது. அவன் தனது கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறான்.
🔹இறுதியில் விறகுவெட்டி உண்மையைச் சொல்கிறான். "கொள்ளையன் அந்தப் பெண்ணிடம் கெஞ்சினான். அவளோ இருவரையும் மோதவிட்டாள். ஆனால், அங்கு வீரமான போர் எதுவும் நடக்கவில்லை. இருவரும் பயத்தில் நடுங்கிக்கொண்டே வாள்களை வீசினர். தற்செயலாக போர்வீரன் கொல்லப்பட்டான்" என்கிறான்.
இறுதியில் விறகுவெட்டியும் ஒரு திருடன் என்பது தெரியவருகிறது (அவன் விலையுயர்ந்த குறுவாளைத் திருடியதால் தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினான்).
மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சுயநலத்திற்காகவும், மற்றவர்கள் முன் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளவும் எப்படி உண்மையை வளைக்கிறார்கள் என்பதே இக்கதையின் மையக்கரு.
மழையின் இறுதியில், கைவிடப்பட்ட ஒரு குழந்தையை விறகுவெட்டி எடுத்துச் செல்லும்போது, மனிதர்கள் பொய் சொன்னாலும் *மனிதநேயம்* இன்னும் சாகவில்லை என்ற நம்பிக்கையுடன் படம் முடிகிறது.
இந்தக் கதையின் பாணிதான் இன்று சினிமாவில் புகழ்பெற்ற #RashomonEffect என்று அழைக்கப்படுகிறது.
இதனை அடியொற்றி
Courage Under Fire (1996), Hero (2002), Vantage point (2008), The Last Duel (2021) போன்ற பல திரைப்படங்கள் வந்துள்ளன.
🧭 Final Take-
#Non-linear storytelling
#Multipleperspectives என சினிமா மொழியில் புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம், சினிமா உலகத்தில் புதிய இலக்கணத்தை வகுத்தது.
நீங்கள் #seriouscinema #storytelling #psychology ல் விருப்பமுள்ளவராக இருந்தால், 👉 இது நிச்சயமாய் ஒரு #non-negotiable watch திரைப்படம்.
தமிழ் சினிமாவில் இத்திரைப்படம் ஏற்படுத்திய பாதிப்பை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
உலக சினிமாவை அறிய வைக்கும் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவளியுங்கள். 🙏🏻💚🫰🏻
@Reviewbyamit @aaradhana_gowri @balaji_213 @Absolutlycinema @NithyViews @TheCinediction @LearnEasy11 @cinee_mazhaii_ @SuryaYuva2tn @Nithya_vin @cinemaGems89 @Missed_Thrills
@VenkeyReacts @Kathira46482094 @top2bot15 @Ghostgova @Sathish_dsv @karthick_45 @Nidhura_Views @Kirank_3108 @MoveyFreaky05, @tamilhollywood2 @Nandhan_Talkz @KUDALINGAM49671 @NikhilPoojary01 @KarasingamAc @Just__Cinema @Buddythala @Saravan_movieRW @_makeanoffer @shivtweetzz @Mr_Nobody_das @AjayRenald @SivaDas45 @24thCS @MrKnightjegan @CINEMA_TREND_
@ksrajabe

#OneLine era 🥹

#filmdiaryclassicals 12 •
🎬 #Bicyclethieves 1948 ⏳1h29m ⭐8.2 Dir- #VittorioDeSica #Tragedy #drama #Neorealism 🚲💔🎭🌧️👨👦😞
#Oneline of the film
தன் வாழ்வாதாரமான மிதிவண்டியைத் தொலைத்த தந்தை, அதை தன் மகனுடன் தேடியலைந்து, இறுதியில் விரக்தியில் தானும் ஒரு திருடனாக மாறினால் என்னவாகும் என்பதே இதன் ஒருவரி கதை.
#Synopsis
இரண்டாம் உலகப் போருக்கு பின்னான இத்தாலியில், நீண்ட வேலையில்லாத் திண்டாட்டத்திற்குப் பிறகு, அண்டோனியோவிற்குச் சுவரொட்டி ஒட்டும் வேலை கிடைக்கிறது. அதற்குத் தேவையான மிதிவண்டியை, அவனது மனைவி தனது படுக்கை விரிப்புகளை அடகு வைத்து மீட்டுத் தருகிறாள்.
ஆனால், வேலையின் முதல் நாளிலேயே அது திருடப்படுகிறது. காவல் துறையிடம் உதவி கிடைக்காததால், தனது சிறுவன் புரூனோவுடன் ரோம் நகரம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடுகிறான்.
திருடனைக் கண்டுபிடித்தும் ஆதாரங்கள் இல்லாததால் அவனால் வண்டியை மீட்க முடியவில்லை.
வேலை போய்விடும் என்ற அச்சமும், வறுமையின் பிடியும் அவனை நிலைகுலையச் செய்கிறது. வேறு வழியின்றி, ஒரு கட்டத்தில் அண்டோனியோவே ஒரு வண்டியைத் திருட முயன்று மக்களிடம் பிடிபடுகிறான். தன் மகன் முன்பே அவமானப்பட்டு நிற்கும் அவனை, உரிமையாளர் பரிதாபப்பட்டு விடுவிக்கிறார்.
தார்மீக ரீதியாகத் தோற்றுப்போன அண்டோனியோ, கண்ணீருடன் தன் மகனின் கையைப் பிடித்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மறைந்து போவதுடன் கதை முடிகிறது.
#Neorealism பாணியில் பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், அதை பிரபலப்படுத்திய முதல் திரைப்படம் இதுதான்.
🎬 1. Neorealism என்றால் என்ன?
👉 WWII பிறகு Italy-ல் உருவான சினிமா இயக்கம், Real life-ஐ artificial இல்லாமல் நிஜமாக பதிவு செய்தது.
🎥 2. முக்கிய Neorealism Techniques
👥 Non-Professional Actors
🏙️ Real Locations (No Sets)
🌤️ Natural Lighting
🎧 Minimal Background Score
🚶 Long Takes & Real Time Flow
🧭 Final Take-
👉 “இந்தப் படம் ஒரு திரைப்படம் இல்லை — அது ஒரு வாழ்ந்த அனுபவத்தை உங்களுக்குத் தரும்.” 🎬💔
உலக சினிமாவை அறிய வைக்கும் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவளியுங்கள். 🙏🏻💚🫰🏻
@MovieManiacsNFT @tamilhollywood2
@Sathish_dsv @SuryaYuva2tn @Missed_Thrills
@TalkiesFriday @shivtweetzz
@ireen722 @H_SteveX @2024Gokul @LearnEasy11 @Spy_Next_Door_ @Cinee_mazhaii_ @padampishow @itz_rkannaa @Ghostgova @praky26 @cinemaGems89 @Absolutlycinema @AshwinBala_Offi @KUDALINGAM49671 @itzSekar @dsk_vignesh @Nidhura_Views @Kakashi6824 @aaradhana_gowri @karthickviews @CINEMA_TREND_ @rajmohan2blue @BollywoodGirlX @KarasingamAc @mayirepochu1 @Missedmovies @Human_Travel21
@_CineVibez @Just__cinema @balaji_213

#filmdiaryclassicals 11 •
🎬 #Beautyandthebeast 1946 ⏳1h33m ⭐7.9 Dir- #Jeancocteau #ReneClement #France #Darkfantasy #Fairytale #romance #costumedrama 🖤✨🌹🏰❤️🎭👑
#Oneline of the film
தான் விரும்பிய பெண்ணிடமிருந்து நானும் உன்னை விரும்புகிறேன் என்பதை கேட்ட நொடியில், அவனும் இறந்து போகிறான். அதன் பின் என்ன நடந்தது என்பதே இக்கதை.
#Synopsis
பொருளாதாரத்தில் நலிவடைந்த வணிகர் ஒருவர், காட்டில் உள்ள ஒரு மாய மாளிகையில் ரோஜாவைப் பறித்ததற்காக அங்கிருக்கும் #Beast டிடம் மரண தண்டனை பெறுகிறார். தன் தந்தையைக் காக்க அவரது மகள் #belle தானாக முன்வந்து அந்த மாளிகையில் சிறைப்படுகிறாள்.
அங்கு நிகழும் விசித்திரங்களைக் கண்டு வியக்கும் அவள், மெல்ல மெல்ல விலங்கின் மென்மையான குணத்தை விரும்ப ஆரம்பிக்கிறாள்.
இதனிடையே தந்தையைப் பார்க்கச் செல்கிறாள் பெல்லி. மாளிகையில் இருக்கும் செல்வங்களை கொள்ளையடிக்க விரும்பும் அக்காக்களின் சதியால் தாமதமாகத் திரும்புகிறாள்.
அதே சமயம் மாளிகையில் திருட முயன்ற தீயவனான #Avenent , எதிர்பாரா விதமாக #Beast ஐ கூரிய ஆயுதத்தால் தாக்குகிறான்.
இறக்கும் தருவாயிலிருந்த Beast மீது, Belle காதலை வெளிப்படுத்தி, கண்ணீர் வடிக்கிறாள். அந்த உண்மை அன்பால் விலங்கின் சாபம் முடிகிறது.
இதனிடையே #Avenent இறக்க, அவனது முகம் #Beast ற்கு மாறுகிறது. Beast அழகான இளவரசனாக உருமாறி Belle யுடன் தனது மாய உலகிற்குச் செல்கிறான்.
🧭 Final Take-
🎬 உலக சினிமாவின் முக்கியமான milestone கருதப்படும் இந்த படம் #Fantasy சினிமாக்களுக்கான முக்கியமான அடித்தளமாகும்.
இன்றளவும் #filmschools-ல் study material ஆக இருப்பதற்கு இதனுடைய, 🎨 Practical Effects Revolution மிக முக்கிய காரணம்.
👉 CGI இல்லாத காலத்தில்,
#reversemotionshots #hidden cuts
#stageillusions பயன்படுத்தி இவர்கள் உருவாக்கிய மாய உலகம், ஒரு #seriouscinematic #craft ஆக மாறிப்போனது.
உலக சினிமாவை அறிய வைக்கும் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவளியுங்கள். 🙏🏻💚🫰🏻
@Reviewbyamit @aaradhana_gowri @balaji_213 @Absolutlycinema @NithyViews @TheCinediction @LearnEasy11 @cinee_mazhaii_ @SuryaYuva2tn @Nithya_vin @cinemaGems89 @Missed_Thrills
@VenkeyReacts @Kathira46482094 @top2bot15 @Ghostgova @Sathish_dsv @karthick_45 @Nidhura_Views @Kirank_3108 @MoveyFreaky05, @tamilhollywood2 @Nandhan_Talkz @KUDALINGAM49671 @NikhilPoojary01 @KarasingamAc @Just__Cinema @Buddythala @Saravan_movieRW @_makeanoffer @shivtweetzz @Mr_Nobody_das @AjayRenald @SivaDas45 @24thCS @MrKnightjegan @CINEMA_TREND_
@ksrajabe

#filmdiaryclassicals 10 •
🎬 #CitizenKane 1941 ⏳1h59m ⭐8.2 Dir- #Orsonwelles #Mystery #Epic #drama #tragedy
🔍 🕶️ 🗝️🏛️ 🌍 👑 🎬 🚀🎭💔 💀🥀
#oneline of the film
#Rosebud என்ற வார்த்தையின் மூலம், ஒரு செல்வந்தரின் வாழ்க்கையில் நிறைந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க நினைக்கும் பத்திரிகையாளருக்கு என்ன கிடைத்தது என்பதே இக்கதை.
#Synopsis
#USA வின் மிகப் பெரிய பத்திரிகை அதிபரான #CharlesFosterkane #Xanadu மாளிகையில் தனிமையில் இறந்து போகிறார். இறக்கும் போது #Rosebud என்ற ஒரு வார்த்தையை உச்சரிக்க, இந்த #Rosebud என்பதன் பொருளை அறிய #Jerrythompson என்ற பத்திரிகையாளர் நியமிக்கப்படுகிறார். அவர் Cane க்கு நெருக்கமாக இருந்தவர்களின் நினைவலைகள் வழியாக Caneன் வாழ்க்கையைத் தொகுக்கிறார்.
#cane சிறுவனாக இருந்தபோது, அவனது தாய்க்கு எதிர்பாராத விதமாக ஒரு சுரங்கத்தின் மூலம் பெரும் சொத்து கிடைக்கிறது. மகனின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக, அவனைப் பிரித்து #Thatcher என்ற வங்கியாளரிடம் வளர்க்க அனுப்புகிறார். சிறுவன் cane தனது பனிச்சறுக்கு பலகையுடன் #Sled விளையாடிக் கொண்டிருக்கும்போதே, குடும்பத்தை விட்டு பிரிக்கப்படுகிறான்.
பெரியவனானதும், தனக்குக் கிடைத்த சொத்துக்களைக் கொண்டு #Theinquirer என்ற சிறிய பத்திரிகையை விலைக்கு வாங்கி, அதை நாட்டின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யமாக மாற்றுகிறார். மக்களின் பக்கம் நிற்பேன் என்று உறுதிமொழியும் எடுக்கிறார்.
அதிகாரம் வளர வளர, அவரிடம் அகங்காரம் குடியேறுகிறது. நாட்டின் அதிபர் மருமகளைத் திருமணம் செய்து கொண்டு, அரசியலில் நுழைந்து ஆளுநர் பதவிக்குப் போட்டியிடுகிறார். ஆனால், #Susanalexander என்ற பெண்ணுடன் அவருக்கு இருந்த கள்ளத்தொடர்பு வெளிச்சத்திற்கு வர, அவரது அரசியல் கனவு தகர்கிறது.
#Cane தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு #Susan னைத் திருமணம் செய்து, அவளை ஒரு பெரிய #Opera பாடகியாக்க முயற்சிக்கிறார். அவளுக்குத் திறமை இல்லாவிட்டாலும், அதிகாரத்தைப் பயன்படுத்தி அவளைப் புகழடையச் செய்ய முயல்கிறார். இதனால் வெறுப்படைந்த #Susan Cane ன் பிடிவாதத்தைத் தாள முடியாமல் அவரை விட்டுப் பிரிந்து செல்கிறார்.
தனது இறுதிக்காலத்தில், உலகின் விலைமதிப்பற்ற கலைப்பொருட்களைச் சேகரித்து #Xanadu மாளிகையை உருவாக்குகிறார். ஆனால், அவரிடம் அன்பு செலுத்த ஒருவரும் இல்லை. பல கோடி சொத்துக்கள் இருந்தும், தனிமையில் வாடி அவரின் உயிர் பிரிகிறது.
பத்திரிகையாளர் #Jerrythompson பலரை விசாரித்தும் #rosebud என்பதன் பொருளைக் கண்டுபிடிக்க முடியாமல் தோல்வியுடன் திரும்புகிறார்.
திரைப்படத்தின் இறுதியில், கேனின் மாளிகையில் இருந்த தேவையற்ற பொருட்கள் எரிக்கப்படுகின்றன. அப்போது கேன் சிறு வயதில் விளையாடிய அந்தப் பனிச்சறுக்கு பலகை #Sled தீயில் எறியப்படுகிறது.
அப்பொழுதுதான் #Rosebud என்றால் என்ன என்பது பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது.
#Cane தன் வாழ்நாள் முழுவதும் தேடியது புகழோ அதிகாரமோ அல்ல; சிறு வயதில் தன் தாயிடமிருந்து பிரிக்கப்படுவதற்கு முன்பு அனுபவித்த அந்த எளிய, தூய்மையான அன்பையும் மகிழ்ச்சியையுமே என்பதை அந்தச் சின்னஞ்சிறு காட்சி உணர்த்துவதுடன் படம் நிறைவடைகிறது.
🧭 Final Take-
🔹இயக்குனர் #OrsonWelles ன் #TechnicalInnovation ஆன #DeepFocuscinematography
👉 முன்புறம் + பின்னணி இரண்டும் ஒரே நேரத்தில் தெளிவாக இருக்கும்படி அமைக்கப்பட்டது.
👉 #Lowangleshots, #ceilings visible frames
👉 #Nonlinear storytelling
👉 கதையை நேர்கோட்டில் சொல்லாமல், #Flahback வழியே நினைவுகளாக அமைத்தது.
➡️ இவை இன்று சாதாரணமாக தோன்றினாலும், அப்போது இது ஒரு #gamechanging innovation 🚀 ஆகும். Editing, framing, narrative structure என இன்று நாம் பார்க்கும் #moderncinema -வின் DNA இங்கே தான் ஆரம்பித்தது.
🔹படம் முழுவதும் வரும் Rosebud என்ற வார்த்தை #Symbolism என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாகவும் குறிப்பிடப்படுகிறது.
உலக சினிமாவை அறிய வைக்கும் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவளியுங்கள். 🙏🏻💚🫰🏻
@MovieManiacsNFT @tamilhollywood2
@Sathish_dsv @SuryaYuva2tn @Missed_Thrills
@TalkiesFriday @shivtweetzz
@ireen722 @H_SteveX @2024Gokul @LearnEasy11 @Spy_Next_Door_ @Cinee_mazhaii_ @padampishow @itz_rkannaa @Ghostgova @praky26 @cinemaGems89 @Absolutlycinema @AshwinBala_Offi @KUDALINGAM49671 @itzSekar @dsk_vignesh @Nidhura_Views @Kakashi6824 @aaradhana_gowri @karthickviews @CINEMA_TREND_ @rajmohan2blue @BollywoodGirlX @KarasingamAc @mayirepochu1 @Missedmovies @Human_Travel21
@_CineVibez @Just__cinema @balaji_213

#filmdiaryclassicals 9 •
🎬 #Casablanca 1942 ⏳1h42m ⭐8.5 Dir- #Michaelcurtiz #Romance #War #drama ❤️🌹⚔️💣🧭🎭
#oneline of the film
புரட்சிப்படை தலைவன் நாஜிக்களிடமிருந்து தப்பிச்செல்வதற்கு உதவிபுரிய, தன் காதலை தியாகம் செய்ய வேண்டிய சூழல் வந்தால் ஒரு மனிதன் என்ன செய்வான் என்பதே இப்படத்தின் ஒருவரிக் கதை
#Synopsis
இரண்டாம் உலகப் போரின் போது, பிரெஞ்சு மொராக்கோவின் #Casablanca நகரில் #RickBlaine எனும் அமெரிக்கர் ஒரு இரவு விடுதியை நடத்தி வருகிறார். அவர் எதிலும் ஒட்டாத, தனிமை விரும்பியாகத் திகழ்கிறார். ஒருநாள், நாஜி பிடியிலிருந்து தப்பிக்க உதவும் மிக முக்கியமான 'பயண ஆவணங்கள்' #LettersofTransit #RickBlaine வசம் கிடைக்கின்றன.
அச்சமயம், ரிக் பல ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸில் காதலித்து பிரிந்த #IlsaLund தனது கணவரும் செக் எதிர்ப்புத் தலைவருமான #Victorlaaslo வுடன் அங்கு வருகிறாள். அவர் உலகப் போர் சமயத்தில், #Czechoslovakia நாட்டை ஆக்கிரமித்திருந்த ஜெர்மனியின் நாஜிப் படைகளுக்கு எதிராகப் போராடிய #Czech தலைவராவார். அவர்கள் இருவரும் நாஜிக்களிடமிருந்து தப்பித்து அமெரிக்கா செல்ல #RickBlaine ன் உதவி தேவைப்படுகிறது.
முதலில் பழைய கோபத்தால் மறுக்கும் Rick, பின்னர் llsa இன்னும் தன்னை நேசிப்பதையும், அன்று அவள் பிரிய நேரிட்ட சூழலையும் உணர்கிறார். #Victorlaaslo உயிருடன் தப்பிச் சென்றால் மட்டுமே நாஜிக்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து வழிநடத்த முடியும் என்பதை உணர்கிறார். போலீஸ் உதவியுடன், llsa-Victor ஐ பத்திரமாக விமானம் ஏற்றி அனுப்பி வைக்கிறார்.
"நமக்கு எப்போதும் பாரிஸ் நினைவுகள் இருக்கும்" என்ற புகழ்பெற்ற வசனத்துடன், தனது காதலைத் தியாகம் செய்துவிட்டு போரில் பங்கெடுக்க முடிவெடுக்கிறார் ரிக்.
🔹வழக்கமான காதல் கதையாக அல்லாமல், தன் காதலை விட ஒரு நாட்டின் விடுதலை முக்கியம் என ஒரு மனிதன் எடுக்கும் உணர்ச்சிகரமானவை பற்றியது. "உன்னைப் பிரிய மனமில்லை, ஆனால் நீ போவதுதான் இந்த உலகிற்கு நல்லது" என்ற அந்தத் தியாகம் பார்ப்பவரை கரைய வைக்கும்.
🔹சினிமா வரலாற்றில் அதிகம் மேற்கோள் காட்டப்படும் வசனங்கள் இந்தப் படத்தில் தான் உள்ளன.
✍🏻 "We'll always have Paris"
✍🏻"Here's looking at you, kid"
🔹 #HumphreyBogart Rick காக வாழ்ந்திருப்பார். தொடக்கத்தில் எதற்கும் கலங்காத, கரடுமுரடான மனிதராகத் தோன்றும் அவர், மெல்ல மெல்லத் தன் மென்மையான பக்கத்தையும் தியாக குணத்தையும் வெளிப்படுத்துவது #CharacterArc க்கு ஒரு அற்புத உதாரணம்.
🔹#Worldwar2 சமயத்தில் இது எடுக்கப்பட்டது. #Casablanca நகரில் நிலவிய அந்த ஆபத்தான சூழல், நாஜிக்களின் மிரட்டல், யார் நண்பன் யார் எதிரி என்று தெரியாத மர்மம் எனத் திரைக்கதை இறுதிவரை விறுவிறுப்பாக நகரும்.
🔹படத்தின் ஒரு காட்சியில், நாஜி அதிகாரிகள் தங்கள் நாட்டுப் பாடலைப் பாடும்போது, Victor தலைமையில் #French மக்கள் தங்கள் நாட்டுப் பாடலான #LaMarseillaise சத்தமாகப் பாடி அவர்களை அடக்குவார்கள். தேசப்பற்றையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்தும் சினிமா வரலாற்றின் மிகச்சிறந்த காட்சிகளில் இதுவும் ஒன்று.
🧭 Final Take-
சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் ஒரு சினிமா ரசிகர் என்றால், ஒரு முழுமையான திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், காதல் மற்றும் கடமைக்கு இடையே ஒரு மனிதன் எதைத் தேர்ந்தெடுக்கிறான் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இந்தப் படம் ஒரு மிகச்சிறந்த பாடமாகும்.
உலக சினிமாவை அறிய வைக்கும் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவளியுங்கள். 🙏🏻💚🫰🏻
@Reviewbyamit @aaradhana_gowri @balaji_213 @Absolutlycinema @NithyViews @TheCinediction @LearnEasy11 @cinee_mazhaii_ @SuryaYuva2tn @Nithya_vin @cinemaGems89 @Missed_Thrills
@VenkeyReacts @Kathira46482094 @top2bot15 @Ghostgova @Sathish_dsv @karthick_45 @Nidhura_Views @Kirank_3108 @MoveyFreaky05, @tamilhollywood2 @Nandhan_Talkz @KUDALINGAM49671 @NikhilPoojary01 @KarasingamAc @Just__Cinema @Buddythala @Saravan_movieRW @_makeanoffer @shivtweetzz @Mr_Nobody_das @AjayRenald @SivaDas45 @24thCS @MrKnightjegan @CINEMA_TREND_
@ksrajabe

#filmdiaryclassicals 8 •
🎬 #Gonewiththewind 1939 ⏳3h58m ⭐8.2 Dir- #Victorfleming #Historicalfiction #Romance #Wardrama #Costumedrama 📜🔥❤️🌹⚔️💣
#oneline of the film
தான் விரும்பிய ஒருவனை பழிவாங்க, ஒரு இளம் பெண் செய்த செயல் அவளின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதே இதன் ஒரு வரி கதை.
#Synopsis
அமெரிக்க தெற்குப் பகுதியில் உள்ள #Tara வில் வாழும் #ScarlettO’Hara #AshleyWilkes மீது காதல் கொள்கிறாள். ஆனால் Ashley, மென்மையான #Melanie என்பவளைத் திருமணம் செய்து கொள்ளகிறார்.
இதனால் மனமுடைந்த Scarlett, பழிவாங்கும் விதமாக, Melanie-யின் சகோதரன் #Charles-ஐ அவசரமாக திருமணம் செய்கிறாள். ஆனால், American #CivilWar தொடங்கியதும், Charles உயிரிழக்க, Scarlett விதவையாகிறாள்.
#RhettButler என்பவரை சந்திக்க, Rhett, Scarlett-இன் பிடிவாதம் & உறுதியை ரசித்தாலும், அவளின் உண்மையான காதல் Ashley-யிடம் இருப்பதை உணர்கிறான்.
போர் தீவிரமடைந்து, #Atlanta நகரம் தீக்கிரையாகும் போது, Melanie மற்றும் அவள் குழந்தையை காப்பாற்றி Tara-வுக்கு திரும்புகிறாள். தன் தாய் இறந்து, தந்தை மனநலம் பாதித்து, வறுமை சூழ்ந்திருப்பதைக் காண்கிறாள்.
"இனி ஒருபோதும் நான் பசியோடு இருக்க மாட்டேன்" என சபதமேற்று, பண்ணையைக் காக்கப் போராடுகிறாள்.
பொருளாதார தேவைக்காக, தனது சகோதரியுடன் நிச்சயிக்கப்பட்ட #FrankKennedy ஐ திருமணம் செய்கிறாள். பின்னர் அரசியல் கலவரத்தில் Frank ம் உயிரிழக்கிறார்.
அதன்பின் #Scarlett, #RhettButler ஐ திருமணம் செய்கிறாள். ஆரம்பத்தில் அவர்கள் உறவு உற்சாகமாக இருந்தாலும், Scarlett-இன் பிடிவாதமும் Ashley மீதான அவளின் காதலும், Rhett-இன் உண்மையான காதலைப் புரிந்து கொள்ளாத அவளின் மனநிலையும், அவர்களுக்குள் விரிசலை ஏற்படுத்துகின்றன.
அவர்களின் #Bonnie என்ற மகள், அவர்களின் உறவை ஓரளவு இணைக்க முயற்சித்தாலும், துரதிர்ஷ்டவசமாக Bonnie ஒரு விபத்தில் உயிரிழக்கிறாள். இந்த இழப்பு Rhett-ஐ மனதளவில் முற்றிலும் உடைத்து விடுகிறது.
அதே சமயம் Melanie-யும் இறக்கிறார்.
இறுதியில் Scarlett உணர்கிறாள்—அவள் உண்மையில் காதலித்தது Ashley அல்ல; Rhett தான்.
ஆனால் அது மிகவும் தாமதமாகிவிட்டது. மனதளவில் களைத்துப்போன Rhett, Scarlett-ஐ விட்டு விலக முடிவு செய்கிறான். Scarlett அவனைத் தடுக்க முயன்றாலும், அவன் பிரியும்போது தனது புகழ்பெற்ற வார்த்தையைச் சொல்கிறான்:
'Frankly, my dear, I don’t give a damn'
இறுதியில், எல்லாவற்றையும் இழந்த Scarlett, Tara-வுக்கு திரும்பி, மீண்டும் தனது வாழ்க்கையை கட்டியெழுப்ப முடிவு செய்கிறாள். அவள் தன்னம்பிக்கையுடன் சொல்கிறாள்:
'Tomorrow is another day'
✍️ இப்படம் Margaret Mitchell ஆல் எழுதப்பட்டு 1936ல் வெளியான #GonewiththeWind என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
🧭 Final Take -
🔹மனித மனத்தின் பிடிவாதம்
🔹போரின் அழிவு
🔹உண்மையான காதலை தாமதமாக உணரும் வேதனை
🔹 பிரிந்து தரும் மனவலிமை போன்றவற்றை ஆழமாக காட்சிப்படுத்திய விதத்தில் இத் திரைப்படம் தனித்து நிற்கிறது.
🔹10 ஆஸ்கார் விருதுகளை அள்ளிய திரைப்படம், ஆயிரக்கணக்கான கலைஞர்களைக் கொண்டு மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்ட போர் காட்சிகளின் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தது.
🔹அமெரிக்க #Civilwar ஒரு சமூகத்தையே எவ்வாறு சிதைத்தது என்பதையும், அந்தப் பேரழிவுக்கு பிறகு ஒரு சுயநலமிக்க, தைரியமான, தன்னம்பிக்கையுள்ள பெண், நிலத்தையும் வாழ்வையும் எதிர்கொள்வதை வலுவான முறையில் காட்சிப்படுத்தியுள்ளது.
🔹🌈 #Technicolor (3-strip process) பயன்படுத்திய மிகப் பிரபலமான early films-ல் ஒன்று. #colorgrading, #costumecontrast #lighting மிகவும் செம்மையாக வடிவமைக்கப்பட்டது
🔹➡️ #visualrichness 🎬
framing, depth, crowd staging, mise-en-scène ஐ அடியொற்றி ஒவ்வொரு frame-மும் painting போல அமைக்கப்பட்டது.
உலக சினிமாவை அறிய வைக்கும் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவளியுங்கள். 🙏🏻💚🫰🏻
@MovieManiacsNFT @tamilhollywood2
@Sathish_dsv @SuryaYuva2tn @Missed_Thrills
@TalkiesFriday @shivtweetzz
@ireen722 @H_SteveX @2024Gokul @LearnEasy11 @Spy_Next_Door_ @Cinee_mazhaii_ @padampishow @itz_rkannaa @Ghostgova @praky26 @cinemaGems89 @Absolutlycinema @AshwinBala_Offi @KUDALINGAM49671 @itzSekar @dsk_vignesh @Nidhura_Views @Kakashi6824 @aaradhana_gowri @karthickviews @CINEMA_TREND_ @rajmohan2blue @BollywoodGirlX @KarasingamAc @mayirepochu1 @Missedmovies @Human_Travel21
@_CineVibez @Just__cinema @balaji_213

#filmdiaryclassicals 7 •
🎬 #Stagecoach 1939 ⏳1h36m ⭐7.8
Dir- #Johnford #Classicalwesturn #adventure #drama 🤠🐎🌄🧭🔥🏜️🎭💔⚖️
#oneline of the film
பல்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட ஒரு குழுவினர் குதிரை வண்டியில் (Stagecoach) அபாயகரமான பாலைவனப் பகுதியில் பயணிக்கையில், நிலத்திற்காக போராடும் அப்பாச்சி பழங்குடியினரின் தாக்குதலையும், தங்கள் தனிப்பட்ட முரண்களையும் கடந்து இலக்கை அடைவதே இக்கதை.
#Synopsis
அரிசோனாவிலிருந்து நியூ மெக்சிகோவிற்குச் செல்லும் ஒரு குதிரை வண்டியில் ஒன்பது பயணிகள் பயணிக்கின்றனர்.
#RingoKid தனது தந்தை மற்றும் சகோதரனைக் கொன்ற பிளம்மர் சகோதரர்களைப் பழிவாங்கச் செல்கிறான்.
#Dallas ஒழுக்கக் காரணங்களுக்காக ஊரை விட்டுத் துரத்தப்பட்டு, புதிய வாழ்க்கையைத் தேடிப் பயணிக்கும் பெண்.
#JosiahBoone குடிப்பழக்கத்தால் ஊரை விட்டு வெளியேற்றப்பட்ட மருத்துவர்.
#LucyMallory ராணுவ அதிகாரியான தனது கணவரைச் சந்திக்கச் செல்லும் ஒரு கர்ப்பிணி
#Hatfield LucyMalloryக்கு பாதுகாப்பு அளிக்க வரும் ஒரு சூதாட்டக்காரர்.
#SamuelPeacock எனும் மது வியாபாரி தனது வியாபாரத்திற்காகப் பயணிக்கிறார்.
#HenryGatewood வங்கியிலிருந்து பணத்தைத் திருடிக்கொண்டு தப்பி ஓடும் வங்கி மேலாளர்.
#CurlyWilcox ரிங்கோ #RingoKid ஐ பிடித்துச் சென்று வெகுமதி பெற நினைக்கும் காவலர்.
இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காகப் பயணம் செய்தாலும், #Geronimo தலைமையிலான அப்பாச்சி பழங்குடியினரின் தாக்குதல் அபாயம் அவர்களை ஒன்றிணைக்கிறது.
பயணத்தின் இடையே அவர்களுக்குள் வர்க்கப் போராட்டங்களும், தனிப்பட்ட மோதல்களும் வெடிக்கின்றன. ஒரு கட்டத்தில் அப்பாச்சிகள் வண்டியைச் சூழ்ந்து தாக்கத் தொடங்குகின்றனர். மிக நீண்ட மற்றும் விறுவிறுப்பான துரத்தலுக்குப் பிறகு, வெடிமருந்து தீரும் தருவாயில் குதிரைப்படை வந்து அவர்களைக் காப்பாற்றுகிறது.
இறுதியில் லார்ட்ஸ்பர்க்கை அடையும் #Ringokid தனது குடும்பத்தைக் கொன்றவர்களைப் பழிவாங்குகிறான். அவனது நன்னடத்தையைக் கண்ட காவலதிகாரி, அவனைத் தண்டிக்காமல் #Dallasஉடன் தப்பிச் செல்ல அனுமதிப்பதுடன் படம் நிறைவடைகிறது.
🔹 வெவ்வேறு மனிதர்களின் குணாதிசயங்களை ஆழமாகப் பேசிய இப்படம் #JohnWayne ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுக்க காரணமாக அமைந்தது.
🔹 #ApacheWars : 1849 முதல் 1886 வரை அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் அமெரிக்க ராணுவத்திற்கும் அப்பாச்சி பழங்குடியினருக்கும் இடையே உண்மையாகவே பல மோதல்கள் நடந்தன.
#Geronimo படத்தில் 'ஜெரோனிமோ' கிளம்பிவிட்டார் என்று வரும் செய்தி மக்களைப் பயமுறுத்தும். உண்மையில் ஜெரோனிமோ என்பவர் அப்பாச்சி பழங்குடியினரின் மிகப்பெரிய வீரர் மற்றும் தலைவர். அவர் 1886-இல் சரணடைந்தார். இந்தப் படம் 1880-களின் பின்னணியில் நடப்பதால், அந்த வரலாற்றுப் பதற்றத்தை இயக்குநர் #johnford மிகச்சரியாகப் பயன்படுத்தியிருப்பார்.
உலகின் முதல் #antihero சப்ஜெக்ட் படமான இது, #Ernesthaycox எழுதிய #StagetoLordsburg"l என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. அந்தச் சிறுகதையே கய் டி மாப்பசான் #GuydeMaupassant எழுதிய #Bouledesuif என்ற புகழ்பெற்ற பிரெஞ்சு கதையின் பாதிப்பில் உருவானது.
🧭 Final Take - சிறுகதையை மையப்படுத்தி இந்தப் படம் வந்திருந்தாலும், ஒரு சமூகத்தின் எழுச்சியையும் நிலத்தை காக்க அவர்களுடைய போராட்டத்தையும் வலுவாக சொன்ன விதத்தில் இது நாம் அனைவரும் பார்க்க வேண்டிய படமே.
உலக சினிமாவை அறிய வைக்கும் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவளியுங்கள். 🙏🏻💚🫰🏻
@Reviewbyamit @aaradhana_gowri @balaji_213 @Absolutlycinema @NithyViews @TheCinediction @LearnEasy11 @cinee_mazhaii_ @SuryaYuva2tn @Nithya_vin @cinemaGems89 @Missed_Thrills
@VenkeyReacts @Kathira46482094 @top2bot15 @Ghostgova @Sathish_dsv @karthick_45 @Nidhura_Views @Kirank_3108 @MoveyFreaky05, @tamilhollywood2 @Nandhan_Talkz @KUDALINGAM49671 @NikhilPoojary01 @KarasingamAc @Just__Cinema @Buddythala @Saravan_movieRW @_makeanoffer @shivtweetzz @Mr_Nobody_das @AjayRenald @SivaDas45 @24thCS @MrKnightjegan @CINEMA_TREND_
@ksrajabe

#filmdiaryclassicals 6 •
🎬 #Nosferatu 1922 ⏳1h34m ⭐7.8
Dir- #FWMurnau #Darkfantacy #Folkhorror #supernatural #fantacy
🌑🖤🐉🗡️👁️🗨️🌘🔥👻
#oneline of the film
பிறன் மனை நோக்கும் காட்டேரியை, ரியல் எஸ்டேட் முகவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே இதனுடைய கதை.
#Synopsis
விஸ்பர்க் நகரைச் சேர்ந்த ஹட்டர், தனது மேலதிகாரியின் அறிவுறுத்தலின்படி, வியாபார ஒப்பந்தத்திற்காக டிரான்சில்வேனியாவில் வசிக்கும் ஆர்லக் எனும் செல்வந்தரை சந்திக்கச் செல்கிறான். ஆர்லக் விஸ்பர்க் நகரில் ஒரு வீட்டை வாங்க விரும்புகிறார். பயணத்தின் போது ஆர்லக் ஒரு காட்டேரி (Vampire) என்பதை ஊர் மக்களின் வாயிலாக ஹட்டர் உணர்கிறான். ஹட்டரின் மனைவி *எலனின்* புகைப்படத்தைப் பார்க்கும் ஆர்லக், அவளது அழகில் ஈர்க்கப்படுகிறான்.
ஆர்லக் பல சவப்பெட்டிகளில் பிணவறை மண்ணை நிரப்பிக்கொண்டு, விஸ்பர்க் நகருக்கு கடல் வழியாகப் பயணிக்கிறான். ஹட்டர் கோட்டையில் சிறைவைக்கப்படுகிறான்.
ஆர்லக் பயணிக்கும் கப்பலில் மர்மமான முறையில் மாலுமிகள் ஒவ்வொருவராக இறக்கின்றனர். அவர்களது உடலில் கழுத்தில் இரண்டு துளைகள் காணப்படுகின்றன. இறுதியில் அந்தக் கப்பல் ஆளில்லாமல் நகரை அடைகிறது.
ஆர்லக் தனது சவப்பெட்டியுடன் நுழைகிறான். அவனுடன் சேர்ந்து நகரமெங்கும் கறுப்பு எலிகள் பரவுகின்றன, இதனால் விஸ்பர்க் நகரில் பிளேக் நோய் மிகவேகமாக பரவி நூற்றுக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்.
சிறையில் இருந்து தப்பி வந்த ஹட்டர் எலனைச் சந்திக்கிறான். எலன் ஒரு பழைய புத்தகத்தின் மூலம், "ஒரு தூய்மையான பெண், விடியும் வரை காட்டேரியின் கவனத்தைத் தன் பால் ஈர்த்து, முதல் சேவல் கூவும் வரை அவனைத் தன்னுடனே வைத்திருந்தால், அவன் சூரிய ஒளியால் அழிந்துவிடுவான்" என்ற ரகசியத்தை அறிகிறாள்.
நகரத்தைக் காப்பாற்ற எலன் தன்னைத் தியாகம் செய்ய முடிவெடுக்கிறாள். அவள் ஆர்லக்கை தனது அறைக்கு வரவழைத்து, விடியும் வரை அவனது கவனத்தைத் திசைதிருப்புகிறாள். ஆர்லக் அவளது ரத்தத்தைக் குடித்துக்கொண்டிருக்கும் போது, விடியற்காலையின் முதல் சேவல் கூவுகிறது. ஜன்னல் வழியாக ஊடுருவும் சூரிய ஒளி ஆர்லக் மீது பட்டவுடன், அவன் புகையாக மாறிச் சாம்பலாகிறான். நகரம் பிளேக் நோயிலிருந்து விடுபடுகிறது, ஆனால் எலன் ஹட்டரின் கைகளிலேயே உயிர் துறக்கிறாள்.
🔹இத்திரைப்படம் பிராம் ஸ்டோக்கரின் *டிராகுலா #Dracula நாவலைத் தழுவி முறைப்படியான அனுமதியின்றி எடுக்கப்பட்டது. இதன் காரணமாகவே கதாபாத்திரங்களின் பெயர்கள் (எ.கா: டிராகுலா என்பதற்குப் பதில் ஆர்லக்) மாற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
🔹A Survivor Film அனுமதியின்றி தழுவியதால், நீதிமன்ற உத்தரவுப்படி இந்தப் படத்தின் அனைத்து நகல்களும் எரிக்கப்பட்டன. ஆனால், அதிர்ஷ்டவசமாக ஒரு சில நகல்கள் தப்பியதால் மட்டுமே இன்று நம்மால் இந்தப் படத்தைப் பார்க்க முடிகிறது. ஒரு கலைப்படைப்பு எப்படி அழியாமல் தப்பி வந்தது என்பதை உணர்வதற்கே இதைப் பார்க்கலாம்.
🔹1922-இல் வெளியான #Nosferatu திரைப்படம் உலக சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்.The Origin of Horror சினிமா என்றே கூறலாம் இதன் தாக்கம் இன்றுவரை #Horror திரைப்படங்களில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
🧭 Final Take -
🔹Visual Artistry #GermanExpressionism பாணியில் எடுக்கப்பட்ட இதில் நிழல்கள் (Shadows) மிக முக்கியப் பங்கு வகிக்கும். ஆர்லக்'ன் நிழல் மட்டும் சுவரில் விழுவது போன்ற காட்சிகள், 100 ஆண்டுகள் கடந்தும் இன்றும் உலகப் புகழ்பெற்றவை. ஒளியையும் நிழலையும் வைத்து எப்படி ஒரு பதற்றமான சூழலை உருவாக்குவது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
உலக சினிமாவை அறிய வைக்கும் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவளியுங்கள். 🙏🏻💚🫰🏻
@MovieManiacsNFT @tamilhollywood2
@Sathish_dsv @SuryaYuva2tn @Missed_Thrills
@TalkiesFriday @shivtweetzz
@ireen722 @H_SteveX @2024Gokul @LearnEasy11 @Spy_Next_Door_ @Cinee_mazhaii_ @padampishow @itz_rkannaa @Ghostgova @praky26 @cinemaGems89 @Absolutlycinema @AshwinBala_Offi @KUDALINGAM49671 @itzSekar @dsk_vignesh @Nidhura_Views @Kakashi6824 @aaradhana_gowri @karthickviews @CINEMA_TREND_ @rajmohan2blue @BollywoodGirlX @KarasingamAc @mayirepochu1 @Missedmovies @Human_Travel21
@_CineVibez @Just__cinema @balaji_213

OneLine is free. No strings attached.
If you ever wanted to keep a journal but never found the time — this is for you.
→ https://t.co/bOWVxfBDqN
Built entirely by AI agents. Zero human intervention.
We're just getting started.
#BuildInPublic #AI #OneLine #DYZINK
#filmdiaryclassicals 5 •
🎬 #Themoderntimes 1936 ⏳1h27m ⭐8.5 Dir- #CharlesChaplin #Romanticcomedy #Satire #Slapstick #Comedy #Drama #Romance 🎭💖😭
#oneline of the film
தொழிற்புரட்சியின் எந்திரத்தனமான வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் ஒரு சாமானிய மனிதன், வறுமை மற்றும் சவால்களைத் தாண்டி தனது துணையுடன் மகிழ்ச்சியைத் தேடிப் பயணிப்பதே கதை.
#Synopsis
ஒரு பெரும் தொழிற்சாலையில் திருகாணிகளை (Nuts) முறுக்கும் வேலையைச் செய்யும் நாயகன் #Thetramp இடைவிடாத எந்திரத்தனமான வேலையினால் மனநலம் பாதிக்கப்பட்டுச் சிறைக்குச் செல்கிறான். சிறையிலிருந்து விடுதலையான பின், எதிர்பாராத விதமாக ஒரு கம்யூனிச ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கியதாகக் கருதி மீண்டும் கைது செய்யப்படுகிறான். அங்கு தற்செயலாக ஒரு சிறைக்கலகத்தைத் தடுத்து நிறுத்தியதற்காக மரியாதையுடன் விடுவிக்கப்படுகிறான்.
வெளியே வந்தவன், உணவிற்காகத் திருடிப் போலீசிடம் சிக்கவிருக்கும் ஒரு ஆதரவற்ற பெண்ணைச் (The Gamin) சந்திக்கிறான். அவளைக் காப்பாற்ற அந்தப் பழியைத் தன்மீது ஏற்றுக்கொள்கிறான். இருவரும் இணைந்து ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழக் கனவு காண்கின்றனர்.
வறுமையின் பிடியில் சுழன்ற நிலையில், நாயகன் ஒரு உணவகத்தில் பாடகனாகச் சேர்ந்து புகழடைகிறான். பழைய குற்றச் செயலுக்காக, அந்தப் பெண்ணைப் பிடிக்கப் போலீசார் வருவதால் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடுகின்றனர்.
வேலை இழந்து சோர்ந்து போயிருக்கும் நிலையில் அந்தப் பெண்ணிடம், "மனம் தளராதே, புன்னகை செய்" என்று நம்பிக்கை ஊட்டும் நாயகன், அவளுடன் கைகோர்த்து ஒரு புதிய விடியலை நோக்கிச் சாலையில் நடந்து செல்வதுடன் படம் நிறைவடைகிறது.
Life uncertain… but keep moving forward.
➤ இப்படம் #Industrialcapitalism மீது நேரடியான தாக்குதலை தொடுத்தது. 💼 பொருளாதார மந்தநிலை கவிழ்ந்த 1930களின் #GreatDepression காலத்தை இது பிரதிபலிக்கிறது. ஒரு “காலத்தின் ஆவணம்” போல பார்க்கப்படுகிறது.
➤ சாப்ளினின் மற்ற படங்களைப் போல இதிலும் நகைச்சுவைக்கு இணையாக ஒரு மெல்லிய சோகம் #Pathos கலந்து, எந்திரமய உலகில் மனிதர்கள் வெறும் கருவிகளாக மாற்றப்படுவதைச் அங்கதச் சுவையுடன் #Satire காட்டினார்.
🧭 Final Take -
🔹இது ஒரு “old movie” அல்ல - #relevantsystemanalysis ஆகும். #workpressure 😓 #automation 🤖
#corporateroutine என 1936-ல் சொன்ன இந்த விஷயங்கள் இன்று இன்னும் தீவிரமடைந்துள்ளன.
Visual storytelling ல் அசத்தும் இந்த Cinema, ஒரு 'film school in itself' எனலாம்.
🔹Visual satire, character design, pacing என சினிமாவின் Grammar-ஐ shape பண்ணியுள்ளார் சாப்ளின்.
🔹You’re not just watching history — you’re watching your present.
🔊 1927-இல் 'The Jazz Singer' வருகைக்குப் பிறகு மௌனப் பட யுகம் முடியத் தொடங்கியது. ஆனால், சாப்ளின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் (1927 - 1936) பேசும் படத் தொழில்நுட்பத்தை (Talkies) மிகத் தீவிரமாக எதிர்த்தார். அது குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்🔥 💥
உலக சினிமாவை அறிய வைக்கும் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவளியுங்கள். 🙏🏻💚🫰🏻
@Reviewbyamit @aaradhana_gowri @balaji_213 @Absolutlycinema @NithyViews @TheCinediction @LearnEasy11 @cinee_mazhaii_ @SuryaYuva2tn @Nithya_vin @cinemaGems89 @Missed_Thrills
@VenkeyReacts @Kathira46482094 @top2bot15 @Ghostgova @Sathish_dsv @karthick_45 @Nidhura_Views @Kirank_3108 @MoveyFreaky05, @tamilhollywood2 @Nandhan_Talkz @KUDALINGAM49671 @NikhilPoojary01 @KarasingamAc @Just__Cinema @Buddythala @Saravan_movieRW @_makeanoffer @shivtweetzz @Mr_Nobody_das @AjayRenald @SivaDas45 @24thCS @MrKnightjegan @CINEMA_TREND_
@ksrajabe

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.1M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
108.8M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.2M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.5M followers

KATY PERRY 
@katyperry
86.7M followers

Taylor Swift 
@taylorswift13
80.5M followers

Lady Gaga 
@ladygaga
72.1M followers

Kim Kardashian 
@kimkardashian
69.4M followers

YouTube 
@youtube
68.6M followers

Virat Kohli 
@imvkohli
68.4M followers

Bill Gates 
@billgates
63.4M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61M followers

X 
@x
60.9M followers

CNN Breaking News 
@cnnbrk
59.9M followers



































