பாலுமகேந்திரா/கமல்ஹாசன்/கிரேஸிமோகன் என்கிற MONSTERS!
இது "தேவையில்லாத ஸீன்" அப்டினு சொல்லமுடியாத அளவுக்கு நேர்த்தியான படம். இப்ப பெஸ்ட் காமெடி படம் எது னு யாரை கேட்டாலும் உடனே பஞ்சதந்திரம், வசூல் ராஜா அப்டினு சொல்லுவாங்க. ஆனா என்னை பொறுத்தவரை இந்த சதிலீலாவதி தான். பின்ன.... ஒரு கமல்ஹாசன் படத்தை இன்னொரு கமல்ஹாசன் படத்தோட தானே COMPARE பண்ணமுடியும். அவருக்கு நிகர் அவரே.
கிளைமாக்ஸ்ல கமல், "பிரேக்கு புடிக்கல...." னு சொல்றதும், அதுக்கு கோவை சரளா, "என்னையவே பிடிக்கல... இதுல பிரேக்கு புடிச்சா என்ன புடிக்கலான என்ன.." அப்படிங்கிற வார்த்தை ஜாலங்களுக்கு சொந்தக்காரர் CRAZY MOHAN அவர்கள். இது அவரோட படம்னே சொல்லலாம். அவரோட பெஸ்ட் CREATION!
Ill never forgive Tamil audience for failing this one film. Raaja thanthiram. The film had everything to become a blockbuster. Pavam ...antha director. Aala kaanama aakiteengalae yaa!
Not every legend is a myth, some are flesh and blood
Some legends walk among us, but they aren’t born, they’re built
Legends are made from iron & sweat, mind and muscle vision and victory. Legends are champions, they grow, they win, they conquer.
Happy birthday @ikamalhaasan
சவுக்கு சங்கர் விடுதலை ஆகி இருக்கிறார்.
அவர் மீது இருந்த குண்டர் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அது நடந்த இரண்டு நாட்களில் அவர் மீது இன்னொரு குண்டர் சட்ட வழக்கை தமிழ் நாட்டு காவல்துறை பதிவு செய்தது. அது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நாள் அன்று அந்த 'இரண்டாவது' குண்டர் சட்டத்தை வாபஸ் வாங்கிக் கொள்வதாக மாநில அரசு ஆணை பிறப்பித்து, அதன் நகலை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவர் விடுதலையைக் கோரி போடப்பட்ட ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்தது. அன்று மாலையே அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
எனக்கு இங்கே ஒரு கேள்வி எழுகிறது. அவர் வீட்டில் ரெண்டு மூட்டை கஞ்சா வைத்திருந்தார். அஞ்சு மூட்டை கஞ்சா வைத்திருந்தார் என்றெல்லாம் புகார்கள் எழுந்தன. கஞ்சாவை கைப்பற்றியதற்குத்தான் அவர் மீது குண்டர் வழக்கு பாய்ந்தது. அது நடந்த பின்னர் அவரை 'சவுக்கு' சங்கர் என்று குறிப்பிடுவதற்கு பதில் 'கஞ்சா' சங்கர் என்றுதான் திமுக அபிமானிகள் பெரும்பாலானோர் குறிப்பிட்டு எழுதி வந்தார்கள். அவர் கைதை கண்டித்து நான் எழுதிய பதிவுகளில் எல்லாம் வந்து 'அப்போ கஞ்சா பதுக்கி வெச்சிருந்தா உங்களுக்கு ஓகேவா?' என்றெல்லாம் அறச் சீற்றம் கொண்டு பொங்கினார்கள்.
இப்போது அரசே மனமுவந்து அந்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டிய அவசியம் என்ன? சங்கர் கஞ்சா வியாபாரிதான்; வீட்டில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருந்தார், என்றால் அந்த ஆதாரங்களை எல்லாம் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முகத்தில் விட்டெறிந்து இருக்க வேண்டியதுதானே? எதற்கு அவசரமாக பம்மி அதை வாபஸ் வாங்க வேண்டும்? அரசு ஆலோசனைக் குழு ஒன்றின் பரிந்துரையை ஏற்று இந்த வழக்கை வாபஸ் வாங்கியதாக அரசு சொல்கிறது. அந்த அறிக்கையின் நகலைப் படித்தேன். அதில் பின்வரும் வரிகள் இருந்தன:
The Advisory Board has expressed its unanimous opinion that there is no sufficient cause for the detention of Thiru Shankar @ Savukku Shankar. ++
அவரைக் கைது செய்து வைத்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று இந்த அரசாணை சொல்கிறது. அதாவது ஐந்து மாதங்கள் அவரை எந்த முகாந்திரமும் இன்றிதான் சிறையில் வைத்திருந்திருக்கிறார்கள். கையை உடைத்திருக்கிறார்கள். டஜனுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிந்து ஊர் ஊராக அலைய விட்டிருக்கிறார்கள். வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தார் என்று அவர் இமேஜை குலைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு குண்டர் வழக்கு ரத்தானதும் அவசர அவசரமாக இரண்டாவது குண்டர் சட்டத்தைப் போட்டு மேலும் ஒரு மாதத்துக்கு சிறையில் தொடர வைத்திருக்கிறார்கள்.
இது எல்லாவற்றுக்கும் எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் சுப்ரீம் கோர்ட்டில் பெரும் டோஸ் கிடைக்கப் போகிறது என்று யாரோ சொல்லி இருக்கிறார்கள். உடனே ஒரு ஆலோசனைக் குழு திடீரென்று முளைத்து 'என்ன பாஸ் காரணமே இல்லாம ஜெயில்ல வெச்சிருக்கீங்க!' என்று கேட்டு, 'ஓ அப்படியா?' என்று விடுதலை செய்திருக்கிறார்கள்.
இந்த நிலை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கக் கூடும். ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கானோருக்கு நடந்து கொண்டும் இருக்கிறது. 'சவுக்கு' சங்கர் ஒரு ஊடகவியலாளர் என்பதால் அவர் கைது வெளிச்சத்துக்கு வந்து இங்கே விவாதிக்கப்படுகிறது. ஆனால் அப்படி எந்த ஊடக வெளிச்சமும், உச்ச நீதிமன்றம் வரை போகக் கூடிய சட்ட அறிவும் நிதி வசதியும் இல்லாத லட்சக்கணக்கானோர் நமது இந்த உடைந்து போன சிஸ்டத்தினால் தினம் தினம் அல்லல்பட்டு வருகிறார்கள். விசாரணைக் கைதிகளாக வருடக் கணக்கில் சிறையில் வாடுகிறார்கள். நான்கைந்து ஆண்டுகள் சிறையில் வாடி வழக்கு நீர்த்துப் போய் வெளியே வந்து, குடும்பம் விட்டு விலகி, வேலை கிடைக்காமல், வாழ்க்கை தொலைந்து போய் நசிவடைகிறார்கள். இப்படி நசிவடைபவர்களில் 90 சதவிகிதம் விளிம்பு நிலை மக்கள்தான் என்பது கூடுதல் சோகம்.
அப்படி எல்லாம் நடப்பதற்குக் காரணம்: முன்கூட்டிய கைது என்பதை ஒரு சமூகமாக நாம் சகஜமாக ஏற்றுக் கொள்வதுதான். நமக்குப் பிடிக்காத ஒருவர் எனும் போது அப்படிப்பட்ட கைதை நமது கோபத்தின் வடிகாலாக நாம் வரவேற்கவே செய்கிறோம். அப்போது அது normalise ஆகிறது. அவலமான அந்த சிஸ்டம் தொடர்கிறது.
ஏதோ ஒரு ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டது போல, ஸ்ரீதரின் இந்த ஆலோசனையை ஏற்க முடியுமா என்று பாருங்கள்: உங்களுக்குப் பிடிக்காதவராக இருந்தாலும் சட்டவிரோதமான மற்றும் அறத்துக்கு எதிரான விஷயங்களை ஆதரித்து நிற்காதீர்கள். சொல்லப் போனால் உங்களுக்குப் பிடிக்காத ஒருவரின் மானுட உரிமைக்காக குரல் கொடுப்பதுதான் உண்மையில் அறம் எனப்படும்.
விடுதலையான 'சவுக்கு' சங்கருக்கு வாழ்த்துகள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்தப் புதிய புகழை இனிமேல் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
விடுதலை செய்த மாநிலக் காவல் துறைக்கு வருத்தங்கள். இனிமேலாவது இந்த கஞ்சா துஷ்பிரயோகம் செய்வதை தவிர்க்க முனையுங்கள். முன்கூட்டிய கைதுகளை சென்ஸிட்டிவிடியுடன் அணுகுவது பற்றி ஒரு அறிவுரை வழங்கி அதை அனைத்து காவல் துறைக்கும் சுற்றறிக்கை அனுப்புவது பற்றி பரிசீலியுங்கள்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
@teakkadai1 எப்ப இருந்தாலும் சாக தான் போறோம்னு இப்பவே சாக முடியுமா என்ன...அது அதுக்கு ஒரு நேரம் உண்டு.. சத்யராஜ் நம்பி பல சின்ன பட producer's இருந்தாங்க அப்ப..