யாருக்கு வெட்கமில்லை? @VanniTamizhVCK
பாஜகவைக் கொள்கை எதிரியெனக் கூறிவிட்டு, 2001ஆம் ஆண்டில் பாஜக கூட்டணியில் அங்கம்!
விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் தீ���்மானம் இயற்றிய ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, இரண்டே ஆண்டுகளில் 2006ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் அங்கம்!
"ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் செய்தார் கருணாநிதி" என 2004ஆம் ஆண்டு விமர்சித்து கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டு, 2006ஆம் ஆண்டு மீண்டும் திமுக கூட்டணியில் ஐக்கியம்!
2009ஆம் ஆண்டு சனவரி மாதம் காங்கிரசுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு, அதே ஆண்ட��� மே மாதம் காங்கிரசுடன் கூட்டணியில் ஐக்கியம்!
'சாதிய அரசியல் செய்கிறது பாமக' என விமர்சிக்கப்பட்டக் காலத்திலேயே, 2009ஆம் ஆண்டு பாமகவோடு ஒரே கூட்டணியில் அங்கம்!
"விஜயகாந்துக்கு நாடாள என்ன தகுதி இருக்கிறது?" எனக் காட்டமாக விமர்சித்துவிட்டு, அதே விஜயகாந்தைத் தலைமையேற்று, 2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் அங்கம்!
'கண்ணாடி விரியன்' எனக் கூறி நச்சுப் பாம்பென திமுகவை 2016ஆம் ஆண்டு விமர்சித்துவிட்டு, 2019ஆம் ஆண்டு அதே திமுகவுடன் கூட்டணியில் ஐக்கியம்!
2017ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் வருகை குறித்து அறிவித்தபோது, அதனை வரவேற்று Charistmatic Leader எனவும், அவர் முன்வைக்க விரும்பும் அரசியல் எல்லோருக்குமானது எனவும் புகழாரம் சூட்டிவிட்டு, அதே ரஜினிகாந்தை எதிர்த்து சில மாதங்களிலேயே விமர்சனம்!
கமல்ஹாசனை, 'பாஜகவின் கைக்கூலி' என 2019ஆம் ஆண்டு விமர்சித்துவிட்டு, அதே கமல்ஹாசனை வைத்து 2024ஆம் ஆண்டு சிதம்பரத்தில் தங்களது வெற்றிக்காகப் பரப்புரை!
2026ஆம் ஆண்டு, 'RSSன் பிள்ளை' என தவெகவை விமர்சித்துவிட்டு, தேர்தலுக்குப் பின்னர், அதே தவெகவோடு கூட்டணி - அமைச்சரவையில் அங்கம்!
2026ஆம் ஆண்டு திமுகவும், அதி��ுகவும் இணைந்து திருமாவை முதல்வராக்க ஒரு முயற்சி எடுத்தபோது, அதற்காகப் பின்புலத்தில் ஆதரவளித்தது!
இவ்வாறாக, திருமா துண்டுபோட்டு வைக்காத கட்சிக��ே இல்லை! கூட்டணி வைக்காத இயக்கங்களே இல்லை!
தேவைப்பட்டால், ராஜபக்சேவோடும் கைகுலுக்குவார்; அமித்ஷாவையும் அரவணைத்துப் பேசுவார். எதற்கும் கூச்சப்படவோ, வெட்கப்படவோ மாட்டார் திருமா.
சந்தர்ப்பவாத அரசியலின் முழு உருவம் திருமா!
இப்படி தேர்தல் இலாபத்துக்காக யார் காலையும் பிடிக்கத் தயங்காத திருமாவைத் தலைவராக ஏற்றுக் கொண்டு இருக்கிற வன்னியரசு, தேர்தல் அரசியலில் சமரசமே செய்யாது ��ருக்கிற எங்களைப் பார்த்துப் பேசலாமா?
விஜய்யைக் கோழை என விமர்சித்துவிட்டு, அதே கோழையின் அமைச்சரவையில் தொடர்வதற்காகக் கூழைக்கும்பிடு போடும் வன்னியரசுக்கு எங்களைப் பேச என்ன அருகதை இருக்கிறது?
“விஜயன் தான் உலகிலேயே முதன்முதலாக ஈழத்திற்கு வந்த அக���ி.”
“Vijayan was the world’s first asylum seeker to arrive in Eelam.
“විජය තමයි ලෝකයේ පළමු වරට ඊළමට පැමිණි සරණා���තයා.”
#Eelam #ஈழம் #ඊළම #SriLanka #இலங்கை
எரியும் அக்கினிக் குஞ்சுகள்: வேர்களைத் தேடும் புதிய தலைமுறையும் பேரினவாதத்தின் வீழ்ச்சியும்
"நான் தமிழீழத் தமிழ்ப் பெண் என்று என்னை அடையாளப்படுத்தவே விரும்புகிறேன்."
மைத்திரேயி இராமகிருஷ்ணன் உதிர்த்த இந்த ஒற்றை வாக்கியம், வெறுமனே ஒரு திரைக்கலைஞரின் தன்விளக்கம் அல்ல; அது ஒரு தேசிய இனத்தின் இருப்பியல் பிரகடனம். "நான் எங்கிருந்து வந்தேன்? என் பெற்றோர் யார்? என் அடையாளம் என்ன?" என்ற தேடல், ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள அடிப்படையான அறம். ஆனால், அந்த அறத்தை ஓர் தமிழீழத்தமிழ்ப் பெண் உலக அரங்கில் நெஞ்சழுத்தமாகச் சொல்லும்போது, அது ஒரு மாபெரும் அரசியல் அதிர்வலையாக மாறுகிறது.
சிங்களப் பௌ���்த பேரினவாதமும், அதன் அடிவருடிகளான ஒத்தோடிகளும் இந்தப் பெண்ணை எதிர்க்கப் போய், இன்று தங்களை அறியாமலேயே தங்களுக்குக்கான ஒரு வரலாற்றுத் தவறைச் செய்திருக்கிறார்கள். மு��்ளிவாய்க்காலில் ஆயுதங்களை மௌனிக்கச் செய்ததும், ஒரு முழுமையான இனப்படுகொலையை மூடி மறைத்துவிடலாம் என அவர்கள் கணக்குப் போட்டார்கள். தமிழீழம் என்ற சொல்லை வரலாற்றின் பக்கங்களில் இருந்து அழித்துவிடலாம் என்று இருமாப்புக் கொண்டிருந்தார்கள். ஆனால், மைத்திரேயி மீதான அவர்களின் காழ்ப்புணர்ச்சிக் கூச்சல்கள், இன்று அனைத்துலகப் பெருவெளியில் தமிழீழத்தமிழர் மீதான இனப்படுகொலையை மீண்ட��ம் பேசுபொருளாக்கி விட்டன. அடக்குமுறையாளனின் ஆயுதமே, அவனுக்கு எதிரான சாட்சியமாக மாறும் வரலாற்று நியதி இதுதான்.
தத்துவார்த்த ரீதியாகப் பார்த்தால், அடையாளம் என்பது வெறும் நிலம் சார்ந்ததல்ல; அது குருதியிலும், நினைவுகளிலும் உறையவைக்கப்பட்ட ஒரு கூட்டு மனச்சாட்சி. எம்மை நிலத்திலிருந்து வேரறுக்கலாம், ஆனால் எங்கள் வேர்களின் நினைவுகளை எவராலும் சிதைக்க முடியாது. இன்று எங்கள் பேரன்களும் பேத்திகளும் தங்கள் அடையாளங்களைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். புலம்பெயர்ந்து, பல்லினப் பண்பாடுகளுக்கு மத்தியில் வாழும் எமது ��ுதிய தலைமுறை, தங்களின் தாய்நிலத்தின் காயங்களை உணரத் தலைப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தமிழீழத்தின் வீதிகள் பரிச்சயமில்லாமல் இருக்கலாம்; ஆனால் அவர்களின் மரபணுக்களில் தமிழீழத்தின் வலி உறங்கிக் கிடக்கிறது. அந்த வலிதான் இன்று கேள்விகளாக, அடையாளத் தேடலாக, உரிமைக்குரலாக உருவெடுக்கிறது. "நான் யார்?" என்ற ஒற்றைக் கேள்விக்குள், பல தசாப்த கால போராட்ட வரலாறும், ஒடுக்கப்பட்ட மக்களின் நிய���யமான ஆசைகளும் பொதிந்து கிடக்கின்றன. இது வெறும் அடையாளத் தேடல் அல்ல; இது உலக அரங்கில் நீதியை நிலைநாட்டுவதற்கான ஒரு தலைமுறையின் ஆத்மார்த்தமான முன்னெடுப்பு.
பாரதியாரின் "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்... வெந்து தணிந்தது காடு!" என்ற வரிகள் இன்று நிதர்சனமாகிக் கொண்டிருக்கின்றன.
மைத்திரேயி போன்ற இளைய தலைமுறையினர்தான் அந்த அக்கினிக் குஞ்��ுகள். பேரினவாதம் கட்டமைத்த பொய்கள், உலக அரங்கில் அவர்கள் பின்னிக் கற்பித்த மாயைகள் யாவும் இன்று ஒரு மாபெரும் காடாக நிற்கின்றன. ஆனால், அந்தப் பொய்க்காட்டை எரித்துச் சாம்பலாக்க, "நான் தமிழீழத்தமிழ்ப் பெண்" என்ற ��ந்த ஒற்றை அக்கினிக் குஞ்சு போதுமானதாக இருக்கிறது.
எங்கள் தலைமுறை சுமந்த தழும்புகளையும், சிந்திய இரத்தத்தையும், இழந்த நிலத்தையும் இந்தப் புதிய தலைமுறை உலக மொழிகளில், உலக அரங்கில் நெஞ்சை நிமிர்த்திப் பேசத் தொடங்கியிருக்கிறது. இருட்டறையில் அடைக்கப்பட்ட ஒரு தேசத்தின் வரலாறு, இப்போது வெளிச்சத்தை நோக்கி நகர்கிறது.
இனப்படுகொலை செய்தவர்கள் அஞ்ச வேண்டிய காலம் இது. ஏனென்றால், வீழ���ந்தது நாமாக இருக்கலாம், ஆனால் எழுவது எங்கள் அக்கினிக் குஞ்சுகள். எங்கள் வேர்களைத் தேடும் பயணம் தொடங்கிவிட்டது; இது முற்றுப்புள்ளி இல்லாத வரலாற்றுத் தொடர்ச்சி. தழும்புகளைச் சுமந்தபடி, நீதியின் கதவுகளை எம் பேரப்பிள்ளைகள் தட்டும் ஓசை இப்போது உலகெங்கும் கேட்கத் தொடங்கிவிட்டது.
தேவாரம்,திருவாசம் எல்லாம் பக்திப்பாடல்கள் போல #சமஸ்கிருத மொழியில் இருப்பதும் பக்திப் பாடல்களே.
நமக்குப் புரியாத மொழியில் கடவுளிடம் பாடி வணங்குவது ,
வேண்டுவது எப்படி மந்திரம் ஆகும்.
அது ஒலியை அடிப்படையாக வைத்துச் செயல்படுதுனு புருடா விடுவானுங்க.நம்பாதீங்கோ.
💯 ஏமா���்று வேலை.
அடேய் சிங்களவன்களே! 😏 ஒரு ஈழத் தமிழச்சியை தாக்கப் போய், 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையையே உலக அரங்கில் மீண்டும் பேச வைத்துவிட்டீர்கள்.
உங்கள் இனவாதம் உலகம் முழுவதும் நாறுகிறது.
நாங்கள் ஏன் பிரிய வேண்டும் என்பதற்கான நியாயத்தையும் நீங்களே விளம்பரப்படுத்துகிறீர்கள். நன்றி!
உறவுகளே. Maitreyiக்கு எதிரான சிங்கள இனவாதிகளின் கீழ்த்தரமான வேலைகளை முறியடிக்க..இந்த இணைப்புல போய் பத்துக்கு பத்து rating கொடுத்துட்டு, முடிந்தால் இங்க replyல ஒரு confirmation போடுங்க.
https://t.co/4aSRgzmJ3A
@HoneySmirk28@Vandhana1810 டேய் எண்ணெய்யில கையவுட்டு எடுத்து இந்தியனால மட்டும்தான் சாப்பிட முடியும் குப்பைநாய்யிங்க கரன்டிய பாவிங்கடா இதெல்லாம் ஒரு திறமை என்று இவன் கோபி வேற