@SowdhaMani7 வளர்ச்சியை வெளிநாட்டிற்கு கொடுத்துவிட்டு , இங்க என்ன வேலை ... வெளிநாட்டிற்கு வேலைக்கு போகிறவர்கள் இந்தியா வந்தால்
ஒரு வருடம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து , இந்தியாவிற்கு 20% கப்பம் கட்டிவிட்டு தான் வரவேண்டும் ...
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மண்ணச்சநல்லூர் திமுக MLA, கிட்னி புகழ் கதிரவன், தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) மார்ச் 15, 2026 அன்று அமல் நடைமுறைக்கு வந்த பிறகு, தனது தந்தை சீனிவாசன் உடன் இணைந்து, 5 திமுக பிரமுகர்களுக்கு (இளங்கோ, கார்த்திகேயன் உள்ளிட்டோர்) 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Mahindra Scorpio N SUVகளை “பரிசு” என்ற பெயரில் Dhanalakshmi Srinivasan University-ல் வழங்கியுள்ளார்.
கிட்னி புகழ் கதிரவன் இந்த நிகழ்வின் புகைப்படங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்திலும் பதிவிட்டு பெருமைப்பட்டுக் கொண்டார்.
இது தேர்தல் நடத்தை விதிகளின் அப்பட்டமான மீறல் என்பதால் @AIADMKITWINGOFL சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உடனடியாக புகார் அளித்துள்ளோம்.
@ECISVEEP@TNelectionsCEO இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
#DMKScorpioScam
#PackUpStalin
சென்னையில் உள்ள காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்தின் அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதே போல, கோவையில் பெண் ஒருவரிடம் நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில் காவல்துறை டி.எஸ்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் அருகேயே துணிந்து கொள்ளையன் கைவரிசை காட்டியிருப்பது, பொம்மை முதல்வர் காவல்துறையை எந்த லட்சணத்தில் நிர்வாகம் செய்கிறார் என்பதற்கு சாட்சி!
முழுநேர டி.ஜி.பி. கூட இல்லாத ஒரு காவல்துறை மீது எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்?
வேலியே பயிரை மேய்ந்தாற்போல், POCSO வழக்கு முதல் கொள்ளை வரை காவல்துறையினர் மற்றும் அவர்களைச் சார்ந்தோரே குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவது, காவல்துறை நிர்வாகம் என்பது முற்றிலுமாக சீரழிந்து உள்ளதையே காட்டுகிறது.
காரணம்? இதைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லாத வெற்று பொம்மை முதல்வராக இருக்கும் @mkstalin.
தொலைந்த இரும்புக்கரத்தை நீங்கள் இனிமேல் கண்டுபிடித்து, துரு நீக்கி..... எந்தப் பயனும் இல்லை!
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசை 2026-ல் மாண்புமிகு புரட்சித் தமிழர் தலைமையில் வீட்டுக்கு அனுப்பி, #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம் !
#DMKFailsTN #ByeByeStalin