உடுமலை சங்கர் கொலை சம்பவத்தில் கூலிப்படையை ஏவி சங்கரை கொலை செய்த கௌசல்யாவின் பெற்றோருக்கு தங்கள் பெண்ணை திருமணம் செய்துவிட்டார் என்கிற பெர்சனல் vengeance இருந்தது.அதுதான் கொலைக்கான motive.எந்த ஆணவப்படுகொலையை எடுத்துக்கொண்டாலும் இந்த personal vengeance தான் கொலைக்கான motive ஆக இருக்கும்.சாதிவெறிதான் கொலைக்கு முதன்மை காரணம் என்றாலும், அந்த கொலையை திட்டமிடுபவர்கள் ஏதோ ஒரு வகையில் பையனுக்கோ, பெண்ணுக்கோ நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களாக இருப்பார்கள்.
தமிழகத்தில் நடந்த மற்ற ஆணவப்படுகொலைகளிலிருந்து கோகுல்ராஜ் கொலையை வேறுபடுத்தி காட்டுவது இந்த கொலைக்கான motive தான்.A1 யுவராஜும், சுவாதியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதைத்தாண்டி அவர்களுக்குள் எந்த நெருங்கிய தொடர்புமில்லை.எனவே கொலைக்கான motive கண்டிப்பாக personal vengeance இல்லை.அதாவது emotionally செய்யப்பட்ட கொலை இல்லை.அதையும்தாண்டி இந்த சமூகத்திற்கு கோகுல்ராஜ் கொலையின் மூலமாக A1யுவராஜ் மற்றும் கூட்டாளிகள் எதோ ஒன்றை சொல்ல நினைத்திருக்கிறார்கள்.
காலம் காலமாக எங்கள் வீட்டுப்பெண்களிடம் பேசினால் வெட்டுவோம், குத்துவோம் என்று பேசி வந்தவர்கள் கொங்கு பெல்ட்டில் தங்களுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள செய்யப்பட்ட கொலை. கோகுல்ராஜை கொலை செய்வதற்கு அவர் தலித் என்பதைத்தாண்டி அவர்களுக்கு வேறு எந்தக்காரணமும் தேவைப்படவில்லை.
கோகுல்ராஜை தன் குரலிலேயே தற்கொலை செய்யப்போகிறேன் என்று சொல்ல வைத்து ரெக்கார்ட் செய்தது, அவருடைய செல்போனை அவர் படிக்கும் காலேஜ் அருகில் சென்று switch on செய்தது என அனைத்துமே well planned and executed வகையைச் சார்ந்தது. கோகுல்ராஜ் தலையை துண்டித்தது, அவருடைய நாக்கை துண்டு துண்டாக வெட்டியதெல்லாம் 'எங்கள் சாதி பெண்ணிடம் பேசினால் இதான் நிலை' என்கிற மெசேஜை சமூகத்திடம் சொல்லி, தன் சாதி பெண்களின் பாதுகாவலர் என்கிற இமேஜை கட்டியெழுப்புவதுதான் திட்டம்.அந்த political mileage க்காக பலிக்கடாவாக ஆக்கப்பட்டவர்தான் கோகுல்ராஜ்.
சந்திப்பதற்கு ஒரு நொடி முன்புவரை கூட யாரென்றே தெரியாத ஒரு அப்பாவியை தலித் என்கிற ஒரே காரணத்திற்காக கொலை செய்த ஒரு கேவலமான பிறவியைத்தான் இங்கு பலர் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.தண்டனைகளின் நோக்கம் தவறு செய்தவர்தளை திருத்துவதுதான், ஆனால் A1 யுவராஜை பார்க்கும்போது இன்னும் 100 வருடம் ஆனாலும் திருந்துவதற்கான எந்த வாய்ப்புமில்லையென்றே தெரிகிறது.இன்று A1யுவராஜை கொண்டாடும் ஒவ்வொருவரும் A1 யுவராஜை போலவே யாரென்றே தெரியாத ஒரு நபரை தலித் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லக்கூடிய கொடூர மனம் படைத்தவர்கள்.
#யுவராஜ்
குழந்தைகள் பொய் சொல்வதில்லை. பள்ளிக்குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் பதரவைக்கின்றன. சமூகத்தில் நிலவும் ஜாதி வெறியை மாற்ற கல்வி அவசியமென்றால், கல்வி கற்கும் பள்ளிக்கூடங்களே ஜாதியவாதிகளின் கூடாரங்களாகி போனது கொடுந்துயர். மாவட்ட ஆட்சியாளர், காவல்துறை கண்காணிப்பாளர், சட்டமன்ற-பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்மாவட்டத்தில் இதுபோல நடக்கும் சாதிய வன்முறைகள் குறித்த ஆய்வறிக்கையையும், தீர்வையும், சட்டபூர்வ நடவடிக்கையையும் எடுக்க வேண்டும். திமுக அரசு தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதிய வன்முறைகள் குறித்தும், அதன் மீதான நடவடிக்கைகள், தீர்வுகள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்காமல் தவிர்த்து வருகிறது. சமூகநீதி பேசும் திமுக, இதுபோன்ற சாதிய வன்கொடுமைகள், குறைந்தபட்சமாக, பள்ளிகளில் நடப்பதை தடுக்க தவறியிருக்கிறது. சாதாரண சட்டஒழுங்கு சிக்கலைவிட சாதிய வன்முறை மிக மிக மோசமானது. சாதி வெறும் சட்ட-ஒழுங்கு சிக்கலாக மட்டும் முடிவதில்லை, பெரும் நோயாக சமூகத்தை பின்னுக்குத் தள்ளுகிறது, அவமானப்படுத்துகிறது, அராஜக சுரண்டலை நிலைநிறுத்துகிறது. நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் சாதிய வன்முறை குறித்த தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் போனதே இச்செயல்கள் அதிகரிக்கக் காரணமாய் அமைகிறது.
ஆக்கிரமிப்பாளர்கள் என வலிந்து அகற்றப்பட்ட பெரும்பாலான ஏழை மக்கள் கிட்டதட்ட 30-50 ஆண்டுகள் அப்பகுதியில் வசித்து வந்தவர்கள். ஏழைகளுக்கு பட்டா வழங்க மறுக்கும் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மீது எவ்வகையான நடவடிக்கை எடுக்கப்போகிறது திமுக அரசு? ஈரோடு பெருமாள்மலை மக்கள் 50 ஆண்டுகளாக வசித்துவரும் நிலத்தை இந்து அறநிலையத்துறை அகற்ற முனைகிறது. சாஸ்திரி-பண்டா ஒப்பந்தப்படி இந்திய வந்தடைந்த தமிழர்களுக்கு இதுவரை நிலத்திற்கான பட்டா வழங்காத அதிகாரிகள் ஆட்சியர்கள் இனிமேலாவது நிலத்தின் மீதான ஏழைகளின் உரிமையை உறுதி செய்வார்களா? இந்து அறநிலையத்துறை கோவில் நிலங்களை மீட்போம் எனும் பெயரில் வலிந்து இனாம் நிலங்களையும் அபகரித்துக்கொண்டிருக்கிறது எனும் விவசாயிகளின் கோரிக்கைக்கு இதுவரை எவ்வித பதிலும் திமுக அரசால் வழங்கப்படவில்லை என்பதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இரும்புக் காலம் தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கியது என்று ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இரும்பு தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடியாக தமிழர்கள் இருந்துள்ளனர். இது குறித்த கட்டுரை @May17Kural-ல் 2 ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்தது.
https://t.co/l35UKUUg8T
விவாதத்திற்கு அழைத்தால், திருமுருகன் காந்தி தோழருடன் விவாதத்திற்கு வர முடியாது என்கிறார் #சங்கி_சீமான். தனியாக செய்தியாளர்களை சந்தித்து அவதூறுகளை வீசி செல்லும் சீமானே, உன்னுடைய வீட்டருகில் தான் உள்ளோம். நேரடி விவாதத்திற்கு வா!
#ஆரிய_கைக்கூலி_சீமான்#தமிழின_துரோகி_சீமான்
ஏன் கம்யூனிஸ்ட்கள் தேர்தல் அரசியலில் தோர்கிறார்கள்?
2 சீட்க்கு கொள்கையை அடமானம் வைத்தார்கள் கம்யூனிஸ்ட்கள்?
பழைய கம்யூனிஸ்ட்கள் மாதிரி இப்போ கம்யூனிஸ்ட்கள் இல்லை?
என்று கேட்கிற கேள்விகளுக்கு செருப்படி பதிலை தோழர் சண்முகம் கொடுத்து உள்ளார்.
திராவிட இயக்கங்களின் லட்சணத்தை தோள் உரித்து காட்டி இருக்கிறார்.
#CPIM
#களத்தில்_கம்யூனிஸ்ட்கள்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எந்த ஊரில் எந்த இடத்தில் நடந்தாலும் பாரபட்சம் இன்றி கண்டிக்கப்பட வேண்டும், சம்பந்தப்பட்ட அத்தனை குற்றவாளிகளும் கூண்டில் அடைக்கப்பட வேண்டும்...
யாராக இருந்தாலும் தப்ப விடக்கூடாது
அனைவரும் பார்த்து கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம் 'விடுதலை II'.
தோழர். வெற்றிமாறன் இந்தியாவின் இன்றய சூழலில் துணிச்சலாக இப்படியான ஒரு திரைப்படத்தை எடுத்திருப்பதை முதலில் நாம் வரவேற்போம்.
தமிழினத்தில் கடந்த 80 ஆண்டுகளாக நடந்த பலவேறு புரட்சிகர அரசியலையும், அதன் நாயகர்களையும் காவியமாக்கியுள்ளார்.
திரைப்படத்தை பார்த்தபின் தோழர் வெற்றிமாறனையும், அவரது குழுவினரையும் சந்தித்து வாழ்த்தினோம்.
உங்கள் குடும்பத்தினர், நண்பர்களோடு இத்திரைப்படத்தை ஒருமுறை அல்ல, பலமுறை பார்த்து ரசிக்கக்கூடிய திரைப்படம். 17 ஆண்டுகளுக்கு பிறகு என் தந்தை முதல்முறையாக திரைப்படம் பார்க்க திரையரங்கு வந்தார். இறுதியாக திரையரங்கில் அவர் பார்த்த திரைப்படம் 'பெரியார்'. பெருமகிழ்வுடன் இயக்குனருக்கு வாழ்த்துகளை பகிர்ந்தார்.
தோழர் வெற்றிமாறனுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.
வெல்லட்டும் ' #விடுதலை
திரைப்படம் குறித்து பின்னர் விரிவாக பேசுவோம்.
தமிழ்ச் சமூகத்திற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்து இறுதி மூச்சு வரை போராடியவர் தோழர் ஹரிஹரன். தமிழீழப் போராட்டம், தமிழக வாழ்வுரிமைக்கான போராட்டம், ஏழு தமிழர் விடுதலை போராட்டம் என போராட்டங்களங்களில் எங்கெங்கும் அவரை காண முடியும்.
1/6
குறள்:
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
பொருள்:
எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.
எம் சான்றோன்:
'இந்திய' மீனவர்களுக்கு ஒன்னுன்னா பாகிஸ்தான் கப்பல துரத்துவோம்....
தமிழ்நாட்டு மீனவர்கள் வருடக்கணக்கில் இலங்கை கடற்படை கொன்றாலும், தினம் தினம் துன்புறுத்தினாலும் இந்தியா வாய பொத்தி பயந்து நடுங்கும்...
தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவுக்கு எதற்கு வரி கொடுக்க வேண்டும்???
பாகிஸ்தான், காசுமீர் என்றால் மட்டும் தேசபக்தி ஒகேனக்கல் அருவி மாதிரி கொட்டும். இலங்கை கடற்படை, தமிழக மீனவன் என்றால் தேசபக்தர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
இந்த வருடத்தில் 500 தமிழக மீனவர்கள் கைது.
நாராயணன் திருப்பதி, அர்ஜூன் சம்பத், அமர்பிரசாத் ரெட்டி, மாரிதாஸ், பாண்டே எல்லாம் எங்கே போனார்கள்?
தேசபக்தி என்றாலே வடஇந்தியனை காப்பது.
தமிழனை ஏன் காக்கவில்லை என கேட்டாலே நாம் தேசதுரோகியாகி விடுவோம்.
'அமரன்' திரைப்படம் குறித்த எனது கருத்துகளை திரித்து, 'முகுந்த் வரதராஜனை போர்க்குற்றவாளி' என சொன்னதாக பொய் செய்தி பரப்பிக் கொண்டிருக்கும் பாஜகவின் மாநில தலைவர்கள், பாஜகவின் கிளை பிரிவு தலைவர்கள், பாஜகவின் ஆதரவு யூட்யூபர்கள், பாஜக ஆதரவு பத்திரிக்கைகள், இந்த பொய்யை உருவாக்கிய 'தமிழ் ஜனம்' எனும் சமூகவளை தள பொறுப்பாளர்கள், பரப்பிக்கொண்டிருக்கும் யூட்யூபர்களான TNNews24digital, மாரிதாஸ் உள்ளிட்ட பொய் செய்தியை பரப்பும் சமூகவளைதள நபர்கள் அனைவரின் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே இந்த பாஜக நபர்கள் பலர் மீதும் வழக்கை பதிவு செய்துள்ளோம். அதன் மீதும் நடவடிக்கை எடுக்கும் படியாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும்.