📈 Stock Market ல Daily Trading பண்ணப் போறீங்களா? Market Open ஆகுறதுக்கு முன்னாடி என்னவெல்லாம் பண்ணனும், என்னவெல்லாம் பாக்கணும், trading பண்ணுறதுக்கு முன்னாடி/பின்னாடி என்னென்ன செய்யணும்? பாக்கலாமா?
இதை முதல்ல heart கல்வெட்டுல எழுதி வச்சிட்டு, ஒரு முறைக்கு ரெண்டு முறை படிச்சிட்டு ட்ரேடிங் உலகத்துக்குள்ள enter ஆகுங்க.
Market ங்கிறது மனைவி மாதிரி. You can devise a million ways and strategies to manage that. NONE OF IT WILL WORK. It has its own mind. அது கூடவே ட்ராவல் பண்ணி, அது கிட்ட சண்ட போடாம, அது மேல கோவப்படாம, பொறுமையோட இருந்தா மட்டுமே உங்களால trading ல ஜெயிக்க முடியும். ஏன்னா... Market (Wife) is always RIGHT!!!
- மகான் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி
நிறைய பேர் என்ன நினைக்கிறாங்கன்னா, Market open ஆகட்டும்… chart பார்ப்போம். எந்த stock மேல போகுது? எதுல trade பண்ணலாம்? ஒரு quick profit எடுக்கலாம்ன்னு Market open ஆன பிறகுதான் யோசிக்கவே ஆரம்பிக்கிறாங்க.
அதுதான் problem.
Trading ன்னா Market open ஆனதும் உட்கார்ந்து ஏதாவது ஒரு trade எடுக்குறது கிடையாது. Market open ஆகுறதுக்கு முன்னாடியே என்ன செய்யணும் என்று முடிவு பண்ணியிருக்கணும். நீங்க தினமும் Trading பண்ணுறீங்கன்னா, இந்த simple checklist அ follow பண்ணிப் பாருங்க.
🌅 Market Open ஆகுறதுக்கு முன்னாடி
1. முதல்ல Market எப்படி இருக்குன்னு பாருங்க.
NIFTY.
BANK NIFTY.
Global Markets.
US Markets.
Asian Markets.
Crude Oil.
Dollar.
இது எல்லாத்தையும் deep ஆ analyse பண்ண வேண்டிய அவசியம் இல்லை.
Overall sentiment எப்படி இருக்கு?
Positive ஆ?
Negative ஆ?
Mixed ஆ?
தொடங்குறதுக்கு முன்னாடி இது தெரிஞ்சாலே போதும்.
2. இன்னிக்கு முக்கியமான news என்னன்னு பாருங்க.
Budget.
RBI announcement.
Fed decision.
Inflation data.
Election results.
Major company results.
Geopolitical issues.
இப்படி ஏதாவது முக்கியமான news இருக்கா? இருந்தா market normal ஆ behave பண்ணாம ரொம்ப volatile ஆ இருக்கலாம். அதனால அந்த நாளோட risk அ அதுக்கு ஏத்த மாதிரி குறைச்சுக்கலாம்.
3. Trade பண்ணப் போற stocks-ஐ Market open ஆகுறதுக்கு முன்னாடியே shortlist பண்ணுங்க.
10 stocks பார்த்துட்டு, இதுல எதை trade பண்ணலாம்?ன்னு Market open ஆனதும் தேட ஆரம்பிக்காதீங்க. காலையிலேயே இதை தொடங்கிடனும்.
2–5 stocks போதும்.
ஏன் அந்த stock?
என்ன காரணத்துக்காக trade?
எந்த price ல entry?
எங்கே Stop Loss?
எங்கே exit?
இதையெல்லாம் முன்கூட்டியே decide பண்ணி வச்சிடுங்க.
Market open ஆனதும் புதுசா எதுவும் plan பண்ணாதீங்க. மார்கெட் தொடங்கினதும் அப்படியே கையெல்லாம் நடுங்கும் trade எடுக்கணும்னு. அங்கதான் நீங்க கவனமா இருக்கனும். Plan பண்ணினதை மட்டும் execute பண்ணுங்க. வேற எதுவும் வேண்டாம்.
🎯 Trade எடுக்குறதுக்கு முன்னாடி:
ஒரு simple question:
இந்த trade தப்பா போனா அதிகபட்சம் எவ்வளவு பணத்தை நான் இழக்க தயாரா இருக்கீங்க?
இதுதான் ரொம்ப முக்கியம். எவ்வளவு profit வரும்?ன்னு முதல்ல கேக்குறதுக்கு பதிலா, எவ்வளவு loss வந்தா நான் வெளியே வருவேன்? ன்னு முதல்ல கேளுங்க.
₹1 லட்சம் capital இருக்கு. ஒரு trade ல ₹5,000 loss ஆகலாம்ன்னு தெரிஞ்சும் trade எடுத்தீங்கன்னா, அது ஒரு plan இல்ல. அதே trade ல ₹1,000 loss வந்ததும் பயந்து exit பண்ணிட்டீங்கன்னா, அதுவும் plan இல்ல. Trade எடுக்குறதுக்கு முன்னாடியே Stop Loss அ decide பண்ணுங்க.
அதை மனசுல மட்டும் வச்சுக்காம system ல order போட்டு வைக்க முடிஞ்சா இன்னும் நல்லது.
💰 Capital முழுவதையும் ஒரு trade-ல போடாதீங்க
இது ரொம்ப common mistake. இந்த stock கண்டிப்பா மேல போகும். இந்த setup perfect. இந்த trade miss ஆயிடக்கூடாதுன்னு சொல்லிட்டு இருக்குற capital எல்லாத்தையும் ஒரே trade ல போடாதீங்க. சினிமா ல ஹீரோ climax ல அந்த மாதிரி பண்ணுவார். அது சினிமாக்கு. Real life ல அந்த மாதிரி நடக்கவே நடக்காது. Market யாருடைய confidence ஐயும் மதிக்காது. 😄
நம்ம analysis சரியா இருக்கலாம். ஆனா market நம்ம எதிர்பார்ப்புக்கு opposite ஆ போகவும் செய்யும் (அதுதான் டிசைன் 🤣🤣🤣). அதனால ஒரே trade உங்க மொத்த capital ஐயும் பாதிக்காத அளவுக்கு position size எடுங்க.
🧠 Market open ஆனதும் இன்னொரு rule
Trade எடுக்கணும் என்பதற்காக trade எடுக்காதீங்க. அன்னிக்கு நல்ல setup கிடைக்கலையா, trade வேண்டாம்.
Market sideways ஆ இருக்கா, trade வேண்டாம்.
நீங்க mentally tired ஆ இருக்கீங்களா, trade வேண்டாம்.
நேத்து loss ஆச்சுன்னு இன்னிக்கு அதை recover பண்ணியே ஆகணும்னு நினைக்கிறீங்களா, அப்படின்னா, அந்த நாளைக்கு trade வேண்டவே வேண்டாம்.
Tradingல No Trade என்பதும் ஒரு trade தான். அந்த trade ல உங்களுக்கு வரப்போற நஷ்டத்த தடுக்குறீங்க. Its still a win IMHO.
🚨 Loss வந்தா என்ன பண்ணணும்?
இதுதான் பல பேருக்கு கஷ்டம். ஒரு trade loss. பரவாயில்லை… இன்னொரு trade எடுத்து recover பண்ணிடலாம். இன்னொரு loss. இப்போ எப்படியாவது recover பண்ணியே ஆகனும் ன்னு ஒரு pressure.
அதுக்கப்புறம் quantity ய அதிகமாக்குவீங்க. Risk அதிகமாகும். இதைதான் Revenge Trading ன்னு சொல்வாங்க.
Market அ நாம பழிவாங்க முடியாது. 😄 Loss வந்துச்சுன்னா accept பண்ணிட்டு அடுத்த setup வரைக்கும் wait பண்ணுங்க.
📱 Trading நடக்கும்போது
நீங்க ஏற்கனவே எடுத்த position அ தொடர்ந்து monitor பண்ணிக்கிட்டே இருங்க. அதுக்காக ஒவ்வொரு 10 seconds க்கும் P&L பார்க்காதீங்க.
₹2,000 profit.
₹1,500 profit.
₹500 profit.
₹300 loss.
அய்யய்யோன்னு மனசு மாற ஆரம்பிச்சிடும். அதனால Price + Plan அ follow பண்ணுங்க. P&L பார்த்து decision எடுக்காதீங்க. உங்க strategy (risk:reward ratio) என்னவோ, அதுக்கேத்த மாதிரி முடிவெடுங்க.
⏰ ஒரு Daily Loss Limit வச்சுக்கோங்க
இன்னிக்கு maximum ₹5,000 loss தான்னு நீங்க decide பண்ணிட்டீங்கன்னா, அந்த ₹5,000 வந்ததும் Stop பண்ணிடுங்க. முதல் trade தான் நல்லா போச்சே, இன்னொன்னு எடுப்போம் ன்னு overconfidence மட்டும் ஆடாதீங்க. இது நல்ல setup. இந்த trade ல recover பண்ணிடலாம் ன்னு சொல்லிக்கிட்டு அடுத்து ஆரம்பிக்காதீங்க.
Trading account மற்றும் கேப்பிடல் அ protect பண்ணுறது, profit எடுக்குறதைவிட முக்கியம். நாளைக்கும் Market அங்கேயே தான் இருக்கும். எங்கேயும் போய்டாது.
📝 Market Close ஆன பிறகு
Day முடிஞ்சதும் Trading account close பண்ணிட்டு போயிடாதீங்க. 5 – 10 minutes எடுத்துக்கிட்டு உங்க trades எல்லாத்தையும் review பண்ணுங்க.
👉 ஏன் Entry எடுத்தேன்?
👉 Stop Loss follow பண்ணேனா?
👉 Plan படிதான் trade பண்ணேனா?
👉 தேவையில்லாம trade எடுத்தேனா?
👉 Profit வந்ததும் சீக்கிரம் exit பண்ணிட்டேனா?
👉 Loss வந்ததும் exit பண்ணாம hold பண்ணேனா?
👉 Emotionally ஏதாவது decision எடுத்தேனா?
இதையெல்லாம் எழுதிக்கோங்க. இதுக்கு பேர் தான் Trading Journal. Trading Journal maintain பண்ண ஆரம்பிச்சீங்கன்னா, சில நாட்களுக்குப் பிறகு உங்களோட mistakes உங்களுக்கே தெரிய ஆரம்பிக்கும்.
📊 ஒரு முக்கியமான விஷயம்
Tradingல successன்னா தினமும் profit பண்ணுறது கிடையாது.
சில நாள் profit.
சில நாள் loss.
சில நாள் No Trade.
இதெல்லாம் normal.
ஒரு single trade உங்களை successful trader ஆக்காது.
ஒரு single loss உங்களை unsuccessful trader ஆக்காது.
நீங்க 100 trades எடுத்த பிறகு எப்படி perform பண்றீங்க என்பதுதான் முக்கியம்.
❤️ கடைசியாக…
Stock Market Trading ஒரு shortcut income இல்ல. Salary போதல… Trading பண்ணி மாதம் ₹1 லட்சம் earn பண்ணலாம்ன்னு ஆரம்பிக்காதீங்க.
முதல்ல market அ புரிஞ்சுக்கோங்க (கஷ்டம் தான். இருந்தாலும் "தெய்வதால் ஆகாதெனினும்"ன்னு முயற்சி பண்ணுங்க).
Small capital ல practice பண்ணுங்க.
Risk management கத்துக்கோங்க.
Loss அ accept பண்ண பழகுங்க.
Trade இல்லாம இருக்கவும் பழகுங்க.
Profit எவ்வளவு எடுக்கணும்னு நினைக்கிறீங்களோ, அதைவிட Loss எவ்வளவு accept பண்ணிக்கலாம் ன்னு முதல்ல முடிவு பண்ணுங்க.
Daily Trading க்கு ஒரு simple routine வச்சுக்கோங்க:
🌅 Before Market
Market sentiment
Important news
Stocks shortlist
Entry
Stop Loss
Target
Position size
📈 During Market
Plan follow பண்ணுங்க.
Overtrading பண்ணாதீங்க.
Emotion-ல decision எடுக்காதீங்க.
Daily loss limit cross பண்ணாதீங்க.
🌙 After Market
Trades review
Mistakes note பண்ணுங்க
Trading Journal update பண்ணுங்க.
அவ்வளவுதான்.
Tradingல ஒவ்வொரு நாளும் பணம் சம்பாதிக்கணும்னு அவசியம் இல்லை. ஆனா ஒவ்வொரு நாளும் capital அ protect பண்ணணும். சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும்.
நாளைக்கும் Trade பண்ண முடிஞ்சாதான் இந்த game ல நீண்ட காலம் இருக்க முடியும். Market ல survive பண்ணுறதுதான் முதல் target. Profit எல்லாம் அதுக்கப்புறம் தான்.
புரிஞ்சுதா மக்களே!!! 🙏🙏🙏
@TiruvallurCollr இன்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றிருந்தோம். என் அப்பா பெயரில் உள்ள நிலத்தின் பட்டா ஒரே வாரிசான எனக்கு மாற்றக்கோரி மனு கொடுக்க. சிறப்பான ஏற்பாடுகள். முதலில் தேதி பதியப்பட்டு முத்திரை இடப்பட்டது . பிறகு கணினியில் ACKNOLWEDGEMENT தரப்பட்டது . 1/3
@prathapmurugan@TiruvallurCollr@CMOTamilnadu@Udhaystalin Despite repeated petitions, my request remains unresolved. Influential persons appear to be attempting to create a public pathway through my patta land to access their property. A claim to declare my land as public pathway is being considered without hearing me.@TiruvallurCollr
As promsied:
ரிலையன்ஸ், டாடா மாதிரி பெரிய பங்குகளை எல்லாரும் பேசுறாங்க.
ஆனா இந்தியாவில் பல மடங்கு வளர்ந்த பல பங்குகள் ஆரம்பத்தில் யாரும் கவனிக்காத small caps தான்.
நான் ஆராய்ச்சி செய்து தேர்ந்தெடுத்த
அடுத்த சில ஆண்டுகளில் பெரிய வளர்ச்சி தரக்கூடிய 12 பங்குகள் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதியுள்ளேன்.
முழு analysis இங்கே 👇
RT for reach friends Its my multiple days effort and study
https://t.co/wIgMbbqYVG
படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
இந்த post உங்களுக்கு useful என்று தோன்றினால் RT செய்து மற்றவர்களுக்கும் share செய்யுங்கள் 🙏
#StockMarketIndia #SmallCaps #Investing
@nbasandroid It depends upon the area.. If sydney, renting a single bedroom flat will be 200-500 according to area per week. However, you can manage. Good country. Don't miss the opportunity.