ஸ்கூல் பசங்க HM ஆபிஸ்க்கும், டீச்சர் ரூமுக்கும் லீவ் லெட்டர் தூக்கிட்டு போயிட்டு வர மாதிரி. 3 நாளா லெட்டர் தூக்கிக்கிட்டு சுத்துறாங்க😬😬 இந்த மாதிரி மேட்டர்ல left ஹேண்ட்ல டீல் பண்ண ஸ்டேட்டா தமிழ்நாடு 😬😬😬
22 வருட உறவு இன்றோடு முடிவடைந்தது! ஒரு சிறிய ஃப்ளேஸ்பேக்:
அப்பொழுது 2004 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் வாரம். டெல்லியில் எனது இல்லத்தில் அமர்ந்து சன் டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். எனது கைப்பேசியில் அமைச்சர் ஆ. ராஜா அவர்கள் (@dmk_raja) அழைத்தார். அப்போது அவர் சென்னையில் தலைவருடன் அறிவாலயத்தில் இருந்தார். அதற்கு முந்தைய மாதம் அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார். அவருக்கு கூடவே இருந்து பணி செய்யும் பொருட்டு எனது அரசுப் பணியில் இருந்து 6 மாதம் விடுமுறை எடுத்து இருந்த காலம் அது.
அலைபேசியில் பேசிய அமைச்சர் ராஜா, டெல்லியில் இருந்து ஒரு முக்கியமான VVIP சென்னை வர வேண்டி இருப்பதாகவும், அந்தப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும் எனக்கு உத்தரவிட்டார். யார் அந்த VVIP ? என்று நான் கேட்டேன். தான் தலைவருடன் இருப்பதாகவும் பிறகு சொல்கிறேன் என்றும் சொல்லி விட்டு அலைபேசியை துண்டித்தார். அரை மணி நேரம் கழித்து என்னை தொடர்பு கொண்டவர், சென்னை வரவிருக்கும் அந்த முக்கிய நபர் டாக்டர் மன்மோகன் சிங் என்றும், அவருடைய பயணத் திட்டத்தை ஒருங்கிணைக்க அவருடைய வீட்டுக்கு செல்லுமாறும் கூறினார். அப்போது மன்மோகன் சிங் அவர்கள் டெல்லியில் சஃப்தர் ஐங் சாலையில் வசித்து வந்தார். நான் உடனே அங்கு சென்று அவரை சந்தித்தேன். அவருடைய பயண ஏற்பாடுகள் அனைத்தும் மிகவும் ரகசியமாக நடைபெற்றது.
சென்னை சென்ற டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் தலைவரை சந்தித்தார். அமைச்சர் ராஜா மற்றும் திரு. தயாநிதி மாறன் உடன் இருந்தனர். அந்த சந்திப்பில் திமுக- காங்கிரஸ் இணைந்து பயணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு துணை செல்ல யாருமே தயாராக இல்லாத தருணம் அது. நாடு முழுவதும் பா.ஜ.க.வின் பிரமோத் மகாஜன் அவர்களின் வழிகாட்டுதலில் "இந்தியா ஒளிர்கிறது" அதாவது India shining என்ற Campaign நடைபெற்றது. தான் ஜெயித்து விடுவது உறுதி என்ற நம்பிக்கையில், 2004 செப்டம்பர் மாதம் நடக்க வேண்டியிருந்த தேர்தலை முன் கூட்டியே நடத்த முடிவு செய்தார் பிரதமர் வாஜ்பாய் .
2004 ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திமுகவை தவிர காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்க நாட்டில் எந்தவொரு கட்சியும் முன்வரவில்லை. எதிர்ப்புறம் வாஜ்பாய் அவர்களின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி. மிகப் பெரிய அளவில் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் திரு. வாஜ்பாய். அதே சமயம் நாடு முழுமைக்கும் சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் தலைவர் மட்டுமே. தேர்தல் முடிவுகள் வந்தது. பாஜக கூட்டணி நாடு முழுவதும் தோல்வியடைந்தது. தமிழ்நாட்டில் 40க்கு 40 சீட்டுக்கள் (பாண்டிச்சேரி உட்பட ) திமுக- காங்கிரஸ் வென்றது. ஆனால், மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு போதுமான இடங்கள் காங்கிரஸ் கட்சி பெறவில்லை.
அடுத்து என்ன நடக்கும் என்று புரியாத சூழலில் டெல்லிக்கு கிளம்பினார் தலைவர். தாஜ் மான்சிங் ஹோட்டலில் தங்கினார். ஆட்சி அமைக்க முடியுமா என்ற சந்தேகத்தில் மனம் தளர்ந்து போய் இருந்த சோனியா காந்தியை சந்தித்தார். "நான் இருக்கிறேன். நீங்கள் பயப்படாதீர்கள். நாம் ஆட்சி அமைப்பது உறுதி " என்று ஆறுதல் கூறினார். தோழர் ஹர்கிஷன் சுர்ஜீத் மற்றும் தோழர் ஏ.பி. பரதன் ஆகியோரை நேரில் சந்தித்தார். இன்னும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தலைவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அனைவரும் ஒரு கூட்டணியில் இணைவதற்கு ஒப்புக் கொண்டனர்.
அரசு அமைக்க உரிமை கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. தலைவரை பார்க்க சோனியா காந்தி வந்தார். அமைச்சர் ராஜா, T.R. பாலு, தயாநிதி மாறன் மற்றும் நானும் அங்கு இருந்தோம். யாருமே தங்களை கூட்டணிக்கு சேர்க்காத நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்ததற்காக தலைவரின் கைகளை எடுத்து தனது கண்களில் வைத்து ஒற்றிக் கொண்டு உணர்ச்சி பெறுக கண்ணீரோடு நன்றி கூறினார் சோனியா காந்தி. புன்முறுவலோடு அந்த நன்றியை ஏற்றுக் கொண்ட தலைவர் புதியதாக உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு பெயர் ஒன்று வைக்கப்பட வேண்டும் என்று சொன்னார். அந்த புதிய பெயரையும் தலைவரே சொல்ல வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார். சிறிது நேர அமைதிக்கு பிறகு, என்னை அழைத்து தான் கூற இருக்கும் பெயரை அழகாக கணினியில் டைப் செய்து எடுத்து வரச்சொன்னார். என்ன பெயர் சொல்லப் போகிறார் என்று சோனியா காந்தி உள்பட அனைவரும் ஆவலோடு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். "ஐக்கிய முற்போக்கு கூட்டணி" என்று சொன்னவர், இந்தப் பெயர் நன்றாக இருக்கிறதா? என்று அமைச்சர் ராஜாவை பார்த்து கேட்டார். …..1/2.
மாண்புமிகு அமித்ஷா அவர்கள் நிறைய புள்ளிவிவரங்களைச் சொன்னார். நாங்கள் கேட்பது ஒரே ஒரு கேள்விதான். 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடும் பீகாரும் ஒரே மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள். தமிழ்நாடு 4.1 கோடி, பீகார் 4.2 கோடி. எனவேதான் தமிழ்நாட்டுக்கு 39 எம்பிக்கள், பீகாருக்கு 40 எம்பிக்கள் வழங்கப்பட்டன. இன்றைக்கு என்ன நிலைமை? தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.6 கோடி, பீகாரின் மக்கள் தொகை 12.3 கோடி—ஏறக்குறைய இரண்டு மடங்கு. நீங்கள் எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து எண்ணிக்கையைத் தீர்மானிக்கப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.
இன்றைக்கு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி இருப்பதால் வந்திருக்கிற வெற்றிக்கு, நீங்கள் எங்களுக்கு என்ன பரிசை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? உலகம் முழுக்க மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது என்பது அரசாங்கத்தின் ஒரு விதியாலோ அல்லது நீங்கள் போட்ட உத்தரவாலோ நடப்பதல்ல. மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது ஒரு சமூகத்தின் விழிப்புணர்வு, கல்வி, சுகாதாரம் அனைத்தோடும் இணைந்தது. குறிப்பாகச் சொல்லப்போனால், தமிழ்நாட்டில் பெண் கல்வி உயர்ந்ததால்தான் மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது சிறப்பாக நிறைவேறியது.
TFR என்று சொல்லப்படுகிற 'மொத்த கருவுறுதல் விகிதம்' (Total Fertility Rate) தமிழ்நாட்டில் 2.1% தான் இது இந்தியாவின் சராசரி சதவீதத்தை விடக் குறைவு. அதனால்தான் இந்தியாவில் 7% மட்டுமே இருக்கிற தமிழ்நாட்டு மக்கள், இந்திய பெண் தொழில்முனைவோர்களில் 44% ஆக இருக்கிறார்கள். 1971-லிருந்து 2011 வரை தமிழ்நாட்டின் மக்கள் தொகை 75% தான் அதிகரித்திருக்கிறது. ஆனால் ராஜஸ்தான் 166%, பீகார் 146%, உத்தரப் பிரதேசம் 138% என அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது எங்கள் வெற்றி; எங்கள் வெற்றியின் மீது நீங்கள் காட்டுகிற வெறுப்புதான் இந்த மசோதா! எங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியதால் நீங்கள் காட்டுகிற பாரபட்சம்தான் இந்த மசோதா!
இங்கே மாண்புமிகு பிரதமர் அவர்கள் "நான் வஞ்சனை செய்ய மாட்டேன்" என்று மீண்டும் மீண்டும் சொன்னார். தமிழிலே கூடச் சொன்னார். மாண்புமிகு பிரதமர் அவர்களே, நாங்கள் வெளிப்படையாகக் கேட்பது இதுதான்: மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது எல்லா காலத்திலும் நடந்தது; சுதந்திரத்திற்குப் பிறகு 1960, 70-களில் போர் நடந்த பொழுதுகூட நடந்தது. ஆனால் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏன் கடந்த நாலாண்டு காலமாக நடத்தவில்லை?
மக்கள் தொகை கணக்கெடுக்காமல் இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டி 888 இருக்கைகளை இங்கே ஏன் அமைத்தீர்கள்? இப்பொழுது கொண்டு வந்து மசோதாவை வைக்கிறீர்கள். நாங்கள் மக்களவையின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தப் போகிறோம் என்று திரைமறைவாக எல்லா வேலையும் செய்துவிட்டு, "எங்களை நம்புங்கள்" என்று சொன்னால், பகுத்தறிவு இருக்கிற நாங்கள் ஒருபோதும் உங்களை நம்ப மாட்டோம். உங்களது திரைமறைவு அஜெண்டாவிற்கு நாங்கள் முடிவு கட்டுவோம் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.
நண்பர்களே, நான் இரண்டு ஆவணங்களை இந்த அவையிலே சமர்ப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் ஒரு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். 1962-ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு 41 எம்பிக்கள் இருந்தனர்; ஆனால் 67-இல் அது 39 ஆகக் குறைந்தது. கடந்த 15 தேர்தல்களில் 30 எம்பிக்களை நாங்கள் இழந்திருக்கிறோம். எனவே 1962-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படிதான் மறுவரையறையில் தமிழ்நாட்டு எம்பிக்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்ற கருத்தை நீதியரசர்கள் முன்வைத்துள்ளனர்.
இரண்டாவது, தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிற 'மத்திய-மாநில உறவுகள் பற்றிய உயர்மட்டக் குழு'வின் அறிக்கை. இந்த அறிக்கை என்ன சொல்கிறது என்றால், தொகுதி மறுவரையறை விஷயத்தில் இந்திய அரசு அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் செய்யக்கூடாது. 2126 வரை மாற்றங்கள் கூடாது என்று கூறியுள்ளனர். ஏனென்றால் இது வெறுமன காலக்கணக்கு அல்ல, அறிவியல் பூர்வமான ஆய்வு. ஐநா கணக்கெடுப்பு படி இந்தியாவின் மக்கள் தொகை 2061-இல்தான் உச்சத்தை அடையும். அதன் பிறகு வட இந்திய மாநிலங்களில் வட இந்திய மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் தேசிய இலக்கை வந்தடையும் போன்ற புள்ளிவிபரங்களை வைத்து இந்த கருதுகோளுக்கு வருகின்றனர்.
இறுதியாக, பெண்களைப் பிணையாக வைத்து அரசியல் செய்வது வலதுசாரிகளுக்குக் காலம் பூராவும் இருக்கிற பழக்கம். இப்பொழுதும் பெண் இட ஒதுக்கீட்டு மசோதாவின் பெயரில்தான் நீங்கள் இதனைக்கொண்டு வருகிறீர்கள். திரௌபதியைப் பிணையாக வைத்து கபட நாடகம் ஆடியதைப் போல, உங்களது இந்த தீய நோக்கத்தை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
நன்றி!
2/2
கேள்வி; ஏன் இந்த அளவிற்கு திமுகவுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க ?
ஒரு நிகழ்வு பற்றி சொல்லுறேன் கேளுங்க, சிந்து என்ற மாணவர் ஒருவர் மூன்றாவது மாடில இருந்து கீழ விழுந்து படுத்த படுக்கையா இருந்தாங்க,சிறந்த வாலிபால் வீரர் கூட.
#VoteForDMK
சென்னையை சீரழித்த பெருமை எம்ஜிஆரையே சாரும்.
இது எத்தனை பேருக்கு தெரியும்.?!
போரூர் ஏரி -உடையார் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி (240 ஏக்கர்)
பொத்தேரி - பச்சமுத்து SRM கல்லூரி
கூவம் ஆறு - ஏ.சி.சண்முகம் மருத்துவக் கல்லூரி.
பல்லாவரம் ஏரி - ஐசரி கணேஷ் வேல் பல்கலைக்கழகம்.
ஜேப்பியார் - சத்தியபாமா பல்கலைக்கழகம்.
நடிகைகள் அம்பிகா, ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏஆர்எஸ் கார்டன் ஸ்டியோவாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது (40 ஏக்கர் நிலம் இன்றைய மதிப்பு 400 கோடி) எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள்.
சென்னையை சீரழித்த பெருமை எம்ஜிஆரையே சாரும்.
மீதமுள்ளதை இப்படி ரம்மியமாக காப்பாற்றி காட்சிப்படுத்தி வருகிறது திராவிட மாடல்..
கூவ ஆற்றை பற்றி பேசினால் உங்க நாற்றம் மேலும் நாறும் ஆகவே நீங்க முதலையை பற்றி பேசினாலும் சரி முதலக்கொண்டு கலைஞர் குடும்பம் வாழ்ந்ததாக பேசினாலும் சரி..
சென்னையை சிங்கார சென்னையாக மாற்றி அமைத்தது கலைஞர் அதை பின் தொடர்ந்து இன்று மீட்டுத்தருவது எங்கள் தளபதி ஸ்டாலின். ❤️
சென்னை திமுகவின் கோட்டை🖤❤️🔥
(தரவுகள் மாணவநேசன் பத்திரிக்கை)
யார் இந்த கோமாளினு கேக்குற காங்கிரஸ் கோமாளிகளுக்கும்,தற்குறிகளுக்கும் ஒரு கதை சொல்றேன்… இல்ல இல்ல தலைவன் செஞ்ச சம்பவத்த சொல்றேன்..
1949ல திமுக தொடங்கப்பட்டாலும் 1952தேர்தல்ல போட்டியிடாம நேரா 1957ல தான் முதல் தேர்தல சந்திச்சுது…
மொத்தம் 124 தொகுதிகள்ல போட்டியிட்டு 15 இடங்கள்ல வெற்றி பெற்று சட்டமன்றத்தில அண்ணா தன் தம்பிகளை கெத்தா உள்ள கொண்டு போனார்..
செம கடுப்பான காங்கிரஸ் திமுகவ மொத்தமா ஒழிச்சுகட்ட முடிவு பண்ணுச்சு.. அடுத்த 1962 தேர்தல்ல மொத்தமா 50 பேர் ஜெயிக்கிறாங்க
ஆனா தேர்தலுக்கு முன்னவே 1957ல ஜெயிச்ச 15 பேர்ல ஒருத்தனும் ஜெயிக்க கூடாதுனு காமராசர் முடிவு பண்ணி தேசிய தலைவர்கள் உட்பட அந்த 15 தொகுதிகள்ல இறக்கப்பட்டு அந்த 15 தொகுதிகள்ல தனி கவனிப்போட பிரச்சாரம் பண்ணாங்க..
காமராசர் தேர்தல் வியூகம் வகுக்குறதுல புலி… அவர் குறி வச்சா தப்புமா? அண்ணா உட்பட 14 பேரும் தோக்கடிக்க படுறாங்க.. அதுவும் அண்ணாவ அவரோட சொந்த தொகுதியான காஞ்சிபுரத்திலயே தோக்கடிக்கிறாங்க
ஒருத்தர் மட்டும் ஜெயிக்கிறார்.. அவர் தான் கலைஞர்… அதுவும் யாரயோ அடிச்சு ஜெயிக்கல.. அப்ப அவர் நின்னது தஞ்சாவூர் தொகுதி.. அப்ப இருந்த தஞ்சாவூர் டவுன் கண்ணுல படுற இடம்லாம் சொந்தமா இருந்த பரிசுத்த நாடார தோக்கடிச்சு ஜெயிக்கிறார்…
அண்ணாவ தோக்கடிக்க முடிஞ்சவனுகளால கலைஞர தொட்டுக்கூட பாக்க முடியல…யாரயோ 10 பேர் அடிச்சுட்டு டான் ஆகல.. அவர் அடிச்ச அத்தனை பேருமே டான் தான்
நீங்க நினைச்சு பாத்தாலே கதற விடுறார்னா அவர் தான்டா real OG Ghost💥
Chennai recently cleared the Perungudi dumpyard using bio mining tech from @BluePlanet_Env
If 50 years of garbage can be reinvented, then there’s hope for India’s waste problem and room for many more such growth stories…
#MondayMotivation