இவ்வளவுதான் உங்கள் அரசியல் நேர்மையா ?
நான்கூட உங்களை ஒரு அரசியல் தலைவர் என நினைத்தேன் இப்படி மூன்றாம்தர அரசியல்வாதிதான் என அடித்து கூறும் எதிர்கட்சித்தலைவர்.
ஆளுநர் தொடர்ந்து அரசு நடவடிக்கைகளில் தலையிடுவதும் அதற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதும் தமிழ்நாட்டு அரசியலில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
#Governor#TVK#Tamilnadu
ஏழை 'வேல்முருகன்' தீக்குளித்து மரணிக்க காரணாமாயிருந்த காவல்துறையினர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டார்களா அல்லது துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா? சமீபத்தில் தான் 100 நாட்கள் போராடியும் காவல்துறையின் வன்முறையால் கொல்லப்பட்ட ஆகாஷுக்குநீதிகேட்டெ போராட்டம் நடந்தது. நீதிமன்றம் மிகமோசமான தீர்ப்பைக் கொடுத்தது. இந்நிலையில் பட்டியல் சமூக ஏழையின் மீது காவல்துறையினரால் சாதிய வன்மமான தாக்குதல் நடத்தப்பட்டதில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுபோல தொடரும் காவல்துறை அத்துமீறல்களை தவெக அரசு என்ன செய்யப்போகிறது?? குற்றவாளிகளாக இருக்கும் காவலர்களை பணியில் இயங்கச் செய்து குற்றத்தை அதிகரிக்கப்போகிறார்களா? குற்றவாளிகளை கைது செய்வதில் ஏன் தயக்கம், தாமதம்?
தவெக அரசே! தவறிழைக்கும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடு.
ஒரு துறையில் ஊழல் இல்லை அனைத்து துறையிலும் ஊழல் செய்துள்ளார்கள். யார் இவர்களை தண்டிப்பது ? மக்கள் பணத்தை திருடி திருடி தின்று கொழுத்து ஆணவத்தில் அழையும் இவர்களை என்ன சொல்வது ?
கோட்டூர்புரம் அரசு குடியிருப்பில் மக்களுக்கு நிகழ்ந்துள்ள மிகப் பெரிய கொடுமை
@CMOTamilnadu
#MRF நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
30 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்காமல் பேச்சுவார்த்தை என்ற பெயரில் வருடக் கணக்காக காலம் கடத்தி வந்தது இந்நிர்வாகம்
ஒவ்வொரு முறையும் உற்பத்தியை அதிகப்படுத்தினால் தான் பேச்சுவார்த்தை என்ற நிபந்தனை விதித்தது.
தொழிலாளர்களும் நிர்வாகம் கேட்ட அளவிற்கு உற்பத்தியை கொடுத்தார்கள் ஆனால் நிறுவனம் திய புதிய நிபந்தனை விதித்து தொழிலாளர்களை தொடர்ந்து அலைகழித்தது நிர்வாகம்
தொழிலாளர் துறையின் எந்த ஆலோசனைகளையும் சமரசங்களையும் எம்ஆர்எப் நிர்வாகம் ஏற்க மறுத்து நிராகரித்து வந்தது. ஒப்பந்த தொழிலாளிகளை சட்ட விரோதமாக நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தியது
வரைமுறை இன்றி தொழிலாளிகளை கொத்துக் கொத்தாக சஸ்பென்ட் செய்து வந்தது.
இத்தகைய தொழிலாளர் விரோத போக்குகளுக்கு எதிராக தான் தொழிலாளர்கள் இன்று #CITU தலைமையில் 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதிய உயர்வு மற்றும் இதர கோரிக்கைகளில் சுமூக தீர்வு காணப்பட வேண்டும். கடந்த கால ஒப்பந்த காலம் முடிந்த தேதியில் இருந்து ஒப்பந்தம் அமலாக்கும் தொடர வேண்டும்
பணியிடை நீக்கம் என்ற பெயரில் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்கள் மீதான நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட்டு வேலை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இடையே ஊதிய வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும். அதிக வித்தியாசங்களை ஏற்படுத்தும் நிர்வாக ஆலோசனை கைவிடப்பட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
#WorkersProtest #GateMeeting #Communist
VB G RAM G - மோடியின் 'மோசடி' மாநிலங்களில் செலவு 7 % லிருந்து 37% ஆக உயர்வு.
மாநிலங்களின் ஈவு ரூ.7,689/- கோடியிலிருந்து ரூ. 50,968/- கோடியாக அதிகரிப்பு.
பணியாளர்கள் கூலியில் 40% மாநிலங்கள் ஏற்க வேண்டும்.
'பேரு' நாங்க வைக்கிறோம், 'சோறு' நீங்க வெச்சுக்கோங்க எனும் மோடியின் 'மோசடி' யே இந்த VB G RAM G திட்டம்.
- தோழர் ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #VBGRAMG #ModiGovernment #SaveMGNREGA #RuralDevelopment
தமிழக அரசே ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு அடிபணியாதே !மக்களை காத்திடு !
சென்னை பாலவாக்கம் திருவள்ளுவர் நகரில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் மக்களை பாதுகாத்திடு என நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.
@cpimsouth@CMOTamilNadu@tncpim
மாற்றம்….
இதுதானா ? தொழிலாளி வர்க்கத்திற்காக அனுதினமும் போராடக்கூடிய #CPIM தான் என்று திரள்கிறீர்களோ அன்றுதான் நமது பிரச்சினை தீர்க்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
காஸாக்ராண்ட் கம்பெனிக்காரன் அடையாறு ஆற்றை அடைத்து கட்டும் கட்டிடங்களுக்கு மட்டும் எப்படி அனுமதியும், பாதுகாபும் கிடைக்கிறது. அதிகாரிகளின் லஞ்ச லாவண்யம் ஒருபுறமிருந்தாலும் ஏழைகள் மீதான அதிகாரிகளின் காழ்ப்புணர்வு மிகமிக வன்மமானது. அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பின் போதே இதை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது அறிந்தவை இவை. இந்த அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரமிக்க ஆட்சியாளர்கள் எவரும் இந்த அநியாயங்களை தட்டிக்கெட்டதில்லை. காஸாக்ராண்ட் கம்பெனி அடையாறுஆறு கரையில் பல வீடுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது. தவெக அரசு உடனடியாக வீடு இடிப்புகளை தடுத்து நிறுத்திட வேண்டும். தவறும்பட்சத்தில் மக்களின் வெறுப்புணர்வை சம்பாதித்துக்கொள்ளும்..
அண்ணாமலை மீதான திமுக பதிவு செய்த அவதூறு வழக்கை வாபஸ் பெறக்காரணம் என்ன? 2021-26 ஆண்டுகாலத்தில் அண்ணாமலை மீது Piyush Manush கொடுத்த வழக்கின் மீதும் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அவர் இன்றளவும் சுட்டிக்காட்டுகிறார். தீவிர ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கல்யாணராமன் என்பவர், பெரியார் சிலையை உடைப்பேன் என தொடர்ந்து பேசியவர், குண்டர் சட்டத்தில் கைதானவர், அண்பாமலை செய்த ஊழல்கள், மோசடிகள் குறித்து ஆதாரங்களோடு 2 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்தார். அவை இன்றளவும் பொதுவெளியில் உள்ளது. இவற்றின் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அண்ணாமலையின் மதவெறி தூண்டும் பிரச்சார பயணத்திற்கு எவ்வுத தடையுமில்லாமல் அனுமதியளித்தது மட்டுமல்லாமல், அண்ணாமலைக்கான உதவிகளை திமுகவின் மூத்த பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் செய்தார்கள் எனும் குற்றச்சாட்டு பலமாக தோழர்கள் பலர் முன்வைத்தார்கள். இன்று தவெகவை எதிர்கிறார்கள் என்பதற்காக , திராவிடத்தை இழிவு செய்த மாரிதாஸ், சாட்டை துரைமுருகன் போன்றோரின் வீடியோக்களை திமுக ஐ.டி விங் குடுவின் மூத்தவர்கள் பலர் ஆதரிக்கிறார்கள், பரப்புகிறார்கள், பகிர்கிறார்கள். இது என்னவகையான அரசியல்?
இதே ஆதரவை இங்குள்ள முற்போக்கு இயக்கங்களுக்கு திமுக கொடுத்ததில்லை. மே17 இயக்கம் இன்றளவும் அதிமுக-பாஜக ஆட்சிகாலத்து வழக்குகளை சுமக்கிறது. ரவுடிப்பட்டியலில் என்னுடைய பெயரை கடந்த 5 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் வைத்திருந்தது திமுக. என்மீதான அநீதியான சிறப்பு விசாரணைகளை தொடர்ந்து நடத்தியது. இதுபோல பல செயற்பாட்டாளர்கள் போராட்ட வழக்குகளைச் சுமக்கிறார்கள். ஆனால் அண்ணாமலைக்கு முழு பாதுகாப்பை கொடுக்கிறார்கள், ஆதரவு கொடுக்கிறார்கள்.
தன் கழுத்துக்கு கத்தி வைப்பது ராஜதந்திரம் ஆகாது. திமுகவின் எதிர்கால தலைவரை வீழ்த்தும் வலிமையை அண்ணாமலைக்கு ஊட்டி வளர்க்கிறது திமுக. இதுகுறித்து நாம் கவலைபப்டப்போவதில்லை. ஆனால், தமிழ்நாட்டின் சீரழிவு சக்தியான அண்ணாமலையை எதிர்த்து நின்று போராடுவது மிக முக்கியமானது. ஆர்.எஸ்.எஸ்சின் கள்ளக்குழந்தையை ஆதரிப்பது, பாம்புக்கு பால்வார்க்கும் முட்டாள்தனத்திற்கு ஒப்பானது. திமுக பைல்ஸ், அறிவாலயத்தை செங்கல்-செங்கல்லாக பிரிப்பேன் எனும் அண்ணாமலையின் கருத்துகளை திமுக ஏற்கிறதா என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகளையும் தலித்முரசுவும், காட்டாறு அதிதீவிர பெரிதாரிஸ்டும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? சாதியை ஒழிக்கும் வழியை அண்ணாமலை வாயிலாக நடைமுறைப்படுத்துகிறார்களா? திமுக் ஆட்சிகாலத்தின் போது கைகட்டி மெளனம் காத்து திராவிடத்தை காக்கிறோம் என்ற சான்றோர்கள் அண்ணாமலை குறித்து வாய்திறக்காமல் மெளனம் காத்தது எதனால் என தெரியாது. ஆனால் மே17 இயக்கம் பெரியாரிய-திராவிட அரசியலுக்கான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தே வருகிறது, இனிமேலும் முன்னெடுக்கும். ஆளும்வர்க்கத்தின் தொங்குசதையல்ல பெரியாரியமும், திராவிடமும் என்பதை நன்கு அறிந்தவர்கள் மே17 இயக்கத்தினர்.
அண்ணாமலை மீதான வழக்குகளை திரும்பபெற்று, அவருக்கு சாதகமான நகர்வுகளைச் செய்யும் திமுகவின் முடிவுகளுக்கு மே17 இயக்கத்தின் வன்மையான கண்டனங்கள்.
Gate Man to DSP
பீகாரில் ராஜு குமார் என்ற இளைஞர், ரயில்வே கேட்மேனாக பணியாற்றியபடியே அரசு தேர்வு எழுதி, 1st அட்டெம்ப்ட்லேயே வென்று மாநில அளவில் 72வது இடம்பிடித்து DSP-ஆக தேர்வாகி அசத்தல். 12 வயதில் தந்தையை இழந்த குமார், குடும்ப பாரத்தை சுமந்துகொண்டே அயராது உழைத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். எளிய பின்னணியில் இருந்து வந்த குமாரின் வெற்றி, அரசு வேலைக்காக போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உதாரணமாக மாறியுள்ளது
#bihar #rajukumar #dsp #gateman #thanthitv