📉 1. Play Store Auto-Update ஆஃப் செய்யுங்கள்: SIM போட்ட உடனே ஆப்கள் அப்டேட் ஆகி மொபைல் டேட்டா காலியாகாமல் இருக்க Play Store → Settings → Network preferences → Auto-update apps சென்று "Over Wi-Fi only" மாற்றுங்கள்.
🧹 2. தேவையற்ற Bloatware ஆப்களை நீக்குங்கள்: புது போனில் ஏற்கனவே இருக்கும் தேவையற்ற கேம்கள் மற்றும் விளம்பர ஆப்களை Settings → Apps சென்று Uninstall / Disable செய்யுங்கள்.
🚫 3. Personalized Ads & Tracking ஆஃப் செய்யுங்கள்: Settings → Google → Ads சென்று "Delete advertising ID" கொடுங்கள் (Xiaomi/Realme/Vivo போன்களில் msa / System Daemon ஆஃப் செய்யுங்கள்).
🛡️ 4. Find My Device & Theft Protection ஆன் செய்யுங்கள்: போன் தொலைந்தாலோ திருடப்பட்டாலோ உடனே கண்டுபிடிக்க Settings → Security & privacy → Find My Device & Theft Detection Lock ஆன் செய்யுங்கள்.
🔒 5. Private DNS (AdGuard) செட் செய்யுங்கள்: எந்த ஆப்பும் இல்லாமல் விளம்பரங்களைத் தடுக்க Settings → Network & internet → Private DNS சென்று dns.adguard-dns. com என டைப் செய்து Save செய்யுங்கள்.
🔐 6. SIM Card Lock (PIN) ஆக்டிவேட் செய்யுங்கள்: போன் திருடப்பட்டால் உங்கள் SIM-ஐ வேறு போனில் போட்டு வங்கி OTP & WhatsApp ஹேக் செய்வதைத் தடுக்க Settings → Security → SIM card lock ஆன் செய்து 4-இலக்க PIN வையுங்கள்.
📊 7. Mobile Data Limit & Data Saver வையுங்கள்: தினசரி டேட்டா முடிந்ததும் மெயின் பேலன்ஸ் கட் ஆகாமல் இருக்க Settings → Network & internet → Data warning & limit செட் செய்யுங்கள்.
🔄 8. System & Google Play System Update சரிபாருங்கள்: பாக்ஸில் இருந்த பழைய சாஃப்ட்வேர் பக்ஸ்களைச் சரிசெய்ய SIM போடும் முன் Wi-Fi-யில் லேட்டஸ்ட் செக்யூரிட்டி அப்டேட்டை இன்ஸ்டால் செய்யுங்கள்!
💡 The Smart New Phone Rule:
➜ "புது போன் வாங்கியவுடன் முதலில் Wi-Fi-யில் இணைத்து இந்த 8 செட்டிங்ஸை 5 நிமிடத்தில் மாற்றிவிட்டு SIM போட்டால் — டேட்டா விரயம், விளம்பரத் தொல்லை மற்றும் SIM OTP திருட்டிலிருந்து முதல் நாளிலிருந்தே உங்கள் போன் 100% பாதுகாப்பாக இருக்கும்!" 🌟👑
👇 கமெண்ட்ல சொல்லுங்க: நீங்க புது போன் வாங்குனதும் முதல்ல எந்த செட்டிங்கை மாத்துவீங்க? 💬📱
📌 புது மொபைல் வாங்கத் திட்டமிடும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உடனே Share பண்ணி சேவ் பண்ணுங்க! 📲💾
பாவலர் அறிவுமதி அண்ணன்
பாடல்களோடு சொன்ன கதைகள் ♥️
இன்று என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அறிவுமதி அண்ணன் பிறந்த நாள்.
தொலை தூரம் இருந்தாலும் தமிழுணர்வாலும், ஈழத்தமிழருக்கான குரலாகவும் அவர் எமக்கெல்லாம் கிட்டத்தில் இருப்பவர் ஆயிற்றே. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அறிவுமதி அண்ணருக்கு.
21 வருடங்களுக்கு முன்னர் அறிவுமதி அண்ணரோடு நான் கண்ட வானொலிப் பேட்டியின் சில பகுதிகளை ஒலிக்க விட்டுக் கேட்டேன். அதில் இசைஞானி இளையராஜா தொட்டு முக்கியமான சில இசையமைப்பாளர்களது இசையில் பாடல் எழுதிய கதையைக் குறிப்பிட்டிருந்தார். அவற்றில் இருந்து பிரித்தெடுத்து எழுத்துப் பகிர்வாக இங்கே பகிர்கின்றேன்.
கானா பிரபா
முதலில் கே.பாக்யராஜ் இவரைத் திரையுலகுக்கு அழைத்து நான்கு திரைப்படங்களில் உரையாடல், நெறியாள்கை பின்னர் பாலுமகேந்திராவிடம் 7 படங்கள் , பாரதிராஜாவிடம் நான்கு ஆண்டுகள் என படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். மலையாளத்தில் மம்முட்டி நடித்த யாத்ரா திரைப்படம் தெலுங்கில் பானுசந்தர், அர்ச்சனா ஜோடியோடு மீளவும் பாலுமகேந்திரா இயக்க, அந்தத் திரைப்படத்தில் முன்னர் "ஓலங்கள்" திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட "தும்பி வா" பாடல் மெட்டு பயன்படுத்தப்படுகிறது. நிரீக்ஷனா திரைப்படம் தமிழில் "கண்ணே கலைமானே" என்ற பெயரில் மொழி மாற்றப்பட்ட போது அதில் "நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே"
https://t.co/nTBXovGuQN
பாடலை எஸ்.ஜானகிக்காக எழுதினார் அறிவுமதி.
மூன்றாம் பிறை படத்தில் வந்த பின்னணி இசையின் ஒரு பகுதியே பாலுமகேந்திராவின் வேண்டுகோளில் இளையராஜாவால் "தும்பி வா" ஆனதாகவும் பேட்டியில் சொன்னார். பின்னர் இந்த மெட்டு "சங்கத்தில் பாடாத கவிதை" என்று ஆட்டோ ராஜா படத்துக்காக புலவர் புலமைப்பித்தனால் எழுதப்பட்டது. தான் கலந்து கொண்ட கவியரங்க மேடைகளில் தலைவராக வீற்றிருந்த புலவர் புலமைப்பித்தன் எழுதிய அதே மெட்டுக்குத் தானும் பாடல் புனையும் வாய்ப்புக் கிட்டியதைச் சொல்லி நெகிழ்ந்தார் அறிவுமதி.
தான் உதவி இயக்குநராக இருந்த போது இசைஞானி இளையராஜா பாடல் இசையமைக்கும் தருணம் கூட இருந்ததை நினைவு கூர்ந்தவர் "நாடோடித் தென்றல்" படத்தின் பாடல்களை இளையராஜா எழுதி விட்டு "மதி இதைப் பார்" என்று என்று எழுதியதைக் காட்ட, அவற்றின் ஈரம் காயாமல் படியெடுத்துக் கொடுத்தாராம், மணியே மணிக்குயிலே உட்பட.
மலையாளத்தில் காலாபாணி என்று பிரியதர்ஷன் இயக்கிய படத்தின் தமிழ் வடிவம் "சிறைச்சாலை" ஆனபோது அந்தப் படத்தின் உரையாடல், மற்றும் அனைத்துப் பாடல்களையும் எழுதினார் அறிவுமதி.
சிறைச்சாலையின் ஒவ்வொரு பாடல்களைப் பற்றியும் தனித்தனியாகப் பதிவு எழுதலாமே.
அந்தப் பாடல்கள்
https://t.co/o62ArEQtN8
இசைஞானி இளையராஜாவோடு அறிவுமதி அண்ணன் முதன் முதலாக அமர்ந்து பாட்டெழுதியது "ராமன் அப்துல்லா" படத்தில் வந்த "முத்தமிழே முத்தமிழே முத்தச்சத்தம் ஒன்று கேட்டதென்ன"
https://t.co/Y5apHkJ9yJ
பாடலாம். அந்தப் பாடலை எழுத முன், நான்கைந்து மெட்டுகளைக் கொடுத்து "இவற்றில் உனக்குப் பிடித்ததை எடுத்துப் பாட்டெழுது" என்றாராம் ராஜா.
இந்த வானொலிப் பேட்டியை நான் எடுத்த சமயம் தமிழீழத்தின் A9 பாதை இலங்கை அரசாங்கத்தால் அடைபட்டிருந்த நேரமது. தன் பேட்டியில் "எங்கே செல்லும் இந்தப் பாதை"
https://t.co/C3qWvmwAoS
பாடலை சேது படத்திற்காக எழுதியதோடு ராஜா குரலுக்காகத் தான் எழுதிய முதல் பாடல் என்ற நினைவோடு இப்போது A9 பாதை அடைபட்டதையே இந்தப் பாடலைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது என்றார்.
ஆங்கிலம் கலக்காத தமிழில் தான் எழுதுவேன் என்ற என் கொள்கையைத் தெரிந்தும் தன் உதவியாளரை அனுப்பி "உதயா உதயா உளறுகிறேன்"
https://t.co/FnqseWTXyJ
பாடலை எழுத வைத்தாராம். தான் வெளியூருக்குப் போய் வந்து நாட் கணக்கில் தாமதித்தாலும் காத்திருந்து ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிக் கொண்டதையும் குறிப்பிட்டார்.
"பிரிவொன்றைச் சந்தித்தோம் முதன் முதல் நேற்று"
https://t.co/GY2YAY0ZZt
பாடலைப் பிரியாத வரம் வேண்டும் படத்துக்காக எழுதிக் கொண்டிருக்கும் போது அதில் எழுதிய "ஒரு வரி நீ ஒரு வரி நான் திருக்குறள் நாம்" வரிகளைக் கண்டு நெகிழ்ந்து தனக்கு ஒரு சந்தர்ப்பத்தில் கிட்டிய பாராட்டு மோதிரத்தைக் கழற்றி அறிவுமதி அண்ணனுக்கு அணிவிக்க வந்தாராம் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். நான் மோதிரம் அணிவதில்லை என்று இவர் மறுக்க, இது உங்கள் தமிழுக்கு நான் தருவது என்று வற்புறுத்தினாராம் எஸ்.ஏ.ராஜ்குமார்.
வித்யாசாகரோடு அறிவுமதி அண்ணன் இணைந்து கொடுத்த பாடல்கள் தனித்துவமானவை. அவற்றைப் பற்றிச் சொல்லும் போது "அள்ளித் தந்த வானம்" படத்துக்காக முதன் முதலாகச் சந்தித்தாராம். அப்போது ஏற்கனவே எழுதிய பாடலைக் காட்டிய போது அரை மணி நேரத்தில் மெட்டுப் போட்டது
"தோம் தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்"
https://t.co/rh8TWoDpoN
ஆனதாம். அதே படத்தில் "கண்ணாலே மிய்யா மிய்யா"
https://t.co/H1wQu7GUUO
பாடலோடு, நாட்டுப் புறப் பாடலுக்கும் மெட்டமைத்தாராம்.
தமிழ் மீது தனக்கிருக்கும் காதலை உணர்ந்து, பாடலாகவே முதலில் எழுதித் தரச் சொல்லிப் பின் மெட்டமைப்பாராம் வித்யாசாகர்.
அப்படி வந்ததிதில் "அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே"
https://t.co/xTYxzVce9k
பரவை முனியம்மாவுக்காகப் பத்து நிமிடத்தில் எழுதியது" மதுர வீரன் தானே"
https://t.co/sO7w5ELpEM
பேட்டி எடுக்கும் போது சொல்லாத பாட்டு ஆனால் என்னைச் சொக்க வைக்கும் இன்னொரு பாட்டு "விழியும் விழியும் நெருங்கும் பொழுது வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது வசதியாக வசதியாக வளைந்து கொடு"
https://t.co/rXDjgDnI7Y
இந்தப் பேட்டி எடுத்த போது 120 பாடல்கள் வரை எழுதிய பின் தன் திரைப்பணியில் இருந்து ஒதுங்கிருந்தார். அதையும் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
அறிவுமதி அண்ணனைச் சென்னை தேடி வந்து நேரே சந்தித்திருக்கிறேன். பின்னர் வானொலிப் பேட்டியும் கண்டிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் சந்திக்க வேண்டும், நிறையப் பேச வேண்டும் என்ற ஆவல் இன்னும் தீரவில்லை.
நீங்கள் பல்லாண்டு காலம் நோய், நொடியின்றித் தன் மூச்சாய்க் கொண்ட தமிழோடு வாழ வாழ்த்துகிறேன்.
கானா பிரபா
17.11.2026
"சிங்கப்பெண்" என்று சொல்கிறார்களே, அது ஏன்னு யோசிச்சு பார்த்தா,
"'உனக்கு பிரச்சனைனா யாரும் வர மாட்டாங்க நீயே பார்த்துக்கணும்'னு மறைமுகமா சொல்றது தான்!!
மனைவிக்கு ஒரு தோழி இருக்கிறார், மனைவியை விட இருபது வயது மூத்தவர். பணி நிமித்தமாக அவர் எங்கள் ஊருக்கு வந்து இரண்டு வருட காலங்கள் ஆகிறது இந்த இரண்டு வருடங்களாக இருவரும் பழகி, குடும்பக் கசப்புகளை பகிர்ந்து, பிள்ளைகளின் வளர்ப்பைப் பற்றி ஆலோசித்து, ஒருவரின் மனச் சோர்வில் இன்னொருவர் உடனிருந்து என நட்பை வளர்த்தனர். இருவருமே ஆசிரியர்கள் என்பதால் ஒருவரையொருவர் டீச்சர் என்றே அழைத்துக் கொள்வார்கள். பெயரைச் சொல்லி கூப்பிட்டதில்லை. தனது தோழியைப் பற்றி மனைவி என்னிடம் சொல்லும்போதெல்லாம் "ரொம்ப நல்ல பொம்பளை இவங்க, வாழ்க்கைல நிறைய கஷ்டப்பட்டுட்டாங்க. பாவம்" என்ற கரிசனத்தோடே சொல்லுவார். அந்தத் தோழி ஒரு கண்கண்ணாடி அணிந்திருப்பார், அவருக்கு சற்றும் பொருந்தாத எளிதில் கீழே விழுந்துவிடக் கூடிய கண்ணாடி, அதனை மாற்றி அவருக்குப் புதிதாக ஒன்று வாங்கித் தர வேண்டும் என்பது மனைவியின் நீண்டநாள் திட்டம். அதற்கான காலமும் சூழலும் அவர்கள் இருவருக்கும் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
இன்று நான் வேலையாக இருக்கும் போது மனைவி அழைத்தார், அழைத்ததும் "அந்த டீச்சர் என்ன நினைச்சிட்டு இருக்கு மனசுல? எனக்கு ஏன் புடவை வாங்கிக் கொடுத்துருக்கு, நான் அவட்ட கேட்டனா, எனக்கு புடவை வாங்கிக்கத் தெரியாதா! ஒரு புடவைக்கு வக்கில்லாம இருக்கறனா நானு. புடவைக்கு மேல பூ வச்சு கொடுத்துட்டு போகுதுங்க" எனும்போது அவள் குரல் தகரத் தொடங்கி இருந்தது.
டீச்சருக்கு பணி மாற்றல் கிடைத்து வேறு ஊருக்கு இன்று செல்கிறார், செல்வதற்கு முன் மனைவிக்கு சேலை எடுத்து அதன் மீது பூ வைத்து பரிசளித்து இருக்கிறார், இவ்வளோ நாள் நீ என்னோட எல்லா தருணத்திலும் கூட இருந்துருக்க, உனக்கு வேறு என்ன கொடுப்பது என எனக்குத் தெரியவில்லை. இந்த அன்புக்கு என்னால இந்தப் புடவைதான் கொடுக்க முடிந்தது. என தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். இதுவரைக்கும் வாங்க டீச்சர் போங்க டீச்சர் என பன்மையிலேயே அழைத்துக் கொண்டிருந்தவர் இன்றுதான் பெயரைச் சொல்லி அழைத்து ஒருமையில் பேசியும் இருக்கிறார்.
அன்பை மனிதர்களால் பயிலவே முடியாது, இந்த அன்பு என்னை நிலைகுழையச் செய்கிறது எனும்போது அதே அன்பு கோபமாகத்தான் வெளிப்படும் "எனக்கு யாரைக் கேட்டு அவள் புடவை வாங்கித் தந்தாள், நான் அவகிட்ட கேட்டனா? நான் அவகிட்ட கேட்டனா? போறவா அப்படியே போக வேண்டியது தான, எனக்கு ஏன் இதைச் செய்தாள் அவள்?" என்று உக்கிரப்பட்டு அது கண்ணீராகி விடுகிறது. இனிமே நான் அவங்களுக்கு கண்ணாடி வாங்கிக் கொடுத்தா அது பதிலுக்கு செஞ்ச மாதிரி ஆகிடுமே என்று கூடுதலாக ஓர் அழுகை. நான் ஏன் முதலில் செய்யாமல் போனேன் என தன்னைத்தானே வருந்திக் கொண்டார்.
ஒரு புடவையின் வண்ணம் சரியில்லை, வேலைப்பாடு சரியில்லை என இரண்டு முறை மாற்றி வருபவளுக்கு இந்தப் புடவை பூரண அழகில் இருக்கிறது. முழுமையாக இவளுக்கே நெய்யப்பட்டது போல தோற்றமளிக்கிறது,
சேலை நல்லாருக்குல்ல. என்றாள்
"தெரியல, ஆனா இந்தச் சேலையத் தந்த அன்பு அவ்வளோ அழகு"
பிரிகின்ற போதுதான் இருவருக்குள் இதுகாறும் இருந்த அன்பு எத்தகையது என்பதே புலனாகிறது.
- யாத்திரி | 2024.
உங்கள் பகுதியில் மழை எப்போது பெய்யும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?
https://t.co/TBQ7kcFm8s என்ற இணையதளத்திற்குச் சென்று உங்கள் பகுதியின் PIN Code-ஐ பதிவிடுங்கள்.
உங்கள் பகுதியில் மழை எப்போது வரும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்
@grok இந்த லிங்க் உண்மை தானே