1993 திமுகவிலிருந்து வைகோ பிரிந்து மதிமுக துவங்கியபோது அவரோடு சென்ற திமுகவின் மாவட்ட செயலாளர்கள் 9 பேர்
தமிழ்நாடு முழுக்க தீயாய் பரவியது இச்செய்தி!
அவ்வளவுதான், திமுகவின் கதை இத்தோடு முடிந்தது என்று பேசியவர்கள் தான் 90% பேர்
கழகத்திலிருந்து பல தொண்டர்கள் கலங்கித்தான் போனார்கள்.
திமுக தோழர்களின் குடும்பங்கள் முழுக்க இதே பேச்சு, பரபரப்பு
ஆனால் கோபாலபுரத்திலே அமர்ந்து எந்த சலனமும் இல்லாமல் தலைவர் கலைஞர் மெல்ல புன்னகைக்கிறார்
1994 மே மதிமுக துவங்கப்பட்டு விட்டது
மாநில மாநாடு!
லட்சோப லட்சம் மக்கள் பங்கேற்று விடிய விடிய பேரணி,
ஊடகங்கள் முழுக்க வைகோ ஆக்கிரமிக்கிறார்,
தீயாய் அனல் கக்கும் பேச்சு!
நாடே மதிமுகவாக மாறிப் போனதாய் ஊடகங்கள் கதறின!
தலைவர் கலைஞரின் புன்னகை மாறவே இல்லை!
இப்பொழுது திமுகவை ஒழிப்பேன் என பேசியிருக்கிற விஜய்க்கு அரசியல் புதிது
அன்றைக்கு திமுகவை ஒழிப்பேன் என்று முழங்கிய வைகோவிற்கு அரசியல் அத்துபடி
இன்றைக்கு திமுகதான் என் எதிரி என பேசியிருக்கிற நடிகர் விஜய் எங்கோ எழுதிக் கொடுத்த திரை வசனத்தை மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார்
அன்றைக்கு மேடை ஏறினால் தொண்டர்களின் மயிர் கால் கூச்செறியும் வைகோவின் உணர்ச்சித் ததும்பும் உரைவீச்சு ஆறு மணி நேரத்திற்கு மேலும் தொடரும்!
இன்றைக்கு திமுகவிற்கு சவால் விடும் நடிகர் விஜய் இந்த நிமிடம்வரை ஓர் கிளையில்கூட கட்சி கட்டவில்லை
அன்றைக்கு கட்சி தொடங்குவதற்கு முன்பே கிளை கழகம்வரை மிகச்சரியாக கட்டமைப்பை உருவாக்கியவர் வைகோ
ஆனாலும்,
ஏன் மதிமுகவால் திமுகவை ஒழிக்க முடியவில்லை?
ஏன் மதிமுகவை துவங்கிய காலம்போல் வலிமையாக வைத்திருக்க இயலவில்லை?
வேறொன்றுமில்லை..,
தமிழர்கள் அனைவரும் திமுகவினர் அல்ல!
ஆனால்,
திமுகவை ஒழிப்பேன் என்பதை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்!
தமிழர்களின் இந்த துல்லியமான உள்ளுணர்வை உணர அதீதமான அரசியல் அனுபவம் தேவை!
30 ஆண்டுகள் கடந்து விட்டது, இப்போது மதிப்பிற்குரிய எங்கள் வைகோ அவர்களைக் கேளுங்கள்.
சொல்வார்!
சரி,
அதை விடுங்க!
அன்பின் விஜய்..,
விரைவில் திமுகவை ஒழித்து விடுங்கள்!
காத்திருக்கிறோம்!!!
ஆம்,
இப்போதும் தலைவர் கலைஞர் சிரித்துக் கொண்டிருக்கிறார்!
#Copied
தேனி ஜெயில்ல இருந்து தப்பிய கைதிகளை போலீஸ் தேடிப் பிடிச்ச செய்திதான் இப்போ நாடு முழுசுமே ஹாட் டாபிக்.
ஆனா, அதுக்கு நேர் எதிர்மாறா, நம்ம அண்டை மாநிலமான கேரளாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் எல்லாரோட மனசையும் உருக்கிட்டு இருக்கு...
என்ன நடந்துச்சுன்னா :
தினக்கூலி வேலை செய்ற ஒருத்தரை, வாகனம் தணிக்கை பண்ணும்போது போலீஸ் வழிமறிச்சு டூவீலர் டாக்குமெண்ட்ஸைக் கேக்குறாங்க. அவிகிட்ட இருந்த எல்லாப் பத்திரமும் கச்சிதமா சரியாத்தான் இருந்துச்சு.
ஆனா, பைக்கல 'ரியர் வியூ மிரர்' (Rearview mirror) அதாவது, பின்னாடி வர்ற வாகனங்களை பாக்குற கண்ணாடி இல்லைங்கிற ஒரே காரணத்துக்காக 250 ரூபாய் அபராதம் விதிக்கிறாங்க போலீஸ்.
அப்போ அந்தத் தொழிலாளி, "சார்... கடந்த ரெண்டு, மூணு வாரமா மழையால சரியா வேலையே இல்ல சார்..." அப்படின்னு தன்னோட கஷ்டத்தைச் சொல்லி வருத்தப்படுறாரு.
கையில இருக்கிற 200 ரூபாயை எடுத்து போலீஸ்கிட்ட நீட்டுற மனுஷன், "சார்... இது அங்கன்வாடிக்கு போற என்னோட பொண்ணு பிறந்தநாள். அவளுக்கு மிட்டாய் வாங்கத்தான் இந்தச் சில்லறை வச்சிருக்கேன். கையில வேற காசு இல்ல சார்"ன்னு சொல்லி கலங்குறாரு.
இதைக் கேட்டதும் அங்க நின்ன போலீசாரின் மனசு மொத்தமா உருகிப் போச்சு.
அடுத்த என்ன பண்ணாங்க தெரியுமா?
அப்படியே பக்கத்துல இருக்கிற பேக்கரிக்கு போய், குழந்தையின் பெயர் பொறிக்கப்பட்ட விலை உயர்ந்த ' கேக், அங்கன்வாடி குழந்தைகளுக்குக் கொடுக்க சாக்லேட் பாக்ஸ், அதுக்கப்புறம் துணிக்கடைக்கு போய் ஒரு புதுப்பாவாடை-சட்டைனு எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு அந்தத் தொழிலாளியோட வீட்டுக்கே போறாங்க போலீஸ்!
சாக்லேட் வாங்கப் போன புருஷன், வீதி முழுக்க போலீஸ் படை சூழ வீட்டுக்கு வர்றதைப் பார்த்ததும் குடும்பத்துக்கே ஒரே அதிர்ச்சி! என்னடா ஆச்சுன்னு பயந்து போயிட்டாங்க.
ஆனா, அங்கே நடந்தது வேற லெவல்!
போலீசார் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டு, அந்தச் சின்னஞ்சிறு குழந்தையின் பிறந்தநாளை அங்கேயே ரொம்ப விமரிசையா கொண்டாடிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பியிருக்காங்க.
சட்டம் தன் கடமையைச் செய்யும்... மனுஷத் தன்மையும் கூடவே இருக்கும்னு நிரூபிச்ச இந்த காக்கிச் சட்டைகளை எப்படிக் பாராட்டுறதுன்னே தெரியல!
கண்டிப்பா இந்த மாதிரி செய்தி எல்லாருக்கும் போய் சேரணும்! 👍❤️
#keralapolice
#police
#Congress
சன் டிவி இந்த வீடியோவை ப்ளாக் செய்யலாம். காபிரைட் அவர்களுடையது.
சாலமன் பாப்பையாவின் குரல் கேட்டதும் அழுதுவிட்டேன். விநாயகர் சதுர்த்தி, ‘சாலமன் பாப்பையா’ நடுவர். குல்லாவுடன் இஸ்லாமிய சகோதரர் உற்சாகமாகக் கைதட்டி ரசிக்கிறார். பார்க்கவே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
ராஜாவின் பேச்சு சரவெடி. ஒரு சோறு மட்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
“உங்க அப்பா திருடினார்னு சொல்றீங்க; அத நீங்க பாத்தீங்களா? அப்படின்னா நீங்க என்ன செய்றீங்களோ, அத உங்க அப்பாவும் செஞ்சிருப்பார்னு நம்பறீங்க!
உங்ககிட்ட ஒரு தப்பு இருக்குன்னா, அத சரி செய்யாம நீ செய்யலயா, நீ செய்யலான்னா.. என்னது இது!
சிறியார் இட்ட வெள்ளாமை வெளஞ்சாலும் கைகூடாது; சின்னப்பசங்கள சேர்த்தா இப்படித்தான் நடக்கும்” இப்படி சரவெடி கொளுத்துகிறார் ராஜா!
“ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்திலோ, தமிழிலோ எழுதத்தெரியவில்லை” என்கிறார் ராஜா. இடைமறித்து “பேசவும் தெரியவில்லை” என்கிற சாலமன் பாப்பையா, “வாசிக்கவும் தெரியவில்லை!” என்று முடிக்கிறார்.
ஒரு மாதம் முன்புவரை, இத்தனை ஆரோக்கியமாக இத்தனை சிந்தனை செயல்பாட்டோடு நம்மோடு இவர் இருந்திருக்கிறார் என எண்ணுகையில் மனம் நெகிழ்கிறது.
தமிழாய் வாழ்கிறீர்கள் ஐயா ❤️❤️
எனக்கும் வருத்தம்தான்!
தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில்
கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்; என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்.
- தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பதிவு!
#ARaja #DMK #TamilNadu #KalaignarSeithigal
அப்பாவ காணாம்னது பேக் ஃபயர் ஆகிருச்சு,மிசாவ வச்சு கிண்டல் பண்ணது கடும் எதிர்ப்பு வந்ததால விஜய் பின்வாங்குறார், இதெல்லாம் இணையத்துல தான் அதுவும் ட்விட்டர்ல 100 பேருக்குள்ள பேசுபொருளாகும். அவன் வாழ்நாள் முழுக்க இதை பண்ணிக்கிட்டே இருப்பான். ட்ரிகர் பாலிடிக்ஸ்ல நாமதான் விழாம இருக்கனும். மிசால உங்கப்பா வேற கேஸ்ல உள்ள போனாராமேன்னா அது இருக்கட்டும் கரண்டு எப்ப வரும்னு நாம கேள்வி கேக்குற மோடுல மட்டும் தான் இருக்கனும். சட்டமன்றத்துல கூட்டமா எழுந்து எதிர்ப்பு தெரிவிக்கிறத விட அவன சவுண்டா பேசவிட்டு கடைசியா சிரிச்ச முகமா , நல்லா பேசுறார் , இப்ப பதில் சொல்ல ஆரம்பிப்பார்னு நம்புறோம்னு உதய் சொல்லிட்டு உக்காந்துடலாம். அவன் கிளப்பி விடுற கேள்விகள் தான் மீடியால விவாதமாகுதே தவிற நம்ம கேக்குறது குப்பைக்கு தான் போகுது.
ஒரு ‘அரசியல் தற்குறி ’
‘தேர்ந்தெடுக்கப்பட்ட மூடராக’ உருவெடுத்து ‘நிர்வாகத் திறனின்றி’ பண்பாடற்ற அநாகரிகமான நடவடிக்கையோடு நடந்து கொண்டால்: விளைவுகள் என்னவாக இருக்கும்?
A ‘political illiterate’ turned into an ‘elected idiot’ who suffers ‘administrative incompetence‘, coupled with uncivilised and awkward behaviour. What will be the recipe?
தாலி கட்டப் போகும் கடைசி நேரத்தில் அந்தக் கல்யாணத்தைத் தடுத்து நிறுத்தினார் அப்துல் கலாம்.
அந்தக் கல்யாணப் பெண்ணின் பெயர் சரஸ்வதி.
"எப்போது நடந்தது இது ?
எதற்காக அந்தக் கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?"
அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம்.
அப்போது உயர் அதிகாரியாக திருச்சியில் பணி புரிந்து வந்த கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.
"சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.
கலாம் சொன்னார்
அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.
காரணம்
அந்த பெண்ணின் வயது 16.
பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.
மாப்பிள்ளைக்கு வயது 47.
இரண்டாவது கல்யாணம்.
சொந்த மாமன்.
கலாம் தொடர்ந்தார் :
"கட்டாயக் கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம்
அந்தப் பொண்ணு மேல் படிப்பு படிக்கணும்னு ஆசைப்படுது.
அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை..."
"அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியமூர்த்தி.
"பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"
ஊர் பெயரைச் சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.
அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார். ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.
கலாம் சொன்னபடியே அந்தக் கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி சொன்னாள். "சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார்."
"நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. அதற்கான ஏற்பாடு பண்றோம்."
சொன்னாள். கவனமாகக்
குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.
"ஓகே, நாங்க புறப்படறோம்.
ஆனா...
அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."
"என்ன சார் ?"
"உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே. அவருக்கு யாரும்மா இந்தத் தகவலைச் சொன்னது ?"
"நான்தான் சார்."
ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.
"எப்படீம்மா ?"
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை.
அந்தக் கூட்டத்திற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.
பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம்.
Only Four Students..."
கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.
கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்துப் பாராட்டினார் கலாம். "இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்."
அந்தக் கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன.
எப்படியோ அதைப் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.
இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.
அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.
அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.
காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?
இந்தச் சம்பவம் நடந்து ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்குப் போயிருந்தாராம் கலியமூர்த்தி.
அவர் மேடையில் பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மூச்சு வாங்க மேடைக்கு ஓடி வந்து மைக்கைப் பிடித்தாளாம்.
யார் இந்தப் பெண் ?
எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !
கலங்கிய கண்களோடு மேடையில் நின்ற அந்தப் பெண், குரல் தழுதழுக்கச் சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."
யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்? எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.
"கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன்.
மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம்.
நான் யார் என்று உங்களுக்குத் தெரிகிறதா ?"
"தெரியவில்லை" என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.
அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :
"ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள்.
படிக்க வைக்கப்பட்டவள்.
நான்தான் துறையூர் சரஸ்வதி."
இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கிப் போகிறார்.
தொடர்ச்சி படிக்கவும்
🌲🌹பரபரப்பாக இயங்கும் வங்கியில் இரண்டொரு மாதம் முன்பு - ஒருநாள் அவரை கவனித்தேன்.
வெள்ளை வேட்டி.. வெள்ளை - தொளதொள சட்டை.. அறுபது வயதிருக்கலாம்.
ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருந்த என் அருகில் வந்தமர்ந்தார். கையில் பணமெடுக்கும் செலான்.
கண்டிப்பாக எழுதித் தரச்சொல்லுவார் என்கிற இறுமாப்புடன் பேனாவில் கை வைத்துத் தயாராய் இருந்தேன்.
அவர் தன் சட்டையின் மேல் பையிலிருந்து பேனாவை எடுத்தார். நடுங்கும் விரல்களில் செலானில் பெயர், தேதியை எழுதினார். பாஸ்புக்கை சரி பார்த்தபடியே, ஒவ்வொரு எண்ணாய்ப் பொறுமையாய் அக்கவுண்ட் நம்பரை எழுதினார். எழுதிக் கொண்டே என் பக்கம் திரும்பி சிரித்தார்.
“எழுதணும்களாய்யா?” என்றவனை ‘வேண்டாம் தம்பி” என்று சிரித்து மறுத்தார்.
தொகை எழுதும் Column வந்ததும், உள் பையிலிருந்து எதையோ எடுத்தார். சாணிப் பேப்பரில் அச்சடிக்கப்பட்டு நான்காய் மடித்து வைத்திருந்த அது - வாய்ப்பாடு..
”மொதல்லல்லாம் யார்ட்டயாச்சும் எழுதித் தரச் சொல்லிக் கேட்கறதுண்டு தம்பி. ஒருநாள் என் பையன்ட்ட சொன்னப்ப, "படிச்சிருக்கலாம்லப்பா"ன்னு கேட்டுட்டான். சங்கடமாப் போச்சு. படிக்காட்டி தான் என்ன.. நாம நெனைச்சா எழுத முடியாதான்னு இப்ப, நானே எல்லாம் எழுதிக்கிடறது. ஆனா இந்த நம்பருங்க மட்டும்தான் மனசுக்குள்ள நிக்க மாட்டீங்குது. அதான் வாய்ப்பாடு புக்கை வெச்சுக்க ஆரம்பிச்சேன்” என்றார். அவரை நினைத்துப் பெருமையாக இருந்தது.
அதன்பிறகு பலமுறை அவரைக் காண்பதும், புன்னகையைப் பரிமாறிக் கொள்வதுமாய்க் கழிந்தது.
ஒருமுறை நகரத்தில் ஓர் இடத்தைச் சொல்லி, “அங்கே ஒரு பெட்ரோல் பங்க் இருக்குல்ல.. அங்க தான் இருப்பேன்” என்றார்.
இரண்டு நாள் முன், பைக் பெட்ரோலுக்காக அருகே இருந்த பெட்ரோல் பங்குக்கு செலுத்தினேன். பெட்ரோல் அடித்துக் கொண்டிருந்த போது தான் அங்கே அந்தப் பெரியவரைப் பார்த்தேன். காற்றுப் பிடிக்கும் இடத்தருகில் தரையில் அமர்ந்து எஞ்ஜின் போன்ற எதையோ நோண்டிக் கொண்டிருந்தார். நிமிர்கையில் அவரும் என்னைப் பார்த்திருந்தார். சிரித்தபடி அருகே வந்து, “வாங்க வாங்க தம்பி..” என்றபடியே அருகே வர, நான் பைக்கை விட்டிறங்கியபடி அவரிடம் நெருங்கினேன்.
“பைக்கை அப்படி ஓரமா நிறுத்துங்க..” என்றவர் அலுவலக அறைக்கு நடந்தார்.
“இல்லீங்கய்யா.. நான் கெளம்பறேன். நீங்க வேலையைப் பாருங்க” எனும் போது …
“அட வாங்க தம்பி” என்று கையைப் பிடித்து அழைத்துப் போனார்.
அலுவலக அறையில் ஒரு இளைஞர் அமர்ந்திருக்க, போய் அறிமுகப்படுத்தினார். “பேங்க்ல அடிக்கடி பார்ப்பேன்ம்பேனே? இவரு தான். இந்தத் தம்பிகிட்ட மட்டும் தான் பேசுவேன் அப்பப்ப” என்று சொல்லிவிட்டு, “டீயா காப்பியா” என்று கேட்டார்.
“இல்லீங்கய்யா” என்றவனை..
“அட சும்மா இருங்க” என்று விட்டு, அலுவலக இளைஞரிடம், '‘ஒரு 20 ரூவா குடுப்பா.. டீ வாங்கிட்டு வரேன்” என்று வாங்கிக் கொண்டு போனார்.
என்ன பேசுவது என்று புரியாமல், “பெரியவர் ரொம்ப கவனம்ங்க. பேங்க் வர்றப்ப பார்த்திருக்கேன். அவரு பையன் ஏதோ பேசிட்டான்னு அவரே எல்லாத்தையும் எழுதிக்கிறார். நீங்க வேற யாரையாச்சும் கூட அனுப்பலாமே சார்? பாவம் வயசான காலத்துல....”
“இல்லீங்க.. அவருக்கு சில வேலையை அவரே செஞ்சாத் தான் பிடிக்கும்.. அப்டியே வளர்ந்துட்டார்” என்றார் இளைஞர்.
“அதுசரிதான்ங்க. நீங்க ஓனர். நீங்க சொன்னா கேட்க மாட்டாரா என்ன?”
ஒரு 30 வினாடி சிரித்தவர் சொன்னார்: “நீங்க வேறங்க. அவருதாங்க ஓனர். இந்த பங்க், அதோ அந்த காம்ப்ளக்ஸ் எல்லாம் அவருது தான். அவர் பையன் தான் நான். எனக்கு கல்யாணம் ஆகறவரைக்கும், எனக்கே சம்பளம்தான்னுட்டார்”
விக்கித்துப் போய் வெளியே பார்த்தேன். அந்தப் பெரியவர் டீ பார்சலோடு நடந்து வந்துக் கொண்டிருந்தார். என்னை யாரோ பளார் என்று அறைந்தது போலிருந்தது..
1. என்ன ஒரு அருமையான மேனேஜ்மெண்ட்...!
2. என்ன ஒரு உழைப்பு....
3. சிம்பிளிசிட்டி...
4. வாழ்க்கையில் எதார்த்தம்..
நாம் கற்றுக் கொள்ள இன்னும் இவரைப் போல மாமனிதர்கள் இருக்கிறார்கள். நாம் கொஞ்சம் கீழே இறங்கி வர வேண்டும்.
🌹🌹🌹🌹🌹🌹
10 அடிக்கு ஒரு காவலர் இந்த வெயிலில்? இது 20கிமி தூரத்திற்கு ? அத்தோடு 20 வாகனங்கள் புடை சூழல பந்தாவா திரியும் விஜய்…
கேட்டா 10 மணிக்கு வருவார் இரவு வரை வேலை செய்வார் விஜய் என விளம்பரம் பண்ணிட்டு இருக்கானுங்க.. சாப்பாடு கொண்டுவரார் பிரண்ட்ஸ்..
இந்த வெயிலில் 3 மணி நேரம் CM வருகிறீர் என நிற்கவிட்டு பின் மாலை 3 மணி நேரம் இப்படி காவலர்கள் நின்றால் என்ன பணியை அவர்கள் செய்வார்கள்? இல்லை இந்த வெயில் நிற்பதை யாராவது ஏற்பார்களா?
இன்னொரு பக்கம் எரிபொருள் சிக்கனம் என அனைத்து முதல்வர்களும் வாகன எண்ணிக்கையை குறைத்துவிட்ட போதும் 20க்கும் மேல் வாகனத்தில் வருவது எல்லாமே சினிமா வாழ்வில் தனக்கு வேண்டிய அந்த புகழ் மோகம்..
ஆனால் எதையும் உணராத ஒரு insta கும்பல் சினிமா போலவே இதையும் எடுத்து பரப்பிடு இருக்கானுங்க..
இது ரீல்ஸ் பைத்தியங்களில் ஆட்சி..
அவனை ஆட்சி பண்ண விட்டா தான அவன் தப்பு பண்ணுவான்
அவன் தப்பு பண்ணும் போதெல்லாம் நீங்க கரெக்ட் பண்ணிட்டே இருந்தா
அவனுக்கு தான நல்லா பெயர் கிடைக்கும்?
சும்மா விட்ருந்தா அவன் மாணவர்கள், மாணவிகள், குடும்ப பெண்கள்னு யாருக்குமே 1000 ரூபாய்
போட்டிருக்கமாட்டான்.
மக்களுக்கு நல்லது கிடைக்கணும்னு நீங்க போராடுறது ஓகே தான் ஆனா நல்லது அனுபவிச்ச அந்த மக்கள் நமக்கு ஓட்டு போட்டாங்களா?
நாம வாங்குன 32% ஓட்டுல 17% பெண்கள் ஓட்டுனு வச்சிப்போம்.
மகளிர் உதவி தொகை வாங்குன மீதி
70% பெண்கள் ஓட்டு எங்க?
விடுங்க தலைவரே கொஞ்ச நாள் கஷ்டப்படட்டும், அப்போ தான் நம்ம அருமை தெரியும். அவன காப்பாத்தி அவனுக்கு நல்ல பேர் வாங்கி குடுத்து அவனை திரும்ப cm ஆக்க போறிங்களா?
இல்ல எனக்கு புரில...
முதலாவது தகவல் :
டாஸ்மாக் மொத்த கொள்முதல் மற்று வினியோக கட்டப்பாடு முழுமையாக லாட்டரி மார்டீன் மாபியா கும்பலுக்கு செல்கிறது இன்று இரவு முதல்...
இதன் மூலம் ஒரு பெட்டிக்கு 1000ரூ கமிஷன் வீதம் சுமார் மாதம் 1000 கோடிக்கும் மேல் மதுபான உற்பத்தியாளர்களிடம் மற்றும் வெளி நாட்டு மதுபானம் விற்பனை விற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் இவர்களை சென்று சேர்கிறது..
1996 - 2001 வரை இருந்த லாட்டரி மார்டீன்..
மீண்டும் இந்த முறை லாட்டரி அல்ல - சாராயம்...
லாட்டரீ மார்டீன் வைத்துக் கொண்டு ஊழல் அற்ற நேர்மையான அரசு பதவி ஏற்றது எல்லாம் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய விசயம். ஓட்டு கேட்டவன் மற்றும் TVK நிர்வாகி எல்லாம் சொல்ல வேண்டிய முதல் பதில் இந்த ஆட்சிக்கும் சுமார் 10,00,000 குடுமபங்கள் வாழ்கையை நாசம் செய்த இன்று நாசம் செய்யும் லாட்டரி மார்டீனுக்கும் என்ன சம்மந்தம்?
ஏதாவது ஒரே ஒரு காரணத்துக்காக்கூட ஜெயலலிதாவை நீங்க ஆதாரிக்க மாட்டிர்களா என என் நண்பர் முன்பு ஒருமுறை கேட்டார்....
அப்போது சொன்னேன் ஒரே ஒரு காரணம் உள்ளது அது யாதெனில் ஜெயலலிததான் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டை ஓழித்தார் அதற்காக மட்டுமே ஜெயலலிதாவை பிடிக்கும் என்றேன்.
அப்பேர்பட்ட ஜெயலலிதாவே ஒழித்துவிட்ட லாட்டரி சீட்டை உற்பத்தி செய்த லாட்டரி அதிபர் மார்டின் அவர்களின் மனைவி லீமா ரோஸ் அவர்களிடம் பல்க்கா ஒரு அமௌண்ட் வாங்கிகொண்டு லால்குடி தொகுதிக்கு லீமா ரோஸை அதிமுக வேட்பாளர் ஆக்கி இருக்கிறார் எலப்பாடியார்...
ஏழைகளின் வாழ்வை சீரத்த லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கும் மார்டினுக்கு துணை போகும் எலப்பாடியின் இந்த லாட்டரி அதிபர் ஆதாரவை அதிமுகவினரோ தமிழ்நாட்டு மக்கள் ஏற்பார்களா.....
புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன ப்ரச்னை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் .. அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள.. உங்க இருவருக்கும் என்ன ப்ரச்னைன்னு எங்களுக்கு தெரியல.. உங்க ரசிகர்களுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன்.. அது என்ன எப்ப வந்தாலும் ரெண்டு கட்சிக்குத்தான் போட்டி... அப்படி என்ன உங்களுக்கு திமுக மேல கோபம்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய்... நாங்களும் சப்போர்ட் பன்றோம்.. சொல்லாம நீங்க மட்டும் சினிமா டயலாக் பேசுனா ஏன் ஓட்டு போடனும்னு மக்கள் கேக்குறாங்கள்ல.. இங்க ஐம்பது வருஷமா இருக்க கட்சிகள் மற்றும் பதினைந்து வருஷமா மக்களோட மக்களா களத்துல நின்னு போராடி, புதிய மாற்றத்தோடு தமிழகத்தை உருவாக்க மக்கள்கிட்ட வாக்கு சேகரிக்கும் கட்சிகள் எல்லாம் நிறைய இருக்கு.. எந்த விதத்துல நீங்க அந்த கட்சிகளை விட உயர்வு சொல்லுங்க... எந்த போராட்டத்துல மக்களுக்காக மக்கள் கூட நின்னு இருக்கீங்க இங்க ரெண்டு கட்சிக்குத்தான் போட்டின்னு சொல்ல... மனசாட்சி இல்லைன்னா நீங்க எப்படி மக்கள் தலைவனா மாறுவிங்க விஜய்... உழைப்பை முதல்ல மதிங்க... உங்க கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்ல... இனிமேலும் மக்கள்க்கிட்ட வீரவசனம் மட்டும் பேசாம ஒழுங்கா உங்க கட்சியோட கொள்கை திட்டம் எல்லாம் எல்லா இடத்துலயும் பேசுங்க.. ஒவ்வொரு தொகுதிலயும் என்ன ப்ரச்னைன்னு அலசி ஆராய்ங்க... பொதுவா வீராவேசமா பேச இது அரட்டை அரங்கம் இல்லை... மக்கள் களம்... ஏற்கனவே நாங்க 50 வருடத்தை இழந்துட்டு இருக்கோம்.. இப்போ நீங்க வந்து ஆட்டத்தை கலைக்காதிங்க.. மறுபடியும் மக்கள் ப்ரச்னை உணராத முதல்வர் எங்களுக்கு வேண்டாம்....
மக்களோடு மக்களாக நின்று எங்களை, எங்கள் இளையதலைமுறையை வழிநடத்தும் தலைமையே எங்களுக்கு வேண்டும்...
@actorvijay
டாக்டர் அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது திருப்பதிக்கு தரிசனத்திற்கு வந்தார். எம்மதமும் சம்மதம் என்பதற்கான நிகழ்வு இது....
முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நண்பகல் வேளையில் தரிசனம் செய்வதற்குத் தான் ஆலயத்துக்கு வந்தால், பக்தர்களின் தரிசனம் பாதிக்கப்பட்டு விடும் எனக்கருதி, எவருக்கும் இடையூறு அல்லாத அதிகாலை வேளையில் தரிசனத்துக்கு வந்தார் அப்துல் கலாம் அவர்கள்.
திருமலை ஏழுமலையான் ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்ற பல தரப்பினரும் சூழ, தேவஸ்தானம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் அவரை ஆலயத்துக்குள் வருமாறு அன்புடன் அழைத்தார்கள் அர்ச்சகர்கள்.
அனைத்து வரவேற்பையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட அப்துல் கலாம், ஆலயத்துக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தார். மீண்டும் அழைத்தார்கள். இன்னும் அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்கள்.
பின்னர் பிரதான அதிகாரியைப் பார்த்து, "பிற மதத்தவர்கள் கையெழுத்திட்டு நுழையும் அந்தக் குறிப்பேட்டில் கையெழுத்து போட்டுவிட்டுத்தான் நான் ஆலயத்தில் நுழைய வேண்டும். அதுதான் உங்கள் ஆலயத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும் விதி. இந்திய ஜனாதிபதி என்றாலும் அந்தக் கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன். எங்கே அந்தப் புத்தகத்தைக் கொண்டு வாருங்கள். நான் கையெழுத்திட வேண்டும்." என்றார்.
கூடியிருந்த அனைவரும் ஒரு கணம் திகைத்து நின்றனர். இந்தப் பண்பு வேறு யாருக்கு வரும் என்று ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்த பதிவேடு கொண்டு வந்ததும் அதில் கையெழுத்திட்ட பின்னர், 'பங்காரு வாகிலி' எனப்படும் தங்க வாசலைக் கடந்து ஏழுமலையானைத் தரிசித்தார் அப்துல் கலாம். அப்போது பாசுரங்கள் பாடப்படும் திருமலையின் சிறப்பு எடுத்துரைத்து, சடாரி சார்த்தப்பட்டது. வெளியே வந்து உண்டியலில் காணிக்கை செலுத்தினார். மற்ற ஆலயங்களைப்போல் திருமலையில் பெருமாளுக்குச் சார்த்திய மாலைகள் வேறு எவருக்கும் சார்த்தப்படுவதில்லை.
காரணம், இந்த மலர்களும், மாலைகளும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய பிறகு பெருமாளுக்குக் கொடுத்தவையாக ஐதீகம். எனவே பெருமாளுக்கு மட்டுமே அந்த மலர் மாலைகள் சொந்தம். இதன் காரணமாக, திருப்பதிக்கு வரும் எப்பேர்ப்பட்ட முக்கியஸ்தர்களுக்கும் சகல கவனிப்பு இருக்குமே தவிர, மாலை மரியாதை மட்டும் இருக்காது.
வலம் வந்து முடித்த அப்துல் கலாம் அவர்களுக்கு, அர்ச்சகர்கள் லட்டு, பட்டு வஸ்திரம், என்றெல்லாம் பிரசாதங்களை மந்திரங்கள் முழங்கக் கொடுத்தனர். அப்போது அவர் அர்ச்சகர்களைப் பார்த்து "ஒரு நிமிடம்" என்று சொல்லிவிட்டு,
"தனிப்பட்ட முறையில் என் பெயர் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டாம். #இந்தியா சிறப்பாக இருக்க வேண்டும். சகல வளங்களைப் பெற வேண்டும் என்று அர்ச்சனை செய்து, வாழ்த்தி இந்த பிரசாதத்தை என்னிடம் கொடுங்கள்" என்று சொன்னபோது அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள். எப்பேர்பட்ட உயரிய சிந்தனை அப்துல் கலாம் மனதுக்குள் இருந்தால் இந்தியா என்ற பெயரை உச்சரித்து பிரசாதம் தாருங்கள் என்று கேட்டிருப்பார்...
( சித்தர்களின் குரல் Shiva Shangar)
🚌 அரசு பஸ் vs தனியார் பஸ் – ஒரு அனுபவம்
சில வருடங்களுக்கு முன், உடல்நிலை சரியில்லாமல் ஈரோட்டில் இருந்த நண்பரை பார்க்க 10 பேர் சென்றோம்.
இரவு 9 மணிக்கு ஈரோடு பஸ்டாண்டில் இருந்து காக்காபாளையம் செல்ல வேண்டியது.
முதலில் தனியார் பஸ்சில் ஏற முயன்றோம்.
கண்டக்டர் கறாராக — “சேலம் டிக்கெட் எடுத்தால் தான் உட்கார முடியும்; இடம் இருந்தால் பிறகு பார்க்கலாம்” என்றார்.
மீண்டும் கேட்டாலும் அதே பதில்.
அப்போது அருகில் இருந்த அரசு பஸ் கண்டக்டர் சொன்னார்:
“அவங்க அப்படித்தான் சொல்வாங்க தம்பி… நீங்க இங்க வாங்க. நம்ம பஸ்ல ஏறி உட்காருங்க. அவனுக்கு முன்னாடி கொண்டு போய் இறக்கி விடுறேன்!” 😊
இரவில் ஓர் ஸ்டாப் கூட தவறாமல் பயணிகளை ஏற்றிய டிரைவரிடம் கேட்டோம்:
“மதியம் வரும்போது நிறுத்தவே இல்லை… இப்போது எல்லா இடத்திலும் நிறுத்துறீங்க?”
அவர் சிரித்துக்கொண்டு சொன்னார்:
“பகல் இருந்தா கை காட்ட மாட்டாங்க. இரவு நேரத்தில் நிறுத்துவாங்கன்னு நம்பிக்கை வைத்து நிற்பாங்க.
நம்ம மக்களின் பாதுகாப்புக்கு நாம்தானே பொறுப்பு!”
அந்த நாளிலிருந்து இன்று வரை — நான் அரசு பஸ்ஸில்தான் பயணம் செய்கிறேன்.
அரசு பஸ் நஷ்டத்தில் ஓடினாலும்,
மக்களின் பாதுகாப்பும் நம்பிக்கையும் தான் அதன் உண்மையான லாபம்.
“எதுக்கு சார் ஹிந்திக்குப் போயி இவ்வளவு பெரிய பிரச்சனை பண்றீங்க ?” என்றபடியே வெண்பொங்கல் ஆர்டர் செய்துவிட்டு முகத்தை பார்த்தார் நண்பர்.
"பொறுங்கள் சொல்கிறேன்.." என்று சொல்லிவிட்டு "எனக்கு ரெண்டு சப்பாத்தி" என்றேன் சர்வரிடம்.
"அடுத்து என்ன சார்" என்றார் சர்வர்.
நண்பர் ஒரு தோசையும், நான் மறுபடி ரெண்டு சப்பாத்தியும் சொன்னவுடன், அவர் ஆச்சரியத்துடன் "என்னங்க நீங்க, வெரைட்டியா டிபன் ஐட்டம் இருக்கும்போது மறுபடியும் சப்பாத்தியே கேக்குறீங்க?" என்றார் ஒருவித அசூசையுடன்.
"பொறுங்கள் சொல்கிறேன்.." என்றேன்.
அவர் என்னை விநோதமாக பார்த்தார். அப்போபோதே நாங்கள் இருவரும் முதலில் கேட்டதை எடுத்து வந்து வைத்துவிட்டு சர்வர் நகர்ந்தவுடன் பொங்கலை எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.
நண்பர் பதற்றத்துடன்,
"சார், அது நான் கேட்டது" என்றார்.
நான் நிதானமாக, "ஓ... சரி பரவாயில்லை, நீங்கள் சப்பாத்தி சாப்பிடுங்கள்" என்றேன்.
"அட, எனக்குச் சப்பாத்தி பிடிக்காதுங்க" என்று சொல்லியபடியே வேண்டா வெறுப்புடன் சாப்பிட ஆரம்பித்தார்.
"அப்புறம் சார், நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலியே. ஹிந்தி"... என்று முடிப்பதற்குள், "கொஞ்சம் பொறுங்கள், சொல்கிறேன்..." என்றேன்.
அவர் நக்கலாகச் சிரித்துக் கொண்டார்.
தோசையும் சப்பாத்தியும் வந்தது. உள்ளே இறங்க மறுத்த சப்பாத்தியின் கடைசி பிட்டை இறக்க அவர் தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தபோது, தோசையைச் சாப்பிட ஆரம்பித்தேன்.
டம்ளரை கீழே வைத்துவிட்டு அந்த காட்சியைப் பார்த்தவர் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார்...
"அலோ, உங்களுக்குத் தேவையென்றால் நீங்கள்தான் உங்கள் உணவை ஆர்டர் செய்துகொள்ள வேண்டும். உங்கள் உணவை என் தலையில் கட்ட நீங்கள் யார்?" என்று கொதித்தார். விட்டால் அடித்துவிடுவார் போலிருந்தது!
அவரிடம் அமைதியாகச் சொன்னேன். "நாளை காலையில் வெளியேறிவிடும் உணவுதானே இது?
இதை உங்கள் மீது திணித்ததற்கே உங்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருகிறதே, காலங்காலமாக பேசும் ஒரு மொழியின் இடத்தில் இன்னொரு மொழியைத் திணிப்பதை எப்படி இவ்வளவு மொன்னையாக அணுகுகிறீர்கள்?"
"நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்...
உங்கள் முன் இருக்கும் சப்பாத்திதான் ஹிந்தி.
நான் மைய அரசு. ஒரே ஒரு வித்தியாசம். நானாவது உங்கள் உணவை சாப்பிடுவேன். மைய அரசுகள் அதை செய்ய மாட்டார்கள். சப்பாத்தியை தலையில் கட்டுவது மட்டும்தான் அவர்கள் வேலை, வாங்க போகலாம்" #புரிஞ்சவன்பிஸ்தா
👉 இதுதான் விரும்பி படிப்பதற்கும்,
திணிப்பதற்கும் உள்ள வித்தியாசம்…!! 🙏
#shared
சன் டி.வி.யில் சொன்ன ராசி பலனைக் கேட்டு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்தி கீரை கொடுக்க முடிவு செய்தேன். எங்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு கடைத்தெருவில்தான் அந்தக் கீரை விற்கும் 75 அல்லது 80 வயது இருக்கும் பாட்டியைச் சந்தித்தேன்.
ஒரு சிவப்பு சின்னாளம்பட்டு புடைவை, கருப்பு ரவிக்கை, நெற்றியில் நாலணா அளவிற்கு குங்குமப்பொட்டு, கருப்பு ஆனாலும் வசீகரமான முக அமைப்பு... அந்தப் பாட்டியிடம் என்னை அறியாமல் அழைத்துச்சென்றது.
முதல் சந்திப்பே ‘அக்னி நட்சத்திரம்’ கார்த்திக் - பிரபுபோல ஒரு சண்டையில் ஆரம்பமானது. பாட்டியா? ஆயாவா? எப்படிக் கூப்பிடுவது? என்ற சந்தேகத்துடன் எங்கள் வீட்டு வழக்கப்படி பாட்டி, “அகத்திக் கீரை இருக்கா?”ன்னு கேட்டேன்.
“இருக்கு ராசா. முழு கீர, அரக்கீர, பொன்னாங்கண்ணிக் கீர, பருப்புக்கீர எல்லாம் இருக்கு. பாலக் வேணுமா? இதோ இருக்கு” என்றாள் பாட்டி.
“எனக்கு அகத்தி கீரதான் வேணும். மாட்டுக்குப் போடணும்” என்றேன்.
“நல்ல மகராசனா போடு. இந்தா இந்தக் கட்டு நாற்பது ரூபா.”
“நாற்பது ரூபாவா. ஏன் பாட்டி இவ்வளவு வெல சொல்ற. கீரயா, தங்கமா இது?” என்றேன்.
அவ்வளவுதான் பாட்டிக்கு கோபம் வந்துவிட்டது.
“இந்தாய்யா கீர வேணும்னா வாங்கு. தங்கம் வைரம்னு வீணா பேசாதே” என்றாள் பாட்டி.
பாட்டிக்கு இவ்ளோ கோபம் வரும்னா எனக்கு எவ்ளோ வரும்.
“பாட்டி நீ மட்டும்தான் கீர விக்கிறியா? இன்னும் எவ்வளவு கடையிருக்கு. நான் முப்பது ரூபாய்க்கு இதே கீரயா வாங்கிக் காட்டுகிறேன் பார்.” அப்படீன்னு சவால் விட்டுட்டு பக்கத்துலே உள்ள எல்லா கடைகளிலும் அகத்தி கீர விலை கேட்டேன். 50 ரூபாய், 45 ரூபாய் என்றனர். மழை சரியாக பெய்யலையாம். அதனால் எல்லா காய்கறி விலையும் ஏறிடுத்தாம்.
வேற வழியில்லாம 45 ரூபாய் சொன்ன ஒரு அம்மாவிடம் கீரைய வாங்கினேன். ஆனா, பாட்டியோட நேர்மை மட்டும் என்னைக் கவர்ந்தது. மற்றவர்கள் எல்லாம் அதிக விலைவைத்து விற்கும்போது, பாட்டி மட்டும் நியாயமா விற்கிறது என் மனதைத் தொட்டது.
அடுத்த வெள்ளிக்கிழமை சைக்கிள் நேராக பாட்டி கடைக்கு நின்றது.
“வா ராசா... இந்த அகத்தி கீரை” என்று பழசையெல்லாம் மறந்து என்னைப் பார்த்து பாசமாக பேச ஆரம்பித்தாள்.
“மாட்டுக்குத்தான போடற. இந்தா இதையும் போடு” என்று இலவசமாக ஒரு கட்டையும் கொடுத்தாள்.
“டீ சாப்பிடறயா பாட்டி?” என்றேன்.
“வேண்டாம்யா. இப்பதான் ஒரு டீ குடிச்சேன்.”
இப்படி ஆரம்பித்த எங்கள் நட்பு பல வாரங்களைக் கடந்தது. செவ்வாய், வெள்ளி என்றாலே பாட்டியைப் பார்க்கப் போகும் உற்சாகம் என்னைத் தழுவும்.
அன்று கடைத்தெருவிற்கு 6 மணிக்கே சென்றேன். பாட்டி அப்போதுதான் கடையைத் தயார் செய்து கொண்டிருந்தாள். ஒரு பாய், ஒரு பெரிய மரப்பெட்டி. இவ்வளவுதான் கடை. (‘சந்திரமுகி’ கட்டிலை அநாயாசமாக தூக்குவதுபோல்) அந்தப் பெரிய மரப்பெட்டியைத் தூக்கி முன்னாலே வைத்து அதில் கோயம்பேட்டிலிருந்து வாங்கி வந்துள்ள காய்கறி மற்றும் கீரை வகைகளை அடுக்கினாள். பின்பு எல்லாவற்றிலும் தண்ணீர் தெளித்தாள். என்னைப் பார்த்ததும் “என்ன ராசா இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே?” என்றாள்.
“அது இருக்கட்டும் பாட்டி. நீ ஏன் தனியா கஷ்டப்படறே. உன் வீட்டுக்காரரு, புள்ளைங்க எல்லாம் எங்கே?” என்றேன்.
“அதையேன் கேட்கற ராசா. என் புருசன் நல்லவருதான். கல்யாணம் ஆன புதிசுல என்ன அப்படி பாத்துப்பான். (பொக்கை வாயில் வெட்கம்) ஆனா பாரு... அப்புறம் வேற ஒருத்தியோட குடுத்தனம் நடத்தப் போயிட்டான். அவளும் இவன்கிட்ட இருந்த எல்லா பணத்தையும் வாங்கிட்டு அம்போனு நடுத்தெருவில விட்டுட்டா. பாவம் சாப்பாட்டுக்கே வழியில்லாம திரும்ப என்கிட்டேயே வந்து விழுந்தான். இதுல குடி வேற. என்ன பண்றது?
நான் காய்கறி வித்து வரக் காசுல என் ஒரே பொண்ணு திருவண்ணாமலைல இருக்கா. அவளுக்குக் கொஞ்சம் அனுப்புறேன். மீதிய நானும் வுட்டுக்காரரும் கஞ்சி குடிக்க வச்சுக்குவோம். அப்பப்ப குடிக்கவும் அவனுக்கு பணம் குடுக்கறேன். போயிட்டு போறான். நம்மதான் இப்படி வெய்யில்லயும் மழைலயும் பாடுபடறோம். அவனாவது குடிச்சிட்டுக் கவலையில்லாம இருக்கட்டுமே” என்றார்.
எனக்கு இப்போது பாட்டி இளங்கோவடிகளின் கண்ணகியைப்போல் தோன்றினாள்.
“அப்புறம் ராசா, என் பொண்ணுக்கு ஒரே பையன். கான்வென்ட்ல படிக்கறான். இங்கிலிசு நல்லா பேசறான். போன லீவுக்கு போய்ப் பார்த்தேன். Grandma comeன்னு ஏதேதோ சொல்லுது. எனக்குத்தான் ஒண்ணும் புரியல. கொழந்தை நல்லா இருக்கணும். என் உயிரே அவன்தான். என் கதைய வுடு. இந்த அகத்திக்கீரை” என்று கீரைக்கட்டை நீட்டினாள். கூடவே இலவச கட்டும் இருந்தது.
பல வாரங்கள் கடந்தன. ஒருநாள் நான் சற்று லேட்டாகக் கடைக்குச் சென்றேன். அங்கே பாட்டி வழக்கமான சிரிப்புக்குப் பதிலா ரொம்பவும் பதற்றமாக இருந்தாள். என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பித்தாள்.
“என் ராசா வந்துட்டயா. உனக்கு கீரைய குடுத்துட்டுதான் ஊருக்குக் கிளம்பணும்னு இருக்கேன்.”
“ஏன் பாட்டி என்ன ஆச்சு?” என்றேன்.
“அதையேன் கேட்கற. நேத்து புள்ளைய ஸ்கூல்ல வுட சைக்கிள்ள போன என் பொண்ணு மேலே ஒரு லாரி மோதிட்டான். பொண்ணும் பேரனும் பக்கத்துல இருந்த பள்ளத்தில் விழுந்து ரொம்ப அடியாம். பொண்ணு இப்ப பரவாயில்லையாம். ஆனா, குழந்தைதான் இன்னும் கண்ணு முழிக்கலையாம். ராசா தலைல நல்ல அடியாம். திருவண்ணாமலை கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில சேத்திருக்காங்களாம். என் பேரனுக்கு ஏதாவது ஆச்சுனா நான் எப்படி உயிரோடு இருப்பேன்? இந்த ராசா கீரை புடி. நான் கிளம்பறேன்...” என்றாள்.
பாட்டியின் இந்த நிலைமையிலும் வாடிக்கைக்காரரை மதிக்கும் உயர்ந்த எண்ணம் என்னை உலுக்கியது.
“கொஞ்சம் இரு பாட்டி... இப்ப எப்படி திருவண்ணாமலைக்கு போவ?” என்றேன்.
அழுகையுடன் “இப்ப 1ஆம் நம்பர் பஸ் வரும். அதுல ஏறி கோயம்பேடு போயி அங்கேருந்து 122 பஸ் புடிச்சு போயிடறேன்” என்றாள்.
“கொஞ்சம் இரு பாட்டி” என்று சொல்லி பாக்கெட்டில் கையை விட்டேன். ஒரு 100 ரூபாய்தான் இருந்தது. நல்லவேளை எச்.எப்.டி. டெபிட்கார்டும் கூடவே இருந்தது. பக்கத்தில் இருந்த ஏடிஎம்மில் 5000 ரூபாய் எடுத்தேன். ஓலா ஆப்பில் ஒரு கேப் புக் பண்ணி கோயம்பேடுக்கு பாட்டி சீக்கிரம் செல்ல ஏற்பாடு செய்தேன்.
“பாட்டி இதை வச்சுக்கோ. இப் ஓலா வரும். அதுல எத்திவுடறேன். உன் பேரனுக்கு ஒண்ணும் ஆவாது. திருவண்ணாமலை அருணாசலம் பாத்துப்பார். நீ கவலை படமா போயிட்டு வா” என்றேன்.
பாட்டி கண்களில் தாரைதாரையாக கண்ணீர். என் கண்களிலும்தான். எப்படியோ பாட்டியை ஓலாவில் ஏத்திவிட்டு ஒடிபியை டிரைவரிடம் சொல்லி பாட்டியை பத்திரமாக அனுப்பிவிட்டு வீடு திரும்பினேன்.
அப்புறம் மூன்று, நான்கு வாரங்களுக்கு பாட்டியைக் காணோம். பேரனுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை. பாட்டியை பார்க்காத ஏக்கம் வேறு. கடைத்தெரு எனக்குப் பாலைவனமாகத் தோன்றியது.
அடுத்த வாரம், பாட்டி கடையைத் திறக்காமல் ஓரமாக நின்றுகொண்டு நான் வருகிறேனா என்று பார்த்தவாறு இருந்தாள். பாட்டியைக் கண்ட மகிழ்ச்சியில் சைக்கிளை வேகமாக ஒட்டி பாட்டியிடம் சென்று நிறுத்தினேன்.
நான் பேசுவதற்குள் பாட்டி பேசினாள். “ராசா உன் புண்ணியத்தால பேரன் உயிர் பொழைச்சுட்டான். நீ சொன்ன அண்ணாமலை என்னைக் கைவுடல. நா போய் ஆஸ்பத்திரி நிக்கவும் பேரன் கண் முழிச்சி, பாட்டி வந்துட்டாயான்னா கேட்கவும் சரியா இருந்தது ராசா. நேரத்துல எனக்கு உதவி செஞ்சியே. இந்தா உன் பணம். ஊர்ல ஒரு பழைய மாட்டு வண்டி இருந்தது. அத வித்துத்தான் உன் பணத்தை ரெடி பண்ணி கொண்டாந்திருக்கே. இந்தா பிடி. இப்பவும் நான் திருவண்ணாமலைக்குத்தான் என் புருஷனையும் இட்டுக்குனு போறேன். என் பொண்ணு கூடவே இருந்து பேரனைப் பாத்துக்கப் போறேன். உன்னப் பாத்து சொல்லிட்டுத்தான் போணும்னு நின்னிருக்கேன். வரேன் ராசா. ஒனக்கு எவ்வளவு பெரிய மனசு. 5000 ரூவாவ முள்ளங்கி பத்த மாதிரி எடுத்துக் கொடுத்து பேரன போயி பார் பாட்டீன்னியே.
யார் ராசா அப்படி பண்ணுவா? நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கணும் ராசா. இதோ 1 நம்பர் பஸ் வருது. நான் வரேன்.”
பாட்டி பஸ்சில் ஏறும்போது என் கையில் இருந்த அந்த 5000 ரூபாயை பாட்டி கையில் திணித்தேன். “இது என் ஞாபகமா வச்சுக்கோ” என்றேன்.
“எனக்கு எதுக்கு ராசா இவ்வளவு பணம்?” என்றாள்.
“பேரனுக்கு நல்ல டிரஸ் வாங்கிக் குடு. விளையாட பொம்மை இந்த மாமா வாங்கி தந்ததா சொல்லி வாங்கிக்கொடு.”
பாட்டி புடவை தலைப்பால் கண்களை துடைப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. என் மனம் அமைதியின்றி தவித்தது. எத்தனையோ பிரிவுகளை சந்தித்த மனம் பாட்டியின் பிரிவை ஏன் ஏற்க மறுக்கிறது? பாட்டிக்கும் எனக்கு என்ன தொடர்பு. ஏன் இந்த நட்பு? புரியவில்லை.
காஞ்சி பெரியவரின் பொன்மொழி மட்டும் ஞாபகத்திற்கு வந்தது. “ஈஸ்வரன் நமக்கு சம்மந்தம் இல்லாது பலவற்றுடன் நம்மைச் சம்மந்திப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான்". கல்கியில் வந்த புனைவு கதை.
பட்டிமன்றம் ராஜா அவர்கள் மீது பரப்பப்படும் அவதூறு வேதனையளிக்கிறது. விகடன் இம்பெர்க்ட் ஷோ காலங்களில் அவரோடு பழகியிருக்கிறேன். சொல்லிலும் செயலிலும் அறத்தின் வழி வாழ்பவர். அவரின் மரியாதைப் பண்பின் சிறு பின்னம் நம்மிடம் இருந்தால் போதும் ஊர் போற்ற வாழலாம் என பலமுறை நினைத்திருக்கிறேன். அவரோடு பழகிய மனிதர்களுக்கு அவர் எப்படிப்பட்ட உன்னதமான மனிதர் என நன்கு தெரியும். காய்த்த மரம் அல்ல அவர், கல்லடியோ சொல்லடியோ பட. பழுத்த பக்குவமான மனிதர். அவரை போற்றாவிட்டாலும் தூற்றாமல் இருங்கள்!
காலம் உங்கள் காயங்கள் ஆற்றும் சார். மீண்டு வாருங்கள்! 🫰 #PattimandramRaja
#westandwithPattimandramRaja