அமித்ஷாவே பதவி விலகு!
புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை ஆயிரம் முறை உச்சரிக்கும் அறப்போர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது. பல்லாயிரம் பேர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் முகவுருவை அணிந்து புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெயரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை உச்சரித்து முழங்கினோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பத்து பத்து பேராக வந்து ஒவ்வொருவரும் தலா 10 முறை ��ுரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெயரை உச்சரிக்க அதனைத் தொடர்ந்து அனைவரும் முழங்கினோம்! ஆக அப்போது கோடி முறைக்கும் மேல் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெயர் அங்கே உச்சரிக்கப்பட்டது!
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்க வேண்டும்!
*பட்டியல் சமூகத்தினரைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து இட ஒதுக்கீட்டைப் பங்கீடு செய்வதற்கு மாநில அரசுகளிடம் அதிகாரம் அளிப்பதையும்; வருமான வரம்பு அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கிரீமிலேயர் முறையைத் திணிக்க முயல்வதையும் எதிர்த்து
உச்சநீதிமன்றத்தில் சீராய்வு செய்வதற்கு இந்திய ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும்;
*கிரீமிலேயர் குறித்து நீதிபதிகள் சொன்ன கருத்துக்களை அந்த தீர்ப்பிலிருந்து நீக்குவதற்கு ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது தலைமையில் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் திரு.மல்லிகார்ஜூன் கார்கே அவர்களைச் சற்றுமுன் நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் சந்தித்தோம்.
உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பில் பட்டியல் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக கூறியிருப்பது நாடெங்கிலும் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. அதாவது, " பொருளாதார அடிப்படையிலான கிரீமிலேயர் மற்றும் மாந���ல அரசுகளுக்கு அதிகாரம் " ஆகியவை அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக உள்ளன.
எனவே இதனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமெனக் கேட்டு திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களிடம் விசிக சார்பில் கோரிக்கை மனு அளித்தோம்.
@kharge @WriterRavikumar @PMOIndia
அனைத்து நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ முன்னிலையில் தற்போது நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன்.
மறைந்த தலைவர் அமரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது இல்லத்திற்கு இன்று மாலை நேரில் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினேன்.
வாழ்க்கை துணையை வரலாற்றுத் தலைவரை இழந்து வாடும் அவரது துணைவியார் நம் அன்பு சகோதரிக்கு ஆறுதலை பகிர்ந���து கொண்டேன்.
வழக்கறிஞர் தமிழினியன் மற்றும் தோழர் திலீபன் உள்ளிட்ட பலரும்
உடனிருந்தனர்
#Armstrong