நண்பா @grok உனக்கு ஒரு வேலை தரேன். இதெல்லாம் தேடி எடுத்து சொல்லு.
My most liked tweet
My most retweeted tweet
My most bookmarked tweet
My most viewed tweet
My tweet with the most replies
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் சமூகநீதிக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடிய
#திவான்பகதூர்#தாத்தாஇரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் நினைவு நாளில் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.
அவர் விதைத்த சமூகநீதிச் சிந்தனைகளை தொடர்ந்து முன்னெடுப்போம்!
-நீலம் பண்பாட்டு மையம்
ஜெய்பீம்! @beemji
தாய்மார்கள் எல்லாம் கவலைப்படக்கூடாது நம்ம பிள்ளைங்களை எல்லாம் நல்லா படிக்க வைங்க, அவங்க நாளைக்கு ஏரோபிளான் ஓட்டனும் சந்திர மண்டலத்துக்கு போகனும்
~ பெரியார். 🖤. #periyar148
சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்!
வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்!
#CMJosephVijay
கருப்பன் 🥹
திராவிட நெருப்பு தமிழ்நாட்டின் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ❤️🔥
நீயும் நானும் சமம் எல்லாருக்கும் இங்கே உரிமை இருக்கிறது என்று கூறிய சமத்துவ கருப்பன் 🥹
148 வது பிறந்தநாள் 🥹
#periyarforever
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவோடு ஆட்சிப்பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
“கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு”, "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்!
#CMJosephVijay