தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவை குறித்தும், அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தும் பரப்புரைப் பாடலை பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்திருக்கிறது. அந்தப் பாடல் இதோ.....
#CasteCensus #BackwardnessSurvey
#SocialJustice
தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவை குறித்தும், அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தும் பரப்புரைப் பாடல் 👏👏👏
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழா : வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம்- ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்!
மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி.
தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கபட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம்.
#PMK #பாமக
#DrAyya #SocialJustice
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1208 நாள் ஆகிறது.
தமிழக அரசே, வன்னியர்களுக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்கு.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1208 நாள்களாகும் நிலையில், இதுவரை அதை நிறைவேற்றவில்லை.
திமுக அரசின் சமூக அநீதியை அம்பலப்படுத்துவதன் வாயிலாகவும், மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல்களில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்ற தீவிரமான அறப்போராட்டங்களை முன்னெடுப்பதன் வாயிலாகவும் தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க முடியும். அதன் தொடக்கமாகத் தான் வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட நாளான ஜூலை 20ஆம் நாளான இன்று, இடஒதுக்கீட்டுக்காக போராளிகள் இன்னுயிர் ஈந்த மண்ணான விழுப்புரத்தில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நடத்துகிறோம். நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாட்டாளிகளான உங்களின் போராட்டம் தான். அந்த வகையில் இப்போதும் நமக்கான சமூகநீதியை வென்றெடுக்கவும், அதனடிப்படையில் பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமையவிருக்கிறது.
இதை மனதில் கொண்டு இன்று விழுப்புரம் மண்ணில் படை திரள்வோம், திமுகவின் துரோகத்தை தோலுரித்துக் காட்டி நமக்கான சமூகநீதியை வென்றெடுப்போம்.
#VanniyarReservation
#வன்னியர்இடஒதுக்கீடு
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர் இட ஒதுக்கீட்டை தர மறுக்கும் விடியா திமுக அரசை கண்டித்து வருங்கால தமிழகம் அன்பு தலைவர் மருத்துவர் #சின்ன_அய்யா அவர்கள் தலைமையில் நாளை விழுப்புரத்தில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம்...
#AnbumaniRamadoss#VanniyarReservation#PMK