#Bison திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் @mari_selvaraj சார்.
வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் craft செய்திருக்கிறார்.
படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி @DhruvVikram5 உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.
பைசன் - காளமாடன் வெல்லட்டும்!
@beemji
@ARMTNPSC இந்த பேனாவை OMR ல் பயன்படுத்தலாமா ? நேற்று நடந்த தேர்வில் தேர்வர் கொண்டு சென்ற இந்த பேனாவை பெற்றுக் கொண்ட தேர்வு அறை கண்காணிப்பாளர் தன்னிடம் இருந்த பேனாவை வழங்கி உள்ளார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.
காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.
அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு,
மாநாடு சார்ந்து
காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும்.
நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம்.
மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.
தோழமையுடன்,
உங்கள் விஜய்
உள்துறை மானியக் கோரிக்கை விவாதங்களின்மீது பதிலுரையாற்றி, தமிழ்நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துத் தரும் பொறுப்புடைய நமது காவல்துறை ஒளிபெறவும் வழிகாட்டவும் தேவையான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டேன்.
சட்டத்தின் ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம் என்பதே நம் இலக்கு!
TNPSC தேர்வு
தேர்வின் கடினத்தன்மையை விட..
தேர்வுக்கு தயாராகும் போது எதிர்கொள்ளும் சமூக பொருளாதார சவால்களே கடினம்.
இங்கு போட்டி என்பது தேர்வு மட்டுமல்ல.. தேர்விற்கு தயாராகும் போது எதிர் கொள்ளும் சமூக பொருளாதார சிக்கல்கள்.
தேவேந்திரகுலவேளாளர் சமூக
மக்கள் மத்தியில் ஒரு பேச்சும்
பிற இடங்களில் வேறு மாதிரி பேச்சு எழுந்தது எம் மக்களின் 5.5 இலட்சம் ஒட்டுக்களில் 5இலட்சம்
#பட்டியல்வெளியேற்றம் எதிர் நோக்கி போடும் ஓட்டுகள் வழக்கு தொடுத்து
பட்டியல் வெளியேற்றம் கோரி ஆதரவாக நிற்கும் Dr.வேதாஜிக்கு
ஆதரவு நிலை
மாற்றுப் பாலினத்தவரின் உயர்கல்விச் செலவை முழுவதும் அரசே ஏற்கும் எனவும், பெண் கல்வியை ஊக்கபடுத்தும் புதுமைப்பெண் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் விரிவுப்படுத்தியும், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் உயர்கல்வி கனவுகளுக்கு உறுதுணையாக தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 வழங்கவும் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கும் முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கும் நிதி அமைச்சர் திரு. @TThenarasu அவர்களுக்கும் நன்றி.
கொரானா நோய்த்தொற்றால் மனித வள மேலாண்மைத்துறையின் அரசாணை எண் G.O (Ms). No.91, 13.09.2021 படி இரண்டு ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு கொடுக்கப்பட்டது ஆனால் 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு 2024 ஆம் ஆண்டு தான் குருப் 4 தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2024 ஜீலை 1 ஐ வயது வரம்பிற்கான கட் ஆப் தேதியாக வைக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் தேர்வெழுதும் வாய்ப்பை இழக்கக் கூடும் எனவே டி என் பி எஸ் சி இந்த ஆண்டும் அதே வயது வரம்புத் தளர்வை அனுமதிக்க வேண்டும். @vinobha@drramadoss@TNPSC_Office@Abinaya_Aarthi@draramadoss@CMOTamilnadu@TThenarasu
தமிழே
இப்புவிஉலகின்
முதல் மொழி என்றும்,
தமிழனே
உலகின் முதல் மாந்தன்
என்பதையும்
உலகிற்கு
பறைசாற்றியவரும்,
திராவிடத்திலிருந்து,
தமிழை
மீட்க
தன்வாழ் நாளை
முழுதும்
துறந்த ,
தமிழ் மீட்பராகிய
எம்
அறிவார்ந்த
பெருமகனார்
#தேவநேயபாவாணர்குடும்பனாருக்கு,,
புகழ் வணக்கங்கள்...!