பட்டியல் சமூக பெண்கள் அரசியலுக்கு வருவதே அரிது ஸ்டாலின் இப்படி பேசலாமா என்று கேட்கிறார் வன்னி அரசு.
இதில் சாதி எங்கிருந்து வந்தது? சாதியை வைத்து ஸ்டாலின் பேசினார் என்று நிறுவ முயலும் விஜய் ரசிக கண்மணி வன்னி அரசுக்கு ஒரு கேள்வி,
பட்டியல் சமூக பெண் என்றால், குதிரை பேர அரசியல் செய்யலாமா? வாக்களித்த மை காய்வதற்குள் ராஜினாமா செய்து இன்னொரு கட்சியில் போட்டியிடலாமா? பெட்டி வாங்கிக்கொண்டு சொந்த கட்சிக்கு துரோகம் செய்யலாமா?
எது எதுக்கு தான் சாதியை கொண்டு வருவீர்கள்?🤦♀️😡
ஒரு பட்டியல் சமூக பெண்ணை மேடையில் அழுக சொல்லி நாடகம் நடத்தியதை வன்னி அரசு கண்டித்தாரா? அரிதிலும் அரிதிலாம் இல்ல அந்தம்மா அதே தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவின் மகள்.
ஓர் அமைச்சராக இருந்து கொண்டே சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து பேசுவதன் மூலம் மீண்டும் ஒரு சாதியத்தீயை பற்ற வைக்க வன்னியரசு முயல்வது போலத்தோன்றுகிறது.😢😢
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
தலைமைக்கு வெண்சாமரம் மட்டுமே வீசப்பட்டுக் கொண்டிருந்த தமிழக சட்டமன்றத்தில் முதல்முறையாக அரசியல் பேசிக் கேட்கிறேன். அம்மையார் சௌமியா அன்புமணிக்கு தலைவணங்குகிறேன்.
சௌம்யா அன்புமணி ஒரு புதிய கண்டுபிடிப்பு. இவர் ஏன் இதற்கு முன்பு அரசியலுக்கு வரவில்லை என்று தெரியவில்லை.
Very unassuming.
Very easy going .
Always well prepared. Confident....and.....
Absolutely Serious!
ஒவ்வொரு முறை இவர் சட்டசபையில் எழுந்து பேசும் போதும் பல கருத்துக்கள் வெளி வருகின்றன. முழுக்க முழுக்க தயார் செய்து கொண்டு வருகிறார்.
இவருக்கு முன்னால், திமுக அதிமுக எம்எல்ஏக்களில் ஒருவர் கூட சோபிப்பதில்லை.
இவர் அளவுக்குக் கருத்துச்செறிவு அங்கு யாருக்கும் இல்லை.
சௌம்யா அன்புமணி பேசுவதை நோட்ஸ் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாக டிக் அடித்து நிறைவேற்ற வேண்டும். அவ்வளவு சிறப்பாக குறிப்புகள் கொடுக்கிறார்.
தன்னுடைய தர்மபுரி மட்டுமல்ல.... கடலூரில் தொடங்கி தர்மபுரி வரை உள்ள பல்வேறு ஊர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறார். சென்னை பற்றிப் பேசுகிறார்.
30 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருப்பவர்கள் இந்தத் அடிப்படைத் தகுதியைக் கூட வளர்த்துக் கொள்ளவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
இவர் பாமகவின் தலைவர் என்றால் தேமுதிகவுக்கும் ஒரு பெண் தலைவர் இருக்கிறார். இவரும் முதல் முறை எம்எல்ஏ தான். கொஞ்ச காலமாக அரசியலில் இருக்கிறார். அவையில் இருவரும் எழும்போதே eloquent ஆகத் தெரிகிறார்கள். தன்னம்பிக்கை மிளிர்கிறது.
இவர்களுடைய பேச்சைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது.
பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது இவ்வளவு கருத்துச்செறிவு இருப்பதில்லை. டிராமா தான் அதிகம் இருக்கிறது.
விஜய் கட்சி எம்எல்ஏக்கள் சௌமியா அன்புமணியை குருவாக ஏற்றுக்கொண்டு அவருடைய பாணியை பின்பற்றுவது அவர்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது.
சௌம்யா அன்புமணி போன்றவர்களைத்தான் அண்ணாமலையின் இயக்கம் தற்போது உருவாக்கி வருகிறது. 2031-ல் அந்த இயக்கத்தில் இருந்து பயிற்சி பெற்ற எம்எல்ஏக்கள் ஒரு சிலரை சட்டசபையில் நாம் பார்க்கலாம்.
234 உறுப்பினர்களும் சௌம்யா அன்புமணியைப் போன்றவை நேர்மையாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தால் தமிழ்நாடு எங்கோ போயிருக்கும்.
(Unassuming = தனது நற்பண்பு, முக்கியத்துவம் முதலியவை மக்கள் கவனத்தை ஈர்ப்பதை விரும்பாத. தன்னடக்கமுள்ள. தற்பெருமை கொள்ளாத, பகட்டிக்கொள்ளாத ஒரு தலைவி
வாழ்க வளமுடன்
உங்களைப் போல் உள்ளவர்களால் சிறந்த தமிழகம் உருவாக வேண்டும்
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி சிறக்கட்டும்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட போவதாக வந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தின் சமகால அரசியல் சூழலையும், சமூகநீதி சார்ந்த எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவு முக்கியமானதும் பொருத்தமானதும் ஆகும். தமிழக சட்டமன்றத்தில் சாதி ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் போன்ற விடயங்களில் அவரது குரல் வலிமையாக ஒலிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.
ஜனநாயகத்தை காக்கவும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் மகத்தான வெற்றியடைய வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு களம் காணவிருக்கும் அனைவரும் சட்டமன்றத்தில் அண்ணன் அவர்களது தலைமையில் வலுவான குரலாக ஒலித்திட வாழ்த்துகள், மகிழ்ச்சி. @thirumaofficial@VCKofficial_
அரசியல் அறிவற்ற அபத்தமான பதிவை வாந்தி எடுத்து வைத்திருக்கிறார் அசோக் @idonashok
2021-ல் இருந்து என்ன வளர்ச்சியைக் கண்டுள்ளது காங்கிரஸ்? எதற்காக அவர்களுக்கு 25 தொகுதியில் இருந்து 28 என உயர்த்திக் கொடுத்திருக்கிறீர்கள்? அளவுகோல் என்ன? அவர்கள் செய்ததை எதைக் கம்யூனிஸ்ட்களும் விசிகவும் செய்யவில்லை?
பாஜகவோடு ஒட்டி உறவாடியத் தேமுதிகக்குக் கொடுக்கும் தொகுதிகள் அதிகமாகவும், பாஜகவை எதிர்த்துக் களமாடும் இடதுசாரிகளுக்குக் கொடுக்கும் தொகுதிகள் குறைவாகவும் இருப்பது என்ன மாதிரியான இழவு மாடல் ?!
கூட்டணிக் கட்சிகள் வளர்ந்தது போல் திமுகவும் வளர்ந்திருக்கும் தானே என்கிறீர்கள். வளர்ந்திருந்தால் தனித்து நின்று தேர்தலைச் சந்திக்க வேண்டியது தானே? அதற்கு வக்கில்லாமல் தானே சிறிய கட்சிகளின் கால்களில் விழுகிறீர்கள்?
2021 முதல் 2026 வரை நிகழ்ந்த சாதியப் படுகொலைச் சம்பவங்களில் எத்தனைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று ஸ்டாலின் சந்தித்தார்? கம்யூனிஸ்ட்களும், விசிகவும் ஒவ்வொரு துயரச் சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களோடு நின்றிருக்கிறார்கள்.
சமூகத்தோடு நிற்கும் அவர்களுக்குத் தொகுதி கூடுதலாகக் கொடுத்தால் என்ன மூழ்கிவிடப் போகிறது? காங்கிரஸ் தேமுதிக இரண்டும் வலதுசாரி பாஜகவிற்கு எதிராக நடத்திய போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எவ்வளவு?
விசிக கம்யூனிஸ்ட்கள் நடத்தியதில் கால்வாசி கூட இருக்காது ! காங்கிரஸ் தேமுதிகவை விட எந்த விதத்தில் விசிகவும் கம்யூனிஸ்ட்களும் குறைந்துப் போனார்கள்?
அரசியல் சமூக அறிவு இல்லாத உங்களைப் போன்ற பிராணிகள் அரைவேக்காட்டுத்தனமான கருத்தைக் கூறாமல் மூடிக்கொண்டு இருக்கலாமே !