நாங்கள் பணி நிரந்தரம் வேண்டி #அஇஅதிமுக@AIADMKOfficial மற்றும் #திமுக@arivalayam தற்போது #தவெக@TVKPartyHQ என தொடர்ந்து மனுக்களை கொடுத்து வருகின்றோம். நாங்கள் சிறப்பு பிரிவை சார்ந்தவர்கள் அதாவது மாற்றுத்திறனாளிகள். மாற்றுத்திறனாளிகள் என்றாலே பலருக்கு பிடிப்பதில்லை காரணம் அவர்கள் அவர்களின் தேவைகளை உரிமைகளை கேட்பதால் பிடிப்பதில்லை. சிலருக்கு மாற்றுத்திறனாளிகள் என்பதை விட ஊனமுற்றோர் என்று அழைப்பது பிடிக்கிறது.
ஐயா நீங்கள் எங்களை எப்படி அழைத்தாலும் சரி எங்களிடம் இருக்கும் உடல் குறைபாடு நீங்க போவதில்லை.
Dr.கலைஞர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பிறகு உடல் ஊனமுற்றோரின் நிலை அவர் உணர்ந்தார் அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்தார்.
இதனால் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு இருப்பதாக கருதுகின்றேன்.
மாற்றுத்திறனாளிகள் என்று அழைப்பதால் நாங்கள் இயலாதவர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடுகின்றீர்கள்🤔🤔🤔.
தற்போதைய மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் ஒவ்வொரு முறையும் மேடைகளில் உங்க பிள்ளையா, உங்க சாகோதரனா,உங்க அண்ணணா,தம்பியா, உங்க தோழனா, உங்க தோழியா'னு வரிஞ்சிக்கட்டி பேசுகிறார்.
ஐயா நீங்கள் கட்சி தொடங்கிய நாள் முதல் உங்களுடைய இந்த @TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl சமுக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றோம் தற்போது நீங்கள் ஆட்சி பிடித்து 💯/100 நாட்கள் கடந்துவிட்டது. நீங்கள் எங்கள் மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன Sir?
நாங்கள் எல்லாம் உங்களுக்கு மனிதர்களாக தெரியவில்லையா @CMOTamilnadu ?
ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் பாணியைத்தான் நீங்களும் கடைபிடிக்கின்றீர்கள் திராவிட கட்சிகள் அட்டூழியம் தாங்காமல் தான் உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் எங்களுக்கு அதே நிலை தொடர்வது மிகவும் வேதனையளிக்கிறது
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை என்பது அப்பட்டமான பொய். ஐயா இவ்வளவு நபர்கள் 👇இந்த காணொளியை பார்த்திருக்கிறார்கள் ஒருவர் கூடவா எங்களுடைய கோரிக்கையை பற்றி தங்களிடம் கூறவில்லை சட்டமன்றத்தில் மட்டும் தான் நீங்கள் அனைத்து துறைகளுக்கும் பேசுவீங்களா Sir @imrajmohan
இப்ப ரொம்ப சந்தோஷமா Sir @Subramanian_ma
எங்களை இப்படி காலம் முழுவதும் அலையவச்சிடங்களே இது உங்களுக்கு நல்லா இருக்கா?
எங்ககிட்ட பொய் சொல்லலாமா?
கடந்த ஐந்து வருஷமா உங்ககிட்ட மனு கொடுத்ததுக்கு நீங்க இப்படி அலையவச்சிட்டு போய்டிங்களே Sir?
தற்போதைய #திமுக எங்களுக்கு துரோகம் செய்தது என்பதை விட கலைஞர் எந்த நோக்கத்திற்காக அந்த அரசாணை-151யை கொண்டு வந்தாரோ அதைக்கூட ஒழுங்காக நடைமுறைப்படுத்த தவறிவிட்ட #திமுக கலைஞருக்குத்தான் துரோகம் செய்துள்ளீர்கள்.
ஆட்சியை பிடிக்க எவ்வளவு அலைந்தீர்கள் ஐயா @mkstalin அவ்வளவு கஷ்டப்பட்டு ஆட்சிக்கு தங்கள் தந்தை கொடுத்த அரசாணையை கூட நடமுறைப்படுத்தாமல் சொல்வார் சொல் கேட்டு ஆட்சி செய்த பலன் தற்போது.
நடைமுறையில் உள்ள சிறு சிறு சிக்கல்களை கூட நீங்கள் கவனிக்க தவறிவிட்டீர்கள்?
பணி நிரந்தரம் வேண்டி நாங்கள் போராட்டங்களுக்கு தள்ளப்பட்ட இருக்கின்றோம் @CMOTamilnadu .
@CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ@arunraajkg@jagadeshwarioff@aadhavarjuna@Tn_Diff_abled@socialpwds@TNDPHPM@TNHealthDept@IHRNRights@MSJEGOI@TNDIPRNEWS@PTI_News@TVKPartyHQ@TVKHQITWingOffl #CMforthepeople #TNGOVT
என்ன பண்றது நாங்க பத்து வருஷத்துக்கு மேல அழுதுக்கிட்டுதான் இருக்கோம்.
எந்த மாடல் ஆட்சிக்கு வந்தாலும். வெறும் பேச்சிக்குதானே ஆட்சி செய்றாங்க மனசாட்சியோட எங்க ஆட்சி செய்றாங்க.
உங்களுக்கு கூட எங்களுக்கு ஆதரவா ஒரு பதிவுபோட மனசு வர்ல பாத்திங்களா ?
எவ்வளவோ பேர் இந்த பதிவு பாத்திருக்ககாங்க ஆனால் நீங்கள் தான் இந்த செய்தியை மறுத்தாவது ஒரு பதிவு போட்டீர்கள் மற்றவர்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறீர்கள்.
இதுதான் ஊனமுற்றோரின் நிலை இதே ஒரு பொதுவெளியில் அரசியல்வாதிகளிடம் ஒரு மைக்கை கொடுத்தால் எப்படி பேசுவார்கள் ஊனமுற்றோருக்கு இப்படி உதவி செய்ய வேண்டும் அப்படி உதவி செய்ய வேண்டும் என்று வாய்கிழிய பேசுவார்கள். அதே மனுவை எடுத்து அவரிடம் கொடுத்தால் அடுத்த வினாடி அது குப்பையில் இருக்கும்.
இதுதான் உங்க சமூகநீதி உங்களுக்கெல்லாம் வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி.
ஏன்ணா ஊனமுற்றோர் வாக்கு வங்கி மிகவும் குறைவு எங்களுக்கு எந்த எழவும் நடக்கமாட்டங்குது.
வருங்காலத்தில் எங்கள் வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்துவோம்.
ஒரேயொரு வாக்கில் தோற்றவருக்கு தெரியும் எங்களுடைய வாக்குகளின் அருமை.
வாய்மையே வெல்லும்.
எங்களுக்கும் காலம் கண்டிப்பாக வரும்.
காலம் இதற்கும் பதில் சொல்லும்.
@TVKVijayHQ@arivalayam@AIADMKOfficial
மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நல துறைக்கான வெள்ளை அறிக்கை வெளியிட முன்வர வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ1300 கோடி ரூபாய் 1400 கோடி என்று ஒதுக்கப்படுகிறது ஆனால் அவற்றின் பயன்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு தான் சென்று சேருகிறதா? என்று தெரியவில்லை.
அரசுத் துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக ஒரேயொரு தினக்கூலி மாற்றுத்திறனாளி கூட பணி நிரந்தரம் செய்யப்படவில்லை இதற்கு முக்கிய காரணம் நிதியில்லை.
அதற்கு அரசு அதிகாரிகள் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு கூறும் காரணம் இந்த அரசாணை-151 உங்களுக்கு பொருந்தாது.
அந்த அரசாணையிலேயே மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் @kalaignar89 அவர்கள் மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளார் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் செய்ய விதிகளில் தளர்வு வேண்டுமாயின் அந்தந்தத் நிர்வாகத் துறைச்செயலாளரிடம் அனுமதிப் பெற்று பணி நிரந்தரம் செய்ய வழிகாட்டுதல் வழங்கியுள்ளார்.
ஐயா @mkstalin இதனைக் கூட கண்டுக்கொள்ளாமல் தன்னுடைய தந்தை தந்த அரசாணை அதுவும் உடல் ஊனமுற்றோருக்கு கொடுத்த அரசாணை என்று கூட பார்க்காமல் ஏதோ மூதேவி கூறியதைக் கேட்டு இத்தனை சிறப்பு மிக்க அரசாணையை இரத்து செய்யும் அளவிற்கு ஆட்சி செய்தார்.
மாற்றுத்திறனாளிகள் கூட்டம் கூட்டமாக சென்று மாண்புமிகு துணை முதல்வராக இருந்த @Udhaystalin அவர்களிடம் ஐயா இந்த அரசாணை உங்கள் தாத்தா மாண்புமிகு கலைஞர் கொடுத்த அரசாணை இதனை சில அதிகாரிகள் இரத்து செய்ய முயல்கிறார்கள் அதனை தடுத்து இந்த அரசாணை-151யை செயலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று காலில் விழாத குறையாக கேட்டுக்கொண்டோம். கவனிக்கிறேன் முயற்சி எடுக்கின்றேன் என்று கூறியவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுபோன்ற தான்தோன்றி தனமாக நடந்துகொண்ட @arivalayam திமுக அரசு அதற்கான விளைவுகளை தற்போது எதிர்நோக்கி வருகிறது.
ஐயா @mkstalin உங்கள் கட்சி தலைவர். உங்கள் தந்தை தந்த அரசாணையினை அதுவும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுத்த அரசாணையை இரத்து சம்மதிக்கலாமா ?
ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகள் நல துறை இந்த நிதி ரூபாய் 1400 கோடி என்ன செய்கிறார்கள் என்பதை மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் @TVKVijayHQ வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டில் துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்று வந்தது அதற்கான விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு துறைகளில் தினக்கூலி அடிப்படையில் எவ்வளவு மாற்றுத்திறனாளிகள் பணியாற்றி வருகிறார்கள் என்ற விபரத்தை சேகரித்தது அதன்நிலை என்ன என்பதையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். குறைந்த பட்சம் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மீண்டும் அரசாணை-151 நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசாணைகளில் ஆளுநர் ஆணைப்படி என்று அரசாணையில் வருகிறது ஆனால் அதனை இரத்து செய்யும்போது ஆளுநர் அலுவலகத்தில் ஏன் இந்த அரசாணையை இரத்து செய்கின்றீர்கள் இது மாற்றுத்திறனாளிகளுக்கு பயனற்றதா என்று எந்த கேள்வியும் மேதகு ஆளுநர் @lokbhavan_tn அவர்கள் கேட்கமாட்டாரா ?
ஏன் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம்-2016 இரத்து செய்துவிடலாமா @Tn_Diff_abled இப்படியா மாற்றுத்திறனாளிகளை அலைய வைப்பீர்கள்?
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு உதவி உபகரணங்கள் தருவதாக கூறப்போகின்றீர்கள்?
பணி வாய்ப்பு பெறவே நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தோம் பணி வாய்ப்பு பெற்று பல ஆண்டுகளாக பணி நிரந்திரத்திற்காக காத்திருக்கின்றோம் இதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கு தருகின்ற முன்னுரிமையா?
அரசு பள்ளி புத்தகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்று அச்சடித்தால் மட்டும் போதுமா?
ஒர் அரசு இயலாதவர்களை இப்படி ஏமாற்றலாமா? @arivalayam
நாங்கள் பதினான்கு ஆண்டுகளாக காத்திருக்கின்றோம் எங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு எங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டுகின்றோம்.
@CMOTamilnadu@actorvijay@BussyAnand@TVKVijayHQ@arunraajkg@imrajmohan@MarieWilson_TVK@jagadeshwarioff@aadhavarjuna@Tn_Diff_abled@socialpwds@TNDPHPM@TNHealthDept@IHRNRights@MSJEGOI@Office_of_CCPD@ncpedp_india@TNDIPRNEWS@PTI_News@TVKPartyHQ@TVKHQITWingOffl #CMforthepeople #TNGOVT #saveDisabilitys #who
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @imrajmohan அண்ணா உண்மையில் இப்படிதான் இந்த காணொளியில் இருப்பது போல தான் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் @arunraajkg அவர்களும் இதே உத்தியினை பயன்படுத்திதான் நடவடிக்கை எடுக்கின்றாரா?
இன்னும் எங்கள் பணி நிரந்தர கோரிக்கை மனு கடந்த இரண்டு மாதங்களாக அப்படியே நிலுவையில் இருக்கிறது.
நீங்கள் ஒரு வாரத்திற்கு மறுவாராம் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று கூறுகின்றீர்களே !
நாங்கள் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக காத்திருக்கின்றோம்.
மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் முன்னுரிமை அடிப்படையில் எங்களுக்கு பணி நிரந்தரம் செய்து தந்து வாழவைக்க வேண்டுகின்றோம்.
@CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ@arunraajkg@jagadeshwarioff@aadhavarjuna@Tn_Diff_abled@socialpwds@TNDPHPM@TNHealthDept@IHRNRights@MSJEGOI@TNDIPRNEWS@PTI_News@TVKPartyHQ@TVKHQITWingOffl #CMforthepeople #TNGOVT
மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் @CMOTamilnadu பணிவான வணக்கம்.
தற்போது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @imrajmohan அவர்களின் இந்த காணொளியை பார்த்து தற்போது தமிழ்நாடு அரசு மனுக்களின் மீது எப்படி நடவடிக்கை எடுக்கிறது என்பதை கவனித்தேன்.
இதற்கு பிறகு எனக்கு மிகவும் ஆச்சரியமாக சில நினைவுகள் தோன்றுகிறது.
முன்னாள் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் @Subramanian_ma அவர்கள் கடந்த பிப்ரவரி மாதமே எங்களுக்கு பணி நிரந்தரம் செய்து தருகிறோம். கோப்புகள் நிதித்துறைக்கு சென்றுள்ளது என்று கூறினார்.
அந்த கோப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று கூறியுள்ளாரா என்ன? தற்போதைய மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் @arunraajkg
எங்களுக்கான தீர்வு என்ன?
ஏன் எங்கள் மனுக்கள் மட்டும் நேரடியாக குப்பை தொட்டிக்கு செல்கிறது.
எங்களால் தொடர்ந்து அலைய முடியவில்லை. ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து பயணிக்க வேண்டும். அப்படி பயணித்து தலைமைச் செயலகம் வந்தால் கூட ஏன் தலைகீழாக நின்றால் கூட எங்கள் துறை அமைச்சரை பார்க்க முடியாது.
முறையாக மின்னஞ்சல் அனுப்புங்கள் அவர்கள் உங்களுக்கு நேரம் ஒதுக்கி தருவார்கள் என்று @tnpoliceoffl காவல் துறை உயர் அதிகாரிகள் கூறினார்கள் முறையாக மின்னஞ்சல் அனுப்பினாலும் எந்த பதில் இருக்காது.
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் எங்கள் மனுக்கள் பெற தவிர்ப்பது எங்களை உதாசீனம் செய்வதற்கு சமமாகும்.
தங்களுடைய பணிச் சுமை காரணமாக இருந்தால் தயவுசெய்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை வேறு அமைச்சரிடம் ஒப்படைக்கவும் எங்களால் தங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது.
ஐயா திராவிட கட்சிகளின் கடந்த பதினைந்து ஆண்டுகளாக எங்களுடைய கோரிக்கை மனுக்களை குப்பையில் போட்டுவிட்டார்கள்.
பெரும் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் வாக்களித்து வந்துள்ள நீங்களும் அதே நிலையை தொடர்ந்தால் சரியா?
அதற்கு தான் @Tn_Diff_abled மாற்றுத்திறனாளிகள் நல துறைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கா?
மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் @arunraajkg அவர்களும் தங்கள் துறையில் @TNDPHPM@TNHealthDept கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்ற பல்நோக்கு மருத்துவமனை மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு நிரந்தரம் செய்ய வேண்டுகின்றோம்.
@CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ@arunraajkg@jagadeshwarioff@aadhavarjuna@Tn_Diff_abled@socialpwds@TNDPHPM@TNHealthDept@IHRNRights@MSJEGOI@TNDIPRNEWS@PTI_News@TVKPartyHQ@TVKHQITWingOffl #CMforthepeople #TNGOVT
ஒவ்வொரு செயல்பாடுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை என்பது வெறும் பொய்.
அறிவிப்புகளில் மட்டுமே உள்ளது.
நடைமுறையில் இல்லை.....
விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய எங்களுடைய நியாயமான கோரிக்கைகள் கூட அது மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையென்றால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எவ்வளவு காலம் தாழ்த்தினாலும் எங்களுக்கான தீர்வு காணப்படுவதில்லை.
ஐயா நாங்கள் மிகவும் போராடி - தான் நாங்கள் எங்கள் பணிவாய்பினை பெற்றோம் எங்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த அரசாணை-151-ன் படி எங்களுக்கு எப்போதோ பணி நிரந்தரம் செய்திருக்க வேண்டும்.
மாறாக @arivalayam & @AIADMKOfficial அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எங்களுடைய அரசாணை-151ன் மீது நடவடிக்கை எடுக்காமல் திராவிட கட்சிகள் எங்களை ஏமாற்றிவிட்டது.
இதில் வெட்ககக்கேடு என்னவென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அரசாணை-151 அள்ளி கொடுத்த மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர். கலைஞர் அவர்களின் வழித்தோன்றல் @mkstalin ஆட்சி.
#திராவிட_மாடல்_ஆட்சி விதவிதமான அரசாணைகள் போட்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டும் ஒரேயொரு மாற்றுத்திறனாளிகள் கூட பாதிக்கப்பட கூடாது என்று கூறிய பின்னர் கூட.
துணை முதல்வர் @Udhaystalin ஒவ்வொரு அமைச்சர் வீட்டின் முன்பும் காத்துகிடந்தும். ஒரேயொரு தினக்கூலி ஊனமுற்றோருக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை.
ஐயா எங்களுடைய வாழ்வாதாரத்திற்காக போராட வரும் ஊனமுற்றோரை நள்ளிரவு நேரத்தில் மனச்சாட்சியில்லாமல் வெகு தொலைவில் உள்ள பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு அலைக்கழித்து எங்களைத் நாசப்படுத்திய ஆட்சி #திராவிட_மாடல்_ஆட்சி.
பணியாற்றியுள்ள ஊனமுற்றோருக்கு பணி நிரந்தரம் செய்ய நிதியில்லை ஆனால் வீட்டில் தன்னுடைய குடும்பத் தேவைக்கு பணியாற்றும் மகளீருக்கு உரிமை தொகை மாதம் சுமார் ரூபாய். 1300 கோடி தண்டச்செலவு செய்ய @TThenarasu நிதி இருக்கு எப்படி?
இது வாக்குவங்கி அரசியல்?
ஐயா எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேலும் காலம் தாழ்த்துவது நாங்கள் மேலும் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
பலர் வெகுவிரைவில் பணி ஓய்வு காலத்தை எதிர்நோக்கியுள்ளனர் அவர்களுக்கு இந்த அரசு என்ன செய்யபோகிறது மீதம் இருக்கும் காலத்தை பிச்சை எடுத்துதான் பிழைக்க வேண்டுமா?
நாங்கள் பதிமூன்று ஆண்டுகளாக மனுக்களை அளித்து கொண்டே இருக்கின்றோம் எப்போது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு எப்போது பணி நிரந்தரம் செய்வீர்கள் எப்போது விடிவுகாலம் வரும்?
@CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ@arunraajkg@jagadeshwarioff@aadhavarjuna@Tn_Diff_abled@socialpwds@TNDPHPM@TNHealthDept@IHRNRights@MSJEGOI@TNDIPRNEWS@PTI_News@TVKPartyHQ@TVKHQITWingOffl #CMforthepeople #TNGOVT
News Update | வீட்டிலேயே தியேட்டர் அனுபவம்!
Portronics நிறுவனம் Pure Sound Pro 2X ஹோம் தியேட்டர் சிஸ்டம்-ஐ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது
1 வயர்டு சப் வூஃபர், சவுண்ட் பார் மற்றும் 2 சேட்டிலைட் ஸ்பீக்கர்களுடன் வரும் இந்த லேட்டஸ்ட் ஆடியோ சிஸ்டம், 150W ஆடியோ Output-ஐ வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு தியேட்டர் போன்ற ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது; விலை - ரூ. 5,999
Portronics | Gadgets | 22 July 2026
#gadgets #technology #Speaker
சுகாதார துறையில் 10 ஆண்டுகளை கடந்து பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தம் ஆக மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் ஆவண செய்ய வேண்டும் @arunraajkg
நன்றி அண்ணா @anandakumar_bfa 🙏.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணை-151 உள்ளது எங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஐயாவிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தோம் உங்கள் பணி ஆணையில் சிறு திருத்தம் செய்ய வேண்டும் அதனை செய்து பின்னர் உங்களுக்கு பணி நிரந்தரம் செய்வது எளிது என்று கூறினார். ஆனால் கடந்த #அஇஅதிமுக @AIADMKOfficial ஆட்சியிலும் எங்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை. விடியல் ஆட்சி தரேன்னு சொல்லி ஆட்சிக்கு வந்து #திமுக @arivalayam திராவிட மாடல் ஆட்சி செய்த போதும் இவர் அதே பதிலை கிளிப்பிள்ளை போல கூறி வந்தார்.
இதில் என்ன கொடுமை என்றால் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அரசாணை-151 போட்டது மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் @kalaignar89 .
அந்த அரசாணையை அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில் கூட அதனை இரத்து செய்யவில்லை ஏதோ ஒரு மூதேவி அந்த அரசாணைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் கொடுத்தால் அவர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்ற காரணத்தால் இவர்கள் அந்த அரசாணையை இரத்து செய்து அரசாணை-24 கொண்டு வந்து இருக்கிறார்கள் அந்த அரசாணைப்படி தேர்வு எழுதி பணி நிரந்தரம் பெற வேண்டும்.
கழிவறை கழுவும் மாற்றுத்திறனாளிகள் அதுவும் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு படித்த ஐம்பது வயதைக் கடந்த பல மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த தேர்வு இதுதான் #திராவிட_மாடல்_ஆட்சி
தன்னுடைய வீட்டில் தன்னுடைய குடும்பத் தேவைக்காக உழைக்கும் பெண்களின் உழைப்புக்கு உரிமைத் தொகை என்ற பெயரில் அரசுக்கு தண்டச்செலவாக மாதம் சுமார் ரூபாய்.1230 கோடி வழங்கிய திமுக. மாற்றுத்திறனாளிகள் பணியாற்றிய பணிக்காலத்தை கணக்கிட்டு அவர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் காரணத்திற்காக அந்த அரசாணையை குப்பை 🗑️ தொட்டியில் போட்டுவிட்டது.
நம்முடைய உரிமைகளை பெற்றுத் தர வேண்டிய மத்திய,மாநில அமைப்புக்கள் @socialpwds@Tn_Diff_abled எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மறாக நமக்கு பாதகமான அரசாணைகளை இயற்றி நம்முடைய பணி நிரந்தர உரிமையை கனவாக்கியுள்ளது அதுமட்டுமல்ல மாண்பமை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி பார்த்தல் எங்களுக்கு மக்கள் நல்வாழ்வு துறை நிர்வாகம் @TNDPHPM@TNHealthDept எங்கள் மனுவினை பரிசீலனை செய்து எப்போதோ பணி நிரந்தரம் வழங்கி இருக்க வேண்டும் வழங்கி இருக்கலாம் ஆனால் அது குறித்து யார் நடவடிக்கை எடுப்பது அதனால் யாரோ ஒருவர் தானே நமக்கென்ன என்ற எண்ணம்.
தற்போது மாற்றுத்திறனாளிகள் நல துறை அமைச்சராக இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu
அவர்களை மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சந்திக்க நேரடியாக தலைமைச் செயலகம் சென்று வாசலில் நின்றால் கூட சந்திக்க மறுக்கிறார்.
முறையாக மின்னஞ்சல் மூலம் நேரம் ஒதுக்கி தருமாறு வைக்கப்பட்ட மனு கடந்த இரண்டு மாதங்களாக கிடப்பில் உள்ளது. வசதி படைத்தவர்கள் வந்தவுடன் அனுமதி கிடைக்கிறது இது என்ன #மாடல் அரசு என்று தெரியவில்லை.
எது எப்படியோ மாற்றுத்திறனாளிகளாக பிறப்பது ஒரு சாபக்கேடு.
நாம் ஒவ்வொருவரிடமும் இப்படி பிச்சை எடுக்க வேண்டும் என்ற தலையெழுத்து ......?
செயல்படாத உங்கள் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள்-2016. சட்டத்தையும் குப்பை 🗑️ தொட்டியில் போடுங்கள். @PMOIndia
எந்த அரசு வந்தாலும் மாற்றுத்திறனாளிகள் நல துறையை கௌரவத்திற்காக வைத்திருப்பது முதலமைச்சர் தான் அதனால் எந்தப் பயனும் இல்லை.
யாராவது ஒருவர் இந்த அரசாணையை பற்றியும் இந்த உயர்நீதிமன்ற உத்தரவை பற்றி விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும் 👇👇👇
ஐயா @actorvijay எங்களுக்கு எப்போ விடிவு காலம் வரும். எப்போ பணி நிரந்தரம் கிடைக்கும் இன்னும் எத்தனை ஆண்டுகள் நாங்கள் காத்திருக்கனும்.
@BussyAnand@arunraajkg@TVKVijayHQ@TVKPartyHQ
@anandakumar_bfa@sureshkalipandi இவர் ஒரு டம்மி தான், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே வேலை செய்பவர் கடைநிலை ஊழியர்களை கண்டுகொள்ளாதவர் மக்கள் இவரை கண்டுகொள்ள அவசியம் இல்லை
நன்றி அண்ணா @anandakumar_bfa 🙏.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணை-151 உள்ளது எங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஐயாவிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தோம் உங்கள் பணி ஆணையில் சிறு திருத்தம் செய்ய வேண்டும் அதனை செய்து பின்னர் உங்களுக்கு பணி நிரந்தரம் செய்வது எளிது என்று கூறினார். ஆனால் கடந்த #அஇஅதிமுக @AIADMKOfficial ஆட்சியிலும் எங்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை. விடியல் ஆட்சி தரேன்னு சொல்லி ஆட்சிக்கு வந்து #திமுக @arivalayam திராவிட மாடல் ஆட்சி செய்த போதும் இவர் அதே பதிலை கிளிப்பிள்ளை போல கூறி வந்தார்.
இதில் என்ன கொடுமை என்றால் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அரசாணை-151 போட்டது மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் @kalaignar89 .
அந்த அரசாணையை அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில் கூட அதனை இரத்து செய்யவில்லை ஏதோ ஒரு மூதேவி அந்த அரசாணைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் கொடுத்தால் அவர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்ற காரணத்தால் இவர்கள் அந்த அரசாணையை இரத்து செய்து அரசாணை-24 கொண்டு வந்து இருக்கிறார்கள் அந்த அரசாணைப்படி தேர்வு எழுதி பணி நிரந்தரம் பெற வேண்டும்.
கழிவறை கழுவும் மாற்றுத்திறனாளிகள் அதுவும் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு படித்த ஐம்பது வயதைக் கடந்த பல மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த தேர்வு இதுதான் #திராவிட_மாடல்_ஆட்சி
தன்னுடைய வீட்டில் தன்னுடைய குடும்பத் தேவைக்காக உழைக்கும் பெண்களின் உழைப்புக்கு உரிமைத் தொகை என்ற பெயரில் அரசுக்கு தண்டச்செலவாக மாதம் சுமார் ரூபாய்.1230 கோடி வழங்கிய திமுக. மாற்றுத்திறனாளிகள் பணியாற்றிய பணிக்காலத்தை கணக்கிட்டு அவர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் காரணத்திற்காக அந்த அரசாணையை குப்பை 🗑️ தொட்டியில் போட்டுவிட்டது.
நம்முடைய உரிமைகளை பெற்றுத் தர வேண்டிய மத்திய,மாநில அமைப்புக்கள் @socialpwds@Tn_Diff_abled எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மறாக நமக்கு பாதகமான அரசாணைகளை இயற்றி நம்முடைய பணி நிரந்தர உரிமையை கனவாக்கியுள்ளது அதுமட்டுமல்ல மாண்பமை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி பார்த்தல் எங்களுக்கு மக்கள் நல்வாழ்வு துறை நிர்வாகம் @TNDPHPM@TNHealthDept எங்கள் மனுவினை பரிசீலனை செய்து எப்போதோ பணி நிரந்தரம் வழங்கி இருக்க வேண்டும் வழங்கி இருக்கலாம் ஆனால் அது குறித்து யார் நடவடிக்கை எடுப்பது அதனால் யாரோ ஒருவர் தானே நமக்கென்ன என்ற எண்ணம்.
தற்போது மாற்றுத்திறனாளிகள் நல துறை அமைச்சராக இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu
அவர்களை மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சந்திக்க நேரடியாக தலைமைச் செயலகம் சென்று வாசலில் நின்றால் கூட சந்திக்க மறுக்கிறார்.
முறையாக மின்னஞ்சல் மூலம் நேரம் ஒதுக்கி தருமாறு வைக்கப்பட்ட மனு கடந்த இரண்டு மாதங்களாக கிடப்பில் உள்ளது. வசதி படைத்தவர்கள் வந்தவுடன் அனுமதி கிடைக்கிறது இது என்ன #மாடல் அரசு என்று தெரியவில்லை.
எது எப்படியோ மாற்றுத்திறனாளிகளாக பிறப்பது ஒரு சாபக்கேடு.
நாம் ஒவ்வொருவரிடமும் இப்படி பிச்சை எடுக்க வேண்டும் என்ற தலையெழுத்து ......?
செயல்படாத உங்கள் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள்-2016. சட்டத்தையும் குப்பை 🗑️ தொட்டியில் போடுங்கள். @PMOIndia
எந்த அரசு வந்தாலும் மாற்றுத்திறனாளிகள் நல துறையை கௌரவத்திற்காக வைத்திருப்பது முதலமைச்சர் தான் அதனால் எந்தப் பயனும் இல்லை.
யாராவது ஒருவர் இந்த அரசாணையை பற்றியும் இந்த உயர்நீதிமன்ற உத்தரவை பற்றி விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும் 👇👇👇
ஐயா @actorvijay எங்களுக்கு எப்போ விடிவு காலம் வரும். எப்போ பணி நிரந்தரம் கிடைக்கும் இன்னும் எத்தனை ஆண்டுகள் நாங்கள் காத்திருக்கனும்.
@BussyAnand@arunraajkg@TVKVijayHQ@TVKPartyHQ
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் @TNDPHPM@TNHealthDept பணியாற்றி வருகின்ற பல்நோக்கு மருத்துவமனை மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டுகின்றோம்.
உரிய அரசாணைகள் இருந்தும் இன்னும் எங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. முன்னாள் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் @Subramanian_ma அவர்கள் எங்களுடைய கோப்புகள் அனைத்தும் நிதித்துறை சென்றுள்ளதாகவும் அதனை தானே பேசி விரைவில் பணி நிரந்தரம் செய்து தருவதாக கூறினார். தேர்தல் காரணமாக தோய்வு ஏற்பட்டது.
தற்போது மின்சார துறையில் பணி ஆணைகள் வழங்கிவரும் மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu எங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டுகின்றோம்.
@Tn_Diff_abled | @socialpwds | @TVKVijayHQ | @arunraajkg | @TVKPartyHQ | @TVKHQITWingOffl |
பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் அரசாணையை செயல்படுத்தாமல் கடந்த #திராவிட_மாடல்_அரசு கடந்துசென்றுவிட்டது.
மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் அவர்கள் கொடுத்த அரசாணையை (151)கூட செயல்படுத்தவில்லை என்பது வேதனையளிக்கிறது.
@arivalayam | @mkstalin | @Udhaystalin |
எங்களுடைய அரசாணை-151 மீட்டுத் தர வேண்டும்.
'இயக்கநிலை குறைபாடு' மாற்றுத்திறனாளிகளை பற்றி தாங்கள் தற்போதாவது புரிந்து கொண்டமைக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவில் தற்போதும் மாற்றுத்திறனாளிகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலை உள்ளதைக் கண்டு வியப்பளிக்கிறது ஏமாற்றமளிக்கிறது.
அரசியல் தலைவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் பற்றி விழிப்புணர்வின்மை மிக முக்கியமான காரணம்.
மாற்றுத்திறனாளிகள் என்ன செய்வார்கள் என்ற ஏளனமான மனநிலை.
பல நாடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் உரிமை வழங்கி அவர்களுடைய நாடாளுமன்றங்களில் இடம்பிடித்திருக்கிறார்கள். ஆனால் உலகின் மக்கள்தொகையில் இரண்டாமிடத்திலுள்ள இந்தியாவில் ஒரு மாற்றுத்திறனாளி கூட இல்லை.
எப்போது எங்களுக்கு சமூக நீதி கிடைக்கும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நீதியியை @WHO
எப்போது பெற்றுத் தருவீர்கள். இதற்கான காலக்கெடு என்பது ஏதும் இல்லையா?
ஐக்கிய நாடுகள் சபையின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் உடன்பாட்டில் இந்தியா 2007-ஆம் ஆண்டு கையொப்பமிட்டு ஏற்றுக் கொண்டது ஏறக்குறைய 19-ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் இந்திய மக்களுக்கு மாற்றுத்திறனாளிகள் பற்றி விழிப்புணர்வளிக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியா மாற்றுத்திறனாளிகளுக்கு சம மனித உரிமை வழங்க முன் வர வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இந்திய உச்சநீதிமன்றம் @SupremeCourtFan@SCJudgments இது மத்திய அரசின் கொள்கை முடிவு என்று கூறுகின்றதே இதற்கு என்ன பொருள்?
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏமாற்றுவீர்கள்?
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்?
@rashtrapatibhvn | @VPIndia | @LokSabhaSectt | @narendramodi | @RahulGandhi | @BJP4India | @INCIndia | @IHRNRights | @pib_MoSJE | @MSJEGOI | @ncpedp_india | @DRI_advocacy | @DisabilityIndia | @inclusion_in_fr
உங்களுடைய வார்த்தைகள் வேடிக்கையாக உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சமஉரிமை மறுக்கப்படும் போது அதனைத் பெற்றுத் தர மத்திய மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் நீங்கள் ஆனால் நீங்கள் யாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்?
மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நீதி அடிப்படையில் சம உரிமை, வேலைவாய்ப்பு, அணுகத்தக்க பொதுவிடங்கள் இவற்றை பெற்று தர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்.
இது தமிழ்நாட்டில் இருந்த #திராவிட_மாடல்_ஆட்சி போல உங்களுடைய @BJP4India ஆட்சி #விளம்பர_மாடல்_அரசா ?
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை எப்போது கிடைக்கும் @WHO?
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது.
அறிவியல் முன்னேற்றம் பெற்ற இக்காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையினைப் பற்றி தற்போதுள்ள அரசியல் தலைவர்களுக்கு தொலைநோக்கு பார்வையில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் முதல் வேலைவாய்ப்பு வரை புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
அதனைக் கேட்டுப்பெற மாற்றுத்திறனாளிகளுக்கும் விழிப்புணர்வில்லை.
அதனை முறையாகப் பெற்று தருவதற்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகம் @socialpwds மற்றும் மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகங்கள் @Tn_Diff_abled மற்றும் சமூக நீதி அமைப்புக்கள் @MSJEGOI@IHRNRights உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமஉரிமை, சமவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகளின் காவலன் என்று கூறக் கூடிய மாண்பமை உச்சநீதிமன்றம் @SupremeCourtFan கூட மாற்றுத்திறனாளிகள் அரசியலில் பங்கேற்க இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில் இது மத்திய அரசின் கொள்கை முடிவு என்று கூறிவிட்டது.
இதுதான் தற்போது இந்தியாவிலுள்ள சமூகநீதி.
இந்தியா சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் கடந்துவிட்டது இன்னும் ஐநூறு ஆண்டுகள் ஆனாலும் உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படாது.
ஆணுக்கு பெண் சமம் என்று கூறும் நீங்கள் அவர்களுக்கே இன்னும் 33% இட ஒதுக்கீடு வழங்க மனம் வரவில்லை.
உடலளவில் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு எப்படி தருவீர்கள்?
@WHO மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நீதி அடிப்படையில் சமஉரிமை, சமவாய்ப்பு தருவதாக 2007-ல் கையெத்திட்டு ஏறக்குறைய 19-ஆண்டுகள் கடந்துவிட்டது இன்னும் உங்கள் மனநிலையில் மாற்றம் வரவில்லை.
உங்களுக்கு தெரியுமா மாற்றுத்திறனாளிகள் தன்னுடைய அத்தியாவசிய தேவைக்காக படித்தவர்கள் கூட பிச்சை எடுக்கிறார்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்று வருகிறது என்று பெருமைப் பேசி வருகிறார்.
இந்தியாவிலும்,தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் அரசாணைகள் குப்பை தொட்டியில் இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகநீதி அடிப்படையில் சமஉரிமை, சமவாய்ப்பு வேண்டும்.
ஐயா நாங்கள் ஏமாளிகள் அல்ல!
@rashtrapatibhvn@VPIndia@PMOIndia@LokSabhaSectt@BJP4India@INCIndia@uncrpd@DRI_advocacy@goadisability@NPRD_IN@ncpedp_india
மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் தங்களுடைய கழகத்தில் மாற்றுத்திறனாளிகள் அணி உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை தங்கள் முன் வைக்கின்றோம்.
மற்ற கட்சிகளை போல்லல்லாமல் மாற்றுத்திறனாளிக்கும் வாய்ப்பு அளித்து சட்டமன்ற உறுப்பினராக இடம்பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இதனை விரிவாக்கம் செய்யும் வகையில் மாற்றுத்திறனாளிகள் அணியினை உருவாக்க விரும்புகின்றோம்.
இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய உத்வேகத்தையும் அரசியல் விழிப்புணர்வினையும் தரும் அதுமட்டுமின்றி ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்க மிகப்பெரிய உந்துதலாக இருக்கும் தயவுகூர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் @actorvijay இக்கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டுகின்றோம்.
@BussyAnand@AadhavArjuna@TVKHQITWingOffl@TVKVijayHQ
அனைவரையும் ஒன்றிணைந்த சமுதாயத்தை உருவாக்குவோம் என்று தற்போது பதிவுகளை பதிவிட்டால் மட்டும் போதுமா?
ஐ.நா.சபையின்மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை மனித உரிமைகளின் பாதுகாப்பு உடன்பாட்டில் இந்தியா 2007-ல் ஏற்றுக் கொண்டது ஆனால் ஏறக்குறைய 19-ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பங்கேற்க உரிய இட ஒதுக்கீட்டை கூட இந்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மனம் வரவில்லை.
ஏறக்குறைய 7 கோடி மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் இந்நாட்டில் சராசரி மனிதர்களுக்கு வழங்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூட எங்களுக்கு பயன்படவில்லை.
மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை வழங்குவதில் மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்கிறது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்பு உடன்படிக்கையை கொண்டு வந்த @WHO ஐ.நா சபையும் இத்தனை ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்ற முன்னேற்றம் என்ன என்பதை மறு ஆய்வு செய்வோ அல்லது அதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்று தெரியவில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு மனித அடிப்படை உரிமைகள் அதிலும் ஒன்றிணைந்த சமுதாயத்தை உருவாக்க அரசியல் இட ஒதுக்கீடு வழங்காமல் நீங்கள் என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் அது சமூக நீதிக்கு எதிராகத்தான் நிற்கும்.
இந்தியா சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் கடந்தும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பற்றி அரசியல் தலைவர்களுக்கு விழிப்புணர்வின்மை என்பது வேதனையளிக்கிறது.
நீங்கள் தற்போது பதிவிடும் பதிவுகளை பார்த்தால் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்புதான் நாம் சுதந்திரம் பெற்றோம். அனைத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வது போல் தெரிகிறது. நாம் சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் ஆகின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்கினால் அவர்களால் அதிகப்படியான சாதனைகளை செய்து காட்ட இயலும்.
இதில் உங்களுடைய பங்களிப்பு என்பது முழுவதும் மறுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசியல் தலைவர்கள் முன்வருவார்களா?
பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு தமிழ் தெரியாது ஆனால் @VPIndia மேதகு இந்திய துணைக் குடியரசுத் தலைவர் அவர்களுக்குமா ?
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசு முன்வருமா?
மாற்றுத்திறனாளிகளை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏமாற்றப்போகிறது இந்த சமூகம்?
@rashtrapatibhvn@PMOIndia@narendramodi@RahulGandhi@BJP4India@INCIndia@LokSabhaSectt@SupremeCourtFan