திமுகவின் கனிமொழி சபாநாயகர் ஓம் பிர்லா இன்று வழங்கிய தேநீர் விருந்தில் கலந்து கொண்டார் என்ற செய்தியை வைத்து திமுக பாஜக கூட்டணி சேர்ந்து விட்டது என பலரும் பேசுவதை பார்க்க முடிகின்றது
அதிலும் குறிப்பாக காங்கிரஸ்காரர்கள் வண்டி கட்டிக்கொண்டு பேசி வருகிறார்கள்
திமுக பாஜக கூட்டணி அமையட்டும் அல்லது அமையாமல் போகட்டும்.
அமையும் பட்சத்தில் அதற்கான எதிர்வினையை அப்போது நிச்சயம் ஆற்றலாம்.
ஆனால் இந்த ஒரு தேநீர் விருந்து கலந்து கொண்டதை வைத்து கூட்டணி உறுதியாகிறது உறுதியாகிவிட்டது என காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சொல்வார்களே ஆனால் கடந்த 2025 குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளில் இதே மாதிரி தேநீர் விருந்தை ஓம் பிர்லா வழங்கியபோது அதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.
அது மட்டும் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியுடன் மற்ற பாஜக தலைவர்களுடனும் சிரித்து பேசி கொண்டிருந்தார் .
அதற்கு முன்பு 2024 இதே மழை கால கூட்டத்தொடரின் கடைசி நாளான ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்து ராகுல் காந்தியும் கலந்து கொண்டார்
அப்படி என்றால் பாஜகவில் காங்கிரசும் கூட்டணியில் இருக்கிறது.
அப்படி பொருளில் எடுத்துக் கொள்ளலாம் தானே? அப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால் காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ள தமிழக வெற்றிக்கழகமும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது.
அந்த லாஜிக் சரி என்றால் இந்த லாஜிக்கும் சரிதானே?
80 வயது தாத்தாவிடம் பேரன் கேட்டான்.
"தாத்தா... ஒரே பாட்டியை 60 வருடங்களாக எப்படி காதலிக்க முடிந்தது?"
பேரன் எதிர்பார்த்த பதில்...
"புரிதல் வேண்டும்..." "மனம் விட்டு பேச வேண்டும்..." "விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்..."
ஆனால் தாத்தா சிரித்தபடி பாட்டியை ஒரு முறை பார்த்துவிட்டு சொன்னார்...
"நான் ஒரே பெண்ணை 60 வருடங்கள் காதலித்தேன் என்று யார் சொன்னது?"
பேரன் குழம்பிப் போனான்.
தாத்தா தொடர்ந்தார்...
20 வயதில் அவளின் அழகையும், துறுதுறுப்பையும் காதலித்தேன். அது என் முதல் காதல்.
30 வயதில் அவள் ஒரு தாயாக மாறிவிட்டாள். இரவு தூங்காமல் குழந்தையை தாலாட்டும் அவளை காதலித்தேன். அது என் இரண்டாம் காதல்.
40 வயதில் குடும்பத்தின் சுமைகளை சிரித்தபடி சுமக்கும் துணிச்சலான பெண்ணை காதலித்தேன். அது என் மூன்றாம் காதல்.
50 வயதில் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தன் ஆசைகளை மறந்துவிட்ட அவளை காதலித்தேன். அது என் நான்காம் காதல்.
60 வயதில் முகத்தில் சுருக்கங்கள் வந்திருந்தாலும், என் மனக்கவலைகளை ஒரு பார்வையில் புரிந்துகொள்ளும் தோழியை காதலித்தேன். அது என் ஐந்தாம் காதல்.
70 வயதில் மருந்து சாப்பிட்டாயா என்று தினமும் கேட்கும் அக்கறையை காதலித்தேன். அது என் ஆறாம் காதல்.
80 வயதில் என்னுடன் மெதுவாக நடந்து, பழைய நினைவுகளை மீண்டும் மீண்டும் சொல்லி சிரிக்கும் என் உயிர்த்துணையை காதலிக்கிறேன். அது என் ஏழாம் காதல்.
பேரன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
தாத்தா இறுதியாக சொன்னார்...
"திருமணம் என்பது ஒரே மனிதருடன் வாழ்வது அல்ல...
காலம் காலமாக மாறிக்கொண்டே இருக்கும் அதே மனிதரின் புதிய புதிய வடிவங்களை மீண்டும் மீண்டும் காதலிக்கக் கற்றுக்கொள்வதுதான் திருமணம்."
அழகு மாறும். வயது மாறும். உடலும் மாறும். சூழ்நிலையும் மாறும்.
ஆனால்...
• ஒவ்வொரு மாற்றத்திலும், "இவள் இன்னும் என் காதலிதான்" என்று சொல்ல முடிந்தால்...
அதுதான் 60 வருட திருமண வாழ்க்கையின் ரகசியம்.
• காதல் என்பது ஒருமுறை விழுவது அல்ல... வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும், அதே மனிதரிடம் மீண்டும் மீண்டும் விழுவதுதான் உண்மையான காதல்.
"உங்கள் வாழ்க்கைத் துணை இன்று, நீங்கள் முதலில் காதலித்த அதே மனிதரா...? இல்லை... காலம் உருவாக்கிய ஒரு புதிய மனிதரா...?
மரிய வில்சனின் மதத்தை குறிப்பிட்டு திமுக எம்.எல்.ஏ எதுவும் பேசாதபோது,“எனக்கு ஒரு மொழி என்னுடைய Christianity கத்து கொடுத்திருக்கு. அன்பு மொழி,.. இது பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படிச்சாலும் தெரியாது. நான் பைபிள் படிச்சிருக்கேன். Born Christian.” என்கிறார். இந்த பேச்சும் ஜெபமாலையும் கிறித்தவ சமூகத்தினருக்கு சொந்த செலவில் அவர் வைக்கும் சூனியம். சங்கிகளுக்கு கொண்டாட்டம்!
“தந்தை பெரியாரை கொள்கைத் தலைவராக அறிவித்துவிட்டு, பெரியார் திடலில் போலீஸை குவிப்பதா?
நீட் குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டில் ஒன்றிய அரசை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொள்ள இருந்த பிரசாரத்தை தடுப்பதா?” -சிதம்பரம் எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி கேள்வி!
சாலமன் பாப்பையா
ரபி பெர்ணாட்
நெல்சன் சேவியர்
வலம்புரி ஜான்
ஜெகத் காஸ்பர்
பெர்க்மான்ஸ்
பால் தினகரன்
வீரமாமுனிவர்
ஜி.யூ போப்
அய்யா தா. பாண்டியன்
பீட்டர் அல்போன்ஸ்
எச்.ஏ கிருஷ்ணபிள்ளை
ஆபிரஹாம் பண்டிதர்
எஸ்ரா சற்குணம்
ராபர்ட் டி நொபிலி
வேதநாயக சாஸ்திரியார்
அந்தோணி தாசன்
சாமுவேல் வேதநாயகம் பிள்ளை
ஸ்டானிஸ்லாஸ் சாமி
பார்தலோமேயஸ் சீகன்பால்கு
அண்ணன் சீமான்
எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை
அலெக்ஸ் பால் மேனன்
லூர்தம்மாள் சைமன்.
அண்ணன் ஜோ மில்ட்டன்
மரு.மரியானோ புருனோ மாச்கரென்ஹஸ்
நீயா நானா அந்தோணி
நீயா நானா சில்வெஸ்டர் திலீபன்
சாம் பி செல்லத்துரை
அலெக்ஸாண்டர் பாபு.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
அருள் எழிலன்.
P. வில்சன்
அப்பாவு
சந்திரபாபு
ஃப்ரான்ஸிஸ் கிருபா
பட்டிமன்றம் ராஜா
ஜேம்ஸ் வசந்தன்.
ஹாரிஸ் ஜெயராஜ்.
தனிநாயகம் அடிகள்
ஜேசுதாஸ்
ஜோ அருண்
Wilson HBK
ஆன்ட்ரியா ஜெரமியா.
எனக்கு தெரிந்து தமிழை மிக மிக மிக.
அழகாகவும் நேர்த்தியாகவும் ஏதோவொரு வகையில் கையாண்ட , கையாளும் ஆளுமைகள் இவர்கள்.இன்னும் கூட இதேபோல் ஒரு பெரும் பட்டியல் நம்மால் போட இயலும்.
இவர்கள் யாவருமே கிறிஸ்தவர்கள் தான்.
பிற்கால தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்வியின் வளர்ச்சிக்குமே கிறிஸ்தவர்களின் பங்கு அளப்பரியது.
தமிழ் பேச தெரியவில்லை எனில் கற்றுக்கொண்டு பேசுவது தான் அழகு. இன்றேல் " நான் கிறிஸ்தவன், எனக்கு தமிழ் பேச வராது" என்ற Victim card எடுப்பது ஒட்டுமொத்த கிறிஸ்துவர்களையும் அவர்கள்தம் தமிழ்மொழி ஆளுமையையும் கலங்கப்படுத்தும் செயல்...
மரிய வில்சனின் அன்பார்ந்த கவனத்திற்கு..
வரலாற்றில் முதன் முறையாகனு செய்தி ஏதும் வந்துட்டா என்ன செய்ய ?
நம்ம பங்குக்கு எதுக்கும் history அ சொல்லி வைப்போம்:
தமிழ்த்தாய் வாழ்த்துக்காக முதல்வர்களாக முத்தமிழறிஞர் கலைஞரும், மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினும் செய்தவை:
1970 – கலைஞர்
“நீராரும் கடலுடுத்த…” தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாட வேண்டும் என அரசு அங்கீகாரம் வழங்கினார்.
அரசு நிகழ்ச்சிகளில் நடைமுறை
அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும் நடைமுறை உருவாக்கப்பட்டது.
2021 – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்த்தாய் வாழ்த்தை “தமிழ்நாட்டின் மாநிலப் பாடல்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மரியாதை கட்டாயம்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
பொதுநிகழ்வுகளிலும் நடைமுறை
அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவதற்கான வழிகாட்டுதல்கள் வலுப்படுத்தப்பட்டன.
1970-ல் கலைஞர் தொடங்கி வைத்த அதிகாரப்பூர்வ அங்கீகாரம்
2021-ல் முதல்வர் மு.க.ஸ்டாலினால் மாநிலப் பாடல் என்ற உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுதான் திராவிட இயக்கத்தின் தமிழ்ப்பற்று செயலால் நிரூபிக்கப்பட்ட வரலாறு! ❤️🖤
BJP கொண்டுவந்த நாசக்கார திட்டங்களை காங்கிரசும் ஆதரித்தது கம்யூனிஸ்ட்களும் ஆதரித்தார்கள்
திமுக ஒரு நாசக்கார திட்டத்தைக்கூட ஆதரிக்கவில்லை
என்ன தகுதி அடிப்படைல திமுகவ கேள்வி கேட்க முடியும்
The Name is தி.மு.கழகம் 🔥🔥🔥
இந்தியா முழுவதும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு (FSO-TN) சார்பில் 26.07.2026 காலை 10 மணி முதல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தொடர் முழக்கப் போராட்டம்
#AbolishNEET#BanNEET#StudentsProtest#FSO_TN#DSF_TN