சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய U-18 பெண்கள் கபடி அணியின் துணைத் தலைவராக விளையாடிய கார்த்திகா இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித்தந்து இறுதிப் போட்டியில் ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்த தங்கமகள் கார்த்��ிகாவையும், இந்த வெற்றிக்கு பக்க பலமாக இருந்த அவரது கண்ணகி நகர் கபடிக்குழுவின் முயற்சியை பாராட்டி கவுரவிப்பதற்காக கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று இன்று எனது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொண்டேன். அதோடு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கார்த்திகாவிற்கும் ₹ 5 லட்சமும், அவர்களது கண்ணகி நகர் கபடி குழுவிற்கு ₹ 5 லட்சமும் காசோலைகள் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களின��� நீலம் ஸ்டூடியோஸ் சார்��ாகவும், அப்ளாஸ் என்டேர்டைன்மெண்ட் சார்பாகவும மற்றும் பைசன் படக்குழு சார்பாகவும் வழங்கி மகிழ்ந்தேன்..
இன்னும் இது போல் வேலியே போட முடியாத பல வெற்றிகளை கண்ணகி நகர் கார்த்திகாக்கள் பெறட்டும்!! ✨🌸
#TeamBison 🌸
#BisonKaalamaadan ✨🦬
@applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal @beemji @Tisaditi
கபடி வீராங்கனை கார்த்திகாவின் சாதனையை பாராட்டி அவருக்கு ₹ 5 லட்சமும், அவர்களது கண்ணகி நகர் கபடி குழுவிற்கு ₹ 5 லட்சமும் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களின் நீலம் ஸ்டூடியோஸ் சார்பாகவும், அப்ளாஸ் என்டேர்டைன்மெண்ட் சார்பாகவ��ம மற்றும் பைசன் படக்குழு சார்பாகவும் இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்.
#BREAKING 📢📢
மோடி ஆட்சியில், கல்விச் சுதந்திரக் குறியீட்டில், உலக அளவில் இந்தியா 156 ஆவது இடத்தில் படுமோசமான, பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கிறது!
கல்விச் சுதந்திரக் குறியீடு (Academic Freedom Index - AFI):
கல்விச் சுதந்திரக் குறியீடு என்பது உலகளவில் உள்ள 179 நாடுகளில் கல்விச் சுதந்திரத்தி��் நிலைமை பற்றிய ஒரு அளவீடு. இந்தியா 156 ஆவது இடத்திற்குச் சரிந்திருக்கிறது.
1.ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலுக்கான சுதந்திரம் (Freedom to research and teach).
2.கல்வி பரிமாற்றம் மற்றும் பரவலுக்கான சுதந்திரம் (Freedom of academic exchange and dissemination).
3.நிறுவன சுயாட்சி (Institutional autonomy): பல்கலைக்கழகங்களின் சுயாட்சி.
4.வளாக ஒருமைப்பாடு (Campus integrity): வளாகத்தில், ஆன்லைன் கற்றல் தளங்கள் உட்பட, பாதுகாப்பு மீறல்கள் மற்றும் கண்காணிப்பு இல்லாதி���ுத்தல்.
5.கல்வி மற்றும் கலாச்சார வெளிப்பாட்டின் சுதந்திரம் (Freedom of academic and cultural expression).
இந்தியா கல்வி, அறிவியல் சுதந்திரம் ஆகிய துறைகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
கல்விச் சுதந்திரம் சுருங்கிக் கொண்டிருக்கும் நாடுகளின் முக்கிய உதாரணமாக இந்தியா மாறியுள்ளது. AFI தரவுகளின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் (2014 முதல் 2024 வரை) கல்விச் சுதந்திரத்தில் சரிவு ��ற்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளதால், இந்தியாவின் சரிவு மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்களைப் பாதிக்கிறது.
மோடி அரசு, இந்திய வரலாற்றிலேயே மிகமோசமான அறிவுசார் & அறிவியில் எதிர்ப்பு (anti-intellectual & anti-science) அரசாக உள்ளது. இந்த எதிர்ப்பு மனப்பான்மை உண்மையில் இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது.
இந்திய ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆளும் ஆட்சியின் சித்தாந்தத்திற்கு இணங்கி செயல்படவேண்டிய அழுத்தத்தில் உள்ளனர். அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அமைதிப்படுத்தவும், பணிநீக்கம் செய்யவும், துன்புறுத்தவும் கடுமையான வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அழுத்தம் பொதுப் பல்கலைக்கழகங்களில் மட்டுமின்றி, ஐஐடி (IITs) மற்றும் ஐஐஎம் (IIMs) போன்ற சிறந்த கல்வி நிறுவனங்கள் வரை ஊடுருவியுள்ளது. அரசின் சித்தா��்தத்துடன் இணங்குவதற்காக, ஐஐடி பாம்பே போன்ற சிறந்த நிறுவனங்கள் கோ மூத்திரம் (Gau Mutra) பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளன.
அமைச்சர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அரசியல்வாதிகள் மூடநம்பிக்கை மற்றும் பிற்போக்குத்தனமான கருத்துக்களை வெளிப்படுத்துவது அதிகரித்துள்ளது. உதாரணமாக, ரைட் சகோதரர்களுக்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா புஷ்பக விமானத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறியது. மேலும், அயோத்தியில் சிலையின் மீது சூரிய ஒளி விழுந்த நிகழ்வை, இந்திய அறிவியலின் மிகச்சிறந்த சாதனைகளில் ஒன்றாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேசினார்.
கல்விச் சுதந்திரம் குறைந்து வருவதற்கான மற்றுமோர் அறிகுறி, விசா இருந்தும், புகழ்பெற்ற வெளிநாட்டு அறிஞர்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு மறுக்கப்படுவதும், நாடு கடத்தப்படுவதும் நடக்கிறது. இது நாட்டின் தேசிய நலன்களுக்கு முற்றிலும் எதிரானது.
பைசன் திரைப்படம் தமிழின் மிக முக்கியமான திரைப்படம்... தமிழ் சமூகத்திற்கு மிக அவசியமான திரைப்படம்... பகையுணர்வை மறுபரிசீலனை செய்துகொள்ள, நட்புணர்வை பாராட்ட, சுயசாதி விமர்சனத்திற்கான திரைப்படம்...
பார்ப்போம்... நல்லதே நடக்கட்டும்... ❤✨💐
அண்ணன் மனத்தி கணேசன் அவர்களின் பெருங்கனவுக்கு முதல் ஒளி ஏற்றிய பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் மெஞ்சனாபுரம் திரு . தங்கராஜ் சார் (சந்தனராஜ்)அவர்களை சந்தித்து என் மரியாதையையும் பெரு நன்றியையும் சமர்ப்பித்தேன் ❤️ #Bison#BisonDiwali
"ஒருத்தன் இந்த புழுதிக்காட்டு-ல உழுந்து எந்திருச்சு அவ்ளோ ஒசரத்துக்கு போயிருக்கான்...உனக்கு அவன் பிச்சக்காரப் பையலா தெரியுது, ஏன்டா ?!...அவன் யாரு மூலமா மேல போனா என்ன டா ?!...அவன், அவனோட திறமைய வெச்சு தானே போயிருக்கான். என்னைக்கும் அவன் அடையாளம் உன் மண்ணு தானே டா ?!...அது போதாதா ஒனக்கு ?!... இங்க பாரு, என்ன மாதிரி வேலி-ய உடைக்கிறது மட்டும��� திமிரு கிடையாது, யாருமே வேலி போட முடியாத ஒசரத்துக்கு ஒருத்தன் போறான் பாரு...அதுவும் திமிரு தான் !"
- மாரி செல்வராஜ் 💙
#BisonKaalamadan
கவின் கொலைக்கு முன்பாகவே, பட்டா கத்திகளை சுர்ஜித் ஏன் ஏந்தினான்?. அதை அறிந்தும் அவனை, பெற்றோர்களும், உறவினர்களும் ஏன் தடுக்கவில்லை.கொலை செய்வதுதான் தமிழர் பண்பாடா? இன்னும் எத்தனை உயிர்களை பலி கேட்கும் இந்த சாதி?
என்ற கேள்விகளோடு #பைசன் நெஞ்சை அனத்துகிறான். (3/3)
மனத்தி கணேசன் போலத்தானே கவின், மாதம் 1.5 இலட்சம் வருமானம் ஈட்டும் அளவிற்கு பெரிய மதிப்புமிக்க நிறுவனத்தில் பணிபுரிந்தவன். அவன் கடந்த பாதையும் அதே பதற்றமான வன்முறை நிறைந்த சமூக சூழல் தானே! ஆனாலும் அவன் கல்வியைத் தானே தேர்வு செய்தானே தரவி, ஆயுதத்தை அல்ல. (1/3)
#BisonKaalamadan
சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் SI ஆய்வாளர்கள். ஆனால், மனத்தி கணேசனின் படிக்காத தந்தை, தன் மகனின் கரங்கள் கத்தி எடுக்க கூடாது என்பதில் கவனமாகவும், கவலையாகவும் பாதுகாத்தார். அந்த கவனமும், கவலைய���ம் ஏன் சுர்ஜித்தின் பெற்றோர்களுக்கு இல்லை? (2/3)
#JusticeForKavin #Bison
#ஜெய்பீம்💙🌸
1956 அக்14,15 இரு நாட்களில்
10 இலட்சம் மக்களை இந்து மதத்திலிருந்து விடுவித்து பெளத்தத்திற்குள் இணைத்துக்கொண்டார்
#பாபாசாகேப்அம்பேத்கர்
உலக வரலாற்றில் புரட்சிகரமான மாபெரும் பண்பாட்டு,அரசியல் நடவடிக்கை இது.💙
#DhammachakkaPavattanDin
“கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டப்படாத இந்துவாக பிறந்துவிட்டேன். அதை தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக்கொள்ள முடியும். எனவே நான் உ��ுதியாக கூறுகிறேன், நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்”
இந்திய வரலாற்றில் மிக முக்கியமான பிரகடனம், பாபாசாகேப் அம்பேத்கரின் “நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்.”
1935இல் அறிவித்து, 1956 அக்டோபர் 14, 15 இரு நாட்களில் தன்னை மட்டுமல்லாது பத்து இலட்சம் மக்களையும் சாதிமயமான இந்து மதத்திலிருந்து விடுவித்து சமத்துவ பெளத்தத்திற்குள் இணைத்துக்கொண்டார் பாபாசாகேப். உலக வரலாற்றில் நடைபெற்ற மாபெரும் பண்பாட்டுப் புரட்சி இது.💙
@beemji @bhaskarvasugi @NeelamBooks @NeelamSocial @Neelam_Culture
#budhaparinirvana #babasahebambedkar