கலைஞர் அபிமானியா இருக்கிறது சுலபமல்ல . நம்மைச் சுற்றி பல வகையான கலைஞர் வெறுப்பாளர்கள் இருப்பார்கள் .
தோலின் நிறத்தை வைத்தோ , அந்தஸ்த்தை வைத்தோ நம்மை ஆளப்பிறந்தவர்கள் என தான் நம்புபவர்களின் அரசியல் எதிரி என்பதற்காகவே கலைஞரை தூற்றும் ஒரு கூட்டம் .
கலைஞரின் எத்தனையோ தொலை நோக்குத் திட்டத்தால் இந்த மாநிலம் வளர்ந்ததன் எந்த பின்னணி அறிவுமின்றி அவர் இரண்டு மனைவி , பிள்ளைகள் வசதியாக இருக்கிறார்கள் என்ற ஒற்றை காரணத்துக்காக கரித்துக் கொட்டும் கூட்டம் .
பூசி மெழுகி அப்படி இப்படி என சொன்னாலும் கொஞ்சம் நோண்டிப்பார்த்தால் சாதிய வன்மத்தால் கலைஞரை வெறுக்கும் கூட்டம் .
சமூக , அரசியலில் ஒரு மண்ணும் தெரியாவிட்டாலும் கலைஞரை போற்றுவோரை ஏளனமாகப் பார்க்கும் படித்த மொண்ணைகள் கூட்டம் .
அவர் கொடுத்த இலவச பஸ் பாசில் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி , அவர் கொடுத்த முட்டையை சத்துணவில் சாப்பிட்டு , அவர் கொடுத்த இட ஒதுக்கீட்டில் உயர் படிப்பு படித்து , அவர் கொண்டு வந்த டைட்டல் பார்க்கில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே , இது பற்றிய எந்த அரசியல் அறிவுமின்றி அவரை கிழட்டுப் பய என திட்டும் கூட்டம் ..
என எத்தனையோ பார்த்திருக்கிறோம் . நமக்கு அறிவிருக்கிறது , நன்றி இருக்கிறது .. எனவே கலைஞரை கொண்டாடுகிறோம் . எப்போதும் கொண்டாடுவோம் !
#கலைஞர்_பிறந்தநாள்