பாஜக ஆட்டம் தமிழகத்தில் தொடங்கியது..
இந்திய அரசியலில் பாஜகவிற்கான ஒற்றை எதிரியான தமிழகம் வீழ்த்தப்பட்டது...
தொடை நடுங்கி விஜய் ஓடுகாலி விஜய் எதுஎதுல கையெழுத்து போட்டு தமிழ்நாட்ட முடிச்சு விட போறானோ 😡
"காங்கிரஸ் செய்ய வேண்டிய
வேலையை கமல்ஹாசன் செய்கிறார்"
மதுரையில் கமல் பண்பாட்டு மையம் நடத்திய
‘மறவோம் காந்தியை' நிகழ்ச்சியில்
விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
#Thirumavalavan#Kamal#madurai#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
அலங்கோல ஆட்சிக்கு
அரக்கோணமே சாட்சி!
அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் திமுக கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இந்நிலையில், அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தான் திமுக அரசின் காவல்துறையால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.
திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மாணவியை ஏமாற்றுகிறான்- பல திமுகவினரின் பாலியல் இச்சைக்கு அந்த மாணவியை இணங்குமாறு துன்புறுத்துகிறான்- இதனை தைரியமாக வந்து புகார் அளித்த மாணவியை காவல்துறை மிரட்டுகிறது- திமுக இளைஞரணியின் ஏவல்துறையாக காவல்துறை இருப்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது-
திமுக நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி பெறாத துப்பாக்கி இருக்கிறது!
போதை இளைஞரிடம் கத்தி- பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி, சர்வ சாதரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டது .
இதைத் தானே, இந்த ஸ்டாலின் மாடலைத் தானே அலங்கோல ஆட்சி என்கிறேன்?! இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு திரு. @mkstalin-க்கு கோபம் வருகிறது?
இந்த அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்கு தடை; ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக திமுக பொதுக்கூட்டம் நடத்துகின்றது. நான் கேட்கிறேன்- உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா @mkstalin ?
ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக? தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு- காக்கப்படுகிறதா? அப்படியெனில், #யார்_அந்த_SIR ? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, எங்கள் கேள்விகள் ஓயாது!
திமுக கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் @mkstalin? சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் நாறிக் கொண்டிருப்பதற்கு, ஒரு நல்ல முதல்வராக இருந்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், இவர் அதெல்லாம் செய்யப்போவது இல்லை.
நான் எப்போதும் சொல்வது போல, இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்- குறிப்பாக திமுக-வினரிடம் இருந்து!
@AIADMKOfficial
கவனமாக செயல்படுங்கள் தோழர்களே !
எப்போதும் வண்டியை வீட்டிலிருந்து ரயில்நிலையம் வரை பயன்படுத்தி விட்டு அங்கிருந்து நேர்காணல் செய்யும் இடத்திற்கு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி செல்வது வழக்கம். இதுதான் கடந்த ஓராண்டாக நான் செய்து வருவது. இது என்னுடன் இருக்கும் அனைவருக்கும் தெரியும். சில விருந்தினர்களிடம் நான் சொன்னதும் உண்டு.
இன்று மாலை வழக்கம் போல வண்டியை அந்த ரயில் நிலையத்தில் இருந்து எடுத்துகொண்டு வீடு வந்தேன். மருத்துவமனை வரை சென்று வரவேண்டிய வேலை இருந்ததால் துணைக்கு மனைவியுடன் சென்றேன். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போது வழியில் டிஸ்க் பிரேக்கை பிடிக்க முயற்சித்த போது நடு சாலையில் ஏதோ கீழே விழுந்த ஒலி கேட்கவே பின் பிரேக் பயன்படுத்தி வண்டியை ஓரமாக நிறுத்தி அதை எடுத்து வந்தேன். வண்டியில் அது என்ன பகுதி என்று என்னால் கண்டறிய முடியவில்லை. பிறகு வண்டியை செக் செய்யும் போது வண்டியின் முன் பிரேக் வேலை செய்யவில்லை. நிலைமையை புரிந்து கொண்டு மெதுவாக வண்டியை ஓட்டி வந்தேன்.
என் வீடருகில் என் நண்பனின் கடையில் சென்ற மாதம் தான் சர்வீஸ் விட்டு எடுத்தேன். எப்போதும் அவனிடம் தான் சிறு பழுது என்றாலும் பார்ப்பேன். அவனிடமே சென்று காண்பித்தேன். "இது எப்படி நண்பா அவிழும்.. இது அவிழ்ந்து விழ வாய்ப்பே இல்லை.." என்றான். "வேகமாக வண்டி ஓட்டினால் இது போன்று நடக்குமா?" என்றேன். "இப்படியாக அவிழ்ந்து தனியாக விழ வாய்ப்பு இல்லை. மேலும் விழுந்ததை மீண்டும் தற்போது ஃபிக்ஸ் செய்யும்போது உடனே ஃபிக்ஸ் ஆக வேண்டும். ஆனால், இது ஆகவே இல்லை. ஆச்சரியமாக இருக்கிறது. நீ வண்டியை காலையில் வந்து எடுத்துக்கொள். இந்த டிஸ்க் Pads இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து விளக்கங்களை நாளை மாலை கூறுகிறேன். அதுவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்து" என்றான்.
தினமும் என் மகள் ஆதினி காலையில் தெருவை சுற்ற வைத்து விட்டு வண்டியை எடுத்தால் தான் என்னை விடுவாள்..நல்வாய்ப்பாக நான் நாளை காலையில் எடுக்கவில்லை. இன்று மாலை நான் ரயில் நிலையத்தில் இருந்து வந்த போதும் எனக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. அதனால் தான் வழக்கம் போல ஓட்டி வந்தேன்.
வீட்டில் சற்று பயந்தார்கள்..பின்னர் விட்டு விட்டார்கள். நானும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. ஆனால், இதை ஓர் எச்சரிக்கை பதிவாக எடுத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் வண்டியை எப்போது எடுப்பதாக இருந்தாலும் நன்றாக செக் செய்து எடுங்கள். இயற்கையின் நல்வாய்ப்பால் நான் தப்பித்தேன். ஆனால், எனக்கும் இது "எச்சரிக்கை" தான் என்பதை "உணர்ந்து" கொண்டேன். படிக்கும் என் தோழர்களும் எச்சரிக்கையாக இருங்கள்.
- அருள்மொழிவர்மன்,
ஊடகவியலாளர்,
Fourth Estate தமிழ் ஊடகம்.