தோழர்களே உங்களுக்கு உற்ற தலைவர் அம்பேத்கர் என்றும் அவரால்தான் பஞ்சமர்கள் கடையர்கள் இழிபிறப்புக் கொடுமைகள் நீங்கும் என்றும் நம்பினேன்.
அதனால�� உங்களுக்குத் தலைவராக ஏற்றுக் கொள்ளும்படி பிரச்சாரம் செய்தேன்.
நானும் தலைவர் என ஏற்றுக் கொண்டேன் என்றார் பெரியார்.
ஆம்! பெரியாரால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் புரட்சி யாளர் அம்பேத்கர்.
நீதிக் கட்சியை பெரியார் திராவிடர் கழகமாக பெயர் மாற்றி சமுதாய இயக்கம் என்ற பண்பு மாற்றத்தை பெரியார் உருவாக்கியபோது,
(1944இல்) அதை விரும்பாத ஒரு சில நீதிக்கட்சித் தலைவர்கள் அப்போது அம்பேத்���ரை பேச அழைத்தபோது, ‘பெரியார் தான் உங்களுக்கான தலைவர்’ என்று அவர் களிடையே இடித்துரைத்தவர் அம்பேத்கர்.
இரு பெரும் ஆளுமைகளும் தலைமைப் பாத்திரத்தை விட சமூக விடுதலைக்கான தத்துவப் பார்வைக்கே முன்னுரிமை தந்தார்கள் என்பதையே இந்த சம்பவங்கள் உணர்த்துகிறது.
💙🖤
#Periyar148
#தந்தைபெரியார்
இன்று சமூக நீதி திருநாள் !
பகுத்தறிவு பகலவன் தந்தைப்பெரியாரும் , புரட்சியாளர் அம்பேத்கரும்
சமூகநீதி எனும் தேரின்
இரு சக்கரங்கள்.
இந்திய விடுதலை வரலாற்றை
புறப்பகையாம்
பிரிட்டன் ஆதிக்க எதிர்ப்பு
வரலாறு என சுருக்கி விட கூடாது.
அகப்பகையாம் சாதிய சனாதன ஒழிப்புக்கான போராட்ட பயணமும் நம் விடுதலை வரலாறுதான்.
முன்னது மண் விடுதலை.
பின்னது மானுட விடுதலை.
முழுமையடைந்த தேசிய வரலாற்றில்
புரட்சியாளர் அம்பேத்கரும்,
தந்தைப்பெரியாருமே
நம் தேசத் தந்தையர்கள் !
#ஜெய்பீம் ✊
சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவை முன்��ிறுத்தி வாழ்நாள் முழுவதும் போராடிய #பகுத்தறிவுப்பகலவன்_தந்தைபெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாள் இன்று!
சாதியற்ற சமத்துவ சமூகத்தை நோக்கிய நமது களப்பயணத்திற்கு பெரியாரின் சிந்தனைகள் என்றும் வழிகாட்டியாகட்டும்!
#HBD_Periyar148 @beemji
தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு மலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் திரு.இரா.பார்த்தீபன் அவர்களின் வாழ்த்துரை...
தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு மலர் வெளியீட்டு விழா இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. மாநாட்டு மலரை நான் (தொல்காப்பியன் திருமாவளவன்) வெளியிட உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார். விசிக பொதுச்செயலாளர்கள் சிந்தனைசெல்வன், ரவிக்குமார், திரைப்பட இயக்குநர் இரா.பார்த்திபன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
'தமிழ்த்தேசிய செயல்வடிவம் திருமா ' என்னும் தலைப்பில் கவியரங்கம் புரட்சிக்கனல் இளையகம்பன் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் வன்னிஅரசு அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
பாவலர் தமிழமுதன், பாவலர் அருண்பாரதி, பாவலர் தமிழ்த்தம்பி, பாவலர் லாவரதன் ஆகியோர் கவிப்பாடினர்.
இசையரசு கலைக்குழுவின் இசைப்பொழிவு நடைபெற்றது
பாவலர் அருண் பாரதி அவர்களின் கவிதை...
தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு மலர் வெளியீட்டு விழா இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. மாநாட்டு மலரை நான் (தொல்காப்பியன் திருமாவளவன்) வெளியிட உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார். விசிக பொதுச்செயலாளர்கள் சிந்தனைசெல்வன், ரவிக்குமார், திரைப்பட இயக்குநர் இரா.பார்த்திபன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி ஆகிய��ர் வாழ்த்துரை வழங்கினர்.
'தமிழ்த்தேசிய செயல்வடிவம் திருமா ' என்னும் தலைப்பில் கவியரங்கம் புரட்சிக்கனல் இளையகம்பன் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் வன்னிஅரசு அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
பாவலர் தமிழமுதன், பாவலர் அருண்பாரதி, பாவலர் தமிழ்த்தம்பி, பாவலர் லாவரதன் ஆகியோர் கவிப்பாடினர்.
இசையரசு கலைக்குழுவின் இசைப்பொழிவு நடைபெற்றது
. @TVKVijayHQ : சார் மிரட்டிட்டிங்க.... ஃபயர் சார்... 💥
@thirumaofficial : முழு மனதுடன் பாராட்டும் அவரது பெருந்தன்மையை நான் அவரிடம் கண்டேன், அவரிடம் எந்த வயிற்று எரிச்சலும் இல்லை, போட்டி பொறாமையும் அவரிடம் இல்லை !
தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை கண்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், “சூப்பர் சார்! ஃபயர் சார்! பின்னிட்டீங்க சார்!” என்று தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களைப் பாராட்டினார்! @CMOTamilnadu@thirumaofficial
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களின் பிறந்த நாள் மற்றும் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டு மலர் வெளியீட்டு ��ிகழ்வில் பங்கேற்று உரையாற்றினேன்
தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு மலர் வெளியீட்டு விழா இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. மாநாட்டு மலரை நான் (தொல்காப்பியன் திருமாவளவன்) வெளியிட உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார். விசிக பொதுச்செயலாளர்கள் சிந்தனைசெல்வன், ரவிக்குமார், திரைப்பட இயக்குநர்கள் இரா.பார்த்திபன், மாரி செல்வராஜ், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
'தமிழ்த்தேசிய செயல்வடிவம் திருமா ' என்னும் தலைப்பில் கவியரங்கம் புரட்சிக்கனல் இளையகம்பன் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் வன்னிஅரசு அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
பாவலர் தமிழமுதன், பாவலர் அருண்பாரதி, பாவ��ர் தமிழ்த்தம்பி, பாவலர் லாவரதன் ஆகியோர் கவிப்பாடினர்.
இசையரசு கலைக்குழுவின் இசைப்பொழிவு நடைபெற்றது .
ஆக. 30 - மக்கள் தலைவர் அய்யா மூப்பனார் அவர்களின் நினைவு நாள்!
தேர்தல் புறக்கணிப்பு அரசியலில் இருந்த விடுதலைச் சிறுத்தைகளை தேர்தல் பங்கேற்பு அரசியலுக்கு கொண்டு வந்தவர் அய்யா மூப்பனார் அவர்கள்.
1999ஆம�� ஆண்டு மக்களவை தேர்தலின் போது, சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஆர்��்பரித்த மக்களின் எழுச்சியால் கூட்ட மேடையே சரிந்தது. 'எம்.ஜி.ஆருக்கு பிறகு உங்களுக்கு தான் இப்படியொரு கூட்டத்தை பார்க்கிறேன்' என்று அய்யா மூப்பனார் அவர்கள் தலைவர் எழுச்சித்தமிழரிடம் குறிப்பிட்டு வாழ்த்தியது இப்போதும் எங்கள் நினைவில் உள்ளது. இன்றும் அதே மக்கள் எழுச்சி தொடர்கிறது.
பொதுச் சமூகத்தால் 'பண்ணையார்' என்று அறியப்பட்டாலும், அவர் ஒரு மிகச் சிறந்த சனநாயகவாதி என்பது அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு தெரியும். எளிய மக்களும் அதிகாரம் பெற வேண்டும், ஆட்சியில் இடம்பெற வேண்டும் என்று விரும்பியவர்.
அய்யா மூப்பனார் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் என்றும் நன்றியுடன் நினைவு கூறுவோம்!
@thirumaofficial
மதுரையில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர் நேற்று நள்ளிரவில் சாதி வெறியர்களால் கொடூரமாக வெட்டப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது…
நடந்தது மேலவளவு என்று கேள்வியுறும் போ���ு,
பேரதிர்ச்சியாகிறது… 💔💔
மேலவளவில் சாதிவெறித் தாக்குதல்
தலைவர் @thirumaofficial அறிக்கை
மதுரை மாவட்டம் , மேலூர் அருகேயுள்ள மேலவளவு கிராமத்தில் நேற்று இரவு 'விடுதலைக் களம்' அருகே நின்று பேசிக்கொண்டிருந்த விசிக இளைஞர்களை அதே ஊரைச் சார்ந்த சாதிவெறியர்கள் இருவர் இருசக்கர வண்டியில் வந்து திடீரென அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். அங்கே இருந்த மூவரில் இருவர் தப்பிய நிலையில், செல்வம் என்கிற இளைஞர் படுகாயமுற்று மதுரை அரசு மருத்துவம���ையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கழுத்தை நோக்கி சாதிவெறியர்கள் ஓங்கி வெட்டியபோது அதனை கைகளால் தடுத்துள்ளார். இதனால் அவரது வலது மணிக்கட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் குழு, அதனை ஒட்டுவதற்கு உரிய அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகிறது.
நள்ளிரவுக்கு மேல் மருத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசி உரிய சிகிச்சை அளிக்கும் படி கோரினேன். அத்துடன், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அந்நேரத்தில் தொடர்பு கொண்டு கொலவெறித் தாக்குதலை நடத்திய சாதிவெறிக்கும்பலைக் கைது செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.
அதே நேரத்தில் மதுரை மாநகர் செல்லூர் அருகேயுள்ள அம்பேத்கர் நகரில் அழகர் என்கிற விசிக பொறுப்பாளரைச் சாதிவெறி கும்பல் இருட்டில் பதுங்கியிருந்து கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். கொடுவாளால் வெட்டியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுஉயிருக்கு ஆபத்��ான நிலையில் அதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிர் காக்கும் பொருட்டு அவருக்கு விரைந்து உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டேன்.
கொடூரமான இந்த இரண்டு சாதிவெறியாட்டங்களிலும் தொடர்புடைய அனைவரையும் ��ைது செய்து தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் .
'பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும்' என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மண்ணின் மைந்தர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (25.08.26) பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, விமான நி���ைய திட்டத்துக்கு எதிரான போராட்ட கள��்தில் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களும், தலைவரின் வழிகாட்டுதலில் நாமும் நேரில் பங்கெடுத்து மக்களுக்கு துணை நின்றதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தனர்.
@CMOTamilnadu
@thirumaofficial
நாளை ஆகஸ்டு 27-
சமூக நீதியின் புதிய அத்தியாயம்!
நாளை சட்டப்பேரவையில் விடுதலைச்சிறுத்தைகள் முன்வைக்கப்போகும் முதல் மானியக் கோரிக்கை !
நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சராக தனது முதல் மானியக் கோரிக்கையை முன்வைக்கவிருக்கும் அன்புத் தோழர் வன்னியரசு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
பதவி என்பது தனிப்பட்ட அதிகாரத்தின் அடை���ாளம் அல்ல;
சனாதனத்தால் ஒடுக்கப்பட்ட பூர்வ தமிழ்குடிகளை அதிகார மையத்தை நோக்கி நகர்த்தி செல்ல வேண்டிய புரட்சிகர பொறுப்பு என்பதை சிறுத்தைகள் அறிவோம்.
விடுதலைக்களத்திலும், கருத்தியல் தளத்திலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமரசமின்றி போராடி வருபவர் தோழர் வன்னியரசு அவர்கள். எழுச்சித்தமிழரின் ஈடு இணையற்ற தளபதி இவர் என்பதை யாரும் மறுக்கவியலாது.
போராட்ட களத்தில் தெறி���்த தோழர் வன்னியின் குரல் நாளை அரசின் கொள்கை முடிவுகளாகவும், நலத்திட்டங்களாகவும் , அரசாங்க நிதி ஒதுக்கீடுகளாகவும் மாறவிருக்கிறது என்பதை எண்ணும் போது மனம் பெருமிதத்தால் மிதக்கிறது.
சமத்துவத்திற்கான போரில் சாதி ஒழிப்புக்களத்தில் களப்பலியான தோழர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்ச��ியாக செயல் வடிவமான செவ்வணக்கமாக உங்கள் உரை அமையட்டும்!
தங்களின் முதல் மானியக் கோரிக்கை என்பது ஒரு துறையின் நிதிக் கோரிக்கையாக மட்டுமல்ல;
சமூக நீதியின் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கான கொள்கைப் பிரகடனமாகவும்,
பட்டியல் வாழ பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக பயணத்தில் ஒரு மைல் கல்லாகவும் அமையும் என உறுதியாக நம்புகிறேன்.
அரசியல் அதிகாரம் சமூக மாற்றத்திற்கான கருவியாக மாற வ��ண்டும் என்பதே புரட்சியாளர் அம்பேத்கரின் வழிகாட்டுதல்.
சமூக நீதி வெறும் மேடை பேச்சல்ல. அது சனாதனத்தின் வேர்களை வெட்டி வீழ்த்தும் ஆயுதம் என்பதுதான் எழுச்சித்தமிழர் நமக்கு கற்றுத்தந்த பாடம்.
இவற்றை நிஜமாக்கும் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கும் மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் அன்புத் தோழர் வன்னியரசு அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள் !
பெற்றத்தாயை நாம் இழந்திருந்தாலும்
உற்றத்தாயென உங்களை வாழ்த்தும் எழுச்சித்தமிழர் நம் தலைவருடன் சேர்ந்து லட்சோப லட்சம் சிறுத்தைகளின் சார்பில் நானும் வாழ்த்துகிறேன்.
சும்மா கலக்குங்க வன்னி!
@VanniTamizhVCK
ஒரு பிரச்சினை உண்மையோ வதந்தியோ, எதுவா இருந்தாலும் எப்படி அணுகனும், தீர்த்து வைக்கனுங்குறத வன்னி அரச பாத்து மத்த அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் கற்றுக்கொள்ள வேண்டும்...
ப்பா என்னா பாஸ்ட்டு @VanniTamizhVCK 🔥
18.08.2026
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ��ிரு.ஜோசப் விஜய் அவர்களுடன்
சந்திப்பு
~~~~~~~
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார் நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் அவர்கள், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஆட்சி அமைத்து 100 நாட்கள் வெற்றிகரமாக கடந்திருக்கிறது, 100 நாட்கள் வெற்றிகரமான ஆட்சியை நடத்த���யிருக்கிற முதலமைச்சர் அவர்களை வாழ்த்துவதற்கும், இந்த ஆட்சி ஐந்தாண்டு காலம் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்வதற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை உறுதிப்படுத்துவதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து பேசினோம் நன்றி தெரிவித்தோம்!
த��ிழ்த்தாய் வாழ்த்துக்குத்தான் அனைத்து
நிகழ்ச்சியிலும் முதலிடம் என்பதை உறுதிப்படுத்தி தீர்மானம் கொண்டு வந்ததற்காகவும் எங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டோம். அதேபோல நாடாளுமன்ற தொகுதி வரையறை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி தமிழ்நாட்டில் அரசியல் ரீதியான வேறுபாடுகள் கட்சிகளுக்கு இடையே இருந்தாலும் தமிழர் அனைவரும் ஒரே அணியில் இருக்கிறோம் என்பதை இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய அந்தப் பாங்கையும் நாங்கள் சுட்டிக் கட்டி அவருக்கு எங்கள் பாராட்டுகளை தெரிவித்தோம்!
தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டு தீர்மானங்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கினோம். ஏனென்றால் மாநில உரிமைகள் தொடர்பான அனைத்து தளங்களிலும் தமிழ்நாடு மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை 125 தீர்மானங்களாக வரையறுத்து இருக்கிறோம். அந்த தீர்��ானங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் மாநில சுயாட்சியை ஓங்கி உரத்து முழங்குவது என்பதாகும். மாண்புமிகு முதலமைச்சர் மாநில சுயாட்சியை தமிழ்நாடு அரசு தவெக அரசு வலுவாக முன்னெடுக்க வேண்டும்; பேரறிஞர் அண்ணா, க��ைஞர் காலத்தில் இந்த கோரிக்கை வலுவாக பேசப்பட்டது போல் அந்த தலைவர்களை தொடர்ந்து நீங்களும் அதே வழியில் மாநில சுயாட்சிக்கான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதையும் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
தமிழ்த்தேசியம் என்பது வெறும் மொழி உணர்வு இனஉணர்வு அல்ல பிற மொழி பேசும் இனத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலும் அல்ல. சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, அகில இந்திய அளவில் தேசிய இனங்களின் ஐக்கியம் ஆகியவற்றை முன்னிறுத்துவது தான் தமிழ்த்தேசியம் என்பதை உணர்த்தும் மாநாடாக இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம்.
அந்த வகையில் இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. கூடுதலாக மேகமலை மற்றும் அமுதன் படுகொலை ஆகிய பிரச்சனைகளைய��ம் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்றோம். மேகமலையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அங்கே வசித்து வரும் மக்களை விவசாயம் செய்து வரும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தப்படக்கூடாது. அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டிருக்கிற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்ற கருத்தை ஏற்கனவே சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. நிர்மல் குமார் அவர்கள் கூறியிருக்கிறார். அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். சீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் அந்த மக்களுக்கு உரிய நீதியை பெற்று தர வேண்டும் என்பதையும் முதலமைச்சரிடம் எடுத்து சொல்லி இருக்கிறோம்.
அமுதன் படுகொலையில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக அமுதனின் பெற்றோர் உள்ளிட்ட பலர��ம் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற நிலையில் அந்த குறிப்பிட்ட வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்பதையும் தாண்டி போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு போதை பொருள் ஒழிப்பு அதிரடி படை ஒன்றை உருவாக்கிட வேண்டும் அதற்கு முதலமைச்சரின் கூடுதல் கவனம் தேவை என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே முன் வைத்திருக்கிறோம்.