மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் இன்று தாய்மண் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
அவரை வரவேற்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை அன்பளிப்பாக வழங்கினோம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில�� தொகுதியில் போட்டியிட போவதாக வந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தின் சமகால அரசியல் சூழலையும், சமூகநீதி சார்ந்த எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவு முக்கியமானதும் பொருத்தமானதும் ஆகும். தமிழக சட்டமன்றத்தில் சாதி ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் போன்ற விடயங்களில் அவரது குரல் வலிமையாக ஒலிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.
ஜனநாயகத்தை காக்கவும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் மகத்தான வெற்றியடைய வாழ்த்து��ள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு களம் காணவிருக்கும் அனைவரும் சட்டமன்றத்தில் அண்ணன் அவர்களது தலைமையில் வலுவான குரலாக ஒலித்திட வாழ்த்துகள், மகிழ்ச்சி. @thirumaofficial @VCKofficial_
#எச்சரிக்கை
தென் மாவட்டம் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் இப்போது மக்களுக்கு பாதுகாப்பற்ற மாவட்டமாக மாறிவருவது பெரும் துயரத்தை அளிக்கிறது.
நேற்று நாங்குனேரியில்
சமூக விரோதக்கும்பல் ஒன்று அப்பாவி பொது மக்களை
பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலை வெறித்தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
பலர் படுகாயங்களுடன் மருத்���ுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் சாதி,மதம் பாராது ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கம் போல,காவல்துறை கொ��ைகாரக்கும்பலை பிடிக்காமல்,
அப்பாவி மக்களை சமாதானப்படுத்தி வருகிறது.
நாங்குனேரி சுற்றுப்பகுதியில்
பதற்றமும் பாதுகாப்பின்மையும் கூடிக்கொண்டே இருக்கிறது.
காவல்துறை அதிகாரிகள்
சாதி வெறிக்கும்பலை பாதுகாக்கவே அக்கறை காட்டி வருகின்றனர்.
இதுவரை கொலைக்கும்பல் கைது செய்யப்படவில்லை.
கொலைக்கும்பல் ஒருவனுடைய பெயரை சொல்லி வாழ்க என கூச்சலிட்டு செல்கிறது.
அந்த சமூகவிரோதி யார் என போலீசுக்கு தெரியாதா?
ஏன் இந்த அலட்சியம்?
ஓய்வு பெற்ற நீதியரசர்
அய்யா சந்துரு அவர்களின் பரிந்துரையில்,
தென் மாவட்டங்களில் பெரும்பான்மை சாதியை சார்ந்த காவல்துறை அதிகாரிகளை இடம் மாற்ற செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனால், இதுவரை அப்படி எந்த மாற்றமும் நடக்கவில்லை.
அதனால்,இப்படியான கொலை வெறிக்கும்பல் வெறியாட்டம் போடுகிறது. எந்த தவறும் செய்யாத அப்பாவி பொதுமக்கள் கொல்லப்ப��்டிருப்பது சமூகப்பதற்றத்தையே உருவாக்கியுள்ளது.
ஆகவே,@tnpoliceoffl சம்மந்தப்பட்ட சமூக விரோதிகளை குண்டர் ச��்டத்தில் கைது செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு
நெல்லை மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக அறிவித்து,
சமூக அமைதியை நிலை நிறுத்த முன் வரவேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் விடுதலைச்சிறுத்தைகள் நிற்கிறோம்.
அதிகார வர்க்கமும் பாதிக்கப்பட்டோர் பக்கம் நின்று
ஆற்றுப்படுத்த வேண்டும்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3.2.2026