மக்களுடைய Emotions Marketing பண்ணக்கூடிய வேலையை த.வெ.க அரசு சிறப்பாக செய்கிறது இதனால் ஒரு மாநிலத்துடைய பொருளாதார அதிகாரம் சத்தம் இல்லாம��் அண்டை மாநிலங்களுக்கு செல்கிறது.
தன்னால் முடிந்த அளவுக்கு தென்னிந்திய முதலமைச்சர்களை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்
புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பாரிஸ் அயலக மறைபரப்புச் ச��ையின் (MEP) புதுச்சேரி வருகையின் 250-வது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டேன்.
புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையின் (MEP) புதுச்சேரி வருகையின் 250-வது ஆண்டுவிழாவில் மக்கள் தலைவர் @thirumaofficial கலந்து கொண்டார்...💙❤️ @vckitwingoffi
புதுச்சேரி மாநிலம் பு��ுச்சேரி காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையின் (MEP) புதுச்சேரி வருகையின் 250-வது ஆண்டுவிழாவில் கலந்து கொண்டேன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் தோழர் தீக்கதிர் பாலு அவர்களின் துணைவியார் மறைந்த அம்மையார் உஷாராணி ���வர்களின் திருவுடலுக்கு மக்கள் தலைவர் @thirumaofficial மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். @vckitwingoffi
சென்னை வேளச்சேரி பகுதியில் தீக்கதிர் ஆசிரியர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணைத் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் தோழர் தீக்கதிர் பாலு அவர்களின் துணைவியார் மறைந்த அம்மையார் உஷாராணி அவர்களின் திருவுடலுக்கு ம��லை அணிவித்து அஞ்சலி செலுத்தினோம்.
தமிழ்நாட்டு அரசியலில் விடுத���ைச் சிறுத்தைகளின் பாய்ச்சல்-
விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) 1980களில் தலித் பேந்தர்ஸ் இயக்கமாகத் தொடங்கி, 1999-ல் தேர்தல் அரசியலில் நுழைந்த பிறகு தமிழ்நாட்டில் தலித் மக்களிடையே பெரும் சமூக விழிப்புணர்வையும் அரசியல் உணர்வையும் உருவாக்கியது.
முன்பு சாதி வன்முறைகள், தீண்டாமை, நிலமற்ற நிலை ஆகியவற்றை மௌனமாக சகித்துக்கொண்ட தலித் சமூகம், திருமாவளவன் தலைமையில் “அடங்க மாறு, அத்து ம���று, திமிரி எழு, திருப்பி அடி” என்ற முழக்கத���துடன் அமைப்புரீதியாக எழுந்தது.
கட்சி சாதி அட்டூழியங்களை பதிவுசெய்து பிரசுரங்களாக வெளியிட்டு, சென்னகரம்பாட்டி, நரசிங்கம்பட்டி போன்ற இடங்களில் நடந்த கொலைகள் மற்றும் வன்முறைகளை பொதுவெளியில் கொண்டுவந்தது.
இதனால் தலித் மக்கள் தங்கள் உரிமைகளைக் கேட்கத் தொடங்கினர்.இது ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பைத் தூண்டினாலும், தலித் இளைஞர்களிடம் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் வி��ைத்தது.
அரசியல் ரீதியாக விசிக தலித் குரலை சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் எழுப்பியது. முன்பு திராவிடக் கட்சிகள் தலித் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அவர்களை ஒதுக்கிய நிலையை மாற்றி, கூட்டணி அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியது.
இதனால் தலித் பிரதிநிதித்துவம் அதிகரித்தது, அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்தல், எஸ்சி/எஸ்டி வளர்ச்சித் திட்டச் சட்டம் போன்ற ���டவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கட்சி சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, நில உரிமை (பஞ்சமி நிலங்கள் மீட்பு), கைகளால் மலம் அள்ளும் தொழிலை ஒழித்தல் ஆகியவற்றை முக்கியமாக வலியுறுத்தியது.சாதி திருமணங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆணவ கொலைகளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தது, இப்போதும் அதற்கான சிறப்புச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
தலித் மக்கள் மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரிடையேயும் சமூக நீதிக் கருத்துகளைப் பரப்பியது.
அதே நேரத்தில் சாதி வன்முறைகள் முழுமையாக நின்றுவிடவில்லை என்பதும், உள்சாதி பிளவுகள் (பறையர், பள்ளர், அருந்ததியர்) தொடர்வதும் உண்மை. ஆனால் விசிக வந்த பிறகு தலித் சமூகம் அரசியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு, தங்கள் உரிமைகளைப் பேசும் தைரியத்தைப் பெற்றது என்பதே முக்கிய சமூக மாற்றமாகும்.
இன்று கட்சி ஆட்சிப் பங்கில் இருக்கும் நிலையில் இந்த மாற்றங்கள் மேலும் வலுப்பட வாய்ப்புள்ளது.
#vck #dpi
@thirumaofficial
@Vannikural_
@VckBalaji
@WriterRavikumar @sangathamizhanM
@vckitwingoffi
@Elansezhian3
@mohan_selvaraj
@AthiOfficial
@Periambed15
@Danieljoshua_15
@E_quality_5ter_
@Rajstee3
@rajmohaneee50
@burnitwithblue
@poomaa_Official
@Sivaa_Comrade
@Nakkeeranj93771
@Stalin78723
@sengaivinothR
என்ன @imrajmohan இன்று நீங்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆனது முதல்வர் விஜய் ஆக இருக்கலாம்,
ஆனா அதற்க்கு விதை போட்டவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அவர் இல்லையேல் நீங்க இல்ல,
மற்ற கட்சிகள் தான் இருட்டடிப்பு செய்றானுங்க பார்த்தா நீங்களும் அதே தான் பண்றீங்க,
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிலாது நபி : அனைத்துலக சகோதரத்துவ நாள்!
______________________
நபிகள் நாயகம் பிறந்த நாளான இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமுவந்த 'மிலாது நபி நாள்' வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மனிதகுலத்தை நல்வழிப்படுத்தி மனித நேயத்தைச் செழிக்கச் செய்த மகத்தான பேராளுமை மிக்கவர் நபிகள் நாயகம்.
மனிதகுலத்தில் நிலவிய பாகுபாடுகள், ��ன்முறைகள், உழைப்புச் சுரண்டல் போன்ற சமூகத் தீமைகளை எதிர்த்துப் போராடியவர். இறைநம்பிக்கையும் அதனடிப்படையிலான இறையச்சமும் தனி மனித நல்லொழுக்க மேம்பாட்டுக்கு அடிப்படைகளாக அமையும் என்கிற நம்பிக்கையோடு போதனைகளை அருளியவர். பேரன்பும் பெருங்கருணையும் தாம் மக்களிடையே நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் வளர்க்குமென்கிற உயரிய மாண்புகளைப் பரப்பியவர்.
அத்தகைய மாமனிதர் நபிகள் பெருமானின் நன்னெறிகளைப் பரப்பவும் அதன் சகோதரத்துவத்தை உலக மாந்தரிடையே நிலைபெற செய்யவும் இந்நாளில் உறுதியேற்��ோம்.
அனைவருக்கும் 'சகோதரத்துவ நாள்' வாழ்த்துகள்!
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.