பக்ரைன் நாட்டு சிறையில் வாடும் 28 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்து தாயகம் மீட்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம், இடிந்தகரை பகுதியைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடித்தொழில் செய்து வந்த நிலையில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக அவர்களின் படகு பக்ரைன் நாட்டின் எல்லைக்குள் தவறுதலாகச் சென்றதால் கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி அந்நாட்டின் கடலோரக் காவற்படையால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்ய��்பட்ட 28 தமிழ்நாட்டு மீனவர்களையும் விடுவிக்க தூதரக அதிகாரிகள் ��ூலம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசிடம் மீனவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்த நிலையிலும், ஒன்றிய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் பக்ரைன் நீதிமன்றம் 28 மீனவர்களுக்கும் 6 மாதகால சிறைதண்டனை விதித்துள்ளது. இதனால் மீனவர்களின் வருமானத்தை நம்பி, அதையே வாழ்வாதாரமாக கொண்ட அவர்களது குடும்பங்கள் செய்வதறியாது தவித்துப்போயுள்ள��ர்.
திடிரென்று நிகழ்ந்த இயற்கைச்சூழல் மாற்றத்தால் நிகழ்ந்த எதிர்பாராத தவறுக்கு ஆறுமாத காலம் தண்டனை என்பது மிக கொடுமையானதாகும். ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, பக்ரைன் நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்யப்பட்ட 28 மீனவர்களும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வழக்கம்போல மீனவர்களை விடுவிக்க வேண்டுமென்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதோடு கடமையை மு��ித்துக்கொண்டது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது. எல்லாவற்றிற்கும் கடிதம் மட்டுமே எழுத முடியும் என்றால் அயலகத் தமிழர் நலத்துறை என்றொரு அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு எதற்கு? என்ற கேள்வியும் எழுகிறது.
ஆகவே, இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க எவ்வித நடிவடிக்கையும் எடுக்காமல் அக்கொடுமைகளைத் தொடர்ச்சியாக அனுமதிப்பதுபோல் அல்லாமல், பக்ரைன��� அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நாடாளுமன்றத்தில் கூட்டணி பலத்தோடு 40 உறுப்பினர்களை கொண்டுள்ள திமுக, இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்தி, தூதரகம் மூலம் மீனவர்களுக்கு உரிய சட்ட உதவிகள் கிடைப்பதற்கும், மீனவர்களை விடுவித்து அவர்களின் குடும்பங்களிடம் பாதுகாப்பாகச் சேர்ப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன்.
- ச��ந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய கோ இராஜகேசரி வர்மர், மாமன்னர் இராச இராச சோழனின் உண்மையான வரலாற்றின் ஒரு சில விடயங்களை படிக்கும் போது எம் தமிழினத்தினுடைய மற்றும் என்னுடைய கையாளாகததனத்தையும் எண்ணி வெட்கிதலைகுணிகிறேன், தான் இல்லை என்றாலும் அடுத்த 150 ஆண்டுகளுக்கு இந்த இனம் பசி பஞ்சம்
“தன்னுரிமையும் தனியரசும்”என்னும் நூல் வெளியீட்டு
திகதி :- 29-09-2024 ஞாயிற்றுக் கிழமை
இடம் :- Hill House St Helier
Bishopsford Road
Morden SM4 6BL
நேரம் :- 04.30 PM
https://t.co/bN6IscQjV9
திலீபனுடன் ஆறாம் நாள்!
அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.
மறைவிடம் சென்று சிறுநீர் கழிக்கப் போவதாகக் க���றினார்.
அதன்பின் ஆச்சரியப்படுமளவிற்கு சுமார் அரை லீற்றர் அளவு சலம் போனது. ஏனக்கு அது மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. ஐந்து நாட்களாக எதுவும் குடிக்காமல் இருக்கும் ஒருவரால் இது எப்படிச் சாத்தியமாக முடியும்? அன்று வைத்திய நிபுணர் சிவகுமார் அவர்களிடம் இதுபற்றி மறக்காமல் கேட்டேன். அவர் எந்தப் பதிலுமே கூறாமல் மௌனமாக சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றார்
இரவு வெகுநேரம்வரை போச்சு���ார்த்தையின் முடிவு வரும் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த���ம்… ஆனால், அது வரவேயில்லை. இன்று மாலை சிறிலங்கா நவ சமாசக் கட்சித் தலைவர் திரு. வாசுதேவ நாணயக்கார, மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து திலீபனைப் பார்த்துவிட்டுச் சென்றனர். இரவு வெகுநேரம் வரை எனக்குத் தூக்கமே வரவில்லை.. ஆனால், திலீபன் தன்னை மறந்து நன்றாக உறங்கினார்.
அவரின் இரத்த அழுத்தம் 85 . 60
நாடித்துடிப்பு- நாடித்துடிப்பு- 120
சுவாசம் -22
ஏழாம் நாள் தியாக தீபம் திலீபன் நினை��லைகள் தொடரும்.) 120
சுவாசம் -22
#தியாகதீபம்_திலீபன்
❤️💛