தி.வி.க.வின் புதிய 52 மின்னூல்கள்
கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம். #PeriyarEBooks
https://t.co/Wnyz2IIM9D
@periyarmuzhakam
திண்டுக்கல் மாவட்ட திவிக தலைவர் கைது..
...... முருகன் மாநாட்டில் .........
"பழனி கோவில் வழிபாட்டு உரிமையை பறித்த பார்ப்பனர்கள் "
என்ற திவிகழக நூலை விநியோகம் செய்யக்கூடாது என்று தோழர் மருதமூர்த்தி அவர்களை கைது செய்திருக்கிறது காவல் துறை
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புத்தகம் *தற்போது முற்றிலும் இலவசமாக 👇🏽*
*"பழனி கோயில் வழிபாடு" - 'உரிமையைப் பறித்த பார்ப்பனர்கள்'*
ஆக.24,25ம் தேதிகளில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் பழநியில் நடைபெறும் "அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை" முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழக இணையதளப் பிரிவின் சார்பில் சிறப்பு வெளியீடாக
*"பழனி கோயில் வழிபாடு" - 'உரிமையைப் பறித்த பார்ப்பனர்கள்'* எனும் நூல் தற்போது முற்றிலும் இலவசமாக (2 நாட்கள் மட்டும் ) தரவிறக்கிக் கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி :
https://t.co/na7CDz247j
"10 ரூபாய் புத்தகம் காவல்துறைக்கு இவ்வளவு அச்சத்தைக் கொடுக்குமா ?"
"திராவிடர் விடுதலைக் கழக செயல்வீரர் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தோழர் மருதமூர்த்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளார் !"
"தோழரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் !"
-- கழகத் தலைவர் தோழர் *கொளத்தூர் மணி* அறிக்கை !
@kolathur_mani
எதற்காக இந்த கைது ?
புத்தக விற்பனை அறிவிப்பைக் கண்டு சங்கடப்படும் பழனிக் கோயிலை ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பனர்களுக்கு ஆதரவான - தமிழ், தமிழர் வழிபாட்டுக்கு எதிரான நடவடிக்கை அல்லவா இது?
ஆக.24,25ம் தேதிகளில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் @tnhrcedept சார்பில் பழநியில் நடைபெறும் "அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை" முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழக இணையதளப் பிரிவின் சார்பில் சிறப்பு வெளியீடாக
*"பழனி கோயில் வழிபாடு" - 'உரிமையைப் பறித்த பார்ப்பனர்கள்'* எனும் நூல் சலுகை விலையில் வழங்குவதற்காக அச்சிடப்பட்டுள்ளது.
முதல் பதிப்பு 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த நூல் தற்போது சலுகை விலையில் *வெறும் 10 ரூபாய்க்கு* மாநாடு நடக்கும் *இரண்டு நாள் மட்டும்* கழகத்தின் சார்பில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதில்
தமிழர்கள் வசம் இருந்த பழனிக் கோயில் பார்ப்பனர்கள் வசம் பறிபோன வரலாறு என்ன ?
அதை மீட்டெடுக்க நடந்த போராட்டங்கள் என்ன ?
இது குறித்து பழனி திருபோகநாதர் ஆதினம் தவத்திரு சிவானந்த புலிப்பாணி அடிகளார் கூறுவது என்ன ? ...
போன்ற செய்திகள்தான் இந் நூலில் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டு அரசின் @CMOTamilnadu அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க எடுக்கும் முன்னெடுப்புக்கு வலு சேர்க்கும் இம்முயற்சியை ஏன் எதிர் நடவடிக்கையாகக் கருதுகிறார்கள்?
ஆரியக் கற்பனைக் கதைகளை நம்பி ஏற்றுக் கொண்டிருக்கும் கடவுளர்களுக்கு மேலாக, மாற்றாக முத்தமிழ் முருகனை பரிந்துரைக்கும் தமிழ்நாட்டரசின் @PKSekarbabu முயற்சிக்கு எதிரான - தமிழ் முருகனுக்குத் தமிழர்களே வழிபாடு செய்துவந்த நிலையை மாற்றி, ஆரியர்களின்,ஆரியமொழி வழிபாட்டைத் திணித்ததை மாற்றி, மீண்டும் தமிழர்களின் வழிபாட்டை, தமிழ் வழிபாட்டைக் கோரும் இந்நூலினை ஏன் தடுக்க விரும்புகிறார்கள்?
புரியாத புதிரா? புரிந்து கொள்ள முடியோதோரின் செயலா?
இப்போதாவது புரிந்து கொண்டு தடுத்து வைக்கப் பட்டுள்ள தோழரை விடுவிக்குமாறு வலியுறுத்துகிறோம்.
-- *கொளத்தூர் மணி*,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
24.08.24
திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தோழர் மருதமூர்த்தி முன்னெச்சரிக்கை கைது.
அனைத்துலக முருகன் மாநாட்டில் பழனி கோயில் உரிமையை பறித்த பார்ப்பனர்கள் என்ற கழக நூலை விற்பனை செய்யக்கூடாது என்று இந்த கைது நடவடிக்கை நடந்திருக்கிறது.
பார்ப்பனியத்திற்கு துணை போகும் தமிழ்நாடு காவல்துறையை @tnpoliceoffl வன்மையாக கண்டிக்கிறோம்
@CMOTamilnadu@PKSekarbabu@tnhrcedept
பழனி கோயில் வழிபாட்டு உரிமையைப் பறித்த பார்ப்பனர்கள்
தவத்திரு புலிப்பாணி அடிகளார் பேச்சு நூல் வடிவில்
மாநாட்டு திடலில் கிடைக்கும்.
விலை 10₹
சிறப்பு வெளியீடு
@tnhrcedept@PKSekarbabu@CMOTamilnadu
நேற்று நடந்து முடிந்த திண்டுக்கல் தேனி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில்...
#தேனி மாவட்ட அமைப்பாளராக தோழர் தேனி ராயன் நியமிக்கப்பட்டார்
அவருடன் புதிய தோழர்கள்
சந்திரன்
ஜெகதீசன்
சிவக்குமார்
காளியப்பன் ஆகியோர் கழகத்தில் இணைந்தனர்.