எனக்கு இந்தப் பாடல் ஒரு டைம் மெஷின். இதுபோல சில டைம் மெஷின்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும்.
லைபாய் சோப்பின் வாசனை நுகரும் பொழுதெல்லாம், ஊர் பம்ப் செட்டில் குளித்த ஞாபகம் வரும்.
சந்திரிகா சோப்பின் வாசனை, முதன் முதலில் அந்த சோப்பு வாங்கி பயன்படுத்திய ஹாஸ்டல் ஞாபகங்களை கிளறிவிடும்.
மருதமலை மாமணியே முருகையா பாடல் கேட்கும் பொழுதெல்லாம்
பாட்டி ஊரான கெங்குவார்பட்டி சுரேஷ் தியேட்டர் ஞாபகம் வரும்
பக்கோடா சாப்பிடும் போது காரமான மிளகாய் கடித்து விட்டால் வத்தலக்குண்டு ஸ்ரீராம் ஸ்வீட் ஸ்டால் ஞாபகம் வந்துவிடும்
தோசை கல்லில் மாவை ஊற்றும் பொழுது லேசான புளிப்பு வாசனை நுகர நேரிட்டால் ரெங்கவிலாஸ் ஞாபகம் வரும்.
அதுபோல இந்த பாடல் கேட்கும் பொழுதெல்லாம், அய்யம்பாளையத்தில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் டோர்னமெண்ட் ஞாபகம் வரும். எங்கள் ஊர் கிரிக்கெட் அணி அந்த டோர்னமெட்டில் பங்கு பெற்றது. மேட்ச் பார்க்க சைக்கிளில் சென்று இருந்தோம். அந்த சமயத்தில்தான் இந்த பட பாடல் முதன்முறையாக கேட்க நேரிட்டது. அன்று முதல் இன்று வரை இந்தப் பாடலை எப்போது கேட்டாலும்
வாழ்வின் வசந்த காலம் ஞாபகத்துக்கு வந்துவிடும்.