"...ஆக்கிரமிப்பு நிலத்திற்கு பதில் வேறு நிலத்தை ஏன் பெறக்கூடாது .." என பார்ப்பனர்களால் நடத்தப்படும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அரசு நிலம் 55 ஏக்கரை ஆக்கிரமிப்பு செய்த வழக்கில் உயர்நீதி மன்றம் ஆலோசனை.
இதே உயர்நீதி மன்றம் சென்னை அனகாபுத்தூரில் 50 ஆண்டுகாலம் குடியிருந்த ஏழை மக்களின் வீடுகளை "..இராணுவத்தை வைத்து அகற்றிடஉத்திரவிடுகிறேன்'.." என்று கடந்த ஆண்டு உத்திரவிட்டு, வீடுகளை இடிக்க வைத்தது.
அனகாபுத்தூர் மக்கள் ஆற்று கரைகளை ஆக்கிரமித்தார்கள் என்பதற்கான போதுமான ஆதாரம் இல்லாமலேயே இவ்வாறு உத்திரவிட்டது. ஆனால் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நன்கு அறிந்தே, 55-ஏக்கர் அரசு நிலத்தை களவாடி ஆக்கிரமித்தது.
இந்த வழக்கை ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது நீதிமன்றம். ஆனால் அனகாபுத்தூர் வழக்கில் விசாரணையை காலையில் தொடங்கி பிற்பகலில் இடிக்க உத்திரவிட்டு மாலையில் 500 வீடுகளை இடித்து முடித்தனர்.
இந்த நாட்டில் 'நீதி' என்பது பணக்காரனுக்கானது, 'அநீதி' என்பது ஏழைக்கானது.
இவ்வளவு நாட்களாக பெரியாருக்கு எதிராக 97விழுக்காட்டிலிருந்தே ஆட்களை கொண்டுவந்து நிறுத்தினான்!
இப்போது எதிர்சேனை 3 விழுக்காட்டிலிருந்தே பெரியாருக்கு எதிராக ஆட்களை நிறுத்துகிறான்!
உ வே சாமிநாதன்
சூரியநாராயண சாஸ்திரி
பாரதி....
இவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணியைப்போல வேறு தொண்டு செய்த யாராவது ஒரு தமிழனைக்காட்டுங்கள் பார்க்கலாம் என்கிறான் சீமான்!
பொதுமேடைகளில் அக்கிராசனார் அவர்களே எனத்தொடங்கி நடந்தப்பட்டன கூட்டங்கள்!
பெரியார், "தலைவர்" அவர்களே எனக்கூறி கூட்டங்களில் பேசித்தொடங்கினார்!
தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் அறிமுகப்படுத்தினார் பெரியார்!
திருக்குறள் மாநாடுகளை நடத்தினார் பெரியார்!
சமஸ்கிருதம் ஒழிந்த தமிழை படிப்படியாக எழுதிப்பரப்பினார் பெரியார்!
கன்னிகாதானம் பதிவிரதை சதி சாதி என்ற சொற்கள் தமிழ்பதங்கள் அல்ல என்கிறார் பெரியார்!
1930இல் மே 12 மற்றும் 13 தேதிகளில் ஈரோட்டில் தமிழ்இசை மாநாட்டை நடத்தினார் பெரியார்! மாநாட்டு தீர்மானத்தின் வழியாக தமிழ்நாட்டில் இசைக்கச்சேரி நடத்த விரும்புகின்றவர்கள் தமிழ்இசை மேதமையாளர்களையே பயன்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார்!
20/04/1930 குடிஅரசு ஏட்டில் பார்ப்பனரல்லாத இசைக்கலைஞர்களின் பட்டியலை வெளியிட்டார் பெரியார்!
07/02/1944 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் "தமிழிசையும் கிழக்கும் மேற்கும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் பெரியார்!
சுயமரியாதை திருமணங்கள் என்பது வைதீக வடமொழி ஆதிக்கத்தை ஒழித்து தமிழை கொண்டுவருவதற்காகத்தானே?
பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராக வேண்டும் என்பதும் பூசை மொழியாக தமிழைக்கொண்டுவரவேண்டும் என்பதற்காகத்தானே?
தந்தை பெரியாரின் பிரச்சாரத்தால்தானே இராமையா அன்பழகன் ஆனார்! நாராயணசாமி நெடுஞ்செழியன் ஆனார்! சாரங்கபாணி, வீரமணி;
கோதண்டபாணி, வில்லாளன்;
புஷ்பராஜ், பூவேந்தன் ஆனார்கள்!
சூரிய நாராயண சாஸ்திரியே பரிதிமாற் கலைஞர் ஆனார்! [பார்ப்பனீயத்தின் விதிவிலக்கு பரிதிமாற் கலைஞர் போன்றோர்! திசம்பர் 02, 2006இல் இவரது 15 நூல்கள் அரசுடைமை செய்யப்பட்டு அவரது வாரிசுதாரர்களுக்கு 15 இலட்சம் வழங்கியவர் தலைவர் கலைஞர்!]
ஸ்ரீ என்று பெயருக்கு முன்னால் பயன்படுத்தும் மதிப்புறு பதத்திற்கு மாற்றாக திரு என்ற சொல்லை பயன்படுத்த அரசாணை வெளியிட அரசிடம் கோரிக்கை வைத்து வென்றவர் பெரியார்! [11/03/1942 விடுதலை] 1967 இல் அண்ணா முதலமைச்சர் ஆனவுடன் "திரு' என்ற மரியாதைச்சொல்லை பயன்படுத்த ஆணைபிறப்பிக்கப்பட்டது!
பார்ப்பனர்கள் இப்போதும் பொங்கல் விழாவை மகர சங்கராந்தியாகத்தானே கொண்டாடுகிறார்கள்!
மவுட்டிக்கூதி சீமானுக்கு இது தெரியாதா?
14/01/1949 இல் திராவிட நாடு இதழில் இனி நாம் பொங்கல் விழாவை தமிழர் விழாவாகக் கொண்டாடவேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தவர் பெரியார்!
1926லேயே குடிஅரசு இதழில் "தமிழிற்கு துரோகமும் இந்தியின் ரகசியமும்" என்று கட்டுரை எழுதினார் பெரியார்! 1931 சூன் 7ஆம் தேதி நன்னிலம் சுயமரியாதை மாநாடு பெரியாரால் இந்தி எதிர்ப்பு மாநாடாக கூட்டப்பட்டது!
21/04/1938இல் இராஜாஜி இந்தியை திணித்தவுடன் எதிர்நின்றார் பெரியார்! 100 பேர் கொண்ட தமிழ்மொழி பாதுகாப்பு தமிழர்படை நிறுவப்பட்டு திருச்சியில் துவக்கி வைத்து சென்னையில் நடைபயணத்தின் மீது பேசினார் பெரியார்! இதற்காக இண்டாண்டு சிறையும் 2000ரூபாய் அபராதமும் பெரியாருக்கு விதிக்கப்பட்டதோடு பெரியாரின் ஃபோர்டுகார் டூரர் மாடல் ஏலத்திலும் விடப்பட்டது!
1948 நவம்பரில் ஓமந்தூரார் காலத்தில் மீண்டும் இந்தி திணிக்கப்பட்டபோது 02/11/1948இல் 144தடையை மீறி போராட்டத்தில் இறங்கியதால் இரவு 2.15மணிக்கு கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டார் பெரியார்!
பார்ப்பனர்கள் தமிழுக்கு நொட்டினார்கள் என்று பேசுகின்ற கேவலப்பிறவி சீமான் சொல்லட்டும் தமிழ்காக்கும் பணியில் சிறை சென்ற பார்ப்பனர்கள் எத்தனைப்பேர்?
மருத்துவக்கல்லூரிகளில் படிக்க சமஸ்கிருதம் அவசியம் என்று இருந்ததை எதிர்த்து எழுதினார் பெரியார்! தமிழ்புலவர்களுக்கு ஊதியம் 75 ரூபாய்! சமஸ்கிருத பண்டிதர்களுக்கு 350ரூபாய்! இது குறித்தும் பெரியார் பேசினார்; எழுதினார்! முதல்வராய் இருந்த பனகல் அரசர் உடனே ஊதிய வேறுபாட்டை நீக்கியதோடு மருத்துவ படிப்பிற்கு சமஸ்கிருதம் அவசியமல்ல என்றும் ஆணை பிறப்பித்தார்!
நாளும் பார்ப்பன சனாதனிகளால் அடிவாங்கி சாகிறது தமிழ்சமூகம் இப்போதும்!
பெரியார் இல்லாமல் போயிருந்தால் இன்னும் நிலைமை எப்படியோ, நினைக்கவே அச்சமாகயிருக்கிறது!
மொழியையும் இனத்தையும் பாதுகாக்க தந்தை பெரியார் தந்த உழைப்பு அளப்பரியது! அய்யாவை ஒட்டி அண்ணா கலைஞர் காமராசர் எம்ஜிஆர் ஸ்டாலின் என்று தொடர்கிறது பெரும்பட்டியல்!
திரள்நிதி கணக்கு விசாரணைக்குப் பயந்து சீமான் என்ற முற்றிலும் மானம் துறந்த ஈனப்பயல் சங்கிகளின் மியத்தையே குடிக்க ஆரம்பித்துவிட்டான்!
#நீட் தேர்வு எழுதி, மருத்துவ முதுகலைப் படிப்பில் சேர்ந்து படிக்க "தகுதி மதிப்பெண்' ஆன பூஜ்யம் மார்க் நிர்ணயக்கப் பட்டுள்ளது.
அதாவது, நீங்கள் 80 மார்க் எடுக்கக் கூடிய அறிவுள்ள மருத்துவராகக் கூட இருக்கலாம்! ஆனால், நீட் தேர்வு எழுதவில்லை என்றால் உங்களுக்கு சீட் இல்லை.
அதே நேரத்தில் நீட் தேர்வு எழுதினால் பூஜ்யம் மார்க் எடுத்தால் கூட போதும். உங்களுக்கு சீட் உண்டு.
இத்தனை காலமாக இவர்கள் "தகுதி" தேவை என குதித்துக் கொண்டிருந்தது நம்மிடம் அதிக அறிவையோ, அதிக உழைப்பையோ, அதிக மதிப்பெண்ணையோ கேட்டு அல்ல!
நாங்கள் ஒரு விதி விதிப்போம்!
நாங்கள் ஒரு கட்டளை இடுவோம்!
நாங்கள் அதை மேலிருந்து செய்வோம்!
அதை நீங்கள் கீழ்ப்படிந்து ஏற்க வேண்டும் என்பதே அந்தத் தகுதி.
விளக்கம் சொல்லி சலித்து விட்டது. பட்டால்தான் புரியும் என்றால் பட்டுத் தெளியட்டும். ஆனால், அப்போது மீண்டு வர இயலாத இருளில் சிக்கி இருப்போம்.
அவர்கள் எடுத்துத் தரும் தவறான வாதங்கள், பொய்யான தகவல்களை நம்பி வெட்டுபவனின் கால்களையே சுற்றித் திரியும் நமது இடைநிலை அடிமைச் சமூகமே எதிர்காலத் தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சிக்குப் பொறுப்பு.
அதில் அவர்களின் எதிர்காலத் தலைமுறைகளும் அடங்கும் என்பதைக்கூட உணராத அறிவிலிகள் அவர்கள்.
மதுரையில் இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திறந்து வைத்த கலைஞர் நினைவு நூலகத்தின் நான்காவது தளத்தில் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர்கள், இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் ஏறத்தாழ 30000 நூல்களுடன் கூடிய ஒரு தனிப்பகுதி அமைந்துள்ளது என்ற தகவல் அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
அது 1983 ஆம் ஆண்டு. மதுரையில் தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே குடிமைப் பணிக்குத் தயாராகி வந்தேன்.
மதுரையில் நத்தம் சாலைக்கு செல்லும் வழியில் மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் நகர் நூலகச் சிறுவளாகம். எனது பணிச்சூழலில் அந்த நூலகம் மட்டுமே எனக்கு போக வர வசதியாக இருந்தது. அப்போது நத்தத்தில் இருந்து மதுரைக்கு தினமும் பயணித்து மூன்று ஷிப்டுகளில் மாறி மாறி பணியாற்றினேன். இதில் ஷிப்டை பொறுத்து வாரத்தில் ஓரிரு நாட்கள் நூலகம் செல்லமுடியும்.
நான் தமிழ் வழியில் தேர்வு எழுத முடிவுசெய்து அதற்காகத் தயாராகி வந்தேன். அறிவியல், பொது அறிவு, வரலாறு போன்ற தேர்வுகளுக்கு பயன்படக்கூடிய நூல்கள் தமிழில் குறைவாகவே இருந்தன. தமிழ்நாடு பாடநூல் நிறுவன வெளியீடுகள் மிகவும் உதவியாக இருந்தது. ஆங்கிலத்தில் நூல்களைப் படித்து தமிழில் குறிப்பெடுப்பேன். தமிழில் கலைச்சொற்களை துறைவாரியாக தயாரித்துக் கொண்டேன் தேர்வில் பயன்படுத்த வசதியாக.
குடிமைப் பணி தேர்வு எழதுவோர்க்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் நூல்கள் ( NCERT) பயனுள்ளதாக இருக்கும் என்றார்கள். மதுரை டவுன் ஹால் சாலையில் ஒரு கடையில் சில நூல்கள் கிடைத்தன. எனக்கு வேண்டிய நூல்கள் அனைத்தும் கிடைக்கவில்லை.
இந்த நூல்களை வாங்கி வருவதற்காகவே சென்னைக்குச் சென்று புத்தகக்கட்டுடன் மறுநாள் மதுரைக்கு திரும்பிய ரயில் பயணம் மறக்கவில்லை.
குடிமைப் பணி தேர்வுக்கு படிப்பவர்கள் Competition Success Review என்ற மாதாந்திர இதழை வாங்கிப்படிப்பது வழக்கம். எனக்கு தெரிந்து இந்த இதழ் மதுரையில் இரண்டே இரண்டு கடைகளில் கிடைக்கும். அந்த இரண்டு கடைகளில் ஒன்று தல்லாகுளத்தில் தமுக்கம் மைதானம் சந்திப்பில் உள்ள ஒரு பெட்டிக்கடை. அந்த இதழ் வரும் நாளை எதிர்நோக்கி காத்திருந்து வாங்கிச் செல்வேன். சில தருணங்களில் குறிப்பிட்ட நாளில் அந்த மாத இதழ் வந்து சேர்ந்திருக்காது. நாளைக்கு ஒருவேளை வரக்கூடும் என்பார் கடைக்காரர்.
எனக்குத் தேவையான ஒரு நூலைப் படிப்பதற்காக ஒருமுறை காரைக்குடி அழகப்பா கல்லூரி நூலகம் சென்று காரைக்குடியில் ஒரு நாள் தங்கி குறிப்பெடுத்து வந்தேன்.
மற்றபடி எனக்கு உற்றதுணை யாதவர் கல்லூரி நூலகம். நான் அங்கு இளங்கலை படித்து பின்னர் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து பிறகு நாளிதழில் பணியாற்றினாலும் யாதவர் கல்லூரி தொடர்பு விட்டுப் போகவில்லை. எனக்கு தேவையான நூல்களை அங்கிருந்து வாங்கிச் சென்று படிக்க முடிந்தது.
அப்போது யாதவர் கல்லூரி நூலகத்தின் நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. முனியசாமியுடன் சென்ற ஆண்டு கூட அலைபேசியில் பேசினேன்.
இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன். ஏன் எழுதுகிறேன்.
கலைஞர் நூலகத்தில் போட்டித் தேர்வர்களுக்கு தனித்தளம்; முப்பதாயிரம் நூல்கள் என்பது எவ்வளவு இனிப்பான செய்தி தெரியுமா?
இப்போதெல்லாம் விரல் நுனியில் இணைய வலைத்தளங்களில் தகவல் களஞ்சியம். ஆனால் அது வேறொரு காலம். திரும்பிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது!
1984 இல் குடிமைப் பணியில் சேர்ந்து 2018 இல் ஓய்வுபெற்று அதன் பின்னரும் ஒடிசா மாநில அரசில் முதல்வர் அலுவலகத்தில் தலைமை ஆலோசகராக முழுநேரப் பணியில் இப்போதும்.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்தில் ஒரே தளத்தில் போட்டித் தேர்வர்களுக்கு பயன்படக்கூடிய முப்பதாயிரம் நூல்கள். அடேங்கப்பா . அப்படியென்றால் நூல்கள் வாங்க சென்னைக்கு போக வேண்டாமா? மாத இதழுக்காக கடை அருகே காத்திருக்க வேண்டாமா?
ஆசையாக இருக்கிறது! இந்த நான்காவது தளத்தில் அமர்ந்து படித்து இன்னும் ஒரு முறை குடிமைப்பணி தேர்வு எழுதி மீண்டும் ஒரு முறை முதல் முயற்சியில் வென்று காட்ட! அப்படி என்ன வயசாகி விட்டது எனக்கு 64+ தானே! ( Don't get tensed up. சும்மா தான் சொன்னேன்.!😂😂)
வாழ்த்துகள். இளைய தலைமுறையே!
கல்வி தான் நம்மைக் கரைசேர்க்கும்.
அறிவு தான் நமது பேராயுதம்!
"அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்"
என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் அன்று சொன்ன சொல் இன்றும் செல்லும்.
அன்புடன்
ஆர்.பாலகிருஷ்ணன்
புவனேஸ்வரம்
15.07.2023
#BookReview#Thread
சிறுவர்களுக்கான எழுத்து தற்காலத்தில் வெகுவாக குறைந்து வரும் சூழலில், குழந்தைகளுக்கான கதைகள் எழுதும் எழுத்தாளர் "விழியன்" (@VizhiyanUmanath) அவர்களின் "தேன் முட்டாயி" சிறுகதை தொகுப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
(1)
1877 ல ஏற்பட்ட தாது வருஷத்து பஞ்சம் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா?
பஞ்சம் என்றால் பஞ்சம் அப்படி ஒரு பஞ்சம். சென்னை மாகாணத்தில் 10 லட்சம் பேர் பசியாலேயே இறந்திருக்கிறார்கள். செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு உதவ அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரிகள் சென்னை மாகாணம் முழுவதும் முகாமிட்டது