இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்
சமூகரீதியான பின்னடைவு (social backwardness) ஒரு நாளிலோ ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த சமூகக் கட்டமைப்பினால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை.
இதுவே சமூக யதார்த்தமாக இருக்கும் நிலையில், "இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு BC (M) பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை" எனும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது.
தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இசுலாம் மதத்தை ஏற்பவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
கடந்த #DravidianModel அரசில், கிறித்தவர்களாக மதம் மாறும் ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த முயற்சிகளையும் தற்போதைய தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
சாதியினால் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட BC, MBC, SC மக்களுக்கு அதனையே அளவுகோலாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். பின்பற்றும் மதத்தைக் காரணம் காட்டி அந்த உரிமையை மறுப்பது சமூக அநீதியாக அமைந்துவிடும்.
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்...
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள்!
#PriceRise #Inflation
இத்தனை நாட்கள் உறங்கிக் கொண்டிருந்த ஒரு தவெக அரசு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம் என்றவுடன் கண்விழித்திருக்கிறது
- திரு.திருச்சி சிவா எம்.பி அவர்கள் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர்
"தமிழ்நாடு மின்வாரியத்தின் இன்றைய நிலைமைக்கு முழுகாரணம் திமுகதான். இதை திமுகவினரும் மறுக்கமாட்டார்கள்" என்று கூறி 2006-2011ஆட்சியின் மத்தியிலிருந்து இறுதிவரை நிலவிய கடுமையான மின்வெட்டையும் கூறினார். கூடவே ஜெயலலிதாவுக்குப் பாராட்டுப்பத்திரமும் வாசித்தார். -
பாமக கணேஷ்குமார் MLA
பொதுபுத்தியில் பதிந்துவிட்ட இந்தக் குற்றச்சாட்டு குறித்து இந்நேரம்.காம் என்ற தளத்தில்
"மின்சாரம் - ஜெயலலிதாவின் தோல்வியை மறைக்கும் ஊடகங்கள்!" என்ற தலைப்பில் 2014ஆம் ஆண்டே ஒரு கட்டுரை எழுதி இருந்தார். 🎯
ஆனாலும் இன்றும்கூட பொதுபுத்தியும் மாறவில்லை.
2001-06 ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் 2006-2011 கலைஞர் ஆட்சிக்காலத்திலும் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள்
மின் உற்பத்திக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு உற்பத்தி தொடங்க குறைந்தது மூன்று முதல் நான்கு ஆண்டுகள் தேவைப்படும் என்பதை கவனத்தில் கொண்டால் 2006-2011 ஆட்சியின் மின்தட்டுப்பாட்டுக்கு யார் காரணம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
2001-2006 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வெறும் 196 மெகாவாட் உற்பத்திக்கான திட்டங்களே தீட்டப்பட்டன. ஆனால் அடுத்துவந்த கலைஞர் ஆட்சியில் 4700 மெகாவாட் உற்பத்திக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் அந்தப் பலனையும் பெயரையும் தட்டிச் சென்றவர் ஜெயலலிதா.
#kalaignar
#TNElectricity
#FatherOfModernTamilnadu
யூனிட்டுக்கு 20 ரூபாய்க்கு மின்கொள்முதல் செய்தாலே ஊழல் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த, இந்த கோமாளி சர்க்கார் யூனிட்டுக்கு 35 ரூபாய்க்கு மின்கொள்முதல் செய்கிறதே எனக் கேள்வி எழுப்பினால், அதற்குரிய பதிலைச் சொல்லாமல் கக்கூஸை எட்டிப்பார்த்த கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்.
இப்படி மின்கொள்முதல் சம்மந்தமாக கேட்கும் நியாயமான கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் சம்மந்தமில்லாமல் பேசினால் நாங்களும் முதலமைச்சரை அதே ரீதியில் விமர்சித்துப் பேசலாமா?
கீழே இருக்கும் காணொளியில் நடிகர் விஜய் மாமியாருக்கு சோப் போடும் சீன் தான் ரொம்பப் பிடிக்கும் என்று சொல்கிறாரே இதை விட ஆபாசமாக, கொச்சையாக, pervert போல பெண்களை சித்தரிக்க முடியுமா? நாங்களும் அவரை “சோப் போடும் முதலமைச்சர்” என்று குறிப்பிடலாமா? இத்தோடு நிர்மல்குமார் வாயை அடக்குவது அவரது முதலமைச்சருக்கு நல்லது.
இனியும் நிர்மல் குமார் வரம்புமீறிப் பேசினால் we will pay you back in same currency…
#ஆபாச_நாயகன்_Jo_Soap_Vijay
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், இளைஞர் அணிச் செயலாளராக, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து, இளைஞர் அணி அறக்கட்டளை மூலம் கல்வி, மருத்துவம் மற்றும் கழக முன்னோடிகளுக்குப் பொற்கிழி எனப் பல்வேறு நிதி உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் நிதி உதவிகளைப் பெறும் பயனாளிகளுக்கான காசோலைகளை இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
இந்தக் காசோலைகள், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர் முன்னிலையில், இளைஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் மூலம் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன.
மருத்துவ உதவி
1.கு.அருண்பிரகாஷ், திருப்பூர் மத்திய மாவட்டம்.
2.ஜெ.சதீஷ்குமார், திருப்பத்தூர் மாவட்டம்.
3.அ.வேணுகோபால், திருவள்ளூர் மத்திய மாவட்டம்.
4.பி.தனலட்சுமி, சென்னை மேற்கு மாவட்டம்.
மூடர் கூட்ட அரசின் விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!
மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேராமல் சம்பா பயிர்கள் காய்கின்ற நிலையில், தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படவுள்ளதால் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படாததால் ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்தது.
இப்போது சம்பாவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், செப்டம்பர் 1-ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக கொஞ்சம் தாமதமாக தண்ணீர் திறக்க வேண்டும் - அப்போது தான் நெல்மணி முளைத்து வருகின்ற காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் நடைமுறை சிக்கல் புரியாமல், Reels வெறி கொண்டு அவசரகதியில் இந்த Dummy CM தண்ணீர் திறந்துவிட்டார். இப்போது உரிய நேரத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுகின்றன.
எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் - விவசாயிகளின் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு குறுவை - சம்பா இரண்டையும் இல்லாமல் செய்திருக்கிறது இந்த கோமாளி சர்க்கார்.
ஏற்கனவே அரிசி - பருப்பு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
தினத்தந்தியின் இன்றைய முதல் பக்க தலைப்புச்செய்தியே விலைவாசி உயர்வு பற்றித்தான் என்பது முதல்வருக்கு தெரியாதா?
இப்படிப்பட்ட சூழலில் நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியாளர்களால், உணவு உற்பத்தி மேலும் பாதித்து, விலைவாசி இன்னும் உயருகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேளாண்துறைக்கு செயலாளர் இல்லாததை நாம் சுட்டிக்காட்டிய பிறகு, வேளாண் செயலாளரை நியமித்த முதலமைச்சர், விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதற்கான Review Meeting-ஐயும் நாம் சொன்ன பிறகு தான் நடத்துவாரா?
இப்பிரச்சினை குறித்து உடனே ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் இந்த ஆட்சியாளர்கள் உடனடியாக வழங்க வேண்டும்.
#DeltaFarmers #Cauvery #MetturDam
"எத்தனை திமுக நண்பர்கள் என்னுடைய இந்த Proposalஐ ஒத்துக்கொள்வார்கள்" என்று தெரியவில்லை. நான் ஏற்கெனவே சில பதிவுகளில் இதை கோடிட்டு காட்டியுள்ளேன். இருந்தாலும் நான் இதை திரும்பவும் சொல்ல விரும்புகிறேன். இப்பொழுதும் சொல்லா விட்டால், it will be too late.
@mkstalin, @EPSTamilnadu, @DMKITwing & @AIADMKITWINGOFL ஆகியோர்க்கு ஒரு விண்ணப்பம்.
தாராபுரம், மதுராந்தகம் முடிவுகள் என்ன சொல்கின்றன?
இந்த தேர்தல்கள் அமித்ஷா & EC தலையீடு இல்லாமலே நடந்தது என்று வைத்துக்கொள்வோம்.
Results என்ன தெரிவிக்கிறது?
Tvk "தாராபுரம் & மதுராந்தகம் தொகுதிகளில் முறையே 37% & 40% வாக்குகளை பெற்று வென்றுவிட்டது".
திமுக முறையே 32% & 29%ம், அதிமுக இரண்டிலும் around 25%ம் பெற்றுள்ளன.
"கூட்டணி கட்சிகளின் துரோகம் திமுகவை ஒன்றும் செய்யவில்லை" என்று திமுக திருப்தி பட்டுக்கொள்ளலாம்.
"கடந்த தேர்தலைவிட 9 to 15% வாக்குகளை அதிமுக இழந்தாலும், இவ்வளவு உட்கட்சி துரோகங்களை தாண்டி, இரட்டை இலையின் செல்வாக்கினாலும், தனி ஆளாக நின்ற Epsன் பிரச்சாரத்தாலும் 25% வாக்குகளை பெற்றோம்" என்று அதிமுகவும் திருப்திபட்டுக் கொள்ளலாம்.
ஆனால் Tvkயின் MLAs count 109 ஆகிவிட்டது.
ஒன்று clear ஆக தெரிந்துவிட்டது. Tvk எவ்வளவு கேவலமாக ஆட்சி செய்தாலும் ஒரு பிரிவு மக்கள் கவலைபட போவதில்லை. தொடர்ந்து விஜயின் சினிமா தனத்தை ரசித்துகொண்டு விஜயின் மேல் வைத்துள்ள சினிமா மோகத்தில் தொடர்ந்து அடிமையாக இருப்பார்கள். துரதிருஷ்டவசமாக அந்த கூட்டத்தின் வாக்கு சதவீதம் திமுக, அதிமுக தனியாக பெறும் வாக்குகளைவிட அதிகமாக இருக்கிறது.
"விஜய் மக்களிடம் மேலும் கெட்டபெயர் வாங்குவதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம்" என்பதை திமுக, அதிமுக ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.
எதிர்வரும் 5 தொகுதிகள் இடைத்தேர்தலில் இதே status தொடர்ந்தால் Tvk அந்த 5 தொகுதிகளை தட்டி தூக்கி கொண்டு போவதை திமுக, அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
5 தொகுதிகள் மட்டுமல்ல, அதிமுகவிலிருந்து மேலும் சில MLAsகளை கவர்ந்து இழுத்து அந்த தொகுதிகளிலும் வென்று, Tvk அரிதிபெரும்பான்மை பெற்றுவிடும்.
இந்த அநியாயங்களுக்கு Tvkக்கு கடிவாளம் போடவேண்டாமா?
"Tvkயின் இந்த திருவிளையாடல்கள் Bjpயின் துணையின்றி நடக்காது" என்பது Epsக்கு தெரியவில்லையா? Atleast ஆளுநர் மூலம் கூட ஏன் Bjp முட்டுக்கட்டை போடவில்லை?
"Tvk MLAs மட்டும் அதிகமாகவில்லை, பின்புறமாக அதிமுக கறையான் அரிப்பது போன்று அழிக்கப்படுகிறது" என்பது Epsக்கு தெரியாமல் இருக்கமுடியாது.
அதிமுக Bjp பிடியிலிருந்து வெளியே வரவேண்டும். திமுகவுடன் alliance வைத்து எதிர்வரும் தேர்தல்களை "தொகுதிகளை பங்கிட்டுக் கொண்டு" சந்திக்க வேண்டும். இதுதான் என் விருப்பம்.
அப்படி செய்தால் Tvkயின் வளர்ச்சியை ஒடுக்குவதுடன் அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதையும் தடுக்கலாம்.
மேலும் Tvk "திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மேல் போடும் பொய் வழக்குகளையும்" தடுக்கலாம்.
எல்லாம் @EPSTamilnadu & @mkstalin கையில் தான் உள்ளது.
தாராபுரம், மதுராந்கம் முடிவுகளே உங்கள் இருவரையும்," ஏன் ஒன்றுசேர்ந்து நிற்கவில்லை?" என்று கேட்பதுபோல்தான் உள்ளது.
எந்த எதிர் பிரச்சாரத்தை பற்றியும் கவலைப்படாதீர்>கள். "Tvkயும், அல்றசில்ற கூட்டணிகளும்" " எங்கே திமுக, அதிமுக ஒன்று சேர்ந்தால் தாங்கள் அழிந்து போய்விடுவோமோ" என்று பயந்துதான், "திமுக, அதிமுக ஒன்று சேர்வதை உலக மகா தவறு போல்" பேசுகின்றன. ஆனால் "இவர்கள்தான் உலக மகா அயோக்கியதனங்களை செய்கிறார்கள்" என்பதை நாடறியும்.
@rajaman13468248@Karthik_offffl@MangaiyarKRaj@krnveeramanidmk@Sivasan26406398@Sambuvpm@sk_haran@kumaransarath7@DKBaranidharan@DineshPrabu_DMK@kecdinesh@GOWRISANKAR1984@syedsul17364354@Dharma76903973@LinkeshSv@ASATHATHAli1
#BREAKING | மின்சார கொள்முதல் இனிதான் செய்யப்படும் என செய்தி வெளியான நிலையில், தவெக அரசின் பொய்யை அம்பலப்படுத்திய மின்துறை பொறியாளர் காந்தி!
#Gandhi | #TVKFails | #KalaignarSeithigal
3 மாசத்துல ஏன் அவசரம் அவசரமா SIR அ பாஜக முடிக்க சொல்லுச்சு? எல்லாம் Tvk வ ஆட்சியில் வச்சு வட நாட்டு ஒவ்வொரு விஷயத்தையும் விஜய் மூலமா தமிழ்நாட்டில் கொண்டு வரத்தான்.- பிரகாஷ்ராஜ் 🥵🔥
முதல்ல India today வந்துச்சு இப்ப republic tv வருது இதான் அவங்க அஜண்டா.
த.வெ.க. அரசு வாய் மூடி கைகட்டி இருப்பதால் இந்தி திணிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. பாஜக என்ற வார்த்தையைச் சொல்லக் கூட பயப்படும் இந்த டம்மி சிஎம் அவர்களுக்குப் பதவியோடு கேடா?
#TVKFailsTN
பணி நிரந்தரம், சம ஊதியம், ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராடிவரும் செவிலியர்களை ஒடுக்க முற்படுகிறது தவெக அரசு.
தற்காலிகப் பணியில் உள்ள செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தேர்தல் வாக்குறுதியில் ரீல் விட்டுவிட்டு, இப்போது அதே செவிலியர்களை ஏமாற்றியிருக்கிறது இந்த ரீல் அரசு.
செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
தி.மு.க. அரசைக் காட்டிலும் த.வெ.க. அரசில் குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என இன்றைய 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் உணவுப் பொருள் கொள்முதலின் எந்த அடிப்படைகளையும் கருத்தில் கொள்ளாத ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.
இது உண்மையென்றால், குறைந்த விலையில் கொள்முதல் செய்த TNCSC மேலாண் இயக்குநர் ஏன் மாற்றப்பட்டார்?
எதிர்காலத்தில், வரத்து குறையும்போதும் இதே விலையில் கொள்முதல் செய்வோம் என அரசினால் உறுதியளிக்க முடியுமா?
இனிமேல், கொள்முதல் விலை உயர்ந்தால் அப்போது அதில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டலாமா?
துவரம் பருப்பைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்தவர்கள், பாமாயிலை மட்டும் ஏன் முன்பைவிட அதிக விலைக்குக் கொள்முதல் செய்தார்கள் என கட்டுரையை எழுதியவர் விளக்குவாரா?
துறையின் அமைச்சர், த.வெ.க.வில் உள்ள பிற தலைவர்களே கூட செய்யத் துணியாத ஒரு அவதூறை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு உண்மைகளைச் சரிபார்க்காமல் வெளியிடுவது ஊடக அறமாகுமா?
ரேஷன் உணவுப்பொருட்கள் கொள்முதலில் 600 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதா தவெக அரசு?
திமுக ஆட்சியில் ஒரு லிட்டர் பாமாயில் ₹136.95-க்கு வாங்கப்பட்ட நிலையில், தற்போது தவெக ஆட்சியில் அதே பாமாயில் ₹154.99-க்கு வாங்கப்படுவதன் பின்னணி என்ன?
திமுக அரசு வாங்கியதை விட, ஒரு லிட்டருக்கு ரூ18.04 கூடுதலாகக் கொடுத்துத் தவெக அரசு பாமாயில் வாங்குவதன் மர்மம் என்ன?
பழம்பெரும் திரைப்பட இயக்குநர் திரு. சிங்கீதம் சீனிவாச ராவ் அவர்களின் மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தனது தனித்துவமும் புதுமையும் மிக்க பல படைப்புகளைத் தந்து, திரைத்துறை வரலாற்றில் காலத்தால் அழியாத தடங்களைப் பதித்தவர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.