The Listening Network
🎙️ Curated audio experiences on X
🎧 Podcasts • Discussions • Stories • Culture
☕ Entertainment & conversations
🌐 Built for listeners
Political differences are natural in democracy. Abuse and harassment are not. Criticise the politics, not the person. Democracy deserves debate, not abuse.
#VirtualWarriors#VirtualAbusers#tvk
“சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவேன், காட்டுனு வேற சொல்லிட்டீங்களா……” என்ற சுயதம்பட்டம்.
தாடையைத் தட்டி காட்டி, மிசா அடக்குமுறையில் ஸ்டாலின் அவர்களுக்கு நடந்த அதிகார அத்துமீறலைக் கிண்டல் செய்யும் கீழ்மைத்தனம்.
“அண்ணா, எம்ஜிஆர், என்டிஆர், அப்புறம் விஜாய்” என்று கூறும் தற்பெருமை.
“5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர்ல கொத்துப் பரோட்டா” போன்ற தன் வெற்றியைத் தானே சிலாகித்துக்கொள்ளும் ஆணவம்.
வரலாற்றுப் பெருமைமிக்க பல உரைகள் நிகழ்த்தப்பட்ட இடம் சட்டமன்றம் என்ற புரிதலே கொஞ்சமும் இல்லாமல், அந்த மாண்பைக் கெடுக்கும் விதத்தில் செய்கைகள் செய்து, காட்டுக் கூச்சலிடும் அந்தச் சபை அநாகரிகம்.
எதிராளியைப் பேச விட்டால் எங்கே தனது போதாமை வெளிப்பட்டுவிடுமோ என்று அவர்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கும் அந்தப் பயந்தாங்கொள்ளித்தனம்.
இதுதான் முதல்வரின் இன்றைய பேச்சின் சுருக்கம்.
இப்படிப்பட்ட கீழ்த்தரமான கேரக்டர் கொண்டவரைத்தான் நாம் முதல்வராகப் பெற்றுள்ளோம்.
இதற்கு மாறாக, மிகச் சிறப்பாக இருந்தது உதயநிதி அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு. விஜய் பதில் சொல்லாமல் விட்டதை, அவரின் ரீல்ஸ் உள்நோக்கத்தை, அவரது போதாமையை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கான பதிலைப் பொறுமையாகவும் நிதானமாகவும் சுட்டிக்காட்டியது முதிர்ச்சியாக இருந்தது.
விஜய் சார், உங்கள் நன்மைக்காக உங்களுக்கு சில விஷயங்களை நினைவூட்ட விரும்புகிறேன்.
தேர்தல் முடிந்துவிட்டது. - முப்பது நிமிடப் பேச்சை 10 ரீல்களாகப் பிரிக்கக்கூடிய வகையிலேயே எழுதிக்கொடுக்கச் சொல்லாதீர்கள்.
இது பிரசார மேடையல்ல.- வார்த்தைக்கு வார்த்தை திமுகவைக் குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பதைத் தவிருங்கள்.
முக்கியமாக, நீங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டதாக அறிவித்துவிட்டீர்கள். - தயவுசெய்து மூன்று நிமிடத்திற்கு நான்கு பஞ்ச் டயலாக் பேசுவதை நிறுத்துங்கள்.
இது சட்டமன்றம். - நெஞ்சு வாய்க்கு வருமளவிற்குக் காட்டுக் கத்தல் கத்தாமல், தயவுசெய்து சபை மாண்பைக் காக்கும் நாகரிகமான டோனில் பேசுங்கள்.
இது கனவல்ல. - நீங்கள் நிஜமாகவே முதலமைச்சர் ஆகிவிட்டீர்கள். மக்களுக்குப் பயனுள்ள சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டுவருவதுதான் உங்கள் வேலை. அதை விவாதிக்கும் இடம்தான் சட்டமன்றம். இனிவரும் காலத்திலாவது உங்கள் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.
@VijayRaghavavan@thisismm4u@TimonTheFire@thisisRaj_@saravofcl@Dr_Ezhilan@DMK_Updates@SiluvaM_@poornimachandr3@Nandhini1360381
இதுதான் யாரும் பேசாத விஷயம். ஆனா இதுதான் முழு வழக்கோட அடித்தளம்.
ED-யோட TASMAC வழக்கு எத மேல கட்டப்பட்டது. 41 FIR மேல.
அந்த 41 FIR-ஐ யாரு பதிவு பண்ணாங்க. தமிழ்நாடு அரசோட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை, அதாவது DVAC. அப்போ ஆட்சியில இருந்தது திமுக.
இதை மறுபடி படிங்க. திமுக ஆட்சியில இருந்தப்ப, திமுக அரசோட சொந்தத் துறை, TASMAC-ல நடந்த முறைகேடு மேல 41 FIR பதிவு செஞ்சது. ED-யே நீதிமன்றத்துல இதை ஒப்புக்கிட்டது. இந்த புகார்கள் மாநில காவல்துறையாலேயே பதிவு செய்யப்பட்டவைன்னு அவங்களே வாதாடினாங்க.
இப்ப சட்டம் என்ன சொல்லுதுன்னு பாருங்க. இது ரொம்ப முக்கியம்.
பணமோசடி தடுப்புச் சட்டம் 2002. அதோட பிரிவு 3 பணமோசடிக் குற்றத்தை சொல்லுது. பிரிவு 2(1)(u) proceeds of crime, அதாவது குற்றத்தோட மூலம் வந்த சொத்தை வரையறுக்குது.
PMLA-ல ஒரு வழக்கு நிக்கணும்னா அதுக்கு அடிப்படைக் குற்றம் கட்டாயம் இருக்கணும். scheduled offence-னு சொல்லுவாங்க. அது இல்லன்னா பணமோசடி வழக்கே நிக்காது.
இதை உச்ச நீதிமன்றம் Vijay Madanlal Choudhary தீர்ப்புலயே தெளிவா சொல்லிருக்கு. பணமோசடிக் குற்றம் அடிப்படைக் குற்றத்தை சார்ந்தது.
அதனாலதான் மே 22, 2025-ல தலைமை நீதிபதி கவாய் அந்த கேள்வியை கேட்டார்.
இப்ப தர்க்கத்தை வரிசைப்படுத்துங்க. அடிப்படைக் குற்றம் DVAC பதிவு செஞ்ச 41 FIR. DVAC-ன்னா தமிழ்நாடு அரசு. அப்போ அரசுன்னா திமுக.
அதாவது ED-யோட முழு வழக்கும் நிக்கிறது திமுக அரசு பதிவு செஞ்ச FIR மேலதான்.
மறைக்கிறவங்க 41 FIR போடுவாங்களா.
இன்னும் ஒரு விஷயம். அந்த FIR-கள்ல சொல்லப்படுற காலகட்டம் 2014 முதல் 2021 வரை. அதுல பெரும்பாலான வருஷங்கள்ல ஆண்டது யாரு. திமுக இல்ல.
இந்த ரெண்டு விஷயத்தையும் இன்னைக்கு பேரவையில முதலமைச்சர் சொல்லல.
உதயநிதி ஸ்டாலின் இன்னைக்கு சொன்னார். திமுக மீதான குற்றச்சாட்டுகளை நாங்கள் சட்டரீதியாகச் சந்திக்கத் தயாராக இருக்கோம்னு சொன்னார்.
பேரவையில ரீல்ஸ் இல்ல. நீதிமன்றத்துல ஆவணம். அவ்ளோதான் கேக்குறோம்.