Karuppu - “பேபி கண்ணனோட கட்டப்பஞ்சாயத்து டீம்” னு வசனம் வந்துருக்கே..
ம்ம்ம்
ஒரு சலசலப்பும் வரல..
மாற்றம் … 🫶
ஜெய் பீம் ன்ற படத்திற்கு நேர் எதிரான கதை 🙏
திராவிட இயக்கத்தில் இருக்கும் High Command
ஆர்.எஸ்.எஸ். இல் இருக்கும் High Command
இரண்டுக்கும் ஒரு vision இருக்கு. சரியா தப்பா என்பது வேறு விவாதம்.
இந்த vision வளர ஒரு வில்லன் வேண்டும். கதைகள் வேண்டும்.
இரண்டு High Command க்கும் High IQ தான், மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் அந்த vision-ஐ பெரும்பான்மையான naive மக்களிடம் கொண்டு செல்வதில் தான் சிக்கல் இருக்கு.
திராவிட இயக்கத்திற்கு வரலாறு, வலிகள், சாதனைகள் இருக்கு. இதை மக்களிடம் கடத்த கவர்ச்சி கொஞ்சம் குறைவு தான். கவர்ச்சி என்றால் கதைகள். வில்லன் இருக்கான், ஆனால் அவனை வில்லன் என்பதை establish பண்றதில் சிக்கல். அவன் வால்டர் வெற்றிவேல் படத்தில் வரும் சத்யராஜின் தம்பி மாதிரி முக வெட்டுடன் இருக்கும் வில்லன். அவன் தான் பார்ப்பனரல்லாதவர்களின் கல்வி, வேலை வாய்ப்புகளை சுரண்டுறான், வரலாற்று ரீதியாக சுரண்டுறான் என்று கத்தினாலும் மக்களிடம் acceptance குறைவு. உண்மையான வில்லனுக்கு டம்மி பாவா மூஞ்சி.
ஆர்.எஸ்.எஸ். கிட்ட அட்வான்டேஜ் புராணங்கள், புனைசுருட்டுகள். வில்லன் என்றால் மைனாரிட்டி மதங்கள் இந்து மதத்திற்கு தொடர்ந்து ஆபத்து என்ற பொய் பிரச்சாரம். புராணங்கள் தரும் pride அவர்கள் vision-ஐ கடத்துவதற்கு உதவுகிறது.
மூனாவது ஒரு High Command இருக்கு அது எம்.ஜி.ஆர் , விஜய் வரிசை . நா ஒரு பெரிய கதாநாயகன் ஆனா நிஜ வாழ்க்கையில் என்னை வளரவிடாமல் ஒரு force தடுக்கிறது. நா ஒரு ஹூரோ தான் ஆனால் அரசியல் வாழ்க்கையில் மக்கள் தான் என்னை காப்பாற்றனும் னு ஒரு ஒப்பாரி வைக்கிற strategy . ஓகே என் கதாநாயகனை நான் தான் காப்பதனும் திரையில் என்னை மகிழ்வித்த நாயகனை காப்பாற்றும் வாய்ப்பு தனக்கு இருப்பதாக மக்கள் உணர்கிறார்கள். இந்த strategy ஐ consume பண்றதுக்கு மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். தமிழ்நாட்டில் மட்டும் இந்த strategy வேலை செய்யவில்லை எல்லா மாநிலங்களிலும் தான் எதோ கேரளத்தில் பெரிய மனது வைத்து மம்முட்டியும் , மோகன்லாலும் அரசியலில் பங்கேற்பதில்லை இல்லை என்றாலும் அங்கும் இதே நிலைமை தான். சுரேஷ் கோபி அங்கே வெற்றி பெறுவதில்லையா ?
திராவிட இயக்கத்தில் இராவண காவியம்
, சிவாஜி கண்ட இந்து சாம்பிராஜியம் , நீதி தேவன் மயக்கம் போன்ற படைப்புகள் வில்லனை நன்றாகவே establish செய்தது. மீண்டும் அது போல ஒரு முன்னெடுப்பை எடுக்க வேண்டும். அதே போன்ற நாடக வடிவம் இல்லாமல் , இன்றைய வடிவத்திற்கு கதைகளை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும். செய்யலாம்.
ஒரு கட்சியுடன் சேர்ந்து வேலை செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்கிற கேள்விக்கும்., சமூகத்துக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்விக்குமான விடைதான் கீழே உள்ள பதிவில் நீங்கள் வியப்படையும் அந்த வேறுபாட்டுக்கான காரணம்.
திமுக தன்னை ஆதரிப்பவர்களுக்கு இத்தனை தசாப்தங்கள் செய்தவற்றுக்கான நன்றியைப் பெறுகிறது. மற்ற கட்சிகள் தரப்போகும் இரையைத் தூண்டில் முள்ளில் வைத்து முன்னே சென்றுகொண்டிருக்கின்றன.
நேற்று ஒரு உணவகத்தில் அரசு ஊழியர் ஒருவரும் அவர் நண்பரும் பேசியதை கேட்க நேர்ந்தது.
நண்பர்: இந்த நெல் கொள்முதல் இடங்கள்ல மூட்டைக்கு ₹40 வாங்குறது எதுக்கு?
அரசு ஊழியர்: லோடு ஏத்தி இறக்குற லோடுமேன்களுக்குதான்
நண்பர்: கவர்மெண்ட் loading, unloadingக்கு பணம் கொடுக்கறதில்லையா?
அரசு ஊழியர்: கவர்மெண்ட் ஒரு டன்னுக்கு ₹20 கொடுக்கும். ஒரு டன்னுன்னா 1000 கிலோவாச்சே. இங்கே 7லேர்ந்து 10 லோடுமேன் வரை அந்த லோடு இறக்கி ஏத்துவாங்க. அந்த பணம் எப்படி பத்தும்?
மேலும், அந்த அரசு ஊழியர் சொன்னது - இந்த டெண்டர்ன்னு போடுறாங்களே, லாரி லோடு அடிக்க கிலோமீட்டருக்கு ₹5, ₹6ன்னு போடுறாங்க. எப்படி கட்டுப்படியாகும்? நாம தனியா கார் எடுத்திட்டு வெளியூர் போனாலே கிலோமீட்டருக்கு குறைஞ்சது ₹8 போடுறான். இப்படி இருந்தா அவன் வேற வழியிலதான் பணம் தேத்த பார்ப்பான். இதெல்லாம் இங்கே இருக்க எல்லாருக்கும் தெரியும். சும்மா பூசி மொழுகிட்டு இருக்காங்க.
வீட்டுவசதித் துறை அமைச்சர், முதலமைச்சர் எல்லாம் யார் என @beemji மற்றும் நீலம் குழுவினருக்கு தெரியாததால் அவர்களின் புகைப்படம் இடம்பெறவில்லை என நீலம் குழு தெரிவித்துள்ளது.
ஒரு கம்பெனில இருந்து விலகும்போது அடுத்த கம்பெனி ஆஃபர் லெட்டர் இல்லாம விலகலாமா? காங்கிரஸ்ல எம்எல்ஏ பதவிய விடுறதுக்கு முன்னமே பாஜகல பதவிய உறுதிபடுத்திருக்கனும்
தவெக அரசில் புதுவகை திருட்டு..
செஞ்சியில் உள்ள ஆலியா இஸ்லாமிய பள்ளியில் மின்சார கட்டணமாக 9,676 கட்ட சொல்லி மெசேஜ் வந்துள்ளது.
இந்த தொகையை ஆன்லைனில் கட்டினால்
10,290 வருகிறது.
இந்த 614 கூடுதல் கட்டணம் யாருக்கு போகிறது துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கா? அல்லது அதிகாரிகளுக்கா?
பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாடிய
ஜோசப் விஜய் தற்போது பாட்டிலுக்கு 20 ஓவாய் வாங்குகிறார்கள்
அதையும் தாண்டி தற்போது மின்சாரத்துறையிலும்
ஊழல்..
இடம்: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிக்கத் தேவர் கல்லூரி. பிரச்சனைக்கான காரணம் INSTAGRAM காதல் கைக் குழந்தையை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஆறு மாதங்களுக்கு பின்பு சிக்கியதன் எதிரொலி அடி பின்னிட்டானுங்க கள்ளத்தொடர்பு பெண்ணை..... ///
அண்ணன் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா
இவர் தேர்தலில் நாங்க திமுகவுக்கு வேலை செய்யாமல்,
தவெக கட்சிக்கு தான் வேலை செய்தோம் என பகிரங்கமாக சொன்ன ஆள்.
நேர்மையான கட்சியாக இருந்து இருந்தால், அப்போதே இவரை கட்சியை விட்டு விலக்கி இருக்க வேண்டும்.
ஒட்டுமொத்த தற்குறிகளும் ஒரே அமைச்சரும் தவேக ஆட்சியில் இருப்பானுக தான் போல
#Rotational_Shift என்றால் என்னன்னே தெரியாமல் பேசுறாரு தற்குறி அமைச்சர்! 🤡
ஒரு டாக்டரின் Shift முடிந்தவுடன் அடுத்த Shift டாக்டர் பொறுப்பேற்பது தான் Rotational Shift. அதற்காக Case History, Medication, Follow-up உள்ளிட்ட அனைத்து தகவல்களும் முறையாக Handover செய்யப்படும்.
ஒரு நோயாளி 3 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், 3 நாட்களும் ஒரே டாக்டர் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி எங்கும் இல்லை.
மருத்துவமனைகள் அனைத்தும் Shift அடிப்படையில்தான் இயங்குகின்றன.
அமைச்சர் சொல்வதைப் பார்த்தால், 100 நோயாளிகள் அட்மிட் ஆனால் 100 டாக்டர்களை தனித்தனியாக நியமிக்க வேண்டும் போல இருக்கிறது! 😹
மருத்துவத் துறையின் அடிப்படை நடைமுறையையே புரிந்து கொள்ளாமல் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
படிடா பரமா! 😂
#TVKVijayFails #TamilNaduPolitics #RotationalShift