கழக ஆட்சிக்காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று சொல்லி டென்டரை ரத்து செய்த இந்த Circus அரசு, இன்றைக்கு 1 Unit மின்சாரத்தை மிக மிக அதிக விலைக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது என்றால், அந்த அளவிற்கு நிர்வாகத்திறனில் inefficient ஆக இருக்கிறார் இந்த Dummy முதலமைச்சர்.
இப்படி கொள்ளை அடிக்கத்தான், ‘காற்று அடிக்கவில்லை - மழை வரவில்லை - பஞ்சாப்ல கூட இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு’ என்றெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி இத்தனை நாட்களாக இந்த ஆட்சியாளர்கள் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா?
இந்த ஊழல் deal முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் சி.எம்?
ஏற்கனவே மின் கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் இந்த வெட்கங்கெட்ட சர்க்கார், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து அதையும் பொதுமக்கள் தலையில் கட்டப் போவதை ஒரு போதும் ஏற்க முடியாது.
விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ள இந்தக் கோமாளிக்கூட்டம், இன்னும் எத்தனை தூரம் மக்களை வதைக்கவிருக்கிறது.
மாற்றம் மாற்றம் என்று சொல்லி, நாட்டின் நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் இந்த முதலமைச்சருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
#Collectionகுமாரு
த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!
இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.
மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?
இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.
குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.
இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது.
இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.
மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது.
#Collectionகுமாரு
பேராண்மை என்ப தறுகணொன்று உற்றக்கால் ஊராண்மை மற்றுஅதன் எஃகு.
போர்க்குரல் ஒலிப்பதென்று முடிவு செய்துவிட்டால் கோட்டையை நோக்கி நகர்வதே முறை.
நமக்கான ஊடகம் என்பது இனி நாம் நடத்தும் ஊடகம்தான் என்ற படிப்பினைத் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கையில்
D' Nation செய்தி ஊடகத்தை இன்று தொடங்குகிறோம்.
ஆதரித்து வழிநடத்துங்கள்.
தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்.
கருப்பன் 🥹
திராவிட நெருப்பு தமிழ்நாட்டின் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ❤️🔥
நீயும் நானும் சமம் எல்லாருக்கும் இங்கே உரிமை இருக்கிறது என்று கூறிய சமத்துவ கருப்பன் 🥹
148 வது பிறந்தநாள் 🥹
#periyarforever
அநீதியை எதிர்த்து நிற்கவும், ஆதிக்கத்தைக் கேள்வி கேட்கவும் கற்றுத் தந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாள் இன்று!
நம் கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, பெரியாரும் உயிரோடுதான் இருப்பார்.
#Periyar148#SocialJusticeDay
கடவுள் இல்லை என்றார். கடவுளை பரப்புகிறவனை அயோக்கியன் என்றார். மதம் ஒழிய வேண்டும் என்றார். இந்து மதத்தை சனியன் என்றார். பிள்ளையாரை நடுத்தெருவில் உடைத்தார். ராமனையும் கிருஷ்ணனையும் தோலுரித்தார். பார்ப்பானியம் ஒழிய வேண்டும் என்றார். அரசியலமைப்பை திருத்தி இடஒதுக்கீட்டை காத்தார். அரசியல் சட்டத்தை எரித்தார். தமிழ்நாடு நீங்கிய இந்திய படத்தை எரித்தார். தேசிய கொடியை எரிக்க தேதி குறித்தார். சாதிப்பெயரை தார் கொண்டு அழித்தார். தமிழ்நாடு தமிழருக்கே என்றார். பெண்ணுக்கு சொத்துரிமை, மணவிலக்கு உரிமை, பிரதிநித்துவம் வேண்டுப் என்றார். காவல்துறையிலும் பள்ளிக்கல்வியிலும் பாதி இடம் ஆதி திராவிடருக்கும் பெண்களுக்குமே அளிக்கப்பட வேண்டும் என்றார். இடைநிலை சாதிகளின் சாதிப்பற்றும் அடிமைத்தனம் என்றார்.
புத்தருக்கு விழா எடுத்தார். குறளுக்கு மாநாடு நடத்தினார். அம்பேத்கரை ஆதரித்து அவரையே தலைவர் என்றார். பக்தி இலக்கியத் தமிழை தாய்ப்பால் பைத்தியம் என்றார். உடையில் எளிமை வேண்டும் என்றார். ஆதி திராவிருக்காக அத்துணை மாநாடு நடத்தி அவர்களுக்காக நின்றார். குலக்கல்வி, தட்சணப்பிரதேசம், இந்தி இவை அனைத்தையும் விரட்டி அடித்தார். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கிளர்ச்சி செய்ய முனைந்தார்.
அண்ணா, கலைஞர் போன்ற பெரும் ஆளுமைகளை தமிழுக்கும் தமிழர்க்கும் வழங்கினார். பாராட்டி போற்றி வந்ஊ பழமை லோகத்தை எல்லாம் உடைத்து புது அரசியல்-தத்துவ மரபை உருவாக்கினார்
இன்று வரை சனாதன சாதி மற்றும் குடிவெறி பித்தர்களை கலங்க வைக்கும் கொள்கைகளை விட்டு சென்றுள்ளார்.
பெரியார் வாழ்க !
ஈராயிரம் ஆண்டு இருளுக்கு எதிராக அறிவுத்தீப்பந்தம் ஏந்திய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் இன்று!
‘மானமும் – அறிவும் மனிதர்க்கு அழகு. சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’ என்று முழங்கிய தந்தை பெரியாரின் பிறந்த நாளை, தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான கழக அரசு #சமூகநீதி நாளாக அறிவித்தது.
திராவிட இயக்கத்தின் அடித்தளமும் – அடையாளமுமாக திகழும் தந்தை பெரியாரின் பணிகளை இன்னும் வேகமாக முன்னெடுப்போம்.
எக்காலத்துக்கும் பொருந்தும் பெரியாரின் கொள்கைகளை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் அதிகமாக கொண்டு சேர்ப்போம். தமிழ்நாட்டின் முற்போக்கு முகத்தை நிலைநாட்டுவோம்.
வாழ்க பெரியார்!
ஓங்கட்டும் அவர் புகழ்!!
#Periyar #SocialJusticeDay
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்; நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் என்பது இறைநம்பிக்கை கொண்டவர்களின் பார்வை.
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்; நம் எல்லோருக்கும் தந்தை பெரியார் என்பது வரலாற்றின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் பார்வை.
சமூக மாற்றம் என்பது தானாகவே நிகழ்ந்துவிடும் என்று கருதுபவர்களுக்கு இந்தப் பதிவு கேலியாக தெரியலாம். ஆனால், சமூக மாற்றங்கள் தானாக நிகழ்வதில்லை; அவை ஓர் சமூக நீதி இயக்கத்தின் வழியே உருவாகின்றன.
அப்பேற்பட்ட இயக்கத்தை முன்னெடுப்பவர்கள் பலராக இருக்கலாம். ஆனால், அவர்களில் ஒருவரே தலைமை தாங்க முடியும். உதாரணமாக, ஒரு அணியில் பல சிறந்த வீரர்கள் இருக்கலாம்; ஆனால், அந்த அணிக்கு ஒருவர்தான் கேப்டனாக இருந்து வழிநடத்த முடியும். அதுபோல, எத்தனையோ தலைவர்கள் மக்கள் பணியாற்றியிருந்தாலும், பெரியார்தான் தலைவர்களுக்கெல்லாம் தலைவர்.
அத்தகைய தலைவர்தான் தந்தை பெரியார். இன்றைய நாளில் பிறந்த அவரால் வகுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் அண்ணாவின் தலைமையில் உருவான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிறந்தநாளும் இன்றே.
இது வலிந்து திணிக்கப்பட்ட ஒற்றுமை அல்ல; வலிமையுடன் முன்னத்தி ஏராக நின்ற திராவிடர்களின் ஒற்றுமை.