மை டியர் மார்த்தாண்டன் திரைப்படத்தில், கவுண்டமணி சொல்வார். நான் ஒரு ஐடியா குடோன். அப்படியே லாரியை விட்டு அள்ளிக் கொள்ளலாம் என்பார். அப்படியாப்பட்ட Think tank உள்ள கட்சி தான் பாரதிய ஜனதா.
தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் என்பது, NEET தேர்வை இனி யாரும் எதிர்க்க முடியாதபடி, ஒரு சில சிறு திருத்தங்களை செய்துவிட்டு, அதை வலுவாக அமல்படுத்தத்தான்.
NEET தேர்வு வேண்டாம் என்று சொல்வது வேறு. அதை சிறப்பாக நடத்துங்கள் என்று சொல்வது வேறு.
நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். எங்களுக்கு கெட்டுப்போன சாப்பாடு வேண்டாம் என்று சொல்வது தமிழ்நாடு.
எங்களுக்கு எந்த சாப்பாடு என்றாலும் பரவாயில்லை. கொஞ்சம் சூடு படுத்தி கொடுங்கள் என்று கேட்பது இப்போதைய போராட்டம். சூடு படுத்தி கொடுத்து விட்டால் போராட்டம் முடிந்து விடும். எல்லோருக்கும் அதே சூடுபடுத்தப்பட்ட கெட்டுப்போன சாப்பாடு தான் இனி.
தொடர்ந்து இதே operating procedure பயன்படுத்தி, தேசிய கல்விக் கொள்கை வலுவாக எல்லா மாநிலங்களின் மீதும் திணிக்கப்படும்.
Soft Hinduta கொள்கைகள் கொண்ட காங்கிரஸ் இருக்கும் வரை தான், பிஜேபி வெற்றி பெற்று கொண்டே இருக்க முடியும். அதனால் அந்த கட்சியின் உயிரும் போகாமல் அவ்வப்போது பிஜேபி சிகிச்சை அளிக்கும். அது போன்ற ஒரு சிகிச்சையாகவும் ராகுல் காந்தி கைது இந்த போராட்டங்களை எடுத்துக் கொள்ளலாம்.
சிறப்பாக எழுதப்பட்ட திரைக்கதை. எல்லா நடிகர்களும் வேறு வழியில்லாமல் வந்து பெர்ஃபார்ம் செய்வதற்கான சூழல்.
சாணக்கியரை எல்லாம் விஞ்சியது BJP Think tank.
அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் தோழரின் பதிவு🙏
#Fair_Delimitation_Bill
அடிச்சாம் பாரு ஆப்பு!🔥
திமுகவின் அரசியலை தலைகீழாக நின்னு தண்ணி குடிச்சாலும் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் நெருங்கித்தொட முடியாது.
20 ம் தேதி பாராளுமன்றம் கூடுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் பாஜக பாராளுமன்றத்தில் டீலிமிட்டேஷன் குறித்து கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதாவை தலைமையேற்று தோற்கடித்தது திமுக மட்டுமே! அது அமீத்ஷாவுக்கான ""#பர்சனல்'' தோல்வி. இங்கே ஆதவ் அர்ஜுனா கொக்கரிப்பது போல என் தலைவர் 5 நிமிஷம் தான் பேசினார். கொளத்தூர்ல கொத்துபரோட்டா போட்டுட்டோம். இந்த கதையெல்லாம் அமீத்ஷா காதில் விழுந்தா நமட்டு சிரிப்பு சிரித்துக்கொள்வார் அந்த மனுஷன்
கொளத்தூரில் மற்றும் தமிழ்நாட்டின் திமுக கட்சியின் தோல்வி என்பது ஏப்ரல் மாதம் டெல்லியில் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்ட போதே எழுதப்பட்டுவிட்டது. அது திமுக தலைவருக்கும் தெரியும். டெல்லிக்கும் தெரியும். ஆதவ் அர்ஜுனாவுக்கு இப்போது ஏதோ தக்கூஸ் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாய் நினைத்து தாவிக்கொண்டிருக்கும் கட்சிகள் மற்றும் குஞ்சுகுளுவான்களுக்கும் தான் தெரியாது.
இப்போது பந்து ஸ்டாலின் அவர்கள் காலின் கீழ் கிடக்கின்றது. கோல் போஸ்ட் அருகிலேயே இருக்கின்றது. கொஞ்சமா ஒரு எத்து எத்தினா கோல் ஆகும்.
ஒட்டு மொத்த இந்தியாவும் இதோ 20ம் தேதி கூடவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக கொண்டுவரப்போகும் டீலிமிட்டேஷன் குறித்தும் திமுகவின் கையில் தான் அந்த மசோதாவின் வெற்றி தோல்வி கணக்கு வழக்கு இருக்கின்றது என்று திமுக என்ன சொல்லப்போகின்றது என்று ஸ்டாலினின் வாயை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
ஒருவேளை டீலிமிட்டேஷன் கொண்டு வரப்பட்டால் வடமாநிலங்களில் இனி காங்கிரஸ் எம்.பி சீட்டுகள் பெறுவது சாத்தியமேயில்லை எனும் நிலை. காங்கிரஸ் ஒட்டு மொத்த இந்தியாவிலிருந்தும் வழித்து எறியப்படும். காங்கிரஸ் உயிரோடு இருக்க மு.க.ஸ்டாலின் தான் ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும்.
இந்த கணக்கு வழக்கெல்லாம் ப்ரவீனுக்கு, மாணிக்கத்துக்கு கூட தெரியாது. ப்ரவீனுக்கு தான் எம்.பி ஆக வேண்டும். மாணிக்கத்துக்கு தான் த.நா காங்கிரசில் மாநில தலைவர் ஆகனும். அத்தனையே அஜண்ட்டா. அதை நிறைவேத்திகிட்டானுங்க. திமுகவை எதிர்த்து தற்குறியான்கிட்டே போறோமே அதனால் எதிர்காலத்தில் காங்கிரஸ் என்னாகும் என்கிற கவலையோ அல்லது ராகா பிரதமர் ஆக வேண்டும் என்கிற நினைப்போ கூந்தல் அளவுக்கு கூட கிடையாது.
இப்போ திமுகவிடம் கெஞ்சிகிட்டு இருக்கானுங்க.
பதிவின் தலைப்புக்கு இப்போ வரேன்.
இப்படி ஒட்டு மொத்த இந்தியாவும், இந்தியாவின் தேசிய கட்சிகளும் திமுகவின் வாயையே பார்த்துக்கொண்டிருக்க திமுக சற்று முன்னர் அடித்த சிக்சர் தான் யாருமே பாஜக உள்ளிட்ட யாருமே எதிர்பார்க்காதது.
கிடுக்கிப்பிடி என்பார்களே அதுதான் இது. கிட்டத்தட்ட ஒரே கல்லில் இரண்டு மாங்காய். #கலைஞர் #பராசக்தியில்_எழுதினாரே_வசனம் தடாகத்தில் இருக்கும் மீன்கள் அழுக்கை தின்று தடாகத்தை சுத்தப்படுத்துகின்றதே அதாவது #சுயநலம்_கலந்த_பொதுநலம் அந்த பார்முலாவை திமுக கையிலெடுக்கும் என இந்தியாவில் எந்தக்கட்சியும் எதிர்பார்க்கவில்லை.
கர்நாடகாவில் கட்டப்படும் மேகதாது அணைக்கட்டு குறித்தும், தீர்ப்பாயம் குறித்தும், ஜூன் 12ல் திறக்க வேண்டிய நீர் குறுவை சாகுபடிக்கு 35 நாட்கள் ஆகியும் திறக்கப்படாமல் இருப்பது குறித்தும் விவாதிக்க ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர இன்றைக்கு சற்று நேரம் முன்பாக சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்து விட்டது.
முதலில் இந்த ஒத்திவைப்புத்தீர்மானம் பின்னரே டீலிமிட்டேஷன் மசோதா என திமுக நோட்டீஸ் கொடுத்து விட்டது.
சபாநாயகர் பாஜகவின் சபா அவர்கள் திமுகவின் இந்த கோரிக்கை நோட்டீசை புறந்தள்ளிவிட முடியாது.
ஏனனில் திமுகவின் ஆதரவோ அல்லது அந்த மசோதா வாக்கெடுப்பின் போது வெளிநடப்போ இரண்டில் ஒன்றை பாஜக திமுகவிடம் கடுமையாக எதிர்பார்க்கின்றது. அதனால் திமுக கொண்டு வரும் இந்த #மேகதாது அணை குறித்தான விவாத #ஒத்திவைப்புத்தீர்மானத்தை அனுமதித்தே ஆக வேண்டிய சூழல்.
காங்கிரசும் தாங்கள் இந்தியாவில் கட்சி நடத்த வேண்டுமெனில் திமுகவின் காலைப்பிடித்தாவது டீலிமிட்டேஷன் மசோதாவை தோற்கடித்தே ஆக வேண்டிய நிலை. அதில் காங்கிரசுக்கு அடுத்த சிக்கல் மேகதாது அணை பிரச்சனை என்பது காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் குடகு மலையில் இருந்து தான் ஆரம்பம். திமுகவின் பேச்சை கேட்பதா, டி.சிவக்குமாரின் பேச்சை கேட்பதா என்னும் பெருங்குழப்பம்.
22 எம்.பி வச்சுகிட்டி திமுக பார்லிமெண்ட் கேண்டீனில் வடை தான் சாப்பிட வேண்டும் என கேலி பேசினவன் எல்லாம் வரிசையில் வரவும். 1/2
நாக்கை தொங்க போட்டு ஓடியவர்கள் இன்று தலைவரின் நாகரிக அரசியலின் தன்மை அறிய தொடங்கியுள்ளனர்.. தயவு செய்து திரும்பி வந்துவிடாதீர்கள் என்பது மட்டுமே எங்களுடைய கோரிக்கை🙏
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
ஏசுநாதர், ஜூலியஸ் சீசரைவிட அதிகமாக முதுகில் குத்துபட்டவர் நம் beloved தலைவர் @mkstalin தான். முதலில் பெரிதும் நம்பிய கொளத்தூர் மக்கள், அடுத்து சென்னை மக்கள், பின்னர் TNலுள்ள 18லிருந்து 40 வயதுடைய மக்கள். தேர்தலுக்கு பின்னர் @incindia என்று வரிசையாக முதுகில் குத்தி அந்த மனிதரை புண்படுத்தி பாவம் செய்துவிட்டார்கள்.
"@mkstalin போல இனி ஒரு CM TNற்கு கிடைப்பாரா?" என்பதை யோசிக்காமல், "@mkstalin TNஐ எவ்வளவு உயரத்தில் வைத்துள்ளார், Tvk/அதிமுக ஆட்சிக்கு வந்தால் எல்லாம் குட்டிச்சுவராகி விடுமே என்பதை பற்றி கவலை இல்லாமல், திமுகவிற்கு எதிராக கிட்டதட்ட 70% மக்கள் வாக்களித்தது மிகவும் வருத்தத்திற்குரியது.
Postmortem செய்வதால் எந்த பிரயோசனமும் இல்லைதான். ஆனால் சிலவற்றை பேசிதான் ஆகவேண்டும்.
@dmk_youthwingம், @DMKWomensWingம், @DMKITwingம் ஓரளவு தோல்விக்கு பொறுப்பை நிச்சயம் ஏற்கவேண்டும்.
TNல் இளைஞர், இளைஞிகள் விஜய் பக்கம் சாய்கிறார்கள் என்பது இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். சாதாரண பொது மக்களுக்கே "இளைஞர்கள் Tvk பக்கம் செல்கிறார்கள்" என்பது தெரிகிற போது, youth & womens wingன் membersக்கு trend நிச்சயம் தெரிந்திருக்கும். அவர்கள் தலைவர்களிடம் alert செய்தார்களா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால், ஒன்றும் இல்லாத EPSஐ மட்டுமே criticize செய்து @mkstalin, @udhaystalin பேசியது ஏன்? Vijayஐ பற்றி ஏன் எதுவுமே பேசவில்லை?
Instagram மூலம் ஒரு ஆட்சியையே அகற்றிவிடும் அளவிற்கு Tvk கட்சியினர் வலிமையாக ஈடுபடும்போது, @dmkitwing "தலைவர்களிடம் சொல்லி ஏன் தங்கள் வலிமையை பெரிதாக்கி தகுந்த எதிர்வினையை ஆற்றவில்லை? இப்பொழுது கூட சில மணி நேரங்களில் "Dmk & Admk கூட்டு" என்று சொல்லி போக்கையே மாற்றி, விஜய் மேல் மக்களுக்கு அனுதாபத்தை உருவாக்கி விட்டார்கள் Tvkயினர். நேற்று இரவு முழுதும் @ThanthiTV இந்த செய்தியை ஒளிபரப்புகையில் உடனே திமுகவிலிருந்து மறுப்பு சொல்லி அந்த செய்தியை யாரும் stop செய்யவில்லை.
இந்த நேரத்தில், "@aloor_ShaNavas போன்று" "மிகத் திறமையாக பதிலளித்து அடுத்தவர்களை வாயடைக்கச் செய்யும்படி, middle aged Spokespersons திமுகவிற்கு அவசியம் தேவை என்பதையும் பதிவிடுகிறேன்.
அடுத்து முக்கியமாக, "பல மாதங்களாக வந்த Opinion Polls அனைத்தும் திமுகவை misguide செய்துவிட்டதா?" என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. வேண்டுமென்றே அந்த opinion polls திமுகவை divert செய்வதற்காக செய்யப்பட்டதா? @mkstalin "விஜய்க்கு எதிராக எதுவும் பேசாதது, அவருடைய குற்றசாட்டுக்களை மறுக்காதது" தவறாகிவிட்டதோ என்று சந்தேகமாக உள்ளது.
@rahulgandhiயின் body languageஐ பார்ப்பவர்களுக்கே "அவர் திமுகவிற்கு எதிராக இருப்பவர்" என்று தெரியும்போது, இவ்வளவு மோசமானவரை @mkstalin ஏன் நம்பி 28 Seatsகளை கொடுத்தார் என்று தெரியவில்லை.
முதுகில் குத்திவிட்டு @incindia Tvkயுடன் சேர்ந்துவிட்டது. ஆனால், Vck, Communists எல்லாம் atleast @mkstalinனிடம் சொல்லிவிட்டு Tvkயிடம் செல்கிறார்கள். But, நாளை இவர்கள் ஆளும் கட்சி வரிசையில் இருக்கும்போது, விஜய், திமுகவை கடுமையாக தாக்கி,"ஊழல் கட்சி, தீயசக்தி" என்று பேசினால் "இவர்களின் நிலைமை என்ன?" என்று சொல்லட்டும். அதுபோல, உள்ளாட்சி தேர்தல்களில் அவர்கள் ஆதரிக்கும் கட்சி எதுவாக இருக்கும். Tvkயா? திமுகவா?@Race_horse2025@aadhishivan@SemitechRaed@kavavelu141260@Dhakshina23@hyderali857685@Hereprak@sandhiyaTweets_@vedhaalan@sentham60578891@HAJAMYDEENNKS@agindrajith@DrSubair_Khan@Dhandapani_5@RodricksPrem@sk_haran@Rebidmk